Jump to content

மீண்டும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கருக்கொள்ளும் போர் மேகங்கள்


Recommended Posts

மீண்டும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கருக்கொள்ளும் போர் மேகங்கள்

 

அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்­மைய வாரங்­களில் மிகப் பாரி­ய­ளவில் ஊட­கங்­களில் இடம் பிடித்­துள்ளார். வட­கொ­ரிய தலைவர் கிம் தென்­கொ­ரி­யாவில் கால்­ப­தித்து தென்­கொ­ரிய அதி­ப­ருடன் கட்டி அணைத்து உறவு கொண்­டா­டி­யமை, வட­கொ­ரியா அணு­சக்தி செறி­வூட்­டலை நிறுத்த சம்­ம­தித்­தமை, எல்­லா­வற்­றுக்கும் மேலாக சிங்­கப்­பூரில் வட­கொ­ரிய தலைவர் கிம் - ட்ரம்ப் உச்­சி­ம­கா­நாடு 2018 ஆனி 12ம் திகதி நடை­பெறும் என்ற உறு­திப்­பாடு யாவும் அதிபர் ட்ரம்பின் கீர்த்­தியை உயர்த்­தி­யுள்­ளது என்­பதில் சந்­தேகம் இல்லை. அத்­துடன் வட­கொ­ரி­யாவில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று அமெ­ரிக்க பிர­ஜை­களும் வட­கொ­ரியா அர­சினால் விடு­விக்­கப்­பட்டு அமெ­ரிக்கா வந்­த­டைந்­துள்­ளனர். அதிபர் ட்ரம்ப் அமெ­ரிக்­காவின் முதல் பெண்­ம­ணி­யான அவரின் மனை­வி­யுடன் விடு­விக்­கப்­பட்ட மூவரை சுமந்­து­வந்த விமா­னத்­துக்குள் சென்று வர­வேற்­றனர். அமெ­ரிக்க அதிபர் மீண்டும் அமெ­ரிக்­காவில் பிர­பலம் பெறு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன. ட்ரம்­புக்கு சமா­தா­னத்­துக்­காக நோபல்­ப­ரிசு வழங்­கப்­பட வேண்டும் என்ற குரல்­களும் ஒலிக்க தொடங்­கி­யுள்­ளன. இந்த ஆர­வாரம் அடங்கு முன்னர் 2018 வைகாசி இரண்டாம் வாரம் ட்ரம்ப் பிறி­தொரு அதிர்ச்­சி­யான தீர்­மா­ன­மொன்றை வெளியிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஈரான் அணு­சக்தி செறி­வாக்கல் தொடர்­பான ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கு­வ­தா­கவும் அமெ­ரிக்கா ஈரா­னுக்­கெ­தி­ரான பொரு­ளா­தார தடை­களை மீண்டும் அமுல்­ப­டுத்­த­வி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். 2015ம் ஆண்டில் பூர்த்­தி­செய்து ஐந்து பாது­காப்புச் சபை நாடு­க­ளான அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்­ம­னியும் இணைந்து வட­கொ­ரிய ஒப்­பந்தம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஈரான் அணு­சக்தி ஒப்­பந்தம் என பொது­வாக கூறப்­பட்­டாலும் இந்த ஒப்­பந்தம் ஆங்­கி­லத்தில் Joint Comprehensive Plan of Action என அழைக்­கப்­ப­டு­கி­றது. இதனை விரி­வான நட­வ­டிக்­கைக்­கான கூட்­டுத்­திட்டம் எனக் கூறலாம். இந்த ஒப்­பந்தம் விரி­வா­னது சுருக்­க­மாக கூறினால் ஈரான் அணுவா­யுத செறி­வாக்கல் நட­வ­டிக்­கை­களை நிறுத்­து­வ­தென்றும், பதி­லாக UN, USA, EU ஆகி­யவை பொரு­ளா­தார மற்றும் தடை­களை தளர்த்­து­வ­தெ­னவும் ஒப்­பந்­தத்தின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

