Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்?!!


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்?!!

கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

 

img_2002-750x430.jpg கிளிநொச்சி நகரம்

 
 

 

 

பிரபல தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டமைக்காக அந்தக் கிளையின் முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

அந்த வங்கிளின் தலைமையகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கிளை முகாமையாளரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். போரில் இறந்த உறவுகளை நினைவு கூருவது அவர்களின் உரிமை என்று முகாமையாளர் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து கிளை பணிமனையில் சுடர் ஏற்றியது தேசத்துக்கு விரோதமானது என்று உயர் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நினைவேந்தலை ஏற்பாடு செய்தனர் என்ற வகையில் கிளை முகாமையாளர் மற்றும் பிரிதொரு உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

வங்கியில் உள்ள ஏனைய பணியாளர்கள் தொடர்பிலும் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டம் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அங்குள்ள மக்கள் தமது உறவுகளில் பெரும்பாலானவர்களைப் போரில் இழந்துள்ளனர்.

http://newuthayan.com/story/23/முள்ளிவாய்க்கால்-நினைவேந்தலால்-தனியார்-வங்கி-முகாமையாளர்-இடைநீக்கம்.html

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஹற்றன் நஷனல் வங்கி உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம்

4971.jpg?resize=635%2C338
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து , அஞ்சலி நிகழ்வுகள் குறித்து வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார். ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சி வங்கியில் பணியாற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கான விசாரணைகளை, கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் எடுத்து வருவதாக தெரிய வருகின்றது.

இடை நிறுத்தம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் அக்கரைப்பற்றையும் (அம்பாறை) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/2018/80631/

 

Link to comment
Share on other sites

பல குறும்படங்களையும் ஒரு வணிக சினிமாவையும் தயாரித்து இருக்கும் நண்பர் மதிசுதா, இச் செய்தியை குறிப்பிட்டு  இந்த வங்கிக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்க இவ் வங்கியில் இருக்கும் தன் கணக்கை நாளையில் இருந்து மூடப் போவதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

தம் உறவுகளை நினைவு கொள்ளும் உரிமையை மறுக்கும் HNB வங்கியில் இனியும் உங்கள் கணக்கு வைத்து இருக்க வேண்டுமா என சிந்தியுங்கள் மக்களே

சமூக வலைத்தளங்களில் #boycottHNB என்பதை பரப்ப முடியுமா உறவுகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதில் தவறில்லை.


ஆனால் இவர் இதை ஏன் அலுவலத்தில் செய்தார் என தெரியவில்லை. இவர் மனேஜர் என்பதல் மற்ற அதிகாரிகளும் இவரால் நிர்ப்பந்திக்கப்பட்டார்களா?

அலுவலகத்தில் ‍‍‍‍‍‍work  ethics ஒன்று  உண்டல்லவா?  இது breach of employment policy மாதிரி தெரிகின்றது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பல குறும்படங்களையும் ஒரு வணிக சினிமாவையும் தயாரித்து இருக்கும் நண்பர் மதிசுதா, இச் செய்தியை குறிப்பிட்டு  இந்த வங்கிக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்க இவ் வங்கியில் இருக்கும் தன் கணக்கை நாளையில் இருந்து மூடப் போவதாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

தம் உறவுகளை நினைவு கொள்ளும் உரிமையை மறுக்கும் HNB வங்கியில் இனியும் உங்கள் கணக்கு வைத்து இருக்க வேண்டுமா என சிந்தியுங்கள் மக்களே

சமூக வலைத்தளங்களில் #boycottHNB என்பதை பரப்ப முடியுமா உறவுகளே

இதே போல தான் JR ஜெயவர்த்தனே சகோதரர் ஆரம்பித்த வங்கி சம்பத் வங்கி... துவேசத்துடன்... வங்கியின் பெயரை சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தி எழுதினார்கள்.

விளைவு தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க, இப்போது மூன்று மொழிகளையும் பயன் படுத்துகின்றனர்.
Image result for  sri lanka sampah bank logo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, colomban said:

நிச்சயமாக போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதில் தவறில்லை.


ஆனால் இவர் இதை ஏன் அலுவலத்தில் செய்தார் என தெரியவில்லை. இவர் மனேஜர் என்பதல் மற்ற அதிகாரிகளும் இவரால் நிர்ப்பந்திக்கப்பட்டார்களா?

அலுவலகத்தில் ‍‍‍‍‍‍work  ethics ஒன்று  உண்டல்லவா?  இது breach of employment policy மாதிரி தெரிகின்றது
 

உலகம் முழுவதும்.....முதலாம்..இரண்டாம்...யுத்தங்களில் இறந்தவர்களுக்காக 'வீ' டே ....'டீ' டே....ஆன்சாக் டே,

நைன் ரு லெவின் ...என்று நாட்களை...அலுவலங்கங்களிலும்....சந்திப்புகளிலும்...நினைவு கூருகிறார்கள்! இதில் தவறேதும்..இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்!

