Recommended Posts

sterlile-massacre.jpg

ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

“வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது!

நண்பர்களே, இது என்ன நிலைப்பாடு? அப்படியானால், மக்கள் வன்முறையில் இறங்கினால் சுட்டுத் தள்ளலாம் என்கிறீர்களா? எனில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டது உண்மைதான் எனக் காவல்துறையினர் சான்றுகள் காட்டி விட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான் என ஏற்றுக் கொள்ளப் போகிறோமா நாம்?

உண்மையில், இந்த நேரத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, “கலவரங்களை அடக்குவது குறித்த இந்தியச் சட்டங்கள் சரியானவையா?” என்பதுதான்.

மேலை நாடுகளில் கலவரங்கள் கைமீறிப் போனால் இரப்பர் குண்டுகளைக் கையாளும் வழக்கம் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரோடு தங்களை ஒப்பிட்டுக் கழுத்துப்பட்டை நுனியைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு இரப்பர் குண்டு என ஒன்று இருப்பதாவது தெரியுமா?

கேட்டால், நம் நாடு இன்னும் அந்தளவு முன்னேறவில்லை என்பார்கள் நம் ‘தினமலர்’ படிப்பாளிகள். அட நாதாறிகளே! செவ்வாய்க் கோளுக்குச் செயற்கைக்கோள் விடுமளவுக்குத் தொழில்நுட்பத்தில் தொக்குத் தாளிக்கும் நாடு மனித உரிமை சார்ந்த விதயங்களில் மட்டும் முடியாட்சிக் காலத்தை விட்டு முடியளவும் முன்னேறவில்லை எனச் சொல்ல உங்களுக்கு நாக் கூசவில்லை?

ஆக, இந்த நாடு பொருளாதாரமும் வெட்டி வீராப்பும் சார்ந்த துறைகளில் மட்டும்தான் முன்னேறத் துடிக்கிறது; தனி மனித நலனும் குடிமக்கள் உரிமையும் சார்ந்த விதயங்களில் வளர எந்தவிதமான ஆர்வமும் இந்நாட்டுக்கு இல்லை என்பதுதானே இதன் பொருள்? இந்தப் போக்கை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதுதானே இந்த நேரத்தில் நம் கடமை? மாறாக நாமோ, முதலில் வானத்தை நோக்கிச் சுடுவது, பின்னர் இடுப்புக்குக் கீழே சுடுவது முதலான துப்பாக்கிச் சூடு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோமே, இதை விட ஏமாளித்தனம் உண்டா?

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள்! அதிகார அமைப்பு நம் உயிரைக் காவு வாங்குகிறது; ஏன் என்னைக் கொல்கிறாய் எனக் கேட்க வேண்டிய நாம் தகுந்த காரணத்தோடுதான் என்னைக் கொல்கிறாயா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! இதுதான் இந்தக் கட்டமைப்பின் (structuralism) வெற்றி! கட்டமைப்பியலாளர்களின் (structuralists) வெற்றி!

தவறு செய்தால் சொந்தக் குடிமக்களையே சுட்டுக் கொல்லலாம் என ஒரு சட்டம் இருப்பதே வெட்கக்கேடு! ஆனால் அதுதான் சரி என இந்தக் கட்டமைப்பும் கட்டமைப்பியலாளர்களும் நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு கொடூரம் நம் கண் முன்னே நடந்து முடிந்த பின்னும் இதற்கு ஆதரவாக இருக்கும் அந்தச் சட்டத்தைக் குறித்த கேள்வியை நாம் எழுப்பாமல், நடந்த கொடூரம் அந்தச் சட்டப்படி ஏற்கத்தக்கதுதானா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! தவறான சட்டத்தைத் தூக்கி எறிவதற்கு மாறாக அதற்குள்ளேயே நமக்கான நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! இது நடந்தேறிய அந்தப் படுகொலையை விடவும் கொடூரமானது!

எனவே தொலைக்காட்சி விவாதங்களில் அமரும் மனித உரிமை ஆர்வலர்களே, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஊடக நண்பர்களே, சமூக அக்கறையாளர்களே, கட்சித் தோழர்களே, தலைவர்களே, பொதுமக்களே இந்தத் தமிழ்நாட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான உங்கள் வாதங்களை அருள் கூர்ந்து மாற்றுங்கள்!

எப்படிப்பட்ட சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் எனச் சட்டம் சொல்லும் முறைப்படிதான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறதா எனக் கேட்காதீர்கள்! எப்பேர்ப்பட்ட சூழலாயிருந்தாலும் சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறுங்கள்!

மக்கள் கட்டிய வரிப் பணத்தில் வாங்கிய துப்பாக்கியை வைத்து அவர்களையே சுடுவது மானங்கெட்ட செயல் எனச் சுட்டிக் காட்டுங்கள்!

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், மண்ணாங்கட்டி என அத்தனையையும் மேலை நாடுகளைப் பார்த்துப் படியெடுக்கும் (copy) நம் அரசுகள் மக்களை நடத்தும் விதத்தை மட்டும் அங்கிருந்து ஏன் கற்றுக் கொள்ள மறுக்கின்றன என்பதைக் கேளுங்கள்!

மற்ற துறைகளில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் பற்றி மட்டும் வக்கணையாகப் பேசும் நம் ஆட்சியாளர்கள் மனித உரிமைத்துறையில் மட்டும் இன்னும் தமது கற்காலக் காட்டாட்சி முறைகளை விட்டு வெளியில் எட்டிக் கூடப் பார்க்க மறுப்பது ஏன் என வினவுங்கள்!

தீர ஆராய்ந்து, முறையாக விசாரித்த பின்னும் அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே அளிக்கச் சொல்லியிருக்கும் தூக்குத் தண்டனையையே ஒழிக்கும்படி கேட்குமளவு முன்னேறிவிட்ட சமூகத்தில், கலவரக்காரர் எனக் குற்றம் சுமத்திவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கேள்விமுறையே இல்லாமல் கொல்லலாம் என ஒரு சட்டம் அமலில் இருப்பதே சமூகப் பேரிழிவு என்பதை எடுத்துரையுங்கள்!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவற்றையெல்லாம் புரிய வைப்பது எளிதில்லைதான். நாட்டின் கணிசமான பகுதியைத் துப்பாக்கி முனையிலேயே ஆளும் இந்த அதிகார அமைப்புக்குக் கலவரத்தை அடக்கக் கூடத் துப்பாக்கி எடுப்பது தவறு என உணர்த்துவது மிகக் கடினம்தான்.

ஆனால் நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மறுநாள் வருமென எதிர்பார்த்திருந்த பள்ளிச் சிறுமி, திருமணமாகி மூன்று மாதங்களே ஆன கருச்சுமந்த மனைவியை விட்டு வாழ வேண்டிய வயதில் மறைந்த கணவன் எனப் பதின்மூன்று பேர் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு கூடக் கேட்காவிட்டால் இதை நாம் இனி எப்பொழுதுதான் கேட்பது?!

பி.கு: “முழுக்க முழுக்கச் சட்டத்திருத்தம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறாயே? அது மட்டும் போதுமா? நடந்த படுகொலைக்குக் காரணம் யார், இதற்கு உத்தரவிட்டது யார் என்பவையெல்லாம் தெரிய வேண்டாவா?” எனக் கேட்பவர்களுக்கு என் மறுமொழி, அவையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை; கட்டுரையின் முதல் எழுத்துடைய நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

 • Similar Content

  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2).
    