2016 வரை பொரு­ளா­தார தடை­களால் ஈரான் சர்­வ­தேச சந்­தையில் எண்ணெய் விற்­க­மு­டி­ய­வில்லை. வெளிநாட்டு வங்­கி­களில் முத­லீடு செய்­யப்­பட்ட 100 பில்­லியன் டொல­ருக்கு மேற்­பட்ட சொத்­துக்கள் முடக்­கப்­பட்­டதால் பொரு­ளா­தாரம் நலி­வ­டைந்­தது. ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­கிய பின்னர் ஐ.நா.வின் சர்­வ­தேச அணு­சக்தி முகவர் அமைப்பின் விஞ்­ஞா­னிகள் ஈரா­னுக்குள் இயங்­கிய அணு­சக்தி நிலை­யங்கள், ஆராய்ச்சி நிலை­யங்கள் யாவற்­றையும் பரி­சோ­தனை செய்து ஈரான் அணுச்­செ­றி­வாக்கல் திட்­டங்­களை நிறுத்­தி­யுள்­ள­தென உறு­திப்­ப­டுத்தி ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்­பித்­தது அதன் பய­னாக ஒப்­பந்­தத்தில் விதந்­து­ரைத்­த­படி பொரு­ளா­தாரத் தடைகள் தளர்த்­தப்­பட்­டன. 2017 ஆரம்­பத்தில் இருந்து ஈரான் மீண்டும் சர்­வ­தேச வர்த்­த­கத்தை ஆரம்­பித்­தது. எண்ணெய் ஏற்­று­ம­தியால் பெரும் வெளிநாட்டுச் செல­வா­ணியை சம்­பா­தித்­தது. முடக்­கப்­பட்ட 100 பில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட சொத்­துக்கள் ஈரா­னுக்கு கிடைத்­தது. ஈரான் பொரு­ளா­தாரம் மீண்டும் செழிக்க தொடங்­கி­யது. மேற்கு நாடுகள் குறிப்­பாக பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்­மனி, ஈரா­னுடன் இரு­த­ரப்பு வர்த்­த­கத்தை ஆரம்­பித்­தன. ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஈரா­னு­ட­னான ஏற்­று­மதி வர்த்­தகம் பயன்­களை அள்­ளித்­தந்­தது. அமெ­ரிக்க அதி­பரின் பிர­க­டனம் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அதிர்ச்­சியை அளித்­தது. அமெ­ரிக்க அதிபர் அமெ­ரிக்கா ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த போது இந்த ஒப்­பந்தம் பழு­தாகி துர்­நாற்­ற­மெ­டுக்கும் ஒப்­பந்தம் என்றார். பிரான்ஸ், ஜேர்­மனி, பிரிட்டன் - ட்ரம்பின் முடிவு வருத்­த­ம­ளிக்­கின்­றது என கருத்து தெரி­வித்­தனர். ஐ.நா. பொதுச்­செ­யலர் ட்ரம்பின் முடிவு ஏமாற்­ற­ம­ளிக்­கி­றது என்றார். முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் முயற்­சியால் நிறை­வேற்­றப்­பட்ட ஒப்­பந்தம் ஒபா­மாவின் வெளிநாட்டுக் கொள்­கைக்கு கிடைத்த வெற்­றி­யென ரைம்ஸ் நியூஸ்வீக் சஞ்­சி­கைகள் முன்னர் பாராட்­டி­யி­ருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அமெ­ரிக்க அதி­பரின் தீர்­மா­னத்தை இஸ்ரேல், சவூதி அரே­பியா உற்­சா­க­மாக வர­வேற்­றுள்­ளன. சவூதி அரே­பி­யாவும் ஈரானும் அரா­பிய வட்­ட­கைக்குள் ஆதிக்கம் செலுத்­து­வது யார் என்ற போட்­டியில் நீண்ட கால­மாக ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. முடி­ய­ரசு, குடி­ய­ரசு வேறு­பாட்­டுக்­கப்பால் அரா­பிய பிராந்­தி­யத்தில் இடம்­பெறும் சச்­ச­ர­வு­களில் வெவ்­வேறு தரப்­பி­னருக்கு ஆயுத உதவி, பொரு­ளா­தார உதவி, தார்­மீக உத­வி­களை வழங்­கு­கின்­றனர். அமெ­ரிக்கா, சிரி­யாவில் அசாத் ஜனா­தி­ப­தியின் ஆட்­சியை