Jump to content

முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்


Recommended Posts

முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்

01-ef85b3118b74466b3ddafe8a80d3e406e7a69707.jpg

 

கபில்

 

ஜன­நா­யக வெளியை எதிர்­கொள்­வதில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்குப் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­பதை, மீண்டும் ஒரு முறை நினை­வு­ப­டுத்திச் சென்­றி­ருக்­கி­றது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு.

ஜன­நா­யக சூழலில் அர­சியல் செய்­வதில் தமிழர் தரப்பில் நிறை­யவே போதா­மைகள் இருப்­பதைப் போலவே, ஜன­நா­யக சூழலில் நினை­வேந்­தல்­களை நடத்­து­வ­திலும் கூட, தமிழர் தரப்­பிடம் போதா­மைகள் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்­க­மான ஆட்­சியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் பற்றி கரி­ச­னைப்­ப­டாமல் இருந்­த­வர்கள் கூட, ஜன­நா­யக சூழலில், அதற்­காக மோதத் தொடங்­கி­யுள்­ளார்கள்.

இப்­போ­துள்ள ஜன­நா­யக இடை­வெ­ளி­யா­னது, தமிழர் தரப்பின் ஒற்­று­மை­யின்­மையை வெளிப்­ப­டுத்­திய சம்­ப­வங்கள் பல உள்­ளன. அதில் ஒன்று தான், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்­காக நடத்­தப்­பட்ட இழு­ப­றிகள்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­து­வதில் ஏற்­பட்ட இழு­ப­றிகள், சிக்­கல்­க­ளுக்கு கடைசி நேரத்தில் தீர்­வுகள் எட்­டப்­பட்ட போதும், அது நிரந்­த­ர­மா­னதோ நிலை­யா­னதோ அல்ல.  இப்­போது கிளம்­பிய பிரச்­சினை நிரந்­த­ர­மா­கவும் அவ­ச­ர­மா­கவும் தீர்க்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது. 

ஏனென்றால், கறையான் புற்­றெ­டுக்க கரு­நாகம் குடி­கொண்ட நிலை­யாகி விடக் கூடாது என்­பதில் கவ­ன­மாக இருக்க வேண்டும்.

முள்­ளி­வாய்க்­காலில் படு­கொலை செய்­யப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்­கப்­பட வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் தாம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார்.

முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற தகுதி அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றதா என்­பது தான் முத­லா­வது பிரச்­சினை.

தாமும் அர­சியல் செய்­யப்­போ­வ­தாக கிளம்பி வந்த பலரும், இப்­போது தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற போர்­வையில் எதையும் பேசலாம், என்ற நிலையே உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு காரணம், ஆட்­சியில் இருந்த அர­சாங்கம்.

தமிழ் மக்­களின் மீது ஈவி­ரக்­க­மற்ற போரைத் தொடுத்து, அந்த மண்ணை குரு­தியில் குளிக்க வைத்­தது அர­சாங்­கமும், அதன் படை­களும் தான்.

அப்­போது, ஆட்­சி­யி­லி­ருந்­தது மஹிந்த ராஜபக் ஷவாக இருக்­கலாம். இப்­போது இருப்­பது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாக இருக்­கலாம். ஆனால் போரை நடத்­தி­யது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சாங்கம் தான்.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு இப்­போது ஆட்­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கும் பங்­குள்­ளது. அவர்­களின் ஆசி­யு­டனும், துணை­யு­டனும் தான் போர் நிகழ்த்­தப்­பட்­டது என்­பதை வர­லாறு ஒரு­போதும் மறந்­து­வி­டாது.

அதை­விட, போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட காலப்­ப­கு­தியில், பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான். இவ்­வாறு, ஈவி­ரக்­க­மற்ற ஒரு போரை நடத்தி வகை­தொ­கை­யின்றி தமிழ் மக்­களைக் கொன்று குவித்த ஓர் அர­சாங்கம், அந்த மக்­க­ளுக்­காக ஒரு நினை­வுச்­சின்­னத்தை அமைக்­கின்ற தகு­தியைக் கொண்­டி­ருக்­கி­றதா என்­பதைப் பற்­றிய எந்தப் பிரக்­ஞையும் அர­சி­யல்­வா­திகள் பல­ருக்கும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஏதோ தாமும் அர­சி­யலில் இருக்­கிறோம் என்­ப­தற்­காக எதை­யா­வது கூறிக் கொண்டு திரி­வது அவர்­களின் வழக்­க­மாக மாறி விட்­டது.

முள்­ளி­வாய்க்கால் என்­பது தமிழ் இனத்தின் ஓர் அடை­யா­ள­மாக மாறி­யுள்ள நிலையில், அந்த மண்ணில் இன்­னமும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்­கப்­ப­டாமல் இருப்­பது வருத்­தத்­துக்­கு­ரிய விடயம்தான்.

வடக்கு மாகா­ண­சபையால், முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­க­ளாகி விட்ட போதிலும், அதற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தீர்­மா­னத்தை எடுத்­த­தற்குப் பின்னர், முள்­ளி­வாய்க்­காலில் நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு வடக்கு மாகா­ண­சபை எதையும் செய்­ய­வில்லை.

நினை­வேந்தல் நடத்­தப்­படும் காணி பிர­தேச சபைக்குச் சொந்­த­மா­னது என்றும், அது தன்­னிடம் உள்ள உள்­ளூ­ராட்சி அமைச்சின் கட்­டுப்­பாட்டில் தான் வரு­கி­றது என்றும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின், ஏன் அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இந்­த­ளவு தாமதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது?

முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தி­ருப்­பதால் தான், அர­சாங்கம் அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்க வேண்டும் என்று சிலர் கோரு­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே, போரில் இறந்­த­வர்­களை நினைவு கூரும் பொது நினைவுச் சின்னம் அமைக்­கப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா பாரா­ளு­மன்­றத்தில் கோரி­யி­ருந்தார்.

பொது நினைவுச் சின்னம் என்ற போர்­வையில், தமிழ் மக்­களின் வர­லாற்றுச் சின்­னங்­களும், அடை­யா­ளங்­களும் அழிக்­கப்­பட்டு விடக் கூடிய ஆபத்து உள்­ளது.

அத்­த­கை­ய­தொரு, பொது நினைவுச் சின்னம், பொது நினைவு நாளுக்கு அப்பால் எந்த நினை­வேந்­த­லையும் செய்ய முடி­யாத ஒரு நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது.

ஏனென்றால் அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். யாரும் ஆட்­சிக்கு வரலாம். அவ்­வா­றான ஒரு சூழல் ஏற்­பட்டால், தமி­ழர்­களால் மர­பு­ரீ­தி­யாக கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் பல நினை­வேந்தல் நாட்­களில் விளக்­கேற்­றவோ அஞ்­சலி செலுத்­தவோ முடி­யாத நிலை கூட ஏற்­படும். அதை­விட பொது நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கும் போது, அங்கு நடக்­கின்ற நினைவு கூரல்கள் அனைத்தும், அர­சாங்­கத்­தி­னா­லேயே ஒழுங்­க­மைக்­கப்­படும். அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிரலே தமிழ் மக்­களின் மீது திணிக்­கப்­படும்.

சாதா­ரண மக்­களின் கவ­லை­களைக் கொட்டித் தீர்க்­கின்ற இட­மாக அமை­வ­தற்குப் பதி­லாக, அது அர­சியல் ஒழுங்கில் அமைக்­கப்­பட்ட ஒன்­றா­கவே இருக்கும்.

முள்­ளி­வாய்க்­காலில் அர­சாங்கம் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைத்­தாலும் கூட, அங்கு பொது­மக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­படும் நிலைக்குப் பதி­லாக, படை­யி­ன­ருக்­கான அஞ்­சலி நிகழ்­வா­கவே மாற்­றப்­படும். இரா­ணு­வத்­தி­னரின் அணி­வ­குப்பு மரி­யா­தை­களும் நிகழ்த்­தப்­ப­டலாம்.

அது முள்­ளி­வாய்க்­காலில் உயிர்­களை உர­மாக்­கி­ய­வர்­க­ளுக்கு செய்­யப்­படும் அநீ­தி­யா­கவே இருக்கும்.

முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்­தே­றிய கொடு­மைகள், போர்க்­குற்­றங்­க­ளுக்கு நியாயம் வழங்க முன்­வ­ராத ஓர் அர­சாங்­கத்­துக்கு, அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற உரிமை ஒரு­போதும் கிடை­யாது.

ஆனாலும், இந்த விட­யத்­துக்குள் அர­சாங்­கத்தின் மூக்­கையும் நுழைத்து விடு­வ­தற்கு சிலர் எத்­த­னிக்­கி­றார்கள்.  முள்­ளி­வாய்க்­காலில் இன­அ­ழிப்பு நடந்த போது, அதற்குத் துணை­யாக இருந்­த­வர்கள், அதனை முன்­னின்று செய்­த­வர்­க­ளுக்கு, நினைவுச் சின்­னங்­களை அமைப்­பது பற்றிப் பேசு­கின்ற அரு­கதை எப்­படி வந்­தது என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­ப­டு­கி­றது. 

அதே­வேளை, தற்­போ­துள்ள சூழலில், தமிழர் தரப்பு இது­போன்ற விட­யங்­களில் பிரிந்து நின்று மோதிக் கொள்ளும் போது, அதனை தமக்குச் சாத­க­மாக்கிக் கொள்­வ­தி­லேயே அர­சாங்கம் ஈடு­படும் என்­பதை மறந்து விடு­கி­றார்கள்.

அன்னை பூப­தியின் நினைவு நிகழ்வில், நிகழ்ந்­தது போன்ற சூழ­லுக்கே இதுவும் வழி­கோலும். அத்­த­கை­ய­தொரு நிலையை நோக்கித் தான் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லையும், கொண்டு செல்லப் போகி­றோமா என்ற கேள்­வியை தமிழர் தரப்பில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் கேட்டுக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது,

முள்­ளி­வாய்க்கால் தமி­ழரின் வர­லாற்றில் ஒரு முக்­கி­ய­மான இட­மாக மாறி விட்ட நிலையில், ஆண்­டுக்கு ஒரு­முறை கூடு­வதும் அதற்குப் பின்னர், யாருமே கண்­டு­கொள்­ளப்­ப­டாத இட­மாக இருப்­பதும் அபத்­த­மா­னது.

முள்­ளி­வாய்க்­காலை முன்­னி­றுத்­தியே, தமிழர் தரப்பின் உரி­மைக்­கான போராட்டம் முன்­னெ­டுத்துச் செல்லப்படுகின்ற சூழலில், பேரவலங்கள் நிகழ்ந்த இடம், ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றப்படுவது முக்கியம்.

அந்தப் பொறுப்பை தமிழர் தரப்பு செய்யாத நிலையில் தான், அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என்று கோருகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

இத்தகையதொரு தருணத்தில் விழித்துக் கொள்ளத் தவறினால், அதுவும் கூட கைதவறிப் போய் விடும் நிலை ஏற்படலாம்.

சுதந்திரமான ஒரு குழு அமைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்ளும் ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படுவது, இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

தற்போதுள்ள ஜனநாயக வெளி எந்தளவுக்கு நீடிக்கும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், அதற்காக வருந்துகின்ற நிலை கூட ஏற்படலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.