Jump to content

தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்!

Recommended Posts

தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

'ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை', என்றார் நண்பர்.

'நான் எதிர்பார்த்தேன்!' என்றேன் நான்.

வியப்புடன் உற்றுப்பார்த்த நண்பன், 'எப்படி?' என்றார் ஒற்றை வார்த்தையில்.

'ஒன்றுமில்லை, காலாவுக்கு கன்னடத்தில் திரையரங்குகளில் தடைவிதித்து ஆப்படித்துவிட்டார்கள்! இளிச்சவாயன் தமிழன்களும் வரலேன்னா அம்போன்னு போயிருமேன்னு கவலைப்பட்டுப் போயிருப்பார்' என்று விரித்தேன்.

'சேச்சே! இது ஒங் கணிப்பு! அப்படில்லாம் இருக்காது!' என்றார் நண்பர்.

'தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன்.'னுட்டு அவரே சொன்னதுப்பா! பிறகு, நிருபர்கள் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றிருக்கிறார் ரஜினி இதுலேந்தே ரஜினியோட தூத்துக்குடி பயணத்தின் நோக்கம் தெரியுதே!' என்றேன் விடாமல்.

'நீ எப்பவுமே இப்பிடித்தான் ரஜினிய லந்து விடுவ' என்றார் நண்பர் கோபமாக.

'நானாச் சொன்னா என்ன நீ கோவிச்சுக்கலாம். ஆனா சொன்னது மக்களுப்பா! 'தூத்துக்குடிக்கு ரஜினி சென்றது' என்ற புதியதலைமுறையின் ஆன்லைன் வாக்கெடுப்பில் 44.6% தமிழர்கள் சொன்னது காலா படவிளம்பரத்துக்குத்தான் என்றும்,  31.9% தமிழர்களின் கருத்து அரசியலுக்கான முன்னோட்டம் என்றும் இருப்பதால், ஆக மொத்தம் 76.5% சதவீத மக்களுக்கு ரஜினியின் தூத்துக்குடிப் பயணம் அவரது சுயலாபக் கணக்குக்காகவே என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. உன்னைப்போல்  மனிதநேயம் என்று நம்பும் அப்பாவிகள் வெறும் 23.5% பேர்தாம் உள்ளனர்' என்று என்பங்குக்கு வெறுப்பேற்றினேன் நான்.

"எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று  எவ்வளவு அழகாச் சொல்லீருக்காரு எங்க தலைவர் ரஜினிகாந்த்', என்று சிலாகித்தான் நண்பன்.

'அட போப்பா! நீதான் வெவெரங்கெட்டவனா இருக்கேன்னு நெனச்சேன்! ஒந்தலைவனும் அப்பிடித்தான் போல! மீத்தேன்,  ஹைட்ரோகார்பன்,  பெட்ரோலிய மண்டலம்,  நியூட்ரினோ, அணுஉலைப் பூங்கா- ன்னுட்டுத்  தமிழக வளங்களையும், சாமானிய மக்களோட வாழ்வாதாரங்களையும் சூறையாடி அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்களின் மேல் சுமத்தி, தமிழ்நாடு சுடுகாடா மாறிக்கிட்டு இருக்கதாலத்தான் போராட்டங்களே நடக்குது! சர்வாதிகாரிபோலப் பேசும் ரஜினில்லாம் ஆட்சிக்கு வந்தா தமிழ்நாடு நிச்சயம் சுடுகாடாகத்தான் ஆகும்' என்று பொங்கினேன் நான்.

 'அத விடப்பா! ஆனா எங்க தலைவரு 'தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது'-ன்னுட்டு துல்லியமாச் சொன்னாரே! அதுக்கு என்ன சொல்றே' என்றான் நண்பன்.