இங்கு அவுஸ்திரேலியாவில் கூட....பதினோராம் மாதம்...பதினோராம் திகதி...பதினோரு மணிக்கு....யுத்தங்களில் இறந்தவர்களை...நினைவு கூர்வார்கள்! இனம்...மதம் என்ற வேறு பாடின்றி..இதை எல்லோரும் அனுட்டிப்பார்கள்!

இதே வங்கி ஊழியர்கள்....சிங்கள இராணுவத்தின் இறப்புக்களை நினைவு கூர்ந்திருந்தால்...இவர்கள் தண்டிக்கப் பட்டிருப்பார்களா?

தமிழர்களாகப் பிறந்து விட்ட...பாவத்துக்காகத் தானே...இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்!

தமிழர்களாகப் பூமியில் பிறப்பெடுத்தது..அவர்கள்...தவறா?

மக்களை...மனிதர்களாகப் பாருங்களேன்!

Link to comment
Share on other sites

4 hours ago, நிழலி said:

சமூக வலைத்தளங்களில் #boycottHNB என்பதை பரப்ப முடியுமா உறவுகளே

இங்கு சிட்னியில் ஹற்றன் தேசிய வங்கியின் வேலை பார்த்தவர்கள் ஒரு சங்கத்தினை சென்ற வருடம் உருவாக்கியுள்ளார்கள். இதில் சில யாழ்ப்பாணத்தமிழர்களும் இருக்கிறார்கள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை சந்திப்புக்கள் நடைபெறும் என்றும், ஹற்றன் தேசிய வங்கியில் இலங்கையில் வேலை செய்தவர்கள் அவுஸ்திரெலியாவுக்கு புலம் பெயரும் போது சில உதவிகள் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.  சிங்களவர்கள் அடிக்கிறார்கள் என்று அகதி அந்தஸ்து பெற்ற தமிழர்கள், சிங்களவர்களுக்கும் உதவுவதற்காக , சிங்களவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதற்காகவும் இந்த அமைப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.  இவர்களில் பெரும்பாலோர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், தேசிய மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.    சிங்கள அணி சிட்னியில் துடுப்பாடவரும்போது சிங்களநாட்டின் தேடியக் கொடியுடன் இவர்கள் தவறாமல் கலந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

12 hours ago, நவீனன் said:

ஹற்றன் நஷனல் வங்கியின்

இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் தமிழர்கள் தங்கள் கணக்குகளை விரைவில் மூடவேண்டும்!
நானும் முடவுள்ளேன்.

முன்பு கணிசமான தமிழர் வேலை செய்த வங்கி இது. இப்போது சிங்கள மயமாக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம் – HNB வங்கியின் விளக்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஹற்றன் நஷனல் வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த வங்கி வட்டார தகவல்கள் மூலம் மேலும் அறியமுடிந்ததாவது ,

 

முழுமையான தகவல்களின் பின் புலத்தினை நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். தெற்கில் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் வங்கி பங்கு கொள்வதை எமது எதிர்ப்பால் நிறுத்தினோம்.அவ்வேளையில் இது தொடர்பான சுற்றறிக்கை, சமூக ஊடகக் கொள்கை என்பவற்றை வங்கி அறிமுகப் படுத்தியது.

அதனடிப்படையில், வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. இதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது. இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும்.

சமூக ஊடகக் கொள்கைகளை மீறியது தான் குற்றச் சாட்டு. எனவே தண்டனை மிகச் சிறியதாக தான் இருக்கும் என அறிய முடிகிறது என கருதப்படுகின்றது

http://globaltamilnews.net/2018/80723/

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

IMG_5118.jpg?resize=589%2C800
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.

 

அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிலர் தமது கணக்கினை மூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

IMG_5117.jpg?resize=531%2C433

IMG_5119.jpg?resize=800%2C800

http://globaltamilnews.net/2018/80711/

Link to comment
Share on other sites

நினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்!! – நாடாளுமன்றிலும் எதிரொலித்தது!!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.

 

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் இந்த தனியார் வங்கியை வடக்கு, கிழக்கில் பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் அரச தலைவர் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுகளை மூடிவிடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://newuthayan.com/story/17/நினைவேந்திய-வங்கிப்-பணியார்கள்-பணிநீக்கம்-நாடாளுமன்றிலும்-எதிரொலித்தது.html

Link to comment
Share on other sites

‘முன்னேற்றத்தின் பங்காளியான’ HNB பணிநீக்கத்தின் மூலம் சாதிக்கப்போவது என்ன..

HNB-Kilinochchi.png?resize=634%2C322

ஹற்றன் நஸ்னல் வங்கி பணியாளர் இடைநிறுத்தப்பட்டமைக்கு அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்திய பணியாளர்கள் சிலர் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

வங்கி முகாமைத்துவத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளாது நினைவஞ்சலி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ‘முன்னேற்றத்தின் பங்காளி’ வாசகத்தைக் கொண்ட ஹட்டன் நஸ்னல் வங்கி, மனிதாபிமான முன்னேற்றத்தின் ஊடாக எதனை அடைய முயற்சிக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/81001/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.