Jump to content

புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன?

யதீந்திரா 

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல தங்களது அமைப்பின் மத்திய குழுவிலுள்ளவர்களின் நிலைப்பாடும்தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் பேசுகின்ற போதும் சித்தார்த்தன் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தன் அவர் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் சார்பில் புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுக்கள் ஒன்றின் தலைவராகவும் இருந்தவர்.

இந்த அரசாங்கத்தில் தீர்வு கிடைக்காது என்பது வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைகளில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவனால் கூட இலகுவாகச் சொல்லக் கூடிய ஒரு விடயம். இதனைச் சொல்வதற்கு புளொட்டின் மத்திய குழு கூட வேண்டியதில்லை. ஆனால் அரசியல் தீர்வு கிடைக்காது அல்லது அது சரிவராது என்று சொல்வதற்கு கட்சிகளோ அல்லது தலைவர்களோ தேவையில்லை. அரசாங்கம் தர மறுக்கும் ஒன்றை தாங்கள் எவ்வாறு அடையப் போகின்றோம் என்பதைச் சொல்வதற்குத்தான் கட்சிகளும் தலைவர்களும் தேவை. தங்களின் இன்னல்களை போக்குவதற்கான தீர்வொன்றை அடைவதற்காகவே மக்கள் கூட்டமைப்பை தங்களின் தலைமையாக தெரிவு செய்தனர். ஆனால் கூட்டமைப்பிலுள்ளவர்களுக்கே தாங்கள் எதை நோக்கிப் போகின்றோம் என்பதில் எந்தவொரு தெளிவும் இல்லாமல் இருக்கின்ற போது, மக்களின நிலை என்ன?

தமிழ் மக்களின் பிரதான தலைமையாக கூட்டமைப்பு வெளித்தெரிந்த காலத்திலிருந்து ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின் தலைவர்கள் அரசியல் தீர்வுக்கான சுலோகங்களையே பிரதானமாக முன்வைத்து வந்திருக்கின்றனர். அரசியல் தீர்வுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் ஒரு சிறியளவு முக்கியத்துவம் கூட மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு கொடுக்கப்படவில்லை.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து, கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவுடனும் மார்ட்டின் லூதர் கிங்குடனும் ஒப்பிட்டுப் புகழ்ந்து கொண்டிருந்தார். மேற்குலக மற்றும் இந்திய ராஜதந்திரிகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இந்த அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதை தவறாமல் வலியுறுத்தி வந்தார். இதற்கும் அப்பால் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் தமிழரசு கட்சியில் தனித்து முடிவெடுக்க வல்லவரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்தார். இதன் ஊடாக அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்குமான தேன்னிலவு அந்நியோன்யம் தெளிவாக காண்பிக்கப்பட்டது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான டெலோவின் தலைவர், இலங்கை பாராளுமன்றத்தில் குழுக்களின் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பும் அரசாங்கமும் எந்தளவு ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்திருக்கின்றது என்பதற்கு டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வகித்துவரும் பதவிதான் தெளிவான ஆதாரம்.

இவ்வாறு, அரசாங்கத்தின் இணைபிரியாத பேடு (பேட்டுக் கோழி) போன்றிருந்த கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றின் தலைவரான சித்தார்த்தன்தான் தற்போது இந்த அரசாங்கத்தில் தீர்வு சாத்தியமில்லை என்கிறார். அவ்வாறாயின் இதுவரை இந்த அராசாங்கம் தொடர்பில் சம்பந்தன் - சுமந்திரன் தரப்பு மேற்கொண்டு வந்த அணுகுமுறைகளிலுள்ள தவறுகள் தொடர்பில் சிந்தார்த்தன் விவாதிக்கத் தயாரா? அதேவேளை குறித்த மத்திய குழுக் கூட்டத்தில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் புளொட் தீர்மானித்திருப்பதாகவும் சித்தார்த்தன் குறித்த ஊடக சந்திப்பில் தொவித்திருக்கின்றார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தரமுடியாத கூட்டமைப்புக்குள் விக்னேஸ்வரன் ஏன் இருக்க வேண்டும்? ஆனால் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சராக இருக்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட மாட்டாது என்று மிகவும் கறாராக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில்தான் புளொட் விக்னேஸ்வரனையும் உள்ளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகின்றதாம். சித்தார்த்தன் நினைப்பது போல் நடக்காவிட்டால் புளொட் என்ன முடிவை அறிவிக்கும்?

கூட்டமைப்பு என்பது ஒரு தேசிய இனத்திற்கு தலைமை தாங்குமளவிற்கான வலுவானதொரு அமைப்பு இல்லை என்பதை கூறுவதற்கு இந்தப் பத்தியாளர் தேவையில்லை. அது அனைவரும் நன்கறிந்த சங்கதி. இதனை நன்கறிந்துதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்டும், டெலோவும் கூட்டமைப்புக்குள் சீவித்துவருகின்றன. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தங்களது கட்சிக்கான ஆசனங்களுக்காக தமிழரசு கட்சியுடன் மல்லுக்கட்டுகின்றன. இந்த மல்லுக்கட்டலில் ஒவ்வொரு முறையும் பல்லுப் போவது என்னவோ புளொட்டுக்கும் டெலோவுக்கும்தான். ஒப்பீட்டு அடிப்படையில் அதிகம் புளொட்டின் பல்லுத்தான் வழக்கமாகப் போவதுண்டு. ஒரு காலத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு வலுவான பின்தளம் தேவையென்று உணர்ந்து, மாலைதீவு சதிப்புரட்சியில் பங்குகொண்டு பிடிபட்ட புளொட் இயக்கம், இப்போது பிரதேச சபையொன்றில் ஆசனங்களை பெறுவதற்காக தமிழரசு கட்சியிடம் மல்லுக் கட்டி, ஒவ்வொரு முறையும் பல்லை இழந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்று சித்தார்த்தன் கூறுகின்றார். உண்மையில் சித்தார்த்தன் இதனை வேறு விதமாக கூறியிருக்க வேண்டும். கூட்டமைப்பால் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை. அதாவது சம்பந்தர் அண்ணரால் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை. இனியும் அரசியல் தீர்வு விடயத்தில் சம்பந்தர் அண்ணரை எவரும் நம்ப வேண்டாம்.

