Jump to content

வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும்


Recommended Posts

வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும்

 

தென்னிலங்கையில் எதிர்ப்பலை

எம்.சி.நஜி­முதீன்

வடக்கில் நேற்று முன்­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­த­லுக்கு தென்­னி­லங்கை அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வரு­கி­றது. அது குறித்து பலரும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து

வரு­கின்­றனர். மேலும் வடக்கில் நினை­வேந்தல் அனுஷ்­டிப்­பதில் தவ­றில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை அங்கு நினை­வேந்­தலை ஏற்­பா­டு­செய்த வட­மா­காண சபையை உட­ன­டி­யாக கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மற்றும் வட மாகாண கல்­வி­ய­மைச்சர் கந்­தையா சர்­வேஷ்­வரன் ஆகி­யோர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தென் மாகாண சபை உறுப்­பினர் கிரி­ஷாந்த புஷ்­ப­கு­மார தெரி­விக்­கையில்,

பயங்­க­ர­வாத அமைப்­பான விடு­தலைப் புலிகள் உறுப்­பி­னர்­களை நினை­வு­கூர்­வதை எவ­ரா­வது நியா­யப்­ப­டுத்­து­வார்­க­ளாயின் அவர்­களின் புத்­தியை பரி­சீ­லிக்க வேண்டும். மேலும் அர­சி­ய­ல­மைப்பை பாது­காப்­ப­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர், பயங்­க­ர­வாத அமைப்பைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களை நினை­வு­கூர்­வதை நியாப்­ப­டுத்­தி­யி­ருப்­பது அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும்.

வட மாகாண கல்­வி­ய­மைச்சர் பாட­சா­லை­களில் கொடியை அரைக்­கம்­பத்தில் பறக்க விடு­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். எனினும் அவ்­வா­றான உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்கு அவ­ருக்கு எவ்­வித உரி­மையும் இல்லை. எனவே உட­ன­டி­யாக வட மாகாண சபையை கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சிறிய குற்றம் இளைத்­த­வர்­களை சிறையில் அடைக்க முடியுமாக இருந்தால், இவ்வாறு அரசியலமைப்பை மீறி பாரிய குற்றம் இளைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-05-20#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் தொடரும்.. இந்தப் பயங்கரவாத உச்சரிப்புடன் கூடிய சனநாயக விரோத... சிங்கள இனவெறி மேலாதிக்க நோக்கிலான அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒரு நிறுவனப்படுத்திய எதிர்ப்பை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியிலும் வெளிப்படுத்துவதன் ஊடாக..

சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் இலங்கைத் தீவில் நல்லிணக்கம் காண முடியாது என்பதை உறுதிப்படுத்துவதன் வாயிலாக.. தமிழர் தேசம்.. சர்வதேச அனுசரணையுடன் தான் தன் தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுவதும்.. உணரப்படுத்தப்படுவதும் தமிழ் மக்களின் நீடித்த அமைதியான நிம்மதியான வாழ்க்கைக்கும் எதிர்கால சந்ததியின் நிம்மதிக்கும் இன்று அவசியமாகிறது.

அரசியல்.. சமூக.. சமய பேதமின்றி தமிழ் மக்கள் அனைவரும்.. இப்படியான சிங்கள அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை உலகின் முன் நிறுத்த.. தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சரியாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு சில அமைப்புக்களுக்கு.. அல்லது நபர்களுக்கு எதிரான செயல் என்று கருதி மெளனித்திருக்கக் கூடிய விடயமே அல்ல. 

இதை இப்படியே மெளனமாகக் கடந்து போக நினைத்தால்.... தமிழர்கள் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்காது.?

Link to comment
Share on other sites

வடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும்

01-231420665dbb10f7449b90e0f8a0e648f234b222.jpg

 

கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை; விக்கினேஸ்வரனின் கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா எனவும் கேள்வி

(ஆர்.யசி)

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா? வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரி­யுள்­ளனர். 

வடக்கின் நிலை­மை­களை எந்த வகை­யி­லேனும் கட்­டு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வட­மா­காண சபையை கலைத்து நாட்டின் அமை­தியை சீர­ழிக்கும், பிரி­வி­னையை தூண்டும் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர்.  

வடக்கில் கடந்த 18ஆம் திகதி இடம்­பெற்ற நினை­வேந்தல் நிழல்­வுகள் மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து தமது நிலைப்­பாட்­டினை கூறும் போதே அவர்கள் இதனை தெரி­வித்­தனர்.

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி பார­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன கூறு­கையில்.

வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் - பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா என்­பதை உட­ன­டி­யாக மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும். வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என அனைத்­துமே அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­றதா என்­ப­தையும் கூற வேண்டும். இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வாய் திறக்­காது அமைதி காத்தால் இந்த நாடு மீண்டும் தீப்­பற்றி எரி­யக்­கூ­டிய நிலைமை ஏற்­படும்.

பயங்­க­ர­வா­தி­களை கொண்­டாடும் , அவர்­க­ளுக்­காக நினை­வேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்­டு­மே­யாகும். உலகில் வேறு எந்­த­வொரு நாட்­டிலும் அவ்­வாறு பயங்­க­ர­வா­திகள் போற்­றப்­ப­டு­வ­தில்லை. பிர­பா­க­ர­னுக்கு மரி­யாதை செலுத்தி யுத்­தத்தை முடித்த மஹிந்த ராஜபக் ஷவை கள்வன் என கூறு­கின்­றனர். அர­சாங்கம் இன்று பிரி­வி­னை­வா­தி­களின் பக்கம் நின்றே தீர்­மானம் எடுக்­கின்­றது. ஆகவே அர­சாங்­கத்தை சாடு­வதில் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை. மக்கள் அடுத்த கட்­ட­மாக என்ன தீர்­மானம் எடுக்­கப்­போ­கின்­றனர் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும். மக்கள் இனியும் இந்த ஆட்­சி­யினை அனு­ம­தித்து நாட்­டினை துண்­டாட இட­ம­ளிக்­கப்­போ­கின்­ற­னரா அல்­லது ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முன்­வ­ரு­வார்­களா என்­பதை நாமும் பார்த்­து­கொண்­டுள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

பீரிஸ் கருத்து

இது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஜி.எல்.பீரிஸ் கூறு­கையில்,

இன்று நாட்டில் மிகப்­பெ­ரிய இன­வாத சக்­திகள் தலை­தூக்­கி­யுள்­ளன. வடக்கில் தமிழ் பிரி­வி­னை­வாதம், கிழக்கில் முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் என நாட்டின் மக்­களை நாச­மாக்கும் சக்­தி­களை அர­சாங்­கமே உரு­வாக்­கி­யுள்­ளது. வட­மா­காண முத­லை­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் சிவா­ஜி­லிங்கம் போன்றோர் இன்று முன்­வைக்கும் கருத்­துக்கள் மிகவும் பார­தூ­ர­மா­னவை.

வடக்கு கிழக்கு தனி இராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­ப­டு­வது, சர்­வ­தேச தலை­யீ­டுகள், இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது போன்ற கருத்­துக்­களை அவர்கள் தைரி­ய­மாக முன்­வைக்கக் கூடிய நிலை­மையை இன்று அர­சாங்கம் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. ஒவ்­வொரு ஆண்டும் புலி­களை நினைவு கூரவும் நினை­வுத்­தூபி அமைக்­கவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த செயற்­பா­டுகள் அனைத்­தையும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏனைய அமைச்­சர்­களும் வேடிக்கை பார்த்து வரு­கின்­றனர்.

நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்டில் பாரிய அபி­வி­ருத்தி, மற்றும் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­தினோம். ஆனால் இந்த அர­சாங்கம் கடந்த மூன்று ஆண்­டு­களில் மீண்டும் பழைய நிலை­மை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. மீண்டும் வடக்கில் இன­வாத சக்­திகள் தலை­தூக்கி வடக்கு கிழக்­கினை துண்­டாடும் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளது.

புலிகள் வடக்­கிற்கு தேவை என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக கூறும் நிலைமை வடக்கில் உரு­வா­கி­யுள்­ளது. வட­மா­காண சபையில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டு­கின்­றது, பாட­சா­லை­களில், கடை­களில், வீடு­களில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டுகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நிறைவேற்று அதிகாரங்கள் இன்றும் ஜனாதிபதி கைகளில் உள்ளது. எனவே வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகாரங்களை கொண்டு உடனடியாக வடமாகாண சபையை கலைக்க வேண்டும். அத்துடன் நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்கினேஸ்வரன்,மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-21#page-1

Link to comment
Share on other sites

சரி அப்புறம்.

நீங்கள் உயிரிழந்த சிங்கள ராணுவத்தை வைத்து அரசியல் நடாத்துங்கோ நாங்கள் உயிரிழந்த புலிகளை வைத்து அரசியல் செய்கிறோம்.

நீங்களும் இந்த கோடு தாண்டி வரக்கூடாது நாங்களும் வரமாட்டோம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.