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
   காலத்தை வென்று நிற்கும் திருக்குறளின் பன்மைத்துவம்
   திருக்குறள் காலத்தை வென்று நிற்பதன் காரணமே அதன் பன்மைத்துவம்தான். அறவழி நிற்கும் சமயங்களைப் பின்பற்றும் சமயிகள் பலரும், குறிப்பாக,, சமணர், பௌத்தர், சிவனியம், திருமாலியம் உள்ளிட்ட சமயக்கணக்கர்கள் திருக்குறள் தத்தம் சமய அறங்களையே சொல்லுகின்றது என்று உரிமைகொள்ளும்  நூற்கள் எழுதியுள்ளனர். அப்படி இருக்கும்போது, ஸ்மார்த்தரான திரு. நாகசாமியில் நூலில் என்ன பிழை கண்டீர் என்று வினவினார் என் நண்பர்.
   பல்வேறு சமயக்கணக்கரும் திருக்குறளுக்கு உரிமை கொண்டாட முயல்வது அறம் சார்ந்த விடயங்கள்; தவிர, அவர்கள் திருக்குறள் அவரவர் சமயக் கருத்துக்களின் சுருக்கம் என்று ஒருபோதும் இழிவு செய்ய முயன்றதுமில்லை. ஆனால், பிறப்பின் வழியாக, மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகளைத் திணிக்கும் அறத்திற்குப் புறம்பான நால்வருண சாதிமுறை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திருக்குறள் எழுதப்பட்டுள்ளது என்றல்லவா திரு.நாகசாமி அவர்கள் உரிமை கொண்டாடுகின்றார்; அதுமட்டுமல்ல, அறத்திற்குப் புறம்பான மனுதர்ம சாத்திரங்களின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்ற திரு.நாகசாமியின் வாதம் அறமே வடிவான திருக்குறளுக்கு அறத்திற்குப் புறம்பான ஆரியச்சாதிச் சாயம்பூசும் கயமைச் செயலன்றி வேறென்ன?
   அறத்திற்குப் புறம்பான நால்வருண சாதிமுறைத் திணிப்பை, மனுதருமம், என்றுமுள்ள சநாதன தருமம், பாரத மண்ணின் பாரம்பரிய இந்து தரும வாழ்வியல் முறை, கீதை சொல்லும் இலட்சிய வாழ்வு என்று பல்வேறு சாயங்களைப் பச்சோந்திபோல் வார்த்தைச் சூதுகளால் மக்களை மூளைச் சலவை செய்து, பிராமணர்களின் மேலாண்மையை ஏனையமக்கள் தாங்களே மனமுவந்து ஏற்கச் செய்யும்  முயற்சிகளின் ஒரு பரிமாணமே திரு.நாகசாமியின் நூல்!
   திருக்குறளை மனுதருமத்தின் சுருங்கிய வடிவென்றும், ஆரியப் பிராமணனே 'அறவாழி அந்தணன்' என்னும் தெய்வம் என்று திருக்குறளே கூறிவிட்டதாக திரு.நாகசாமி ஏற்ற முயலும் ஆரிய நஞ்சு தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏறிய பிறகு, ஆரியப்பிராமண மனிதப் புனிதர்களுக்குப் பணிவிடை செய்து அடிமையாக வாழ்ந்தால், அடுத்த பிறவியில் மேம்படலாம் என்னும் மனுசாத்திரத்தை எளிதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்றிவிடலாம் அல்லவா?  
   தமிழர்களிடம் இல்லாத நால்வகைச் சாதியை நாட்ட முயலும் ஆரியர்கள்!
   பரிதிமாற்கலைஞர் குறிப்பிட்ட இரண்டாவது கருத்து "(2) தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்." இக்காலத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான கருத்தாகும்.
   உயிர் சமத்துவமும், அன்பும் மையநாடியாகக் கொண்டு தமிழ் அறம் படைத்த திருவள்ளுவர் நால்வகைச் சாதியைத்தான் அடிப்படையாகக் கொண்டு தமது திருக்குறளைப் படைத்தார் என்று சொல்லி திரு.நாகசாமி ஆடும் ஆரியக்கூத்து அவர்க்கு முன்னரே திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் உள்ளிட்ட பல்வேறு ஆரியப் பார்ப்பனர்கள் ஏற்கனவே ஆடித்தீர்த்த ஆரியக்கூத்துகளின் தொல்லெச்சமே! இதைத் தப்பும் தவறுமான ஆங்கிலத்திலும், சமற்கிருதத்திலும் எழுதி, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது நகைப்புக்குரியது. ஆரியக்கூத்துக்கு இலக்கணமும் தேவையில்லை; மொழித் தூய்மையும் அவசியமில்லை என்று எண்ணியிருப்பார் போலும்!
   கபிலர் என்னும் ஆரியப் பிராமணரின் நேர்மை
   பரிதிமாற்கலைஞருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியப் பிராமண குலத்தில் தோன்றிய கபிலர் தம் இனத்தவரான ஆரியப் பிராமணரை வசைசொல்லிப் பாடும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது:
   "இத் தமிழ்நாட்டில் இல்லாத நால்வருணச் சாதிமுறையை நீர் கொண்டுவந்து நாட்டினீர்" எனத் தன் இனத்தவரான ஆரியரை நோக்கி குற்றப்பத்திரிக்கை முழக்கிய கபிலரின் நேர்மை வியப்புக்குரியது.
   'முற்சடைப் பலனில் வேறாகிய முறைமை சொல்
   நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்'  - கபிலரகவல்
   பரிதிமாற்கலைஞர் குறிப்பிட்ட மூன்றாவது கருத்து "(3) தமிழரிடத்திருந்த பல அரியவிஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்." என்பது முற்றிலுமாக உண்மை என்று நிறுவும் நூலாக திரு.நாகசாமியின் "TIRUKKURAL - An Abridgement of Sastras" நூல் இருக்கின்றது.
   ஆரிய தரும சாத்திரங்களான மனுசாத்திரம் உள்ளிட்ட நூற்களின் தொகுப்பே திருக்குறள் என்று நிறுவும் பொருட்டு நூல் எழுதிய ஆரியப் பிராமணர் திரு.நாகசாமி வாழையடி வாழையாக வந்த ஆரியக் கூத்தாடிகளின் மரபினில் உதித்த ஒப்பற்ற ஆரியக்கூத்தாடியாகச் செயலாற்றியுள்ளார் என்றால் மிகையன்று.
   எல்லாம் சரி, "தீக்குறள்" என்று திருக்குறளைத் தூற்றிய மகாப்பெரியவா-வின் படத்தைப் போட்டு "TIRUKKURAL - An Abridgement of Sastras - Dr. R.Nagaswamy" என்று அன்னாரது அடிப்பொடி நூல் வெளியிடுவது ஏன் என்பதுதான் நம்முன் தொக்கி நிற்கும் கேள்வி. சங்கராச்சாரியின்  அடிப்பொடியான திரு.நாகசாமிப்பிராமணர் தமது ஆரியச்சாதி மேலாண்மையை நிறுவ, திருக்குறள் மனு அதர்ம சாத்திரங்களின் தொகுப்பு என்று காட்டும் முயற்சியில் தோற்றுக் கேவலப்படுகின்றார், அவ்வளவே!
   அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கே காவி வண்ணம் பூசிய சக்திகள், திருக்குறளுக்குக் காவிவண்ணம் பூசும் 'Painting Contract'-ஐ திரு.நாகசாமிக்குத் தந்துள்ளதாகவும், வேலையை முடித்தால், அதற்குக் கூலியாக 'பத்மவிபூஷன்' பட்டமும், பணமுடிப்பும் தரப் பரிந்துரைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதுபோல், இந்நூல் தயாரானதும் திரு.நாகசாமிக்கு 'பத்மவிபூஷன்' வழங்கப்பட்டிருக்கிறது.
   'Operation Success! Patient is Dead, Contract is Executed, but Building got Collapsed' என்பதுபோல், "நூல் தயார்! நோக்கம் பணால்!" என்றாகிவிட்டது! தப்பும், தவறுமான 'I Walk English! I talk English' பட்லர் ஆங்கிலத்தில், 'தர்க்க சாஸ்திரம்' என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நூலாசிரியரைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், எவ்வித ஆதாரங்களும் தாராமல், நூலாசிரியரின் ஆரிய மனம் ஆடும் கூத்தையெல்லாம் முடிவுகளாக அறுதியிடும் போக்கும், தப்பும், தவறுமான மேற்கோள்களுடன் ஆய்வுநூல் என்பதற்கான எந்த வரையறையும் பின்பற்றப்படாத வகையில் எழுதப்பட்டுள்ளது. 1963-ல் திருக்குறளைத் 'தீக்குறள்' என்று "திருவாய்" மலர்ந்த மகாப்பெரியவா சந்தித்த கேவலத்தைவிடப் படுகேவலமான நிலையைத்தான் ஆரிய மேலாண்மைக் கருத்தியலுக்கு இந்நூல் பங்களித்துள்ளது என்பதே உண்மை.  
   திருக்குறளில் பயின்றுவரும் அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்ற நான்கு தமிழர் தொழிற்பிரிவுகளையும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிறப்பின் அடிப்படையிலான ஆரிய குலப்பிரிவுகளாக மடைமாற்றம் செய்து, திருக்குறளை நால்வருணத்தின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் அமைத்துள்ளார் என்று பரிமேலழகர் முதல் திரு.நாகசாமி வரையான ஆரியர்கள் கூறும் அபத்தம் ஆதாரமின்றி ஆரிய மேலாண்மையை நிறுவமுயலும் ஆரிய இனப்பற்றின் வெளிப்பாடு மட்டுமே.
   தமிழ் மன்னர்கள் சத்திரியர்கள் அல்லர்!
   திருக்குறள் சொல்லும் அந்தணர், பார்ப்பனர் ஆகியோர் தூய தமிழர்களே; ஆரியப் பிராமணர்கள் அல்லர் என்று குறள் ஆய்வு-3ல் நிறுவப்பட்டது.  இனி, தமிழகத்தில் சத்திரியர் என்று ஒரு குலம் இருந்ததா என்று ஆராய்வோம்.
   குல வேற்றுமையின்றி தமிழர் எவரும் நாட்டின் மன்னர் ஆகலாம்!
   தமிழ்நிலத்தை ஆண்ட தமிழ் அரசர்கள், பிறப்பு வழிப்பட்ட ஆரிய சத்திரியகுல அரசர்கள் போல், சத்திரிய குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அரசன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், அவ்வரசனின் பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து, கோட்டையிலிருந்து வெளியே விடுவர்; குடிமக்கள் எவர் ஒருவர் கழுத்தில் யானையின் கையிலுள்ள மாலை விழுகிறதோ அவரையே அரசனாகும் நடைமுறை பண்டைய மன்னராட்சி இருந்த தமிழக அரசுகளில் இருந்துள்ளது. ஆளும் அரசன் சத்திரியன் என்னும் குலத்தில் தோன்றியவனாக இருந்தால், சத்திரிய குலத்திலிருந்துதான் அடுத்த அரசனைத் தேர்ந்தெடுத்து இருப்பார்களே அன்றி, வேறு எவரையும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
   அவ்வாறு அல்லாமல், யானையால் மாலையிடப்பட்டவர் யாராயினும் (குலம், கோத்திரம், குடி, சூத்திரன் போன்றவை இங்கு கணக்கில் கொள்ளப் படாதவை) அவரே இறைவன் திருவுள்ளப்படி வாய்த்த புதிய அரசன் என்று பயின்றுவந்த நடைமுறை உரக்கச் சொல்லும் சமூகச் சான்று ஒன்றே ஒன்றுதான்! செய்யும் தொழிலால் தமிழர்கள் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், சாதியற்ற ஒரே இனமாகத்தான் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதுதான் அது! செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வாமல் இருப்பினும், தமிழர்கள் அனைவருக்கும் "பிறப்பு ஒக்கும்' என்னும் திருக்குறள் அறமே நடைமுறையில் இருந்த நீதியாகவே இருந்தது என்பதற்கு வலுவான வரலாற்றுச் சான்றாகத் திகழ்கின்றது கரிகாற் சோழன் சோழ அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு..
   கழுமலம் என்னும் சீர்காழியைத் தலைநகராகக் கொண்ட சோழநாட்டின் மன்னன் வாரிசு இல்லாமல் இறக்கவே, மாலையுடன் வீதிக்கு வந்த பட்டத்துயானை, பல ஊர்களைக் கடந்து சென்று, சேர நாட்டின் கருவூரில் வாழ்ந்திருந்த சாமானியன் கரிகாலன் கழுத்தில் மாலையிட்டதால், சோழ மன்னனாக முடிசூட்டப்பட்டுக் கரிகாற்சோழன் ஆனான்; ஆயினும் கரிகாலன் பிறந்த குலம் குறித்த எக்குறிப்பும் வரலாற்றில் இல்லை; பிறப்பால் தமிழன் ஒரே இனம் என்ற தகுதிப்பாடே அக்காலத்தில் போதுமானதாக இருந்திருக்கிறது.
   காவிரி பெருக்கெடுத்தால் துள்ளுமிடமான கொள்ளிடத்தின் குறுக்கே காலத்தை வென்று நிற்கும் கல்லணையைக் கட்டியதால் வரலாறு இவனைக் கரிகால் பெருவளத்தான் என்று கொண்டாடுகின்றது! (காவிரியைக் கன்னடர்களிடம்  அடகுவைத்த  'கரிகாலனை(காலா'-வை) இங்கு குறிப்பிடவில்லை)
   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முன்றுரையனார் இயற்றிய பழமொழி நானூறு பாடல் எண்.62 ஒருவருக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும் என்னும் நல்லூழ் விளக்கம் சொல்லும் போக்கில் இவ்வரலாற்றுச் செய்தியை வெளிப்படுத்துகிறது.
    
   சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த பட்டத்து யானை, கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாலனின் கழுத்தில் மாலைசூடி, அவனைக் கரிகாற்சோழனாக்கி, சோழ அரசுரிமையைப் பெறவைத்தது; ஆகையினால், ஒருவன்  சிறந்த பொருட்களை, வேண்டினாலும் வேண்டாவிட்டாலும், அவன் அப்பொருட்களை  அடைதற்குரியவனாயின், அந்நன்மைகள் அவனுக்கு வந்தே தீரும் என்கின்றது முன்றுரையனாரின் பழமொழி அறுபத்தி இரண்டாம் பாடல்.
   கழுமலம் - இது சோழநாட்டுள்ளதோர் ஊர். கருவூர் - இது சேரநாட்டுள்ளதோர் ஊர்; இவ்விரண்டும் இடையே உள்ள பெருந்தொலைவால் பிரிக்கப்பட்டனவாயினும், ஊழ், கருவூரிலுள்ள கரிகால் பெருவளத்தானைச் சோழ அரசனாக்கியது.
   இப்பாடலில், 'விழுமியோன்' என்றது, சிறுவனாக அரியணை ஏறிய கரிகாற்சோழன், ('இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்' ஆக,) நீதிமன்றத்துக்கு முதியவர் வேடமணிந்து சென்று, நல்லதீர்ப்பு வழங்கிய தன்மையைக் கருத்தில் கொண்டு சொல்லியதாகும்.
   கரிகால் சோழன் மிகச்சிறிய வயதிலேயே அரசனாகிவிட்டவன். போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் அவனுக்குப் புத்திக் கூர்மை அதிகம். ஒருநாள், கரிகாலனின் சபையில் ஒரு சிக்கலான வழக்கொன்று வந்தது. மன்னன் என்ற முறையில் முறைப்படி வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லத் தயாரானான் கரிகாலன். மன்னனானாலும், வயதில் மிகவும் இளையவன் என்பதால், அந்த வழக்கைத் தொடுத்தவர், மறுத்தவர் இருவருமே வழக்கைச் சொல்லத் தயங்கினர். புத்திகூர்மையுடைய கரிகாலன் அவர்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்டு,  ‘நல்லது, நீங்கள் இருவரும் நாளை வாருங்கள், மிகவும் சிக்கலான இந்த வழக்கை விசாரிப்பதற்காக அனுபவசாலியான ஒரு நீதிபதியை அனுப்பிவைக்கிறேன்’ என்றுகூறி, அவையை ஒத்திவைத்தான்.
   கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
   விழுமியோன் மேற் சென்றதனால் - விழுமிய
   வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
   தீண்டா விடுதல் அரிது - பழமொழி 62 (முன்றுரையனார்)
   வழக்குத் தொடுத்தவர்-மறுத்தவர் ஆகியோர் மறுநாள் மீண்டும் அவைக்கு வந்தார்கள். நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த தலைமுடி முழுவதும் நரைத்த முதியவர்,  வழக்கை விசாரித்து, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் சரியான தீர்ப்பு வழங்கினார்.
   'இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்
   தனது இளம் வயதின் காரணமாகத் தன்னிடம் வழக்குரைக்கத் தயங்கிய மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முதியவர் வேடமணிந்து வந்து சரியான தீர்ப்புச் சொன்னான் கரிகாற் சோழன். குலத்தொழில் கல்லாமலேயே கைவரும் என்கிறது பின்வரும் பழமொழி நானூறின் இருபத்தி ஒன்றாம் பாடல்.
   உரைமுடிவு காணான் இளமையோன்; என்ற
   நரை முது மக்கள் உவப்ப … நரை முடித்துச்
   சொல்லால் முறை செய்தான் சோழன், குல விச்சை
   கல்லாமல் பாகம் படும் - பழமொழிநானூறு-21,முன்றுரையரையனார்
   சோழ மன்னனுக்கு மகனாகப் பிறக்காது, பட்டத்து யானையால் மாலையிடப்பட்டு, சோழமன்னனான கரிகாலனுக்கு, "குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" என்று முன்றுரையனார் பாடியது பலருக்கும் முரணாகத் தோன்றலாம். கரிகாற்சோழன் வாரிசு இன்றி இறந்த சோழமன்னனின் வாரிசாக பட்டத்து யானையால் மாலைசூட்டப்பட்டு மன்னன் ஆனான் என்று முன்றுரையனாரே பாடியுள்ளதால், இங்கு 'குலம்' என்பது 'ஏற்றுக்கொண்ட தொழில் சூழல்' என்ற பொருளில் கவிஞரால் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஊகித்து உணர முடியும்;
   சில திறமைகள் கல்வியாலோ, அனுபவத்தாலோ மட்டும் வருபவை அன்று; அந்தந்தக் தொழிற்சூழல் அல்லது குடும்பச் சூழலில் வளர்கிறவர்களுக்குத் தானே அமையும்.
   சூத்திரன் . . அந்தணன் என்ற நால்வருண முறை தமிழ் மண்ணில் நடைமுறையில் இருந்திருந்தால் யாரை வேண்டுமானாலும் பட்டத்துயானை மாலையிட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறையில் இருந்திருப்பது சாத்தியமில்லை; சத்திரிய குலத்திலிருந்து ஒருவர் என்றே சங்கப்பாடல்கள் அமைந்திருக்கும்.
   தமிழர் பூணூல் அணிந்ததில்லை!
   ஆரியப் பண்பாட்டில், சூத்திரரைத் தவிர, ஏனைய மூவரும் பூணூல் அணியும் துவிஜர் என்னும் இருபிறப்பாளர்கள். ஆனால், தமிழகத்தில், ஆரியப் பிராமணர்களும், கோயில் பூசகர்களும் (அந்தணர், பார்ப்பார்) மட்டுமே பூணூல் அணிந்ததாகச் சான்றுகள் இலக்கியங்களில் காணப்படுகின்றதே தவிர, அரசரும், வணிகரும் பூணூல் அணிந்ததாக சங்க இலக்கியங்கள் எதிலும் சான்றுகள் காணப்படவில்லை.
   தமிழர் அனைவரும் அரசுரிமை பெற்றவர்கள்!
   மேலும், தமிழக சமுதாய அரசியல் நிலைகளில் வேளாளர் அரசர்க்கு சமமானவர் என்பதை அரசர்க்கும், வேளாளர்க்கும் இடையே மணவுறவு உண்டு என்பதிலிருந்தும், வணிகர்க்கும், வேளாளர்க்கும் அரசுரிமையுண்டு என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.
   வில்லும், வேலும், கழலும், கண்ணியம்,
   தாரும், மாலையும், தேரும், மாவும்,
   மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - தொல்காப்பியம்: பொருளதிகாரம்:மரபியல்:1573.
   (வில்லு முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் மன்னனாற் பெற்ற மரபினால் வணிகர்க்கும், வேளாளர்க்கும் உரியன)
    வணிகர்கள் என்போர் உலகெங்கும் காணப்படுபவர்; தமிழகத்தில் வேளாளரே வணிகராகவும் இருந்துள்ளதால், அப்படியொரு தனி இனம் தமிழ் மண்ணில் இருந்ததில்லை.
   அரசர் உள்ளிட்ட அனைவரும் தமிழினம்
   எனவே, பிராமணர் என்ற ஒரு இனத்தவரைத் தவிர, சத்திரிய, வைசிய, சூத்திர குலத்தவர்கள் தமிழ் மண்ணில் ஒருபோதும் வாழ்ந்திருக்கவில்லை. அரசர்கள் உள்ளிட்ட ஏனையத் தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ் இனம் என்பதுவே சரித்திரம் சொல்லும் செய்தி. ஆனாலும், ஆரியப் பிராமணர்கள், வந்தேறிய தமிழ் மண்ணில், தாங்களே முதற்தரக் குடிகள்; தமிழர்கள் இழிந்தோர் என்ற கருத்தியலை நிலைநாட்டும் ஒரே நோக்கத்தோடு, நால்வருண சநாதன தருமம் என்று தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத ஒன்றை, இருப்பதாகக் காட்டுவதற்காக, தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மண்ணில் வந்தேறிய ஆரியர்களுக்கும், பூர்வகுடிகளான தமிழர்களுக்கும் இடையில் தொடர்ந்து இருந்துவரும் இனப்போராட்டத்தின் அடையாளமே 'நால்வருணம்' என்னும் ஆரியக் கருத்தியல் வன்முறை.
   எனவே, நால்வருணம் தமிழ் மண்ணில் எக்காலத்தும் நடைமுறையில் இருந்ததில்லை; தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே ஆரியப் பிராமணர்கள் தமிழ் மண்ணில் குடியேறிவிட்டனர்; தொல்காப்பியரின் காலத்திலேயே அந்தணர், பார்ப்பனர், ஆரியப்பிராமணர் என்னும் மூவகை மக்களுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லாத நிலை இருந்ததோ என்ற ஐயம் உண்டு; மக்களின் பொதுப்புத்தியில் அந்தணர் என்பவர் ஆரியப் பிராமணரோ என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அந்தணர் என்போரின் அடையாளம் என்ன என்பது குறித்துத் தொல்காப்பியர்
   "நூலே, கரகம், முக்கோல், மணையே,
   ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய" - தொல்காப்பியம்: மரபியல்:1560
   என்று ஐயத்துடனேயே ஆராய்ந்து பார்க்கும்போது என்று பொருள்படும் 'ஆயும் காலை' என்னும் முன்னொட்டுக் கொடுத்து அடையாளம் காட்டுகிறார். ஆரியப் பிராமண இல்லறத்தார் முக்கோல்களையோ, கரகத்தையோ பயன்படுத்தியவர்கள் அல்லர் என்பதால், இங்கு, 'அந்தணர்' என்னும் சொல்லால் துறவியரையே தொல்காப்பியர் குறித்திருக்க வேண்டும் என்பது தெளிவு.
   வள்ளுவரின் குறள் நால்வருணத்தைப் பின்பற்றியது என்பதற்கான அகச்சான்று திருக்குறளிலும் இல்லை.
   தமிழ் மண்ணில் வந்தேறிய மூவாயிரம் ஆண்டுகளில் பிராமணர் என்னும் ஒற்றை ஆரிய சாதியின் இருப்பை வலுவாக்கிக் கொண்டனரே தவிர, சூத்திரர் என்று ஆரியர்கள் வாய்கூசாமல் சொல்லும் வேளாளர்கள் வகுப்பைச் சார்ந்தவர்கள், அரசியல், சமூக தளங்களில் ஆரியப் பிராமணர்களுக்கு இணையாகவும், பல இடங்களில் உயர்வான நிலைகளிலும் தொடர்ந்து இருந்து வருவதைத் தடுக்க முடியவில்லை என்பதோடு, கல்வித்தகுதியில் குறைவு பட்டால், இழிநிலை அடைந்து கடைநிலை ஊழியம் செய்யவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகினர்.(காண்க பின்வரும் நறுந்தொகை-37ம் பாடல்)
   கல்வியறிவு அற்ற முட்டாள்களே ஆனாலும், பிறப்பால் ஆரியப் பிராமணரானால், சமூகத்தின் அனைத்து நிலை மக்களையும்விட உயர்ந்த நிலையில் இருப்பதற்கு ஒப்புக்கொள்ளும் மனுதரும, சநாதன தரும விதிகளை  வட இந்திய சமூகம் ஏற்றுக்கொண்டதைப் போல், தமிழ்ச் சமூகத்தை ஏற்றுக்கொள்ளவைக்க ஆரியப் பிராமணர்களால் இயலவில்லை.
   உதாரணமாக, பதினைந்தாம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியன் அல்லது குலசேகரப்பாண்டியன் என்பவரால்  இயற்றப்பட்ட அறநூலான நறுந்தொகையின் 36-39 வரையுள்ள நான்கு பாடல்கள், கல்வியே ஒருவனுக்குக் குலம் தரும்; நால்வருணப் பிறப்பன்று என்று தெளிவாகக் கூறுகின்றன. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழகம் வந்தேறிய ஆரியர்களால், பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலும் கூட, நால்வருணத்தைத் தமிழ் மண்ணில் திணிக்க முடியவில்லை;
   கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
   நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. நறுந்தொகை-36
   கல்வியை முறையாகக் கற்காத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது, நெல்மணிகளுக்கிடையில், உள்ளீடாகிய அரிசி இல்லாத பதர்நெல்லுக்கு ஒப்பாகும் என்கின்றது மேற்கண்ட நறுந்தொகைப் பாடல்;  பதர்நெல் எவ்வாறு காற்றினால் தூற்றப்பட்டுக் குப்பைக் கூளத்துடன் கிடக்குமோ, அதுபோல் குலப்பெருமை பேசும் ஒருவன் வீணாவான். நால்வருணத்தைப் பின்பற்றும் ஆரியப் குலப் பிராமணன் ஆக இருந்தாலும், கல்வியறிவு இல்லாதவனாக இருப்பானேயானால், அவன் கீழ்மகனாகவே வாழ்தல் வேண்டும் என்கின்றது கீழ்க் காணப்படும் நறுந்தொகைப் பாடல்.
   நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்
   கற்றிலன் ஆயிற் கீழ் இருப்பவனே. நறுந்தொகை-37
   நால்வருண சாதி பாராட்டும் ஆரியப் பிராமணனும் கற்ற கல்வித் தகுதி ஒன்றினால் மட்டுமே ஏனையத் தமிழர்களால் ஏற்கப்பட்டனர்;  கல்வித்தகுதி  இல்லாவிட்டால் ஆரியப் பிராமணனும் வயிற்றுப் பிழைப்புக்காக  கீழ்மட்ட வேலைகளைச் செய்து கீழ் நிலையில் இருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மண்ணின் பொதுவிதியாகும்.அதுமட்டுமல்ல, எத்தகைய தாழ்ந்தகுடியில் பிறந்திருந்தாலும், யாவராயிருப்பினும், கல்வியறிவில் சிறப்புற்றிருந்தால் அவரை மேலே வருக என்று உயர்த்தும் தமிழ் சமூகம் என்கின்றது 38ம் நறுந்தொகைப் பாடல்; 39ம் நறுந்தொகைப் பாடலோ அறிவுடையவனையே அரசனும் விரும்புவான் என்கின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                       
   எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
   அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர். நறுந்தொகை-38
   அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். நறுந்தொகை-39
   மனுதருமம் "முட்டாளாயினும், பிராமணனை ஏனையோர் வழிபடவேண்டும். ஏனெனில், முட்டாளானாலும், பிராமணனே சிறந்த தெய்வம்!" என்கின்றது. ஆனால் திருக்குறளோ இத்தகைய கல்லாதோர் எவராயினும், அவர்கள் பெற்ற  இரு கண்களும், முகத்தில் உள்ள இரண்டு புண்களாகவே கருதப்படும் என்கிறது.
   கண்ணுடையர்என்பவர் கற்றோர் முகத்திரண்டு
   புண்ணுடையர் கல்லா தவர். -குறள் 393.
   இக்குறள் மனுதர்ம விதிக்கு முற்றிலும் எதிரான குறள். திரு.நாகசாமி போன்ற ஆரியப் பார்ப்பனர்கள்  இக்குறளைப் படித்தல் நலம்.
   சான்றோர்களாகிய கல்விமான்களே தமிழக அரசர்களால்  போற்றப்பட்டனர் என்பதுவும், அத்தகைய கல்விமான்களாக இருந்ததாலேயே சில-பல ஆரிய பிராமணர்கள் உயர்நிலை பெற்றனரே அல்லாமல், பிராமணர்கள் என்னும் பிறவிமேன்மைக்காக அன்று என்பது தெளிவு.
   திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூல் அன்று!
   எனவே, மனுதர்ம சநாதன சாதி படிநிலை அமைப்பு தமிழக அரசர்களால்  பின்பற்றப்படவில்லை; வடஇந்திய ஆரிய நாடுகளைப் போல் அல்லாமல், திருக்குறள் சொல்லும் நீதிமுறையைப் பின்பற்றிய தமிழகம், கல்வியை அடிப்படையாகக் கொண்ட நெகிழ்வுத் தன்மையுடன் விளங்கிற்று என்பதையே தமிழக வரலாற்றுச் சான்றுகள் தருகின்றன. எனவே, திருக்குறள் ஒருபோதும் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூல் அன்று என்பதே முடிந்த முடிவான உண்மை.
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
   வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற்
   றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே
   எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
    
    
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி1)
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
   என் கெழுதகை நண்பர் ஒருவர் இதுவரை நான் எழுதிய மூன்று குறள் ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துவிட்டு, திருக்குறள் நூலுக்கு புதிய உரைநூல் எழுதலாம்; ஆனால், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் திரு. நாகசாமி அவர்கள் எழுதிய நூலுக்கு மறுப்புக் கட்டுரை எழுதுவது அவசியமா என்றும் தவறுகள் இருந்தால், காலம் அந்நூலைப் புறந்தள்ளும் என்பதால் எனது ஆய்வுக்கட்டுரைத் தொடர் எழுதுவதை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
   நறுந்தொகை வழிகாட்டியது!
   தெளிந்த நீரோடை போல் இருந்த என் மனதில் நண்பரின் பரிந்துரைகள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின. "தீர ஆராய்ந்து முடிவெடுக்கிறேன்" என்று பதில் தந்தேன். ஓரிரு தினங்கள் சென்றன. தற்செயலாகப் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய அறநூல் வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையைப் படிக்க நேர்ந்தது. கொற்கை வேந்தன் குலசேகர பாண்டியன் அல்லது அதிவீரராம பாண்டியன் எழுதிய இந்நூலின் பின்வரும் வரிகள் என் குழப்பத்துக்கு விடை தந்தன:
   பொய்யுடை யொருவன் சொல் வன்மையினால்
   மெய் போலும்மே! மெய் போலும்மே!  - நறுந்தொகை: 73
   மெய்யுடை யொருவன் சொல மாட்டாமையாற்
   பொய் போலும்மே பொய் போலும்மே. - நறுந்தொகை: 74
   தலைசிறந்த தொல்லியல் அறிஞர் என்று தாம் பெற்ற மக்கள் நம்பிக்கையையும், நற்பெயரையும் முதலாக்கி, ஆரிய இன மேன்மைக்காக, உண்மைக்குப் புறம்பாகத் திருக்குறள் கருத்துக்களை மனம் போன போக்கில் திரித்து எழுதத்துணிந்த  பொய்யுடை நாகசாமியவர்கள் சொல் வன்மையினால் மெய்போல் எழுதிய பொய் நூலானா "TIRUKKURAL - An Abridgement of Sastras" நூலுக்கு மறுப்புநூல் எழுதாவிட்டால், மெய்யுடைத் திருக்குறள் நம் "சொல மாட்டாமையால்" ஆரியசாஸ்திர நூற்களின் வழிநூல் என்னும் பொய் நிலைத்து, மெய்போல் ஆகிவிடும். எனவே, என் கடமையைச் செய்வதே சரி என்று முடிவுசெய்து விட்டேன்.
   இனி... திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.
   "TIRUKKURAL - An Abridgement of Sastras - Dr. R.Nagaswamy"

   என்னும் தமது நூலின் ஆறாவது பக்கத்தில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:
   "Valluvar has based his text on the four Varna System as Brahmana, Ksatriyas, Vaisya and Sudra (Antanan, Arasan, Vanikan and Velalan) whose life style and discipline he writes in many Kurals".

