Jump to content

கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க


Recommended Posts

கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

image1-2-3-1-696x464.jpeg
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை அணியில் இருந்து தொடர்ச்சியாக புரக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வருடம் க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் முன்னணி வீரர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க்ளோபல் T20 கனடா லீக் தொடரில் பங்கேற்கவுள்ளதன்மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார்.

 

கேப்டவுனில் நடந்த பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை அடுத்து 12 மாதங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்ட ஸ்மித்துக்கு, அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்நாட்டு போட்டிகளில் ஆட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்தது.  

இதன்படி அவர் சக நாட்டு வீரரான கிறிஸ் லியோன், அதேபோன்று சர்வதேச நட்சத்திரங்களான கிறிஸ் கெயில், அன்ட்ரூ ரஸ்ஸல், ஷஹிட் அப்ரிடி, டர்ரன் சமி, லசித் மாலிங்க, சுனில் நரைன், டேவிட் மில்லர் மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோருடன் ஒரு மாதம் நீடிக்கும் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளார்.  

இந்த தொடரில் பங்கேற்பது குறித்து டேவிட் வோர்னரும் சமிக்ஞைகள் காட்டியுள்ளார்

இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட லசித் மாலிங்க கடந்த காலங்களில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு இலங்கை அணியில் இடம்பெறாமல் இருந்தார். எனினும், காயத்தில் இருந்து மீண்ட பின்னர் அவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், தான் சுமார் ஒரு தசாப்த காலமாக விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாயப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

முன்னர் மாலிங்கவை தமது அணியில் இருந்து விடுவித்த மும்பை நிர்வாகம், பின்னர் இடம்பெற்ற ஏலத்திலும் அவரை தமது தரப்பிற்கு எடுக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில், அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் ஏனைய எந்தவொரு அணியினராலும் எடுக்கப்படாமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக இருந்தது. எனினும், இறுதியில், அவரை தமது பந்து வீச்சு ஆலோசகராக இணைப்பதற்கு மும்பை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

 

இவ்வாறான ஒரு நிலையில், ஐ.பி.எல் தொடர் இடம்பெறும் அதே காலப்பகுதியில் இலங்கை வீரர்களின் திறமையை பரிசோதிப்பதற்காக உள்நாட்டில் சுபர் ப்ரொவின்சியல் தொடர் என்ற பெயரில் மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் ஆரம்பமாகியது. குறித்த தொடரில் மாலிங்க விளையாடினால் மாத்திரமே அவரை தேசிய அணிக்கும் மீண்டும் இனைப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியுமு் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்பொழுது மாலிங்க கனடாவில் இடம்பெறும் க்ளோபல் T20 கனடா கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

க்ளோபல் T20 கனடா தொடர், ஐந்து கடனா நகரங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஆறு அணிகளைக் கொண்டு அமையவுள்ளது. இதில் எட்மொன்டன் ரோயல்ஸ், மொன்ட்ரியல் டைகர்ஸ், டொரொன்டோ நஷனல்ஸ், வன்கூவர் நைட்ஸ் மற்றும் வின்னிபேக் ஹவுக்ஸ் என்ற அணிகளுடன் ஆறாவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக கரீபியன் பிராந்திய வீரர்களைக் கொண்ட அணியும் பங்கேற்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடனான உத்தியோகபூர்வ கூட்டணியின் ஓர் அங்கமாகவே இந்த அணியும் தொடரில் ஆடவுள்ளது.  

க்ளோபல் T20 கனடா தொடர் வெற்றி அளிக்க மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை சார்பில் நான் வாழ்த்துகிறேன்என்று அந்த கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கெமரூன் குறிப்பிட்டார்.   

இதுபோன்ற லீக் போட்டிகள் மற்றும் தொடர்களிலேயே எமது பிராந்தியத்தின் வளர்ச்சி பெரும்பாலும் தங்கியுள்ளது. நாம் கனடா கிரிக்கெட்டுக்கு ஆதரவை வழங்கி எதிர்காலத்தில் இதனை விடவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

வரும் மே 31 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஆரம்பக்கட்ட வரைவு ஒன்றின் மூலம் அணிகளுக்கு வீரர்கள் இணைக்கப்படவுள்ளனர். கனடாவின் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் உள்ளடங்கலாக கனடா வீரர்களின் நான்கு பட்டியல்கள் இந்த தொடரில் ஒதுக்கப்பட்டுள்ளன.

22 லீக் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இறுதிக் கட்டமாக பிளே ஓப்ஸ் (Playoff) மற்றும் சம்பியன் போட்டி ஜூலை 16 ஆம் திகதி நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் வடக்கு டொரொன்டோவில் உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான வசதிகள் கொண்ட மபிள் லீப் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இங்கு 7,000 பேருக்கு போட்டிகளை பார்க்கும் வசதி உள்ளது.  

க்ளோபல் T20 கனடா தொடரின்மூலம், இணை அங்கத்துவ நாடு ஒன்றால் லீக் தொடர் ஒன்று நடத்தப்படுவது முதல் முறையாக அமையவுள்ளது. கிரிக்கெட்டின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இது ஒரு முக்கிய படியாக உள்ளது என்று கனடா கிரிக்கெட் சபையின் தலைவர் ரஞ்ஜித் சய்னி குறிப்பிட்டார்.