மாற்­ற­வேண்டும் என்­கின்ற அட்­ட­வ­ணையில் செய­லாற்றும் போது சவூதி அமெ­ரிக்­கா­விற்கு ஆத­ர­வாக அசாத் ஆட்­சியை எதிர்க்கும் தரப்­பி­னருக்கு ஆத­ரவு தரு­கின்­றது. ஈரான் அசாத் ஆட்­சிக்கு ஆயுத நிதி உதவி வழங்­கு­கின்­றது. ஈரான் ஹிஸ்­புல்­லா­வுக்கு தீவி­ர­மான ஆத­ரவு அளிக்­கின்­றது. இவ்­வாறு சிரி­யாவில் மட்­டு­மல்ல எமன் நாட்­டிலும் இதே வித­மாக எதிரும் புதி­ரு­மாக செயற்­ப­டு­கின்­றன. இப்­பின்­ன­ணியில் 2017ஆம் ஆண்டு ஆனி­மாதம் சவூதி அரே­பியா திடீ­ரென கட்டார் நாட்­டுடன் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்து தரை, வான், கடல் முற்­று­கையை ஏற்­ப­டுத்­தி­யது. கட்டார், ஈரான் நாட்­டுடன் சிறந்த உற­வு­களைப் பேணி­வ­ரு­கின்­றது. ஹிஸ்­புல்லா இயக்­கத்­தி­ன­ருக்கு ஆத­ரவு அளிக்­கின்­றது. சவூதி இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டிக்கும் போது கட்டார், பயங்­க­ர­வா­தத்­துக்கு துணை போகின்­றது என குற்­றஞ்­சாட்­டி­யது. இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில், பிராந்­தி­யத்தில் தீவி­ர­மாக இஸ்­ரேலின் இருப்பை எதிர்த்த தலை­வர்கள் ஒழிக்­கப்­பட்­டு­விட்­டனர். ஈராக்கின் முன்னாள் ஜனா­தி­பதி சதாம் ஹுசைன், லிபி­யாவின் கேணல் கடாபி யாவரும் வர­லா­றா­கி­விட்­டனர். எஞ்­சி­யி­ருக்கும் இரண்டு நாடுகள் இஸ்­ரே­லுக்கு அச்­சு­றுத்­த­லா­னவை. சிரி­யாவும் ஈரானும் தீவி­ர­மாக இஸ்­ரேலை எதிர்க்கும் நாடு­க­ளா­ன­ப­டியால் இஸ்ரேல், சிரி­யாவில் ஈரானின் தளங்கள் எனக் கரு­தப்­படும் நிலைகள் மீது குண்­டு­மாரி பொழிந்­துள்­ளன. ஈரான், சிரியா நாடு­களைப் பொறுத்­த­ வ­ரையில் சிரியா பலம் பொருந்­திய நாடல்ல. ஈரான் எண்ணெய் வளம், கணி­ச­மான சனத்­தொகை, விஞ்­ஞான தொழில்­நுட்பத் துறையில் பாரிய முன்­னேற்றம், அணு­ஆ­யுத உற்­பத்­தியில் ஈரான் கூடிய ஆற்றல் யாவற்­றி­னாலும் இஸ்­ரேலைப் பொறுத்­த­மட்டில் ஈரான் பிர­தான எதி­ரி­யாகும். இதனால் அமெ­ரிக்கா ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்த மறு­க­ணமே இஸ்ரேல் பிர­தமர் நெத்­த­னி­யாகு அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு வாழ்த்து தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் ஒப்­பந்த விலகல் தீர்­மானம் ஈரான் நாட்­டினுள் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்கும் எதிர்­வ­லை­களை பார்ப்­பது அவ­சி­ய­மாகும். அதி­யுயர் ஆன்­மீகத் தலைவர் அயோத்­துல்லா கொமேனி அமெ­ரிக்­கா­வையும் ஐரோப்­பிய நாடு­க­ளையும் கடு­மை­யாக கண்­டித்­துள்ளார். ஈரானின் தலை­ந­கரும் டெஹ்ரான் உட்­பட பிராந்­திய நக­ரங்­க­ளிலும் பாரிய அமெ­ரிக்க எதிர்ப்பு ஊர்­வ­லங்கள் நடை­பெ­று­கின்­றன. அமெ­ரிக்கா ஒழிக, இஸ்ரேல் ஒழிக என்ற குரலே எங்கும் கேட்­கி­றது. அயோத்­துல்லா கொமெ­னியின் ஆத­ர­வா­ளர்கள் அமெ­ரிக்­கா­வையும் மேற்கு நாடு­க­ளையும் நிரா­க­ரித்து மீண்டும் ஈரான் அணு­ஆ­யுத தயா­ரிப்பில் ஈடு­பட வேண்டும் என கோஷமி­டு­கின்­றனர்.