   திரு நாகசாமி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் பின்வருமாறு:
   "வள்ளுவர் தமது நூலை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் (அந்தணன், அரசன், வணிகன், வேளாளன்) என்னும் நால்வருண சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்; இந்நால்வகை சாதியினரின் வாழ்வியல் முறை, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பல குறட்பாக்களையும் எழுதுகின்றார்."
   குறள் ஆய்வு -3ல் 'அந்தணன்' என்று வள்ளுவர் குறித்தது ஆரிய நால்வருண சாதி அமைப்பில் வரும் 'பிராமணன்' அல்லன் என்பது உள்ளங்கள் நெல்லிக்கனியென நிறுவப்பட்டது. 
   தமிழ் மண்ணில் வட ஆரியப் பிராமணர் வந்து கலந்தபின் ஏற்பட்ட சாதி அமைப்புக் குறித்து குறள் ஆய்வு-4 நுட்பமான ஆய்வுகளைத் தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கும்.
   பரிதிமாற்கலைஞரின் பார்வையில் வடமொழியாளர்
   அதன் முன்பு, தமிழ் நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பிராமண அறிஞருள் நேர்மையானவர்கள் சிலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் பரிதிமாற்கலைஞர்; தம் பெற்றோர் இட்ட வடமொழிப் பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்பதைத் தூய தமிழில் 'பரிதிமாற்கலைஞர்' என்று செம்மையாக்கம் கொண்ட இத்தமிழறிஞர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலின் 202ம் பக்கத்தில் ஆரியர்களைக் குறித்துத் பின்வருமாறு குறிக்கிறார்:
   "II வடமொழிக் கலப்பு.
   "வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயக்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்கு உற்ற ஆற்றல் இல்லாது போயிற்று.
   (1) வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயும் இருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்;  
   (2) தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர். -
   'முற்சடைப் பலனில் வேறாகிய முறைமை சொல்
   நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்' 
   என்று ஆரியரை நோக்கி முழங்கும் கபிலர் அகவலையும் காண்க.
   இன்னும் அவர் தம் புத்திநலங்காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்;
   (3) தமிழரிடத்திருந்த பல அரியவிஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்."
   ஆரியப் பிராமணராகப் பிறந்திருந்தும், நேர்மையானவராக வாழ்ந்து, அஞ்சாமல் ஆரியப்புரட்டுக்களை உரக்கச் சொன்ன முதுபெருந் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த மூன்று கருத்துக்கள் (தடித்த எழுத்துக்களில் உள்ளவை) இங்கு உற்றுக் கவனிக்க வேண்டியவை.
   தமிழர்களிடம் கற்றவை ஒழுக்கநூல்களே வடமொழியில் எழுதப்பட்டன
   (1) வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் உயிர்ச் சமத்துவ ஒழுக்கம், கொல்லாமை, புலால் மறுத்தல், போன்ற தமிழர்க்கே உரிய சிறப்பு ஒழுக்கங்களைத் தமிழரிடமிருந்து ஆரியர்கள் கற்றுக்கொண்டார்கள்.
   அவற்றுள், நால்வருணத்தை எதிர்க்கும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதைத் தவிர்த்து, ஆரியர்களால் பின்பற்றக்கூடிய குறட்பாக்களுக்கும், ஏனைய தமிழ் அறநூல்களுக்கும், வடமொழியில் 'தர்மசாஸ்திர நூல்கள்' என்று மொழிபெயர்த்தனர் என்பதுவே உண்மை என்பதைப் பரிதிமாற்கலைஞர் உடைத்துக் கூறுகின்றார்.
   எனவே, ஆரிய தரும சாஸ்திரங்களின் தொகுப்பே திருக்குறள் என்று நூல் எழுதியுள்ள ஆரியப் பிராமணரான திரு.நாகசாமி தமது ஆரிய குலப்புரட்டுத் தொழிலைக் கைக்கொண்டு எழுதுவது அவரது பிறவி இயல்பே என்றாலும், அவர் நூலில் குறிப்பிட்ட ஒவ்வொரு கருத்தையும் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து எழுதுவதும், மறக்காமல் ஆங்கில மொழியிலும் இம்மறுப்பு நூலை வெளியிடுவதும் தமிழ் மொழியின் நலனுக்கும், தமிழ் மக்களின் நலனுக்கும் இன்றியமையாதது.
   ஆரியர் தமிழரிடம் திணிக்க முயலும் மனிதகுலத்துக்கே எதிரான நால்வருண மனுதரும சநாதன தருமச் சாதிப் படிநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக செல்லாக் காசாக்கும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் உயிர்ச் சமத்துவ ஒழுக்கம், தமிழரை அடிமையாக்க விரும்பிய ஆரியரின் நோக்கத்துக்கு ஒத்துவராதது என்பதால் அது குறித்து ஆரியர் நூலேதும் எழுதவில்லை.
   தமிழ் ஆகம மூலநூற்களை அழித்த ஆரியர்கள்
   ஆகம விதிப்படியான கோயில்கள் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுவது ஆகமங்கள் தமிழர்களின் அறிவுச்சொத்து என்பதை நிறுவும் சான்றாகும். தமிழர்களின் சிறப்பு வழிபாட்டு நெறிகளையும், மெய்யியல் கூறுகளையும், கோயில் நிருமானக் கட்டட விதிகளையும் சிறப்பாகக் கூறும் ஆகமநூற்கள் இன்று தமிழில் இல்லை; சமற்கிருதத்தில் மட்டுமே உள்ளன.
   தமிழில் இருந்த ஆகம மூலநூற்கள் ஆரியர்களால் அழிக்கப்பட்டுவிட்டன என்பது தெளிவு.
   ஆதிசங்கரர் ஆகமங்களை எதிர்த்தவர்
   'ஆகமம்' சொல்லும் தத்துவ நிலைப்பாட்டை சநாதன ஸ்மார்த்த மதத்தை நிறுவிய ஆதிசங்கரர் தமது "அத்துவிதம்" எனும் ஸ்மார்த்தத் தத்துவத்துக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே எதிர்த்தார் என்னும் வரலாறு, ஆகமங்களுக்கும், சநாதனிகளான ஆரியப் பிராமணர்களுக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை விளக்கும்.
   திருக்குறளைத் 'தீயகுறள்' என்ற மகாப்பெரியவா!
   உயிர் சமத்துவம் உரைக்கும் திருக்குறளை அடியோடு வெறுப்பவர் சங்கரமட அத்துவித சநாதனியான மகாப்பெரியவா காஞ்சி சங்கராச்சாரியார். திருக்குறளைத் 'தீக்குறள்' என்று கூறியுள்ளார் காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா(????)என அழைக்கப்படும்  காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் என்பது தற்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
   ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இரண்டாம் பாசுரமான “வையத்து வாழ்வீர்காள்!” பாடலின் ஆறாம் அடியில் “தீக்குறளை சென்றோதோம்“ என்று வருகிறது. காஞ்சி "மகாப்பெரியவா" அவர்கள் 1963ல் ஜூன் மாதம் மதுரையில் திருக்குறள் பற்றி பேசுகையில் ஆண்டாள் திருப்பாவையின் "செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள "தீக்குறளை சென்றோதோம்" என்னும் தொடருக்குத், தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடையில் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.னார்; இச்செய்தி குமுதம் வார இதழில் வெளியானது.
   தமிழில் 'குறளை' என்ற சொல்லின் பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும். "தீக்குறளை சென்றோதோம்" என்றால், "தீமை தரும் செயலான,  பிறரைப் பற்றிக் கோள்  சொல்லமாட்டோம்" என்பதே பொருள்.
   இதுகுறித்து  ஸ்ரீவைஷ்ணவ ஸூதர்சனம் என்ற மாத இதழ் (சோதி 16 ஒளி-12)ல் தலையங்கம் தீட்டி, மகாப்பெரியவா சொன்ன கருத்துக்கு எதிராகக் கண்டனத்தினை பதிவு செய்திருந்தது. குமுதம் இதழ் 21-11-1963 தலையங்கத்தில் மகாப்பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும்,  தன் வருத்தத்தினையும் தெரிவித்திருந்தது.
   வேடிக்கை என்னவெனில் பிரபல பத்திரிகை "குமுதம்" கூட இலக்கணப்பிழையாக  "ச்"  சேர்த்ததை உணராமல், "தீக்குறளைச் சென்றோதோம்" என பீடாதிபதி சொல்லி திருக்குறளுக்கு எதிராக திருப்பாவையைப் பற்றி பேசும்படி வைத்தது தவறு" என மட்டும் பதிவு செய்திருந்தது.
   'மகாப் பெரியவா' என்றும், 'காஞ்சி மாமுனிவர்' என்றும் அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர், உலகப்பொதுமறை என்றும், பொய்யாமொழி என்றும் போற்றப்படும் திருக்குறளைத் தீயகுறள் என்று கூசாமல் திரித்துத் துணிந்து பொய் சொல்லும் அளவுக்குத் திருக்குறளை வெறுத்தவர் என்பதை இன்றைய தமிழர்கள் அறிதல் நலம்.
   'மகாப் பெரியவா' 'தீயகுறள்' என்று பொய் சொல்லும் அளவுக்குப் படுபாதகம் செய்ய வேண்டிய ஆத்திரம் திருக்குறளின் மேல் வர இன்னுமொரு காரணம், 'அந்தணன்' என்னும் நிலை ஒருவருக்குப் பிறப்பினால் வருவதல்ல; 'மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோன்' என்னும் தகுதியால் மட்டுமே வருவது' என்று நெத்தியடியாக அல்லவா சொல்கின்றது திருக்குறள்? 
   "பிரமனின் நெத்தியிலேயே பிறந்த பிராமணர்கள் எந்தத் தவறு செய்தாலும், ஏனைய வருணத்தார் வணங்கும் தெய்வங்கள் பிராமணர்களே!" என்று முழங்கும் ஆரிய மனுதர்மப் பிராமணத் தத்துவத்தை அடியோடு மறுக்க அல்லவா செய்கிறது திருக்குறள்?
   உலகப் பொதுமறையானாலும் மனு தருமத்துக்கு முரணாகக் கருதுகோள்கள் கொள்வதால் திருக்குறளைத் தீக்குறள் என்று ஆண்டாள் நாச்சியாரின் பெயரால் 'மகாப் பெரியவா' பொய்யுரை சொன்னார் போலும்!
   ஆங்கிலத்தில் "Blood is Thicker than Water" என்ற பழமொழிக்கு இணையான ஆரியப் பழமொழியாக "Thread is Thicker than Thandam" என்று வைத்துக் கொள்ளலாம்; அதாவது, 'சன்யாசம் பூண்டு ஏந்திய தண்டத்தைவிடத் தடிமனானது பூர்வாசிரமப் பூணூல்" என்னும் கொள்கையுடையவராக இருந்ததால், கூசாமல் 'தீய குறள்' என்று மகாப் பெரியவா பொய்யுரை சொன்னார் போலும்!
   தப்பை பூசிமெழுகிய மகாப்பெரியவா!
   பெரும் எதிர்ப்புக் கிளம்பியதும் குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய பீடாதியின் விளக்கம் 5/12/63 குமுதத்தில்,  "பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன், அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர, அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட்பெருமையை உணர்த்துவதற்குத்தான்.” என்று மகாப்பெரியவா செய்த தப்பைப் பூசிமெழுகி விளக்கியிருந்தார்.
   "திருக்குறளைத் தாழ்வுபடுத்தவில்லை என்பதை விவரித்த மகாப்பெரியவா, திருப்பாவைக்கு தான் உணர்த்திய  பொருள் தவறு எனத் தன் விளக்கத்தில் ஒப்புக் கொள்ளவுமில்லை;  வருத்தமும்  தெரிவிக்கவில்லை!
   மேலும், 5/12/63 குமுதம் இதழில் “தீக்குறள்” என்னும் பதத்திற்கு "இனிமையான குறள்" என்று பொருள் கூறுகிறார் மகாப்பெரியவா! அதுவும் இலக்கணப் பெரும்பிழை. அப்படி பொருள் இருந்தால், "தீந்தமிழ்",  "தீஞ்சுவை" என்பது போல "தீங்குறள்"  என்றல்லவா ஆண்டாள் நாச்சியார் எழுதியிருக்கவேண்டும்? ஆனால், "தீக்குறளை சென்றோதோம்"  என்றே திருப்பாவையில் அருளியுள்ளார் ஆண்டாள் நாச்சியார். 
   நடமாடும் தெய்வமாகவும், ஜகத்குருவாகவும் மதிக்கப்பட்டவரின் தெய்வத்தின் குரலில், ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை குறித்து அபஸ்வரம் வந்தால், அது எப்படித் தெய்வத்தின் குரலாக இருக்க முடியும்?  கபடவேடங்களும், பொய்மைகளும் நெடுநாட்கள் நிலைப்பதில்லை.
   பிராமணர் தலையில் தோன்றியவர் என்றும், காலில் பிறந்தவர் சூத்திரன் என்று ராஜநாகத்தினும் கொடிய சாதி நஞ்சை, சநாதன மதம் என்னும் போர்வையில் உமிழும்  மகாப்பெரியவா சங்கராச்சாரியார், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்ச் சமத்துவம் முழங்கும் திருக்குறளைத் 'தீக்குறள்' என்று தூற்றிப் பேசியது ஆரியரின் மநுதர்மத்தின்படி சரியே.
   தெய்வத்தின் குரலாக மகாப்பெரியவா நமக்கெல்லாம் தெரிவிக்கும் செய்தி இதுதான்: துறவு மேற்கொண்டாலும், ஆரியனின் பிறவிக்குணம் சாதியைத் துறக்கவிடாது. எனவே, 'துறவு' அதிகாரத்தில்  திருக்குறள் சொல்லும் "நீத்தார் பெருமை" ஆரியப் பிராமணர்களுக்குப் பொருந்தாது என்பதாகும். இது குறித்துப் பின்னர் விரிவாகக் காண்போம்.
   திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயலும் மலை(நாகப்)பாம்பு!
   திருக்குறளின் புகழும், பெருமையும் விண்ணைத் தாண்டியும் வளர்ந்து விட்டதால், 'மகாப்பெரியவா'-வின் அடிப்பொடியான திரு.நாகசாமி, திருக்குறளை ஆரிய தர்ம சாஸ்திரங்களின் சுருக்கம் என்று சிறுமைப்படுத்தி, விழுங்கத் துடிக்கிறார். கைக்கிண்ணத்தில் உள்ள பாலில் தோன்றும் நிலவின் பிம்பத்தைக் கண்டு, நிலவையே சிறைபிடித்துவிட்டதாக இறுமாப்பு கொள்ளும் அறிவீனம் இது.
   (பரிதிமாற்கலைஞரின் (2), (3) ஆம் கருத்துக்களுக்கான விளக்கங்களும் ஆய்வுத் தொடர்ச்சியும்  குறள் ஆய்வு-4ன் இரண்டாம் பகுதியில் அடுத்து வெளியாகும்.)
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
   வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற்
   றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே
   எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
    
