Jump to content

சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!-


Recommended Posts

சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!-

 

DddGPuVVAAA1lsf-750x430.jpg

 
 
 

மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது.

முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் ஆரம்பமாகியது தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல்!

 

 
Image

முள்ளிவாய்க்கால் நினைவெந்தல் நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மௌன அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

 

அவரது உரையில் தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கரிசனையும் காட்டாமல் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் ஒரு சிங்களப் போர்வீரர் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த எந்தவொரு குற்றத்தையும், குற்றமாக கருதுவதற்கு தயார் அற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

“கடந்த காலங்களில் கைதானவர்கள் எவ்வித விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் விலக்கப்படவில்லை. வன்னி நிலப்பரப்பு தீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடலும் தரையும் பாரிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவித்து மீள்குடியேற்றத்திற்கான வழங்கப்பட்ட நிதி, இராணுவத்திற்காக பெருமளவில் ஒதுக்கப்படுகின்றன. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை. மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு படைகள் எடுத்துசெல்லமுடியும்?

எமதுமக்களின் அழைப்பின்பேரில் படைகள் இங்கு வரவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேறவேண்டிய அவர்கள் மக்களின் காணிகளை அடாத்தாக வைத்திருக்கின்றனர். படைகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எமது மக்களுக்காக சர்வதேசத்தால் கொடுக்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது. ஒருவேளை சர்வதேசத்தின் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்க படையினர் மறுத்ததால்தானோ அவை படையினருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதோ என எண்ணவேண்டியுள்ளது.

இலங்கையில் கடந்த எழுபது ஆண்டுகளாக பார்ப்போமேயானால் சர்வதேச நெருக்குதல் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பது இயலாத காரியம்போல் தென்படுகிறது. சர்வதேச அரங்கில் நெருக்குதல்களை இந்த அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன். எமது இனம் தொடர்ந்தும் எடுப்பார் கைப்பிள்ளை போல் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்பட்ட ஓரணியில் திகழ்ந்து இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரவேண்டும். என அழைப்பு விடுகிறேன்.” என்று மேலும் உரை நிகழ்த்தினார்.

 

http://www.ibctamil.com/srilanka/80/100672?ref=bre-news

 

Link to comment
Share on other sites

உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்!!

index-1.jpg
 
 
 

மே- 18முள்ளிவாய்க்கால் நினவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ.விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உள்பட பலா் சுடர்களை, மரல் அஞ்சலி செலுத்தினர்.

 

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டது.

 

http://newuthayan.com/story/11/உணர்வுபூர்வமாக-அஞ்சலி-செலுத்திய-யாழ்ப்பாணப்-பல்கலைக்கழகம்.html

Link to comment
Share on other sites

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது!

download-1-7-720x450.jpg

 

தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.

 ஆறாத வடுக்களுடன், மாறாத துயரை தந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமது உறவுகளை நினைவுகூர்ந்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது தமது ஆற்றாமையை தீர்த்துக் கொண்டனர்.

http://athavannews.com/?p=673998-பல்லாயிரக்கணக்கானோரின்-கண்ணீருக்கு-மத்தியில்-பொதுச்சுடர்-ஏற்றப்பட்டது

 

Link to comment
Share on other sites

வவுனியாவிலும்- உறவுகளுக்கு அஞ்சலி!!

DSC_0198-750x430.jpg  
 

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியா குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம்,வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், சே.மயூரன்,வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

DSC_0210-1-300x200.jpg

http://newuthayan.com/story/12/வவுனியாவிலும்-உறவுகளுக்கு-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

மன்னாரிலும் உறவுகளுக்கு அஞ்சலி!!

1-6-750x430.jpg
 
 

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர சைப மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Capture-169-300x159.jpgDSC_8004-300x200.jpg

http://newuthayan.com/story/12/மன்னாரிலும்-உறவுகளுக்கு-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/182946?ref=imp-news

நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்

அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு
 
 

image_12747b0beb.jpg

-சண்முகம் தவசீலன், எஸ்.நிதர்ஷன்

யுத்தத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று (18) முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

பொதுச்சுடரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் தனது பெற்றோரை இழந்த இழந்த யுவதியிடம் கையளித்தார். குறித்த யுவதி பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள், அரசியற்பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

image_8cf30af4a2.jpgimage_4d3ceac1a7.jpg

image_dd222c3536.jpgimage_d5cb9ec39f.jpgimage_4c62528208.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/முள்ளிவாய்க்காலில்-அஞ்சலி-நிகழ்வு/46-216163

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பில்

 

vbf-723x430.png
 
 

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

vbf.pngcvxcv.png

http://newuthayan.com/story/12/முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்-மட்டக்களப்பில்.html

Link to comment
Share on other sites

வேம்படி மாணவிகள் -வகுப்பறைகளில் அஞ்சலி!!