ஜனா­தி­பதி ரௌகானி ஒப்­பந்தம் கைச்­சாத்­தாக பெரும் பிர­யத்­தனம் மேற்­கொண்­ட­தனால் கடும்­போக்­கா­ளர்­களின் எதிர்ப்­பையும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. தனிப்­பட்ட முறையில் ஜனா­தி­பதி ரொஹனி, ஈரா­னினை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டவர் என்­பது யதார்த்­த­மா­னது. ஈரா­னிய மக்­களும் பொரு­ளா­தார சுமை­களால் பாதிப்­ப­டைந்த படியால் ஜனா­தி­ப­தியின் இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­கட்கு ஆத­ர­வ­ளித்­தனர். அயோத்­துல்லா கொமே­னியும் கடும் கோட்­பா­ளர்­களும் ஜனா­தி­ப­தியின் ஒப்­பந்தம் உரு­வாகும் முயற்­சி­க­ளுக்கு தடை­போ­ட­வில்லை. அதுவே ஜனா­தி­பதி ரௌகா­னியின் வெற்றி எனக் கரு­தப்­பட்­டது.

பிரான்­சிய கம்­ப­னி­களில் ரோட்டல் (Total) என்­கின்ற எண்ணெய் வாயு தொழிற்­றுறை மெகா கம்­பனி, ஈரானில் அமைந்­துள்ள உலகில் மிகப்­பெ­ரிய பெட்­ரோ­லியம் வாயு வயல்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஈரான் அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்தம் செய்­தது. அமெ­ரிக்கா தடை­களை அறி­வித்­த­ப­டியால் பிரான்­சிய கம்­பனி மட்­டு­மல்ல ஜேர்­ம­னிய, பிரிட்டிஷ் கம்­ப­னி­களும் திரி­சங்கு சொர்க்க நிலையில் உள்­ளன. அமெ­ரிக்கா அறி­வித்­த­லின்­படி நவம்பர் 4ஆம் திக­திக்கு முன்னர் ஐரோப்­பிய கம்­ப­னியின் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை முற்­றுப்­ப­டுத்த வேண்டும். அமெ­ரிக்­காவின் ஒரு­த­லைப்­பட்­ச­மான விலகல் முடிவை ஏனைய ஐரோப்­பிய நாடுகள் கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்­டி­ய­தில்லை. ஆனால் இக்­கம்­ப­னிகள் அமெ­ரிக்­கா­வுடன் நிதிப்­ப­ரி­வர்த்­தனை செய்­வதில் பிரச்­சி­னைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எவ்­வா­றெனில் பிரான்­சிய கம்­ப­னிகள் அமெ­ரிக்­கா­வு­ட­னான நிதிப்­ப­ரி­வர்த்­த­னையில் 90% வரை சம்­பந்­தப்­ப­டு­கின்­றன. இச்­சூழ்­நி­லையில் அமெ­ரிக்­கா­வு­ட­னான வர்த்­த­கத்தை பிரான்­சிய கம்­ப­னிகள் இல­குவில் கைவிட முடி­யாது. இச்­சூழ்­நி­லையில் அமெ­ரிக்கா காலக்கெடு விதித்­ததின் பிர­காரம் பிரான்­சிய கம்­ப­னிகள் உட்­பட ஐரோப்­பிய கம்­ப­னிகள் செயல்­பட வேண்டும் என்­பது ஒரு கட்­டா­ய­மாகும்.