கனடா கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல சர்வதேச வீரர்களையும் நெருக்கமாக பார்ப்பதற்கு சந்தர்ப்பமாக இது அமையவிருப்பதோடு, கனடா கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன் பான்க்ரொப்ட் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவது கடந்த இரண்டு வாரங்களில் உறுதியான நிலையில் ஸ்மித்தின் வருகை எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விரைவாக இடம்பெறவுள்ளது

 

அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வழங்கிய தடைகளை நீடித்தபோதும் மேற்கு அவுஸ்திரேலிய மாவட்ட கிரிக்கெட் சங்கம் பான்க்ரொப்ட் ஆட சிறப்பு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018-19 பருவத்தில் டேவிட் வோர்னர் சிட்னியின் ரான்ட்விக் பீட்டர்ஷாம் கழகத்திற்காகமுதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் அடுவார்என்று அந்த கழகத்தின் தலைவரும் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருமான மைக் விட்னி தெரிவித்துள்ளார்.  

அவர் வருவதை ஒட்டி அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். உடைமாற்றும் அறையில் அவர் இருப்பது இளம் வீரர்களுக்கு சிறந்ததாக அமையும்என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் சர்ச்சைக்குரிய அவரது பங்களிப்புக்காக ஸ்மித்துடன் வோர்னருக்கும் 12 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டது. எனினும் முன்னாள் அணித்தலைவரான அவருக்கு அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஒருபோதும் தலைவராக செயற்பட முடியாது.

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனடா குளோபல் டி20 கிரிக்கெட் லீக் அணிகள், வீரர்கள் பயிற்சியாளர்கள்

warner%20smith

கெட்டி இமேஜஸ்.

இம்மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் டொராண்டோவிலிருந்து 25 மைல்கள் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறுகிறது.

இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் பால் டேம்பரின் தடை பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மே.இ.தீவுகளின் சூப்பர் ஸ்டார் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், டேரன் சமி டிவைன் பிராவோ ஆகியோரும் ஆடுகின்றனர்.

 

கனடா குளோபல் டி20 கிரிக்கெட்: அணிகளும் வீர்ர்களும் வருமாறு:

டொராண்டோ நேஷனல்ஸ்: டேரன் சமி, ஸ்டீவ் ஸ்மித், கெய்ரன் பொலார்ட், கம்ரன் அக்மல், ஹுசைன் தலத், ரும்மான் ரயீஸ், நிகில் தத்தா, ஜான்சன் சார்லஸ், கேஸ்ரிக் வில்லியம்ஸ், நவேத் அகமட், நிஸகத் கான், ஃபர்ஹான் மாலிக், நிதிஷ் குமார், உசாமா மீர், ரோஹன் முஸ்தபா, மொகமத் உமைர் கனி, பயிற்சியாளர்: பில் சிம்மன்ஸ்.

வான்கூவர் நைட்ஸ்: கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸல், எவின் லூயிஸ், டிம் சவுதி, சாத்விக் வால்ட்டன், ஃபவாத் அகமட், பாபர் ஹயாத், ஷெல்டன் காட்ரெல், சாத் பின் ஸஃபர், ருவிந்து குணசேகரா, ஸ்ரீமந்தா விஜெரத்னே, காமவ் லெவராக், ஸ்டீவன் ஜேகப்ஸ், சல்மான் நாசர், ரேசி வான் டெர் டுசென், ஜெரமி கார்டன், பயிற்சியாளர்: டோனவன் மில்லர்.

எட்மண்டன் ராயல்ஸ்: ஷாகித் அஃப்ரிடி, கிறிஸ் லின், லூக் ரோங்கி, மொகமட் இர்ஃபான், சொஹைல் தன்வீர், கிறிஸ்டியன் ஜோங்கர், வெய்ன் பார்னெல், ஆசிப் அலி, ஹசன் கான், ஆகா சல்மான், ஷைமன் அன்வர், அமர் கலித், சத்சிம்ரஞ்ஜித் திண்ட்சா, அகமட் ரஸா, சைமன் பர்வேஸ், அப்ராஷ் கான். பயிற்சியாளர்: மொகமத் அக்ரம்.

மாண்ட்ரீல் டைகர்ஸ்: லஷித் மலிங்கா, சுனில் நரைன், திசர பெரேரா, மொகமத் ஹபீஸ், தினேஷ் ராம்தின், சந்தீப் லாமிச்சேன், சிகந்தர் ரஸா, தாசுன் ஷனகா, இசுரு உதனா, ஜார்ஜ் வொர்க்கர், நஜிபுல்லா ஸத்ரான், சிசில் பர்வேஸ், இப்ராஹிம் கலீல், டில்லான் ஹெய்லிகர், நிகோலஸ் கிர்டன், ரயான் பத்தான், பயிற்சியாளர்: டாம் மூடி.

வினிபெக் ஹாக்ஸ்: டிவைன் பிராவோ, டேவிட் மில்லர், டேவிட் வார்னர், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ரயாத் எம்ரிட், பென் மெக்டர்மாட், அலி கான், ஹம்சா தாரிக், ஜுனைத் சித்திகி, டியான் வெப்ஸ்டர், ரிஸ்வான் சீமா, ஹிரால் படேல், மார்க் தேயால், கைல் பிலிப், பயிற்சியாளர்: வக்கார் யூனிஸ்.

http://tamil.thehindu.com/sports/article24080409.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.