Sign in to follow this  
Kavi arunasalam

குத்துச் சண்டையில் ஒரு புலி

Recommended Posts

DB958235-3_A45-43_D7-9_E9_E-4_A528754_E1

ஆறு சுற்று குத்துச்சண்டை விளையாட்டில் துளசி தர்மலிங்கம் வெற்றி பெற்றிருக்கிறார்

 26.05.2018 அன்று யேர்மனியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் போட்டியாளரான Karimli யை  ஆறு சுற்றுக்கள் மோதி இந்தப் போட்டியை  துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார்

 தொடர்ந்து நான்கு தடவைகள்  தனது ஆறு சுற்றுக் குத்துச் சண்டைப் பயணத்தில் துளசி தர்மலிங்கம் வென்றிருக்கிறார் என்பது இவரது குத்துச் சண்டை விளையாட்டுப் பயணத்தின் முக்கிய பதிவு. குத்துச் சண்டை விளையாட்டில் தளராது போராடுவதால் துளசி தர்மலிங்கத்திற்கு Tiger என்ற அடைமொழியும் இருக்கின்றது.

 இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) யேர்மனியில்  Schwanewede என்ற நகரத்தில் பிறந்தவர். Baden-Württemberg  மாநிலத்தில் Bruchsal நகரில் வசிக்கிறார்.

 125க்கு மேலான பல குத்துச் சண்டைப் போட்டிகளில் துளசி தர்மலிங்கம் விளையாடி இருக்கிறார். ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், யேர்மன் நாட்டில் Bundesliga குத்துச் சண்டைப் போட்டியில் வென்று யேர்மனியின் சம்பியனாகவும் வந்திருக்கிறார். அத்தோடு 2016 கோடை ஒலிம்பிக் போட்டியில் கட்டார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் விளையாடியும் இருக்கிறார்.

 குத்துச்சண்டை விளையாட்டை தனது தொழில்முறை விளையாட்டாகக் கொண்டிருக்கும் இருபத்தைந்து வயதான துளசி(மாறன்) தர்மலிங்கம் தொடர்ந்து வெற்றிகள் பெற வாழ்த்துவோம்.

 பேர்லினில் நடந்த போட்டியின்  இணைப்பு இது.

Edited by Kavi arunasalam
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

குத்துச்  சண்டை விளையாட்டில்.... பலமுறை மாகாண சம்பியனாக வெற்றி பெற்ற துளசி தர்மலிங்கம், 
மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகின்றோம். 

Share this post


Link to post
Share on other sites

சகல துறைகளிலும் தமிழன் தனது தடம் பதிக்க வேண்டும் என்பதே எனது அவா !

வாழ்த்துக்கள் துளசி!

Share this post


Link to post
Share on other sites

குத்துச் சண்டையில் மேலும் பல வெற்றிகளும் புகழும் பெற்றிட துளசிக்கு வாழ்த்துக்கள்👏👏👏

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி.

Share this post


Link to post
Share on other sites

சர்வதேச ரீதியில் வளர வாழ்த்துக்கள் துளசி. 💪

Share this post


Link to post
Share on other sites

Ashian championship Jakarta – 2018  கால் இறுதிக் குத்துச் சண்டை போட்டியில் துளசி  தர்மலிங்கம் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this