அமெ­ரிக்கா ஈரா­னுக்­கெ­தி­ராக விதித்த பொரு­ளா­தாரத் தடை­களை விசே­ட­மாக ஈரானின் எண்ணெய், வாயு ஏற்­று­ம­தி­களை குறி­வைக்­கின்­றது. இந்த தடை உட­ன­டி­யாக அமு­லுக்கு வருமா என்­கின்ற கேள்வி எழு­கி­றது. அமெ­ரிக்கா இவற்றை அமுல்­ப­டுத்த 'ஆறு­தல் காலம்' ஒன்றை அறி­வித்­துள்­ளது. இத்­த­டைகள் 90 இலி­ருந்து 180 நாட்­க­ளுக்குள் அமு­லுக்கு வரும் என அறி­வித்­துள்­ளது. ஈரான் அணு­ஆ­யுத ஒப்­பந்தம் கைச்­சாத்­தான பின் ஈரா­னுடன் வர்த்­தகம் மேற்­கொண்ட ஐரோப்­பிய கம்­ப­னிகள் 90 – - 180 நாட்­க­ளுக்குள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை முற்­றுப்­ப­டுத்த வேண்டும். ஐரோப்­பிய யூனியன் எவ்­வாறு ஐரோப்­பிய கம்­ப­னி­களை பாது­காக்­கலாம் என ஆராய்ந்து வரு­கின்­றது. 2015 இல் கைச்­சாத்­தான ஈரான் அணு­ஆ­யுத ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­ய­தாக அறி­வித்­தாலும் ஈரான் உத்­தி­யோக பூர்­வ­மாக இன்னும் ஒப்­பந்­தத்தை ஏற்று நடக்­கின்­றது. ஈரான் தந்­தி­ரோ­பா­ய­மாக ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­விக்­கா­த­ப­டியால் அமெ­ரிக்­கா­விற்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கு­மி­டையில் சிறிய கொள்கை விரிசல் ஏற்­பட வாய்ப்­புண்டு. இந்த ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்­குமா அல்­லது புதிய ஒப்­பந்­த­மொன்று பேச்­சு­வார்த்தை மூலம் ஏற்­பட வாய்ப்பு உண்டா என்ற கேள்­வியும் எழு­கின்­றது. அமெ­ரிக்க அதிபர் புதிய ஒப்­பந்தம் பற்­றியும் பேசி­யுள்ளார். மறு­பக்­க­மாக ஈரானும் ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்தல், ஈரான் மீண்டும் அணு­ஆ­யுத உற்­பத்­தி­யில் ஈடு­பட்டு மத்­திய கிழக்கு சம­நி­லையில் மாற்றம் ஏற்­ப­டலாம். சவூ­தி­ அ­ரே­பி­யாவும் செல்­வந்த நாடாக இருக்­கின்ற படியால் அணு­ஆ­யுத உற்­பத்­தியில் இணங்கக் கூடும். இஸ்ரேல் ஒரு தலைப்­பட்­ச­மாக ஈரானின் மேல் விமா­னத்­தாக்­கு­தலை நிகழ்த்தக் கூடும் என ஊட­கங்­களில் வெளியி­டப்­ப­டு­கின்­றன.

டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீ­தான தடை­களை மீண்டும் செயற்­ப­டுத்தும் திட்டம், ட்ரம்ப் கூறு­வது போல இப் பூகோ­ளத்தை பாது­காப்­பா­ன­தொரு இட­மாக மாற்­றுமா? அல்­லது மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்தை மேலும் ஸ்திர­மற்ற குழப்ப நிலைக்கு மாற்­றுமா? என்ற கேள்­விகள் எழு­கின்­றன. அத்­துடன் எதிர்­கா­லத்தில் அணு­ஆ­யுத கட்­டுப்­பா­டுகள் விதிக்கும் முயற்­சி­க­ளுக்கு ட்ரம்பின் நட­வ­டிக்­கையால் குந்­தகம் ஏற்­ப­டுமா? என்­பதும் இன்­னொரு கேள்­வி­யாகும். அதே நேரம் ட்ரம்ப் உரத்து தடைகள் பற்றிக் கூச்­ச­லிடும் அள­விற்கு ஐரோப்­பிய கம்­ப­னிகள் ட்ரம்பின் தடை­களை அதே வேகத்தில் ஏற்று பின்­பற்­றுமா? என்­பது இன்­னொரு கேள்­வி­யாகும். அண்மைக் காலங்­களில் ட்ரம்ப் பின்­பற்றும் வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மெச்­சக்­கூ­டி­ய­தாக இல்லை. வட அமெ­ரிக்க சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம், ட்ரான்ஸ் பசுபிக் வர்த்­தக கூட்­டு­றவு ஒப்­பந்தம், இஸ்ரேல் - பலஸ்­தீ­னிய விவ­காரம் (கிழக்கு ஜெரு­ச­லேமை இஸ்­ரேலின் தலை­ந­க­ராக்கல்), கியூ­பா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வுகள், பாரிஸ் கால­நிலை மாநாட்டு ஒப்­பந்தம் மற்றும் கொரிய பிராந்­திய அணு­ ஆ­யுத விவ­காரம், சிரிய உள்­நாட்டு நெருக்­கடி ஆகிய விட­யங்­களில் ட்ரம்பின் சத்தம் இடி­மு­ழக்­க­மாக அமைந்­தது. ஆனால் மழை சிறி­த­ள­வுதான் பெய்­தது என ஒரு மேற்­கு­நாட்டு இரா­ஜ­தந்­திரி கருத்து வெளியிட்டார்.