'பிஜேபி-யும், அதிமுக அரசும் சொல்ற பொய்யத்தான் ஒன்தலைவரும் சொல்றாருன்னு அமைதியாப் போராடிய  போராளிகள் சொல்றாங்க! காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை! வாயிலும், நெஞ்சிலும், நெற்றியிலும் குறிபார்த்துச் சுட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்களும் போராளிகளும் சொல்கின்றனர். காற்றுக்கும், தண்ணீருக்கும் போராடிச் செத்த சாமானியத் தமிழனுகளை சமூக விரோதிகள்னு சொல்ற ரஜினி அத்தோட நின்னாரா! செய்தியாளர்களிடம் பேசும்போது, "கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்த தாக்குதல்கள், குடியிருப்புகளை எரித்தது நிச்சயமாக சாமானிய மக்கள் அல்ல. விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இதில் நுழைந்திருக்கிறார்கள் அவர்களது வேலைதான் இது'"  என்று பொங்கியிருக்கிறார். 13 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற போலீஸ் விதிமீறல்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசலை உங்க தலைவர். ஒரு சமூக விரோதியவும் இதுவரை அடையாளம் காட்டவில்லை. சுடச்சொன்ன அரசைக் குறைகூறாமல் மக்களை சமூகவிரோதின்னு சொன்னா மக்கள் சும்மா இருப்பாங்களா! காலா படம் நிச்சயம் மண்ணைக் கவ்வும் தமிழ்நாட்டிலே', என்று திருப்பினேன் நான்.

"ரஜினியைப் போன்ற ஒருவர், மக்கள் பிரச்சனையை புரியாத ஒருவர், கண்மூடித்தனமாக காவல்துறையை ஆதரிக்கும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாடு சுடுகாடாகும். மிக மிக ஆபத்தான ஒருவராக ரஜினி இருக்கிறார் என்பதற்கு அவருடைய இன்றைய பேட்டி சான்று." என்கிறார் வி.சி.க. தலைவர்களில் ஒருவரான திரு.இரவிக்குமார் அவர்கள்.

 ரீல் வாழ்க்கையில் “நிலம் நீர் உரிமை போராடுவோம்! நிலம் தான் வாழ்வாதாரம்" என்று முழங்கும் ஹீரோ சூப்பர்ஸ்டார் காலா ரஜினிகாந்த், ரியல் வாழ்க்கையில் ஒரு கடைந்தெடுத்த வில்லன், மக்கள் விரோதி, சர்வாதிகாரி, அசிங்கமான அரசியல்வாதி, எல்லாவற்றுக்கும்மேல், தமிழ்நாட்டுக்கு வந்த சாபக்கேடான வந்தேறி.

கிழிந்து தொங்கிய சூப்பர்ஸ்டார் பிம்பம்!

தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு இளைஞர் ரஜினியை பார்த்து, "யார் நீங்க?" என கேட்டார்; அதற்கு ரஜினியோ, "நான் ரஜினிகாந்த்" என்று கூறினார்.

"ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், `நான் சென்னையிலிருந்து வருகிறேன்' என்று சொன்னதும், 'சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?' என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் பொய்யாகச் சிரித்தபடியே அந்த இடத்தைவிட்டு அவமானப்பட்டுச் செல்கிறார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நிலையில், ரஜினியிடம் யார் நீங்க என கேட்கும் இளைஞர் பெயர் சந்தோஷ் என தெரியவந்துள்ளது.

சந்தோஷ் ரஜினியைப் பற்றிக் கூறுகையில், "தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடிய போது ரஜினிகாந்த் வரவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன, ஆனால் இப்போது தான் அவர் வருகிறார். இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன்" எனக் கூறியுள்ளார். சூப்பர்ஸ்டார் பிம்பத்துடன் வலம்வந்த சர்வாதிகாரி ரஜினியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு கணம் ரஜினியை மீண்டும் சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக்கி கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட் பஸ்சில் விசில்ஊதும் கண்டக்டராக்கி ஓடவிட்ட தன்மானத் தமிழன் சந்தோசுக்கு நம் பாராட்டுக்களும் வணக்கங்களும்.

