Jump to content

ஊடகங்களை சாடிய ஜனாதிபதி


Recommended Posts

ஊடகங்களை சாடிய ஜனாதிபதி

 

சிவலிங்கம் சிவகுமாரன்

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தின் தியா­கங்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மறந்­த­தில்லை.தற்­போ­தைய அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கா­கவும் அவர்களின் குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் பல்­வேறு நலன்­புரி திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது ஆனால் அரச ஊட­கங்­களும் சில தனியார் ஊட­கங்­களும் அவை குறித்து பேசு­வ­தில்லை செய்­தி­களை வெளியி­டு­வ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் நேற்று இடம்­பெற்ற இரா­ணுவ வெற்றி தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­றும்­போது  

கடந்த அர­சாங்கம் ஒரு வாரத்தை மாத்­தி­ரமே இரா­ணுவ வெற்­றிக்­காக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது ஆனால் நாங்கள் மே மாதம் முழு­வ­து­மாக இரா­ணுவ வெற்­றி­களை நினைவு கூர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்த இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அவர்­களை அர­சியல் பக­டைக்­காய்­க­ளாக பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அரச ஊட­கங்­களும் இரா­ணு­வத்­தி­னரின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து செயற்­பட வேண்டும். தனியார் ஊட­கங்­களும் இரா­ணுவம் தொடர்பில் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்டும். இரா­ணுவ குடும்­பங்­க­ளுக்­கா­கவும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கா­கவும் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற திட்­டங்­களை தெளி­வாக புரிந்து கொள்ள வேண்டும். சில அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்ற தவ­றான கருத்­துக்கள் அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மா­கின்­றது. போரை முடி­வுக்கு கொண்டு வந்து ஆயு­தங்­களை கீழே வைத்துள்ளோம். ஆனால் வடக்கிலும் தெற்கிலும் சில அடிப்படைவாதிகள், குழுக்கள் நாட்டின் அமைதியை சீர் குழைக்கும் வகையில் செயற்படுகின்றன என்றும் அவர் தெரி வித்தார்

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-05-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.