2003இல் அமெ­ரிக்க ஈராக்கின் இறை­மையை புறந்­தள்ளி அத்­து­மீறிப் புகுந்து இன்று 15 ஆண்­டுகள் நிறை­வ­டைந்த நிலையில் மத்­திய கிழக்கில் போர் மூழுமா? அல்­லது சமா­தானம் மல­ருமா? என்­பது பற்றி கூற­மு­டி­யா­துள்­ளது. அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையோ, CIA அமைப்போ, அல்­லது இஸ்­ரேலின் மொசாட்டோ, அல்­லது சவூதியின் புல­னாய்வு அமைப்­புக்­களோ மத்­திய கிழக்கில் என்ன நிகழும் என்­பதை எதிர்­வு­கூறும் நிலையில் இருக்­கின்­றன எனக் கூற­மு­டி­யாது. ஏனெனில் இன்று உலகப் போக்கு மாறி­வ­ரு­கின்­றது. பல செயற்­பாட்­டா­ளர்­களும், உடந்­தை­யா­ளர்­களும் களத்தில் நிற்­கின்­றனர்.

அடுத்­தது பொரு­ளா­தாரப் பிரச்­சினை சம்­பந்­தப்­பட்­ட­தாகும். அமெ­ரிக்கா அறி­வித்த பொரு­ளா­தா­ரத்­தடை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­படும் என்­பது பற்றி தெளிவாகக் கூற­மு­டி­யாது. இன்னும் 06 மாதங்கள் பொறுத்­தி­ருக்க வேண்டும். இந்த 06 மாதங்கள் ஆறுதல் காலம் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. அடுத்த கேள்வி சர்­வ­தேச சந்­தையில் எண் ணெய் விலையில் மாற்றம் ஏற்­ப­டுமா? என்­ப­தாகும். பொரு­ளா­தார தடைகள் செயற்­ப­டுத்­தப்­பட்டால் ஈரானின் எண்ணெய் உற்­பத்தி வீழ்ச்­சி­ய­டைய சந்­தையில் நிரம் பல் குறைந்து எண்ணெய் விலை அதி­க­ரிக்கும். அத்­துடன் மத்­திய கிழக்கில் போர் மூளலாம் என்ற ஊகங்­க­ளினால் எண்ணெய்க் கொள்­வ­னவு அதி­க­ரிக்க எண் ணெய் விலையும் அதி­க­ரிக்கும் என்ற கருத் தும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. சென்ற கோடை காலத்தின் பின் எண்ணெய் விலை முன்­னைய விலை­யி­லி­ருந்து 70% வரை அதி­க­ரித்து ஒரு பர­லுக்கு 75 – 78 டொலர் வரை சந்தை நில­வரம் காணப்­ப­டு­கின்­றது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. நாளொன்றுக்கான ஏற்று மதி 2.5 மில்லியன் பரல்கள் எனக் கூறப் படுகின்றது. பொருளாதாரத் தடை அமு லாகும் பட்சத்தில் மேற்கு நாட்டுக் கம்ப னிகள் ஏற்றுமதியை நிறுத்தினால் சிறிய தொகை ஏற்றுமதியை ஈரான் இழக்க வேண்டி ஏற்படும். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கு நாளொன்றுக்கு 70,000 பரல்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இச்சிறிய தொகையையும் ஈரான் - சீனா, இந்தியா, துருக்கிக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அடுத்ததாக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் சம்பந் தப்பட்டதாகும். ஏற்கனவே சில வரிக ளால் அமெரிக்க மக்கள் மீது சுமைகள் ஏற்பட்ட நிலையில் எண்ணெய் விலை அதிகரிப்பினால் சுமைகள் அதிகரிக் கப்பட்டால் மக்கள் குடியரசுக் கட்சி யையும், ட்ரம்பையும் நிராகரிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள். அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாகிய சவூதி அரேபியா, ஒபெக் அமைப்பில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்தது. அமெரிக்காவில் எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு சவூதி அரேபியா இடம்கொடுக்கமாட்டாது. அதே நேரம் ரஷ்யாவும் ஏனைய எண்ணெய் உற் பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்தி, எண்ணெய் விலையில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்தக் காரணிகளை ஆராயும் பொழுது ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்தடை எண்ணெய் விலையை உயர்த்தும் என்ற வாதத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது. இறுதியாக சவூதி அரேபியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் ஈரான் அதிகரித்த எண்ணெய் விலையால் நன்மை அடையவோ, சர்வதேச அரங்கில் ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா எண்ணெய் விலையால் நன்மை அடையவோ, அமெரிக்க, சவூதி அரேபியா வழிசமைத்துக் கொடுக்கமாட்டாது.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-19#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
    • அது என்னோடும் சிறியோடும் சேர முன்பு.🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.