தூத்துக்குடிக்குப் போன ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பம் கிழிந்து தொங்குகிறது! நல்லவன்போல் வேடமிட்ட கயமைத்தனத்தின் பொய்யான வேஷம் வெளிப்பட்டிருக்கிறது!, வெற்று சினிமா வசனம் வேறு, அரக்கத்தனம் கொண்ட ரஜினி என்னும் உண்மையான மனிதனின் குணம் வேறு என்பதை ரஜினியே தனது சூப்பர்ஸ்டார் பிம்பத்தால் கட்டமைத்த தோலை உரித்துக் காட்டி, உள்ளே இருக்கும் கோரமான சர்வாதிகார பாசிச ஆரிய குணத்தை நிர்வாணமாக வெளிப்படுத்தி, தூத்துக்குடி முதல் சென்னை வரை ஓடிக் காட்டி வெளிச்சம் போட்டிருக்கிறார்.

தம்மை சர்வாதிகாரியாக அடையாளம் காட்டிய ரஜினிக்கு நன்றி!

தனது வன்மம், ஆக்ரோஷம், ஆதிக்கவெறி, முதலமைச்சர் ஆகிவிட்டதைப் போலவே பத்திரிக்கையாளர்களிடம் காட்டும் அதிகார தோரணை முதலியவற்றால் தமிழக மக்களுக்குத் தான் யார் என்று முச்சந்தியில் அடையாளம் காட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் என்னும் சர்வாதிகாரி!

தன்னை இவ்வளவு மூர்க்கமாக பொதுவெளியில் காட்டியதற்காக தமிழ்ச் சமூகம் என்றென்றும் ஆரிய மராட்டிய ரஜினிக்குக் கடன்பட்டுள்ளது.

தப்பித்தவறி இத்தகைய சர்வாதிகாரியின் கையில் தமிழகம் போனால் என்னவாகும் என்று நினைக்கவே குலைநடுங்குகிறது.

வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் ரஜினியின் காலாவைப் முற்றிலும் புறக்கணிப்போம்! தன்மானத் தமிழன் சந்தோஷைப் போல, ரஜினியை அரசியலில் இருந்தும்  தெறித்து ஓட விடுவோம்  தமிழ்ச் சொந்தங்களே!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்!

....

சந்தோஷ் ரஜினியைப் பற்றிக் கூறுகையில், "தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடிய போது ரஜினிகாந்த் வரவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன, ஆனால் இப்போது தான் அவர் வருகிறார். இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன்" எனக் கூறியுள்ளார். சூப்பர்ஸ்டார் பிம்பத்துடன் வலம்வந்த சர்வாதிகாரி ரஜினியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு கணம் ரஜினியை மீண்டும் சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக்கி கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட் பஸ்சில் விசில்ஊதும் கண்டக்டராக்கி ஓடவிட்ட தன்மானத் தமிழன் சந்தோசுக்கு நம் பாராட்டுக்களும் வணக்கங்களும்.

தூத்துக்குடிக்குப் போன ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பம் கிழிந்து தொங்குகிறது! நல்லவன்போல் வேடமிட்ட கயமைத்தனத்தின் பொய்யான வேஷம் வெளிப்பட்டிருக்கிறது!, வெற்று சினிமா வசனம் வேறு, அரக்கத்தனம் கொண்ட ரஜினி என்னும் உண்மையான மனிதனின் குணம் வேறு என்பதை ரஜினியே தனது சூப்பர்ஸ்டார் பிம்பத்தால் கட்டமைத்த தோலை உரித்துக் காட்டி, உள்ளே இருக்கும் கோரமான சர்வாதிகார பாசிச ஆரிய குணத்தை நிர்வாணமாக வெளிப்படுத்தி, தூத்துக்குடி முதல் சென்னை வரை ஓடிக் காட்டி வெளிச்சம் போட்டிருக்கிறார்.

....

மனதில் தோன்றியதை எழுது வடிவமாக கூறியுள்ளீர்கள், நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.