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   குறள் கூறும் 'அறவாழி அந்தணன்' ஆரியப்பிராமணரா? - குறள் ஆய்வு-3.
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
   "TIRUKKURAL - An Abridgement of Sastras" என்னும் தமது நூலின் எட்டாவது பக்கத்தின் இறுதியில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:
   "There is a Kural which -
   அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
   பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.)
   It means that unless one takes refuge in the feet of the Antanan, who wields the chakra, it is difficult to get over the birth. Here, it may be interpreted that the lotus feet of Vishnu who wields the protective Chakra, it may also be interpreted as unless one takes refuge in the feet of the Brahmana men who holds the chakra of dharma, it is difficult to cross the world, as the word, Antanan stands for a Brahmin."
   திரு நாகசாமி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் பின்வருமாறு:
   "மேற்கண்ட குறளின் பொருள், அறச்சக்கரத்தைக் கொண்டு விளங்கும் அந்தணனின் பாதங்களைச் சரணடைந்தால் ஒழிய, பிறவியைக் கடப்பது கடினம். இங்கு, 'அறவாழி அந்தணன் தாள்' என்பதற்கு, 'காக்கும் சக்கராயுதத்தைக் கைக்கொண்டு திகழும் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள்' என்றும் பொருள் கொள்ளலாம்; 'தர்மச்சக்கரத்தை உடைமையாகக் கொண்டுள்ள  பிராமண ஆண்களின் கால்களில் சரணடைந்தாலொழிய, இவ்வுலகைக் கடப்பது கடினம்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஏனெனில், அந்தணன் என்னும் சொல் பிராமணனையே குறித்து நிற்கின்றது."
    "பிராமண ஆண்களின் கால்களில் சரணடைந்தாலொழிய, இவ்வுலகைக் கடப்பது கடினம்" என்று தரும் விளக்கத்தினால், திரு.நாகசாமி அவர்கள் வெளிப்படுத்துவது ஆரியப் பிராமணத் திமிரின் உச்சம். இப்படி ஒரு விளக்கத்தை எழுதினால் மறுப்புத் தெரிவிக்க பாவாணர் இபூவுலகில் இல்லை; பெருந்தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் செயல்பாட்டில் இல்லை என்ற அசட்டுத் துணிச்சல் இந்த ஆரியப் பிராமணருக்கு வந்துவிட்டது. அவர்களின் எழுத்துக்கள் எம்போன்ற சாமானியரையும் மீட்டுருவாக்கம் செய்து போரிட வைக்கும் என்று அறியாமல் போனார் இந்த ஆரியப் பிராமணர் திரு.நாகசாமி.
    திருவள்ளுவர் காலத்தில் ஆரியப் பிராமணர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்பது சங்க இலக்கியங்கள் கூறும் சான்றுகளால் நன்கு அறியலாம். எனவே, திருவள்ளுவர் 'பிராமணர்' என்ற வார்த்தையை நன்றாக அறிந்தே இருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
   அந்தணர் என்னும் சொல் ஆரியப்பிராமணரைக் குறிக்காது!
    ஆனால், திருக்குறள் முழுவதும் 'பிராமணர்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் எங்குமே பயன்படுத்தவில்லை என்பதிலிருந்து 'அந்தணன்' என்னும் சொல் பிராமணரைக் குறிக்கவில்லை என்பதும், ஆரிய மனுதரும சாத்திரங்களின் கருத்துக்களையும் திருவள்ளுவர் திருக்குறளில் குறிக்கவில்லை என்பதும் தானே விளங்கும்.
   பார்ப்பார் என்னும் தமிழர்!
    'அந்தணன்' என்ற சொல் தவிர, திருவள்ளுவர் 'பார்ப்பார்' என்னும் சொல்லை மட்டுமே திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். இதுவும் ஆரியப் பிராமணரைக் குறிக்கும் சொல் அன்று. தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான திருக்கோயில் பூசகர்களையே 'பார்ப்பார்' என்னும் சொல்லால் குறித்தார் வள்ளுவர். (தற்காலத்தில் இவர்கள் சிவாச்சாரியார்கள் / பட்டாச்சாரியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.)
    தமிழ்ப் பார்ப்பார்கள் வீடுகளில் சிவபெருமானை(திருமாலை)த் உலகநலன் வேண்டி தமதளவிலும், சிவன்(திருமால்) திருக்கோயிகளில் ஏனையோர்களுக்காக அவர்பொருட்டும் வழிபாடும், பூசனையும் செய்யும் திருத்தொண்டு புரிபவர்கள்.
    'பார்ப்பு' என்ற சொல்லுக்குப் 'பறவையின் குஞ்சு' என்று பொருள். இதற்கான இலக்கியச் சான்றை "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......." எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் தருகின்றது. இங்கு, 'பார்ப்பு' என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருள் கொண்டே உரைக்கின்றது முத்தொள்ளாயிரம்.
    முதல் பிறப்பாக, தாய்ப்பறவையின் வயிற்றிலிருந்து முட்டையாகவும், பின் இரண்டாவது பிறப்பாக, முட்டையிலிருந்து பொரிந்து குஞ்சாகவும், இரு-பிறப்பு நிகழ்வதால் இப்பெயர் வந்தது. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது. இருபிறப்பாளன் என்ற காரணத்தால், பார்ப்பார் என்று திருக்கோயில் பூசகர்கள் அழைக்கப்பட்டனர்.
    [மேலும், பார்ப்பார் என்பவர்கள் தமிழர் சமய வேத, ஆகம நூல்களைக் கோயில் வழிபாட்டுக்கு அடிப்படையாகக் கொண்டு பார்ப்பதும், அவற்றின்படி, கோயில் கடவுளர்க்கு தமிழ்வழித் திருப்பூசை,திருப்பலி முதலியன செய்ததாலும், பார்ப்பார் எனவும், குருக்கள் எனவும், அந்தணர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் சுத்தத் தமிழர்களே!
   ஆரியப் பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு, அரசர்களுக்குத் தமிழ்ப் பார்ப்பனர்கள் செய்துவந்த மதக் கருமங்களையும், திருக்கோயில் சடங்குகளையும் ஆரியப் பிராமணர்களைக் கொண்டு செய்விக்க சில தமிழ் அரசர்கள் முனைந்தனர். இவ்வாறு, ஆரியப்பிராமணர்களும் பார்ப்பனர், அந்தணர் பட்டம் பெற்றதால் ஆகம விதிகள் காற்றில் பறக்க விடப்படுவதைத் தடுக்கவே, தமிழாகமம் திருமந்திரம் எழுதிய திருமூலதேவர் நாயனார் இப்போக்கைக் கண்டித்து 519வது திருமந்திரம்  அருளினார்.
   தமிழ்நாட்டுக்கு வந்தேறிய ஆரியப்பிராமணர்கள் தம்மையும் பார்ப்பனர்கள் என்று பொய்மொழி கூறிக்கொண்டு, திருக்கோயில் பூசனை செய்ய முற்பட்டனர் என்பதையும், அத்தகைய ஆரியப் போலிப் பார்ப்பனர்களை "பேர்கொண்ட பார்ப்பான்" என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகின்றார் பத்தாம் திருமுறை ஆசிரியர் திருமூலதேவ நாயனார்:
   பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
   போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
   பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
   சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. - திருமந்திரம் 519
   தம்மைப் பார்ப்பனர் என்று பொய்யுரைக்கும் 'பேர்கொண்ட பார்ப்பான்' என்னும் ஆரியப் பிராமணன் திருக்கோயிலில் சிவபிரானின் திருமேனியைத் தொட்டு அருச்சனை செய்தால், போர்த்தொழில் செய்து நாடுகாக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதிகள் வரும்; நாட்டில் பஞ்சம் வரும் என்று தெரிந்து சீர் கொண்ட நந்தி எமக்கு உபதேசம் செய்தார் என்று இத்திருமந்திரம் வழியாக தமிழ்நாட்டு மக்களையும், நாடாளும் மன்னனையும் எச்சரிக்கை செய்கின்றார் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் தமிழ் நான்மறையும், வடவேதப் பயிற்சியும் ஒருங்கே கைக்கொள்ளும் தமிழ் பார்ப்பார் வேறு, வட ஆரியவேதம் மட்டுமே ஓதும் ஆரியப் பிராமணர் வேறு என்பதைத் தமிழ் ஆய்வாளர்கள் அறிதல்வேண்டும்.]
   மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
   பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். - திருக்குறள்:134
   (பொருள் கொள்ளும் முறை: ஓத்து மறப்பினும் (பின்)கொளலாகும்; ஒழுக்கம் குன்ற, பார்ப்பான் பிறப்பு கெடும்.)
   தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால்,  ஒழுக்கம் தவறிக் குன்றினால், பார்ப்பான்  பிறப்பு கெடும். அதாவது, ஒழுக்கம் குன்றினால், பார்ப்பான் இருபிறப்பாளன் என்னும் தகுதியை, இரண்டாவது பிறப்பு என்னும் பிறவிப் பயனை இழந்து, உடனே இழிவை அடைவான் என்பதே பொருள்.
   திருக்குறள் நெறியின்படி, ஒழுக்கம் குன்றியவன் 'பார்ப்பான்' என்னும் தகுதியை உடனே இழக்கிறான்.
    மனுசாஸ்திரம்: ஒழுங்கீனராக இருந்தாலும் ஆரியப் பிராமணரே உயர்ந்தவர்!
    ஆரியர்களின் மனுதர்ம சாத்திர முறைப்படி,  பிராமணன் ஒழுக்கம் தவறி, இழிந்த காரியத்தைச் செய்தாலும் பிராமணனே; பிறப்பே பிராமண குலத்தைத் தீர்மானிக்கும் என்று தீர்க்கமாகப் பிறப்பின் மேன்மையைத் தூக்கிப் பிடிக்கும் மனு சாஸ்திரம் இங்கு தரப்பட்டுள்ளது.
   Manu Dharma Sastra: Chapter-IX Suthra 319. Thus, though Brahmanas involve themselves in all (sorts of) indicipline or mean deeds, they must be honoured in every way; for (each of) them is a very great deity.

    திருக்குறள்: ஒழுக்கம் கெட்டால் தமிழ்ப் பார்ப்பார் பிறப்பே கெடும்!
    'ஒழுங்கீனமாக நடப்பதால்  பிராமணனுக்கு குலக்கேடு நிகழாது' என்னும் ஆரியசாதிப் பிறவி மேன்மை பாராட்டும் மனுதர்ம சாத்திரத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடு கொண்டது திருக்குறள் என்பது : 'ஓத்து மறப்பினும் (பின்)கொளலாகும்; ஒழுக்கம் குன்ற, பார்ப்பான் பிறப்பு கெடும்' எனும் இக்குறளால் நிறுவப்படுகின்றது. எனவே, பார்ப்பான் என்பவன் ஒழுக்கத்தைப் போற்றும் தமிழன் என்பதும், பிராமணன் என்பவன் ஒழுங்கீனமாகத் திரியும் 'பிராமண வடஆரியன்' என்பதும் தெளிவாகின்றது.
    ஆரியப்பிராமணர் ஒருபோதும் அந்தணனாக மாட்டார்!
    யார் அந்தணன் என்னும் வரையறையை 'நீத்தார் பெருமை' என்னும் மூன்றாவது அதிகாரத்தின் முப்பதாவது பாடலில் நிறுவுகின்றார் வள்ளுவர். நீத்தார் என்போர் உலக நலனுக்காக முற்றிலும் சுயநலம் தவிர்த்துப் பொதுப்பணிக்காவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். தன்னைப் பிறப்பின் வழியாக உயர்ந்தவனாகவும், மற்றவரைத் தங்களிலும் தாழ்ந்த இழிமகன்களாகக் கருதும் ஆரியப் பிராமணர்கள், திருக்குறள் கூறும் உயிர் சமத்துவத்தின் அடிப்படையில், "மனிதர்கள் மட்டுமல்லர், அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமே" என்னும் உயிர் சமத்துவக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்பதால்,  பிராமணர்கள் ஒருக்காலும் அந்தணனாக இருக்க இயலாது என்பது தெளிவு.
    அந்தணர் என்போர் அறவோர்; மற் றெவ்வுயிர்க்கும்
   செந்தண்மை பூண்டொழுக லான். - திருக்குறள்:30
   அந்தண்மை என்பது செவ்விய குளிர்ந்த தன்மை ஆகும். எவரிடத்திலும், எப்பொழுதும், எந்த நிலையிலும் மன வெறுப்பு, அறிவு வேறுபாடு, செயல் வெறுப்பு ஆகிய காரணங்களால் முகச்சுழிப்பும், கடுகடுப்பும் இல்லாமல், அன்புடன் நடந்துகொள்ளும் குளிர்ந்த நீர்மைத் தன்மை இங்கு 'அந்தண்மை' என்ற சொல்லால் சுட்டப்படுவது. அந்தண்மைப் பண்பு உடையவர்கள் அந்தணர்கள் ஆவர்.
   யார் அந்தணர்?
    ஆறறிவுடைய மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட அனைத்து உயிர்களுக்கும் இச்செவ்விய குளிர்ந்த தன்மை கொண்ட உள்ளத்தோடு பணியாற்றும் பண்புகொண்ட அறவாழ்க்கை வாழும் அறவோர்களே 'அந்தணர்கள்' என்னும் சொல்லுக்குரிய தகுதி உடையவர்கள்.
    திருவள்ளுவர் காலத்திலேயே, 'அந்தணர்' என்னும் இச்சொல், பிறப்பின் வழியாக ஒரு மக்கட் பிரிவினருக்கு ஆகிவரத் தொடங்கியபோது , 'அவ்வாறு ஒரு பிறவி இல்லை' என்று  மறுத்துச் சொல்லவே இக்குறளை வள்ளுவர் இயற்றினார் என்பது தெளிவு.
    குறிப்பாக, தாம் பிரமனின் தலையில் பிறந்தோம் என்னும் கட்டுக்கதைகளைக் கூறும் பிறவிச் செருக்கால் தமக்கு உயர்வுகூறிப் பிற மக்களை விலங்கினும் கீழாக மதிக்கின்ற கீழ்மை உணர்வு கொண்ட ஆரியப் பிராமணர் 'அந்தணர்' ஆக மாட்டார். எனவே, பிராமணர் என்னும் சொல் அந்தணர் என்னும் சொல்லுக்கு எதிர்ச் சொல் என்பதை ஆணித்தரமாகச் சொல்லவே இக்குறள் வள்ளுவப்பெருந்தகையால் இயற்றப்பட்டது.
    தன்னைப் பிராமணன் என்பவன் அந்தணனாகும் தகுதியை இழக்கிறான்!
    ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிவிட்டாலே அவன் அந்தணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றான் என்பதால் பிராமணர் அல்லாதோர்களில் இருந்தே அந்தணர்கள் தோன்ற முடியும் என்பது தானே விளங்கும்.
    'அந்தணர்' என்பதற்குத் இலக்கணம் சொல்லும் அவசியம் திருவள்ளுவர் காலத்தில் ஏற்பட்டதாலேயே சொல்லியிருக்கிறார். எனவே,
   அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
   பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.)
   என்ற குறளுக்கு திரு. நாகசாமியின் விளக்கம் ஒரு மநுவாதி மனித விரோத ஆரியப் பிராமணரின் வெற்றுக் கூச்சலே என்பதும், அவர் விளக்கம் திருக்குறள் ஆசிரியரின் கருத்துக்கு முற்றிலும் எதிர்மறையான விளக்கம் என்பதும் இங்கு நிறுவப்பட்டது. எனவே, இக்குறளுக்கான திரு.நாகசாமியின் விளக்கம் அறிஞர் பெருமக்களால் ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள இயலாத விளக்கமாகும்.
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2
   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.


