Jump to content

இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்


Recommended Posts

இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

 
 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிவித்திருந்தன.

போராட்டம்

 

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைகள் அடைப்பு, போக்குவரத்து நிறுத்தம், இணையம் துண்டிப்புகளால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சில அரசு பேருந்துகள் இயங்கவில்லை. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125901-today-full-shutdown-across-tamil-nadu.html

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

 
அ-அ+

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh

 
 
 
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 
சென்னை:
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.
 
201805250849154749_1_sterlite._L_styvpf.jpg

துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் நேற்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 4-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேருந்துகள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #DMKBandh

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/25084915/1165486/Thoothukudi-Firing-DMK-led-opposition-parties-bandh.vpf

Link to comment
Share on other sites

நிகழ் பதிவு: திமுக ஆதரவுக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் - கள நிலவரம்

 

 
dmnjpg

தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13  பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து திமுக ஆதரவுக் கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நிகழ் நேரப் பதிவு

   
 

11.AM: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல். இதில் புதுமணத் தம்பதியினர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முதல்வரும், டிஜிபியும் பதவி விலக்கோரி திமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

10.50 AM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தமிழக அரசு நியாயப்படுத்தக் கூடாது: கனிமொழி

10.45 AM: சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் செய்த மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் கைது

08CHRGNCITYBUSjpg

கோயம்பேடு பேருந்து நிலையம் | கோப்புப் படம்.

 

10.40 AM: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

kajpg

படம்: எல்.சீனிவாசன்

 

10.20 AM: எழும்பூரில் திமுக எம்.பி. கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம்.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டனக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

10.00 AM: சைதாப்பேட்டையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23985483.ece?homepage=true

Link to comment
Share on other sites

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது!

 

 
DMK202

சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள்.

சென்னை: தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக அதன் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. 

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள், இந்த மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டுள்ளது. 

ஒவ்வொரு பகுதியிலும் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். எழும்பூரில் கனிமொழி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் சென்று கொண்டே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீஸா கைது செய்துள்ளது.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள். தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் மெரீனா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2018/may/25/தமிழகம்-முழுவதும்-திமுக-கூட்டணி-கட்சிகள்-மறியல்-போராட்டம்-ஆயிரக்கணக்கானோர்-கைது-2926638.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.