உண்மையில் இங்கு அரசாங்கம் தொடர்பில் பேசுவதற்கு எதுவுமில்லை. அதாவது, அரசாங்கம் சமஸ்டி அடிப்படையலான வடக்கு கிழக்கு இணைந்ததான ஒரு அரசியல் தீர்வை தருவதாக எங்குமே சொல்லியதில்லை. ஏனவே இந்த அரசாங்கத்தில் தீர்வு சாத்தியமில்லை என்று கூறுவதில் என்ன பொருள் உண்டு. தாங்கள் முன்வைத்த அரசியல் தீர்வை தங்களால் பெற முடியவில்லை என்பது மட்டும்தான் உண்மை.

மேற்குலக அரசியல் தலைவர்களிடம் ஒரு உயர்ந்த பண்புண்டு. தாங்கள் முன்வைத்த ஒரு விடயத்தில் தோல்வியடைந்தால் உடனடியாகவே தங்களின் பதவியை அவர்கள் துறப்பார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் மேற்குலக அரசியலில் இடம்பெற்றிருக்கிறன. மிக அண்மைக்காலத்தில் கூட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரோன் பதவி விலகியிருந்தார். உண்மையில் இதுவரை காலம் ஒரு அரசியல் தீர்வு வரமென்னும் போலி நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டிவந்த சம்பந்தன், கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகவேண்டும். கூட்டமைப்பின் பேச்சாரளராகவும் அதன் சர்வதேச தொடர்புகளை தனியாக கையாண்டு வருபவருமான சுமந்திரன் அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும். தீர்வு சாத்தியமில்லை என்று குறிப்பிடும் சித்தார்த்தன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் கூட்டமைப்பின் பொறுப்புக்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று அறிவிக்கத் தயராக இருக்கின்றாரா? தற்போதிருக்கின்ற கூட்டமைப்பால் ஒரு தீர்வு சாத்தியமில்லை என்பதில் சித்தார்த்தன் உறுதியாக இருந்தால் அதன் பின் அந்த கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருப்பதன் அர்த்தம் என்ன? ஒன்றில் கூட்டமைப்பின் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் அல்லது தனியான ஒரு வழியில் சித்தார்த்தன் பயணிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் வெறுமனே தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டு, அதற்குள்ளே சமரசம் செய்துகொள்வது சொந்த மக்களை ஏமாற்றுவதாக அல்லவா அமையும்!

முதலில் தங்களால் என்ன மாதிரியான ஒரு அரசில் ஏற்பாட்டை செய்ய முடியுமென்பதில் கூட்டமைப்பின் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் காலத்தில் உச்சரிக்கப்படும் சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை தங்களால் உண்மையிலேயே வென்றெடுக்க முடியுமா என்பதில் முதலில் தங்களுக்குள் சிந்தித்து பதில் காணவேண்டும். ஒரு இடைக்கால எற்பாடு, நீண்ட கால ஏற்பாடு என்னும் அடிப்படையில் தீர்வை கையாளும் உபாயங்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் கூட்டமைப்பிற்குள் இதுவரை நிகழ்ந்ததில்லை. உண்மையில் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன் எவ்வாறு சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றாரோ அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றன.

இந்த அராசாங்கம் மட்டுமல்ல இனி வரப் போகும் எந்தவொரு அரசாங்கமும் சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளடங்கிய அரசியல் தீர்வொன்றை தரப் போவதில்லை. இதுதான் இந்த நாட்டின் யதார்த்தம் என்றால், கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு நல்ல தலைமைக்கு அழகு முதலில் அது தன்னால் முடியுமானதை தன்னை நம்பும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். பிற அழுத்தங்களால் ஒரு விடயம் நடக்கும் என்பது ஒரு ஊகம், கணிப்பு அவ்வளவே! ஆனால் ஒரு மக்கள் தலைமை வெறுமனே வெளி அழுத்தங்களுக்காக மட்டுமே காத்துக்கொண்டிருக்க முடியாது. அவ்வாறான அழுத்தங்கள் வருகின்ற போது அவற்றை, மக்களின் நலனில் நின்று கையாளும் தகுதியுடன் அந்தத் தலைமை இருந்தால் போதுமானது. இறுதியாக, சுலோகங்களை எவரும் முன்வைக்கலாம் ஆனால் அந்தச் சுலோகங்களை நடைமுறையில் வெல்வதென்பது எழுதுவது, பேசுவது போன்று இலகுவான விடயமல்ல.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=e4f2f052-24a0-4119-876b-0d4e66df8f67

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அரைச்சு அரிச்சு  அரைச்ச  மாவையே திருப்பி  அரைச்சுக்கொண்டிருக்கிறார் கட்டுரையாளர்...... 

எவர் என்ன செய்வார் செய்தார் என்பது ஒவ்வொரு ஈழ பால்குடிக்கும் தெரிஞ்ச விசயம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.