   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   - பாவேந்தர் பாரதிதாசன்
   குறள்ஆய்வு-2ம் அத்தியாயத்தின் பேசுபொருள், தமிழ்நாடு ஆரியநாடே என்று ஆரியனான மனு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கோள் காட்டி, தொல்லியல் அறிஞர் நாகசாமி  உரிமை கொண்டாடுவது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்வதாகும்.
   ஆய்வறிஞர் காட்டும் தமிழ் நிலப்பகுப்பு
   முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 1966ல் எழுதிய "சங்ககால வாழ்வியல்", (அத்தியாயம் 10,பக்கம் 330, பத்தி2,) என்னும் வரலாற்று நூலில் சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றார்: "தமிழ்நாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரிப்பது செயற்கையான இலக்கியப் பாகுபாடு அன்று; ஏனெனில் அத்தகைய நிலப்பாகுபாடு தமிழகத்தில் உண்மையாகவே இருந்தது. அங்கிருந்தவர்கள் ஒன்று வேடர் அல்லது ஆடுமாடு மேய்ப்பவர், அல்லது உழவர், அல்லது மீனவர் அல்லது கள்ளர். அவர்களது தோற்றம், உடை, உணவு, தொழில், பழக்கவழக்கங்கள் முதலியவை இயல்பாகவே வேறுபட்டன."
   மானுடவியல் அடிப்படையில் ஆய்வு
   ஆய்வறிஞர் சுப்ரமண்யன் ஆய்வு அடிப்படையில், தமிழக நில அமைப்பைக் கருத்தில்கொண்டு, மனிதனின் உடல், உள்ளம் இரண்டும் சார்ந்த  'Anthropology' என்னும் மானுடவியல்  சார்ந்த ஆய்வை மேற்கொண்டு, ஆரியர் தமிழ் மண்ணின் மைந்தர்களா அல்லது வந்தேறிகளா என்பதை ஆராய்ந்தால் மட்டுமே நாகசாமி அவர்களின் கூற்றில் உள்ள உண்மை புலப்படும் என்பது தெளிவு.
   முனைவர் நாகசாமியின் ஆரியதேசவாதம்
   முனைவர் நாகசாமி அவர்கள் எழுதிய "TIRUKKURAL - An Abridgement of Sastras" என்ற நூலின் 13ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:  "Manu has mentioned the country between the Eastern ocean and the Western ocean was called Arya desa and this  could refer only to Tamil Nadu, Andra and Karnataka (and also Kerala)". இதன் பொருள், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஆரியதேசமாகும். அப்படியானால், தமிழ்நாடு தமிழனின் தேசமன்று என்று பொருள். ஒரு வாதத்துக்காக திரு.நாகசாமி சொல்லுவதை உண்மை என்றே வைத்துக்கொண்டால், பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
   நால்வகை நிலத்திலும் உழைத்து வாழ்ந்தவரா ஆரியர்கள்?
   திரு.நாகசாமி அவர்கள் மனுசாத்திர நூலில், கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடைப்பட்ட நாடு ஆரிய தேசம் என்று  கூறுவதாகவும், அக்கூற்றினால் பெறப்படும் உண்மை யாது எனின், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாடுகள் ஆரியதேசம் என்பதாகும் என்று ஆணித்தரமாக தனது வாதத்தை முன் வைக்கின்றார்; மனுவின் காலத்திலேயே ஆரியதேசமாக தமிழ்நாடு இருந்ததென்றால், ஆதியில், தமிழகத்திலுள்ள  ஐவகை நிலங்களிலும் உழைத்து வாழ்ந்தவர்கள் ஆரியர்களே என்று பொருள். அவ்வாறானால், ஆரியர்கள் எவ்வகையான உழைப்பில் உயிர் வாழ்ந்தார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன; குறிப்பாக, தமிழகத்தின் பாலை தவிர்ந்த நால்வகை நிலங்களில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஆதி ஆரியர்களைக் குறித்துப் பின்வரும் கேள்விகள் இயல்பாக எழுகின்றன:
      மலையும் மலைசார்ந்த பகுதியுமான குறிஞ்சியில் வாழ்ந்த ஆரியர்கள் மலைக்கு வந்து தேனெடுத்தார்களா? தினைப்புனம் காத்தார்களா? மலை வேடர்களா? வேட்டுவத் தொழிலைச் செய்தார்களா?    காடுகளும், காடுகள் சார்ந்த பகுதியுமான முல்லை நிலங்களில் வாழ்ந்த ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்தார்களா? ஆநிரைகளுக்கு நீரூற்றிப் பால் கறந்தனரா? அவர்தம் பெண்டிர் மத்தினால் ஓசையுடன் தயிரைக் கடைந்து வெண்ணெய் உண்டாக்கினரா?   வயல்களும், வயல் சார்ந்த பகுதிகளான மருதநிலத்தில் ஆரியர்கள் உழவராக உழவுத் தொழிலைச் செய்தார்களா? வயலுக்கு வந்தார்களா? ஏற்றமிறைத்தார்களா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டார்களா? நாற்று நட்டார்களா? களை பறித்தார்களா? அவர்தம் பெண்கள் கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தார்களா?   கடலும், கடல் சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலங்களில் வாழ்ந்திருந்த ஆரியர்கள் மீனவர்களா? கடலோடி மீன்பிடிக்கும் தொழில்களைச் செய்தார்களா? ஒரு நாட்டின் பூர்வகுடிகள் என்று சொந்தம் கொண்டாடும் இனம், மானுடவியல் (Anthropology)  தத்துவத்தின்படி, ஆதிக்காலம் தொட்டு, அந்நாட்டில் உடலுழைப்புச் செய்து வாழ்ந்தவராக இருத்தல் வேண்டும்  என்பது  உலகோர் அனைவரும் அறிந்த உண்மை.
   ஆரியர் உடலுழைப்புச் செய்ததாகத் தொல்காப்பியத்திலும் சான்று இல்லை!
   ஆரியருக்குத் தொழில் யாது என்ற வினாவுக்கு விடை தொல்காப்பியத்திலும் காணப்படவில்லை; தொல்காப்பியர் காலத்தில், அந்தணர் என்போர் அறவோர் என்று பொதுவில் கூறப்பட்டுள்ள வழக்கு மட்டுமே இருந்துள்ளது. அத்தகைய அறவோர்க்கு உரியதாகப் பின்வருவனவற்றைக் குறிக்கின்றது தொல்காப்பியம்:
   நூலே, கரகம், முக்கோல், மணையே,
   ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய! - தொல்காப்பியம்:பொருளதிகாரம்:மரபியல்:1560
   இங்கு, தொல்காப்பியம் குறிப்பிடும் "அந்தணர்" என்னும் சொல் ஆரியர்களைக் குறிக்காமல், பொதுவாகத்  துறவிகளைக் குறித்தது என்பதே உண்மை. ஏனெனில், இல்லறத்தானாக வாழ்ந்து, வைதிகக் சடங்குகளைச் செய்த ஆரியர்கள் முக்கோல்களையோ, கரகத்தையோ பயன்படுத்தியவர்கள் அல்லர். அத்தகைய துறவியர் தமிழர், ஆரியர் என்னும் இரு தரப்பாரும் உள்ளடக்கியோர் என்பது தெளிவு. "அந்தணர்" யார் என்னும் இப்பொருள் குறித்து, அடுத்துவரும் அத்தியாயம்: "அந்தணர் என்போர் ஆரியரா: குறள் ஆய்வு-3"ல் விரிவாக விவாதிக்கலாம்.
   உடலுழைப்பு இல்லாத சுகவாழ்வே ஆரியருடையது!
   ஆரியர்கள் செய்த ஆறு வகைத் தொழிலாகச் சொல்லும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் என்று ஒரு வழக்கு சங்ககாலம் தொட்டு உண்டு. ஓதல் என்பது ஆரிய வேதம் ஓதுவது, ஓதுவித்தல் என்பது ஏனைய ஆரியருக்கு ஓதுவிப்பது, வேட்டல் என்பது ஆரியரே அவர் நலனுக்காக வேள்வி செய்வது, வேட்பித்தல் என்பது, தமிழரிடம் பெரும்பொருள் பெற்றுக்கொண்டு, பொருள் கொடுத்தவர் நலனுக்காக வேள்வி செய்வது, ஏற்றல் என்பது தானமாகப் பெரும்பொருளைத் தமிழரிடமிருந்து பெறுவது (ஒரு வேலையும் செய்யாமல், தமிழர்களை ஏமாற்றித் தானம் வாங்கிக் கேவலமாகப் பிழைப்பதைத்  தொழிலாகக் காட்டும் ஆரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்), ஈதல் என்பது ஆரியர் அவர்களின் வைதீகச் சடங்குகள் செய்யும்வேளை, ஏனைய ஆரியருக்குத் தானம் கொடுத்தல் என்பதாகும்.
   அண்டிப்பிழைக்கவந்த ஆரியர் நாடே எனதென்கிறார் !
   ஆக, வந்தகாலம் தொட்டு, உடலுழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது தமிழரை அண்டிப்பிழைத்த வந்தேறிகளான வடஆரிய ஏமாற்றுக் கூட்டத்தின் தலைமகன் மனு தமிழ்நிலத்தை ஆரிய தேசமென்று கூசாமல் பொய்யுரைத்துள்ளார் என்பதே உண்மை. பொய் சொன்ன மனுவுக்கும், அப்பொய்யுரையையே காசாக்கப் பார்த்த முனைவர் நாகசாமிக்கும் வரலாற்றுரீதியில் தமிழ் மக்கள் தரும் விடை மேற்கண்ட வினாக்களாகத்தான் இருக்கும்.
   மானுடவியல் அடிப்படையில் தமிழனே தமிழ் மண்ணுக்கு உரியவன்!
   எனவே, தமிழகம் ஆரியதேசம் என்ற மனுவின் கூற்று மானுடவியல் அடிப்படையில்  துளியும் உண்மையற்ற பொய்யுரையாகும்; மனுவை மூலமாகக் காட்டி, தமிழ்மண்ணை ஆரியமண் என்று உரிமை கொண்டாடும் தொல்லியல் அறிஞர் முனைவர்.நாகசாமியின் கூற்று, "என் பாட்டன் விட்டுச்சென்ற டைரிகளில் அமெரிக்கா முழுதும் தமிழ்தேசம் என்று எழுதி வைத்திருக்கிறான்; எனவே அமெரிக்கா தமிழனுக்கே" என்று முழங்கும் அடிப்படையற்ற உரிமை முழக்கத்தை ஒத்தது; நகைப்புக்கிடமானது. "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டியதாம்" என்ற தமிழ் சொலவடை நினைவுக்கு வந்து வயிறு வலிக்கச் சிரித்தேன்! நீங்களும் வாய்விட்டுச் சிரியுங்கள்!!
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
   வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே! மற்
   றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே
   எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
   குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
    
  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்!

   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

   கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார்.
   பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!!
   "History Repeats Itself!"  
   என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்.
   "ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவனின் காணொளித் துண்டை தொலைக்காட்சியில் கண்டபோது
   "என் துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்துவிட்டன! இல்லையேல் இன்னும் பலரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்!" என்று கொக்கரித்த மேலைஆரிய வெள்ளையன் ஜெனெரல் ஓ டயர் இன்று உயிருடன் மீண்டு வந்திருக்கிறான் தூத்துக்குடிக்கு என்பது புரிந்து போனது. ஒரே வேறுபாடு, இன்று அவன் நேரடியாக வந்து சுடவில்லை; கீழை ஆரியனாக தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டுவிட்டானோ என்று நம்மை எண்ண வைக்கின்றது வடஇந்தியத் தொலைக்காட்சிகளில் "செத்தவர்கள் மாவோயிஸ்டுகள்!" என்று கொக்கரிக்கும் தமிழகத்தில் வசிக்கும் ஆரியர்களின் கூச்சல்..
   ஏனைய மாநிலங்கள் அனைத்தும் துரத்திவிட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தூத்துக்குடியில் நிறுவினர். அன்றாடம் அவ்வாலை வெளியேற்றும் நச்சுக்கழிவுகளால் குடிக்கும் நிலத்தடி நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் நஞ்சாகிப் போனதால் ஏற்பட்ட பல்வேறு நோய்களால் கொத்துக்கொத்தாக சகமனிதர்கள் சாவதைப் பொறுக்க இயலாமல், இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை என்று அப்பகுதி மக்களே ஒன்றுதிரண்டு முன்னெடுத்த நெடுநாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தன் மக்களையே கொன்று, அச்சத்தை உருவாக்கும் கொலைபாதகத்தை, நிறைவேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
   சுவாசிக்கக் காற்றுக்கும், குடிக்க நீருக்கும் நீதி கேட்டுப் போராடிய அப்பாவித் தமிழர்களை 'மாவோயிஸ்டுகள்' என்று முத்திரை குத்தி, காவல்துறையை ஏவிவிட்டுத் துப்பாக்கிக் குண்டுகளால் கொன்று தீர்த்ததைக் கொண்டாடிக் கொக்கரிக்கின்றன மக்கள் விரோத ஆரிய சக்திகள்!
   "எங்களுக்கு வேலையும் வேண்டாம்! வளர்ச்சியும் வேண்டாம்! நாங்கள் சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்காமல் இருந்தாலே போதும்!" என்று கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் கொத்துக் கொத்தாகச் சாகும் தூத்துக்குடி மக்களின் கதறலைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிதத்தோடு நிற்காமல், இப்போதுள்ளவற்றைக் காட்டிலும் இருமடங்கு பெரிதான புதிய ஸ்டெர்லைட் விரிவாக்க ஆலைக்கும் அனுமதி அளித்தனர் மத்திய, மாநில அரசினர். 25 ஆண்டுகளாக ஆண்ட மத்திய, மாநில ஆட்சியாளர்களின்  துரோகச்செயலைப் பொறுக்க இயலாமல் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர் தூத்துக்குடி மக்கள்.    
   ஸ்டெர்லைட்டிடம் விலைபோன அரசியல் கட்சிகளை நம்பமாட்டோம் என்கின்ற கருத்தை முன்வைக்கின்றனர் போராடும்  தூத்துக்குடி மக்கள்.  அசராமல் தாங்களே அமைதியான வழியில் தொடர்போராட்டங்களைத் தொடர்ந்தனர்; இப்போராட்டங்களை நிறுத்தவே ஜல்லிக்கட்டு பார்முலாவைக் கையிலெடுத்தனர் ஆட்சியாளர்கள் என்று வலுவாகக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.  
   ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசே வாகனங்களுக்குத் தீவைத்ததைப் படம்பிடித்துச் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள், இம்முறை போராட்டங்களை ஒடுக்க மாற்றுவழியைக் கையாண்டனர் என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைக்கின்றனர் போராடிய தூத்துக்குடி மக்கள். (இத்தனை முன்னேற்பாடுகளையும் தாண்டி, பொதுமக்களில் எவராவது சமூக வலைத்தளங்களில் கையும் களவுமாகப் பிடிபட்டவற்றைப் பதிவேற்றிவிட்டால் என்னசெய்வது என்று யோசித்தார்களோ என்னவோ, மாநில உள்துறை, தென்மாவட்டங்களில் இணையதளத்தையே ஐந்து நாட்கள் முடக்கிவைக்கும் முடிவை  அவசரநிலைப் பிரகடனம் செய்து கொண்டுவந்தது ஒரு தனிக்கதை.) சீருடை அணியாத போலீசைக் கொண்டும், சமூக விரோதிகளை ஏவியும் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டதாகப் போராடிய மக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அமைதியாகப் போராடிய மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுடுவதற்குக் காரணம் இப்போது கிடைத்துவிட்டது. பலரைச் சுட்டுக் கொன்றபிறகு, ஆட்சியாளர்களும் ஆரியக் கைக்கூலிகளும் செத்தவர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல்.
   சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!
   என்று பாடிய பாரதி, தூத்துக்குடிப் படுகொலைகளைக் கண்டிருந்தால்,
   சொந்தச் சகோதரர்களைத் துடிதுடிக்கக் கொல்லல் கண்டும் சிந்தை இரங்காரடி! கிளியே!
   மாவோயிஸ்ட் என்றாறடி! செத்தவர் மாவோயிஸ்ட் என்றாறடி! கிளியே!
   அவர் கொல்லப்படல் இறையாண்மை தர்மமென்றாரடி!
   என்று பாடியிருப்பார்.
   "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும்" கேட்டுப் போராடிய குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் சாவை, தமிழ்நாட்டில் வாழும் ஆரியர்களும், ஆரியக்கைக்கூலிகளும் "போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்தான் கொல்லப்பட்டார்கள்! அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே! அவர்கள் செத்து ஒழியட்டும்!" என்று வடஇந்திய ஆரியக்கைக்கூலிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொக்கரித்துக் கொண்டாடினார்கள். இவர்களின் கொக்கரிப்பை அப்படியே பரப்புரை செய்கின்றனர் ஆரியக்கொள்கையேற்ற அடிவருடித் தமிழினக் கோடரிக் காம்புகள். தம் உடன்பிறப்புக்களை ரத்தம் சொட்டச்சொட்டத் துடிதுடிக்கக் கொன்ற  படுகொலைச் சாவைக் கொண்டாடும் கொடூரர்களாக ஆரிய வெறிநாய்க்கடிபட்ட தமிழர்கள் வெறிகொண்டு கொக்கரிப்பதைக் கண்டு மனம் பதைக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
   மேலை ஆரியன் ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில் "கஞ்சி குடிப்பதற்கு இலார்!" என்றிருந்த ஏழை மக்களின் நிலை, இந்தியாவை எழுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கீழை ஆரிய அரசுகள்,  அவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட பல்வேறு தமிழக அரசுகளின் ஆட்சியால்  "விஷமற்ற சுவாசக்காற்றும், விஷமற்ற குடிநீரும் இலார்" என்ற அளவுக்கு மோசமடைந்துள்ளது.
   இந்தியா என்னும் அமைப்பு
   இந்தியா என்பது பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு. ஒன்றன்பின் ஒன்றாக ஐம்பத்தியாறுக்கும் மேலான எண்ணிக்கை கொண்ட நாடுகளைப் பிடித்து ஆண்ட மேலை ஆரிய ஆங்கிலேயர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெளியேறிய பின்னர், உருவான கூட்டமைப்பு நாடுதான் இந்தியா என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் "India shall be a Union of States " என்று பிரகடனம் செய்கிறது.
   ஆரியர்களின் நலனுக்காகவே உருவான RSS-ம் அதன் அரசியல் கட்சியான பிஜேபி-யும்  பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள் கொண்ட மக்கள் வாழும் பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான இந்தியாவை "ஒரே (ஆரிய)நாடு! ஒரே (ஆரிய)மொழி! ஒரே மதம்(ஆரியம்-இந்து) ஒரே மக்கள்(ஆரியர்கள்)!" என்று மாற்றும் ஒற்றைக் கலாச்சார முழக்கத்தை முன்வைக்கின்றது. இங்கு, 'ஒரே' என்பது 'வடஆரியர்களை'க் குறிக்கும் சொல்.
   "பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், தொன்மங்கள்" என்ற பன்மைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் ஒற்றுமையாக வாழ்வது சாத்தியம். "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது பன்மைத்துவத்தின் இருப்பில்தான் அடங்கியுள்ளது. 'ஒரே' என்னும் 'uniformity'யைத் தூக்கிப்பிடிப்பது இந்திய யூனியன் அமைப்பைத் துண்டாடும் முயற்சி என்பதை வட ஆரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


  • By பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்
   திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1

   பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.


   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
   -பாவேந்தர் பாரதிதாசன்
   இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் ஏன் வந்தது என்று தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழிநூலே என்றும், குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று தரப்படுத்தி, பிராமணருக்கு ஏனையோர் கீழ்நிலை என்றும், குறிப்பாக, சூத்திரர் பிராமணருக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்று சொல்லும் நால்வருண வருணாசிரம தருமத்தைத் தூக்கிப்பிடிக்கும் மனுதரும சாத்திரத்தைப் பின்பற்றியே திருக்குறள் எழுதப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார்  தமிழ்நாட்டில் வசிக்கும் முனைவர்.நாகசாமி என்னும் ஓர் ஆரியர்; இவர் 'தொல்லியல் அறிஞர்' என்றும் 'கல்வெட்டு ஆய்வாளர்' என்றும்  அறியப்பட்டவர்; திருக்குறள் ஆரிய தர்ம சாத்திரங்களின் வழிநூல் என்றும், தமிழ்நாடு என்று எதுவும் தமிழர்களுக்குக் கிடையாது என்றும் இது பண்டைய சமற்கிருத சாத்திரங்களில் ஆரியதேசம் என்றே அறியப்படுகின்றது என்றும்  இவர் வெளியிட்டுள்ள ஆங்கில நூலில் எழுதி நிறுவ முனைந்துள்ளார்.
   "Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras" என்பது திருவாளர் நாகசாமியின் ஆங்கில நூலின் தலைப்பு.  உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும், உண்மையைத் திரித்தும் இவர் நிறுவ முயலும் கருத்துக்கள், திருக்குறளின் மாண்பை ஒருக்காலும் சிதைக்க இயலாது. ஆயினும், தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, சமயம், மெய்யியல், வழிபாடு உள்ளிட்ட அனைத்துக் கூறுகளும் ஆரியர்கள் போட்ட பிச்சை என்றும், மொத்த இந்தியாவும் ஆரிய தேசமே என்னும் ஒற்றைக் கலாச்சாரத்தை ஆட்சிக்கு உள்ளும் வெளியும் நிலைநிறுத்த முற்படும் பாசிச சக்திகள் செய்யும் பல்வேறு முயற்சிகளின் ஒரு பரிமாணமே திரு.நாகசாமியின் இம்முயற்சி என்பதை youtube இணையதளத்தில் வெளிவந்துள்ள பின்வரும் காணொளி வெளிச்சம்போட்டுக் காட்டும். ராஜீவ் மல்கோத்திரா என்னும் வடஇந்திய ஆரியர், தமிழ் நாட்டில் பலநூறு தலைமுறைகளாகத் தமிழர்களோடு தமிழர்களாக வாழும் கருப்பு ஆரியரான முனைவர் நாகசாமியைக் காணும் பேட்டியில் இவ்விரு ஆரியர்களும் கூறும் விஷமத்தனமான கருத்துக்களைக் கேட்டு, கொதிக்கும் உங்கள் ரத்தம் சொல்லும் "ஏன் இன்னும் இக்காணொளியை மறுத்தும், இந்நூலுக்கு மறுப்பும் எழுதாமல் மென்மையான கட்டுரை எழுதுகிறீர்கள்?" என்று.
    
   இக்காணொளி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதால், ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூல் உலகெங்கிலும் பேசப்படுகின்றது; குறிப்பாக, வடஇந்தியாவில்  இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது  என்ற நோக்கில், இந்நூலுக்கு ஒரு மறுப்புநூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவேண்டியது மிகமிக அவசியம். ஆங்கிலத்தில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழறியாத அறிவுலகத்துக்கு உண்மையைத் தெரிவிக்கப் பயன்படும்; தமிழில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழர்களுக்குப் பயன்படுவதற்கு ஏதுவாக இருக்கும்.
   ஆரியரான திரு.நாகசாமி, திருக்குறளைப் பற்றி ஏன் இப்படியொரு பொய்யான நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடவேண்டும் என்பதைத் தமிழர்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகப்பொதுமறை திருக்குறளுக்கு ஒப்பிட்டுச் சொல்லுமளவு ஒரு அறம்-நீதி-வாழ்வியல்நெறி பேசும் நூல் உலகெங்கிலும் உள்ள எந்நாட்டு இலக்கியத்திலும் இல்லை. சமயம் சாராது, காலம்-இடம் என்னும் பரிமாணங்களைக் கடந்து விளங்கும் திருக்குறளின் பெருமை எந்நூலுக்கும் இல்லை. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்று உலக அரங்குக்கு உரக்கச் சொல்லும் நூல் திருக்குறள்.
   [உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலான பைபிள் ஒரு மதநூல்.  பெரும்பாலான நாடுகளின் அரசுமதமாகக் கிறித்துவமதம் விளங்குவதால், பைபிள் அந்தந்த நாட்டு அரசுகளின் துணையால் அந்தந்த நாட்டு மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டது என்பதால், பைபிள் எண்ணிக்கையை திருக்குறள் எண்ணிக்கைக்கு ஒப்பிட இயலாது.]
   எந்நாட்டு அரசுகளின் உதவியுமின்றி, நூலின் கருத்துப் பொருண்மை ஒன்றால் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு அறிஞர் பெருமக்களின் தனிமுயற்சியின்  துணைகொண்டு மட்டுமே,  அதிகமான பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக விளங்குகிறது திருக்குறள்.  ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பெருமையினைத் தாங்கி நிற்கும் திருக்குறளின் பெருமைகண்டு தாங்கொணாப் பொறாமை மேலிட்டு, அந்நூலினை விழுங்கிச் செரித்துவிடத் துடிக்கின்றனர் ஆரியர்கள். இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களில், ஆரியக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் தமிழரும் அடக்கம் என்பதைக் கவனத்தில் கொள்க.
   "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" என்று சங்ககாலம் தொட்டு முழங்கிவரும் பாரதிதாசர்களால் அவ்வப்போது இடர்களையப்பட்டுத் தமிழன்னையின் மணிமுடி மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமாக திருக்குறள் போற்றப்பட்டு வருகின்றது. என்றாலும், தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஆரியர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், திருக்குறளுக்கு எதிராக எழுதுவதையோ, அல்லது திருக்குறளை ஆரியக் கருத்தியலில் அடைக்க முயல்வதையோ செய்யத் தவறுவதேயில்லை.
   தமிழ்நாட்டில் வசிக்கும் ஆரியர்கள் அனைவரின் வீட்டிலும் ஆரியரின் தாய்மொழியான வடமொழி பேசப்படுவதில்லை; ஏனெனில், வடமொழி என்னும் ஆரியம் உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதைந்து செத்துப் போய்விட்டது. எனவே, தமிழகத்தில் வாழும் வடஆரியர்கள் தமிழில்தான் உரையாடுகின்றனர். ஆயினும், தமிழ் அவர்களின் தாய்மொழி அன்று என்பதிலும், வடமொழி செத்துவிட்டாலும், அதன்பின்னர் ஆரியர்கள் உருவாக்கிக்கொண்ட அரைச்செயற்கை மொழியான சமற்கிருதமே உயர்வான மொழியென்றும் உறுதியாகப் பேசுபவர்கள்; சமற்கிருதம் தேவமொழி என்றும், தமிழ் 'நீசமொழி' என்றும் நம்மிடமே உரக்கப் பேசுவார்கள். தமிழர்களுக்கு நலம்பயக்கும் திட்டங்கள் எதுவாயினும் சரி அல்லது காவிரி உள்ளிட்ட தமிழர்களின் உரிமைகள் தொடர்பான எவையாக இருந்தாலும் சரி, வரிந்து கட்டிக்கொண்டு, எதிர்நிலைக் கருத்தியல்களைப் பரப்புவதில் முழுமூச்சுடன் ஈடுபடுவர்.
   ஆரிய தரும சாத்திரங்களுக்கும் திருக்குறளுக்கும் தத்துவ அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிறுவ,  "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்னும் குறள் ஒன்றே போதும்.
   பிறப்பினால் அனைத்து உயிர்களும் ஓர் நிலை(சமம்-ஒக்கும்); அவ்வுயிர்கள் வாழும் உடல்களின் தன்மையைப் பொருத்தும், தொழிற்படும் செய்தொழில் பொருத்தும், உயிர்களின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்கிறார் பொய்யாமொழிப் புலவர்.
   காட்டாக, தொடு உணர்ச்சி மட்டுமே கொண்ட ஓரறிவு உயிரான மரம், நாம் வெளியிடும் கரியமில வாயுவை காற்றில் இருந்து சுத்திகரித்து நீக்கி, நமக்கான உயிர்வளி என்னும் 'Oxygen'-ஐ வெளியிடுகின்றது; சூரிய ஒளியின் துணைகொண்டு, தனக்கான உணவையும், ஏனைய உயிர்களுக்கான உணவாக இலைகளையும், காய்களையும், பழங்களையும் உற்பத்தி செய்கின்றது. இவை அனைத்திற்கும் தேவையான நீர்ச்சத்தை, காற்றிலிருந்தும், நிலத்தடியிலிருந்தும் பெறக் கடினமாக உழைக்கிறது. கடும் தட்பவெட்பச் சூழல்களில் தன்னைக் காத்துக்கொள்ளக் கடுமையாகத் தனியே போராடுகின்றது; ஏனென்றால், மரங்களால் நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ இயலாதல்லவா? இத்துணைப் போராட்டங்களின் வெளிப்பாடாகத்தான் மனிதர்களுக்காகப் பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் நிகழ்த்துகின்றது.  
   "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!" என்று ஓருயிர்த் தாவரத்தின் வலியைக் காட்சிப்படுத்துகின்றார் தற்காலத் தமிழ்க் கவிஞர் பா.விஜய். இத்துணை சேவைகளைத் தன் சக உயிர்களுக்குச் செய்யும் ஓருயிர்த் தாவரத்தைக் காட்டிலும், ஆறறிவு மனிதப்பிறவிகளாகிய நாம் எவ்வகையில் உயர்ந்தவர்கள்? மற்ற உயிர்களுக்கு எவ்வகையில் சேவை செய்தவர்கள்? மனிதர்களாகிய நாம், நம் அனைத்துத் தேவைகளுக்கும் மற்ற உயிர்களைக் கொன்றும், தொழிநுட்ப வளர்ச்சி என்ற பெயரால் ஏனைய உயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாழ்படுத்தியும், வருங்காலத்தில் இப்புவியை உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பாழிடமாக ஆக்கும் போக்கில்  கேவலமாகவே வாழ்ந்து வருகின்றோம்.
   மனித வாழ்வு என்பதே ஏனைய உயிரினங்களின் நல்வாழ்வைச் சார்ந்தது; ஏனைய உயிர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதால் மட்டுமே மனிதகுலம் தன்னைப் பாதுகாக்க இயலும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்த தமிழர்களின் அறநூல் திருக்குறள் சொல்லும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் அனைத்து உயிர்களுக்கான சமநீதித் தத்துவம் எங்கே?
   ஆரிய பிராமணர்குலம் ஒன்றன் நன்மையையே கருத்தில்கொண்டு,      பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைச் சூத்திரர்கள் என்னும் இழிமக்களாக்கி, அவர்களை என்றும் ஆரியப் பிராமணர்களுக்கு அடிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட  மனுதருமம், சநாதன தருமம் என்ற பெயர்களில் உலாவரும் பாசிச, மனிதவிரோத ஆரிய தர்ம சாத்திர நூற்கள் எங்கே?
   எவ்வகையிலாவது இவ்விரண்டு நூற்களையும் ஒப்பிடவே இயலாதபோது, திருக்குறளை ஆரிய தர்ம சாத்திரங்களின் சுருக்கம் என்று சொல்லும் அடாவடித்தனத்தை நூலில் வடித்த ஆரியருக்கு, நாம் வடிக்கும் பொருத்தமான மறுப்பு நூல் ஒன்றே காலத்தை வென்ற விடையாக அமையும்.
   நூல் முழுவதையும் எழுதி முடித்தபின், ஒரு புத்தமாக வெளியிடலாம் என்றிருந்தேன். அப்படி வெளியிட்டிருந்தால், அதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பு இல்லாதிருக்கும்; பல குறைபாடுகளையும் கொண்டிருக்கும். கிருஷ்ணன் என்னும் தனித்தமிழனாக மறுப்பு நூல் எழுதுவதைப் பார்க்கிலும், 'யாழ்' போன்ற உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் தளத்தில் தொடர் கட்டுரையாக எழுதினால், உலகத்தமிழர்களின் அறிவார்ந்த பங்களிப்புடன் ஒரு நிறைவான நூலாக வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்ததால், இந்நூலைத் தொடர்கட்டுரையாக எழுத முனைகின்றேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனிக் கருத்தை மையமாகக் கொண்ட கட்டுரையாக இருக்கும். எனவே, முந்தைய கட்டுரைகளைப் படித்தால்தான் நடப்புக் கட்டுரை புரியும் என்ற தொடர்கதை இலக்கணம் இத்தொடருக்குப் பொருந்தாது.
   மனிதகுல விரோத நூலாகிய சநாதன மனுதரும சாத்திர நூற்களின் சுருங்கிய வடிவமே திருக்குறள் என்று கொடுமை பறையும் "Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras"  ஆரியப் பேரினவாதப் பாசிச நூல் சொல்லும் மையக் கருத்துக்களின் சுருக்கத்தையும், அந்நூலின் ஒவ்வொரு கருத்துக்குமான பதிலாக ஒவ்வொரு கட்டுரையுமாகத் தொடர்ந்து எழுத உள்ளேன். தமிழர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டுரையையும் திறனாய்வு செய்து, குறைகளைச் சுட்டி, தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால், ஒரு வலிமையான நூலாக இத்தொடர் கட்டுரைகள் உருவெடுக்கும். தமிழரெல்லாம் இணைந்து உருவாக்குவோம்.
   வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
   உள்ளத்தால் ஒருவரே!   மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
   கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
   துள்ளும் நாள் எந்நாளோ!       -   புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
    
    
   குரளறம் தொடர்ந்து பேசுவோம்
  • By sudaravan
   கடந்த 31ஆம் திகதி ஜ.தே.க அரசின் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
   அவர்கள் வடமராட்சி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாகவும் அதையடுத்து  மாதகல் கடல் பகுதியிலிருந்து வடராட்சி கிழக்கு பகுதி வரையான கடலோர மார்க்கங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமான வாகனங்களை சோதனைகளை ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
   சந்தேக நபர்களில் சிங்களவர்கள் மூவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் அடங்குகின்றார். செல்வராஜ் கணேசன் (வயது 30), ஆர்.எஸ்.எஸ். சுமர ஹெவத் ஆமி ரனபாத் (வயது 35) ஆர்.ஏ.எஸ்.சீ.செவட்ட சேவத் ஹேவத் புளுமென்ரல் (வயது 37) கே.என்.அன்சன பெற்றும் ஹேவத் உக்குன் ஆகியோரே சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை புளூமெண்டல் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது தேர்தல் காரியாலயத்தை திறந்து பிரச்சார பணி மேற்கொள்ள கொட்டாஞ்சேனை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்தனர். இதன் போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.http://www.pathivu.com/news/42135/57//d,article_full.aspx
  • By sudaravan
   இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.
   வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.
   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
   நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. எமது கூட்டமைப்பினர் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது இந்தியா அவர்களை கூப்பிட்டிருந்தது. கூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் கதை முடிகின்றது. இந்தியாவுடன் போவோம் எனக் கருதியிருந்தார்கள். இதன் போது எனது தொலைபேசிக்கும் அழைப்பு வந்தது. நான் கதைத்தேன்.
   அப்போது தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பினர் எங்கே நிற்கிறார்கள்? அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். நான் அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்கள் என தெரிவித்திருந்தேன். உடனடியாக புலித்தேவன் என்னிடம் சொன்னார் அவர்கள் இந்தியா செல்வதை நிறுத்தும் படி ஏனெனில் இவர்களை இந்தியாவில் வாயை மூடிக்கொண்டு இருக்க வைத்துவிட்டு யுத்தத்தை முடிப்பதற்கு இந்த அரசாங்கமும் இந்தியாவும் பார்கிறது என்றார். நான் இதனைக் கூறியபோது கூட்டமைப்பினர் அதனை கணக்கு எடுக்கவில்லை. அன்றிரவே இந்தியா சென்று விட்டனர். அவர்கள் யத்தம் முடிந்த பின்னே வந்து இறங்கினார்களெனவும் அவர் தெரிவித்தார்.http://www.pathivu.com/news/41901/57//d,article_full.aspx
  • By sudaravan
   யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது.
   யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது.
   இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோமென ஜனநாயக போராளிகள் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
   ஆயுதம் ஏந்திய எம்மை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சர்வதேச நாடுகள் அனைத்தும், 2001ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றிணைந்து எம்மை இல்லாதொழிக்க செயற்பட்டன. நாம் மக்களுக்காக போராடியவர்கள். இன்று எமக்கு பின்னால் பலர் உள்ளனர் என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் எமக்கு பின்னால் வலிகளை சுமந்த மக்களே உள்ளனர். பொருளாதார ரீதியிலும் ஏனைய வழிகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தற்போது யாரும் இல்லை. ஆகையால், போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் மக்களுக்காக குரல் கொடுக்க நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைக்கும் எண்ணம் எம்மிடம் இருந்திருந்தால் நாம் ஏன் அரசியல் அங்கிகாரம் கேட்டு அக்கட்சியிடம் செல்லவேண்டும்?. யாரையும் விமர்சிக்கும், குற்றம் சுமத்தும் எண்ணம் எம்மிடத்தில் இல்லை. ஏனெனில், மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் தான் நம் முன் உள்ளன. கூட்டமைப்புடன் இணைந்து அதனை பலப்படுத்தி காத்திரமான தலைமைகளை உருவாக்குவதற்காகவே நாம் அவர்களிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், எம்மை அவர்கள் நிராகரித்தனர். மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் தலைதூக்க வாய்ப்புக்கள் உள்ளது என்ற கருத்துக்கு நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். இதிலிருந்து வெளிவருவதற்கு ஜனநாயக முறையில் செல்வதே ஒரே வழி. மக்களின் தற்போதைய தேவை எதுவோ அதை பெற்றுகொடுப்போம். போரின் வடு இல்லாத சூழலை உருவாக்க முயல்வோம். போராளிகள் ஜனநாயக வழிக்குள் வந்தால் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படும். எனவே எமது கொள்கைகள், செயற்பாடு என்பன எதிர்வரும் புதன்கிழமை (29) சுதுமலையில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும். போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் செல்வதற்கான ஆணையினை மக்கள் எமக்கு நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுதென ஜனநாயகப்போராளிகள்  மேலும் தெரிவித்துள்ளனர்.
   http://www.pathivu.com/news/41859/57//d,article_full.aspx