Capture-171.jpg
 
 
 

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.

http://newuthayan.com/story/12/வேம்படி-மாணவிகள்-வகுப்பறைகளில்-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

பளை பேருந்துத் தரிப்பிடத்தில் – வர்த்தகர்கள் நினைவேந்தல்!!

IMG20180518110227-750x430.jpg
 
 
 
 

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பளை பேருந்துத் தரிப்பிடத்தில் இன்று நடைபெற்றது.

பளை வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடி, பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி தமது அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தனர்.

வர்த்தக சங்க தலைவரால் பொது சுடர் ஏற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் வர்த்தகர்கள், பொது மக்கள், விளையாட்டுக்கழக வீரர்கள் கலந்து கொண்டனர்.

 

IMG20180518110203-300x169.jpgIMG20180518110631-300x169.jpgIMG20180518110640-300x169.jpg

http://newuthayan.com/story/13/பளை-பேருந்துத்-தரிப்பிடத்தில்-வர்த்தகர்கள்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

அனைத்து தரப்பும் இணைந்து  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

 

அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

http://tamil.adaderana.lk/news.php?nid=102408&mode=lead

 

Link to comment
Share on other sites

ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நினைவேந்தப்பட்டது…

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..

Mulli-9nth2.jpg?resize=800%2C534
ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் பொதுச் சுடரேற்றி நினைவு கூறப்பட்டது.

 

இன்று (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

2009 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்து தானும் காயமடைந்த யுவுதியான கேசவன் விஜிதா என்பர் பொதுச் சுடரை ஏற்றிய பின்னர் தனித்தனியாக சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி யுத்தத்தில் தங்களுடைய உறவினர்களை ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவின் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலிருந்து விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட பேரூந்துகளில் பொது மக்கள் வருகைதந்திருந்தனர்.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பொதுச் சுடரேற்றும் பகுதிக்குள் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனை தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவை சேனாதிராஜா சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சிறிதரன் சாந்திசிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் யாழ் மாநாகர சபை உறுப்பினர்கள் என அனைவரையும் மாணவர்கள் உட்செல்ல விடாது தடுத்துவிட்டனர்.

Mulli-9nth1.jpg?resize=800%2C534  Mulli-9nth3.jpg?resize=800%2C534Mulli-9nth4.jpg?resize=800%2C534Mulli-9nth5.jpg?resize=800%2C534Mulli-9nth6.jpg?resize=800%2C534Mulli-9nth7.jpg?resize=800%2C534Mulli-9nth8.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/79716/

 

Link to comment
Share on other sites

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)

 

 
யாழ். பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.

பல்கலைக்கழககத்தின் மத்தியில் உள்ள அலங்கார சுற்று வட்டத்தில் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ. விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உட்பட பலா் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க அஞ்சலி செய்தனர்.

தொடர்ந்து மலர் அஞ்சலி செய்ததோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)

 

 
 
முள்ளிவாய்ககால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ். சிவயோகநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழின உணர்வாளர் டொக்டர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஷ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள், மத குருமார்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வட கிழக்கில் உயிர் நீத்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள், அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 
 
Link to comment
Share on other sites

கடலில் தீபம் ஏற்றி -உறவுகளுக்கு அஞ்சலி!!

 

Ddd5-3CVwAAHRn2-750x430.jpg

 
 
 
 

முள்ளிவாயக்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வாகரையில் கடலுக்குள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

Ddd5-3CVAAEicAz-300x225.jpgDdd5-3NV0AE2fWl-300x225.jpg

http://newuthayan.com/story/14/கடலில்-தீபம்-ஏற்றி-உறவுகளுக்கு-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

உயிரிந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய இந்துவின் மைந்தர்கள்

media-share-0-02-03-9fb241c06733aa6da6e3
 
 
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

media-share-0-02-03-08a009f9fe423c77b432media-share-0-02-03-1414a809daf46bf81783media-share-0-02-03-ac69e3653462606f07d8

http://newuthayan.com/story/18/உயிரிந்த-உறவுகளுக்கு-அஞ்சலி-செலுத்திய-இந்துவின்-மைந்தர்கள்.html

Link to comment
Share on other sites

வட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

IMG_9167-750x430.jpg
 
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட்டுக்கோட்டையில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. பொதுச் சுடரை முன்னாள் போராளி ஒருவரின் தந்தை ஏற்றினார்.

நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன், ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் என்.யோகநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ், பிரதேசசபைகள் சிலவற்றின் தவிசாளர்கள் உறுப்பினர்கள், உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

IMG_9164.jpgIMG_9175.jpgIMG_9176.jpgIMG_9177.jpg

http://newuthayan.com/story/19/வட்டுக்கோட்டையில்-எழுச்சியுடன்-முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

உறவுகளுக்கு உதயன் பணிமனையில் நினைவேந்தல்

உயிரிழந்த உறவுகளை மனதில் நிறுத்தி சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

IMG_8939-750x430.jpg

 
 
 
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று, இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு உதயன் பணிமனையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 
 

 

உயிரிழந்த உறவுகளை மனதில் நிறுத்தி சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

IMG_8897.jpg

IMG_8901.jpg

IMG_8909.jpg

IMG_8916.jpg

IMG_8921.jpg

IMG_8939.jpg

IMG_8972.jpg

IMG_8919.jpg

IMG_8934.jpg

IMG_8914.jpg

IMG_8918.jpg

http://newuthayan.com/story/17/உறவுகளுக்கு-உதயன்-பணிமனையில்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி

இலங்கை: முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல லட்சம் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது இறுதி பேரவலம் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.இன்றைய தினம் காலை 11 மணிக்கு பிரதான சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டஇந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு கிழக்கினை சேர்ந்த ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது ஆத்மாத்தமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தார்கள்.

வடக்கு மாகாண சபையும், யாழ்.பல்கலைகழகமும் சிவில் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து இவ் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த்து.

குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் அனைவரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் நினைவஞ்சலியில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் இருந்தும் ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியிருந்தனர்.அஞ்சலி நிகழ்வானது முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் சூழ்ந்து நிற்க ஆரம்பமானது.

முற்பகல் 11 மணியளவில் பிரதான சுடரானது ஏற்றப்பட்டது. இறுதி போரில் தனது தாய் தந்தைகளை இழந்து தற்போது உறவினர்களோடு வசித்து வரும் யுவதியொருவரே பிரதான நினைவுச் சுடரை ஏற்றிவைத்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் பிரதான சுடரினை எடுத்துகொடுக்க அவ் யுவதி பிரதான சுடரினை ஏற்றிவைத்தார்.அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து நினைவு மைதானத்தில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நினைவுச்சுடர்களும் மக்களால் ஏற்றப்பட்டன.

இலங்கை: முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி

இவ் நினைவஞ்சலியின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்து மக்கள் கதறியழுதனர்.

நினைவஞ்சலியை தொடர்ந்து இம் மே 18 ஆம் திகதி துக்க தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுஸ்டிக்க வேண்டும் என்றும், சர்வதே சமூகமானது விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான விசாரனை பொறிமுறை ஒன்றை உருவாக்கி நீதியை கால தாமதம் இன்றி நிலைநாட்ட வேண்டும் என்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கிய உரையினை முதலமைச்சர் ஆற்றியிருந்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைமைகள் எவரையும் நினைவஞ்சலி ஏற்பாட்டு குழுவானது முதன்மைப்படுத்தியிருக்கவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சரை மாத்திரமே பிரதான நினைவு சுடர் ஏற்றும் இடத்திற்கு அனுமதித்திருந்தனர்.

குறிப்பாக அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன்,ஈஸ்வரபாதம் சரவணபவன்,சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி்.கே.சிவஞானம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு அரசியல் தலைமைகள் கலந்துகொண்டிருந்த போதும் அவர்கள் எவரையும் நினைவிடத்திற்கு அண்மையில் அஞ்சலி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவடைந்த உடனேயே அனைத்து அரசியல் உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக அஞ்சலி நிகழ்வில் கலந்துவிட்டு உடனடியாகவே அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44172513

 

Link to comment
Share on other sites

திருகோணமலையில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

20180518_175510-750x430.jpg

 
 
 
 

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று மாலை 5.45 மணிக்கு இடம்பெற்றது.

எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கலந்து பொதுச் சுடரை ஏற்றினார்.

20180518_173415.jpg20180518_175405-e1526649602866.jpg

http://newuthayan.com/story/18/திருகோணமலையில்-எழுச்சியுடன்-முள்ளிவாய்க்கால்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

யாழில் சுதந்திரக்கட்சி அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

32845659_1088649044608170_64740100243885
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முள்ளிவாய்க்கால் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்திருக்கும் சுதந்திரக்கட்சி அலுவலகத்திலும் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தது. இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரதிநித்தித்துவம் வகிக்கும் மாநகர ,மற்றும் நகரசபை ,பிரதேச சபை பிரதிநிதிகளும் அவர்களோடு இளைஞர் யுவதிகள் என பலரும் ஆத்ம அஞ்சலியில் உணர்வுபூர்வமான முறையில் கலந்து கொண்டிருந்தனர்

 

DSCN9595.jpg?resize=730%2C548DSCN9596.jpg?resize=730%2C548DSCN9599.jpg?resize=730%2C548DSCN9604.jpg?resize=730%2C548

http://globaltamilnews.net/2018/79772/

Link to comment
Share on other sites

உணர்வெழுச்சியுடன் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:உயிரிழந்த உறவுகளை நினைத்து மக்கள் அழுது புலம்பல்;எங்கும் சோகமயம்

88-5dd8cccfce0c17aec3108cb469dfaead4e53c460.jpg

 

(முள்­ளி­வாய்க்­கா­லிலி­ருந்து ரி.விரூஷன், குமணன், கரைச்சி, கண்­டா­வளை நிரு­பர்கள்) 

இறுதி யுத்­தத்தின் போது உயி­ரி­ழந்த உற­வு­களை நினைவு கூர்ந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று மிகவும் உணர்வெழுச்­சி­யுடன் நடை­பெற்­றது. இந்த நிகழ்

வில் 5 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் கலந்­து­கொண்டு உயி­ரி­ழந்த தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்து அழுது புலம்­பினர். இதனால் முள்­ளி­வாய்க்கால்  பகுதி நேற்று பெரும் சோக­ம­ய­மாக காணப்­பட்­டது. 

முள்­ளி­வாய்க்­காலில் பொதுச்­சுடர் ஏற்­றப்­பட்­ட­துடன் 1500 இற்கும் மேற்­பட்ட சுடர்­களும் அதனைத் தொடர்ந்து உயி­ரி­ழந்த உற­வி­னர்­க­ளினால் ஏற்­றப்­பட்­டது. பொதுச் சுட­ரினை யுத்­தத்தில் தனது பெற்றோர் மற்றும் உற­வி­னர்­களை இழந்து காய­ம­டைந்த யுவ­தி­யான கேசவன் விஜித்தா ஏற்றி வைத்தார். வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட­ரினை எடுத்து வழங்­கி­ய­போது விஜித்தா அதனை ஏற்­றினார். இத­னை­ய­டுத்தே நிகழ்­வுகள் உணர்­வொ­ழுச்­சி­யுடன் இடம்­பெற்­றன.

உணர்­வெ­ழுச்­சி­யுடன் அஞ்­சலி

வடக்கு மாகாண சபையும், யாழ்.பல்­க­லை­க­ழ­கமும் சிவில் மற்றும் பொது அமைப்­புக்­களும் இணைந்து நினை­வேந்தல் நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. நினை­வேந்தல் நிகழ்வு இடம்­பெற்ற பகு­தி­யா­னது சிவப்பு மஞ்சல் கொடி­களால் அலங்­க­ரிக்­கப்­பட்டு, சுமார் 1500 இற்கும் மேற்­பட்ட சுடர்கள் நாட்­டப்­பட்­டி­ருந்­தன.

மேலும் பிர­தான சுட­ரேற்றும் இடமும் மஞ்சள் சிவப்பு கொடி­களால் அலங்­க­ரிக்­கப்­பட்டு உணர்வு பூர்­வ­மான அஞ்­ச­லிக்­கான முறையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த்து.

நினைவு பேர­ணிகள்

யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் ஏற்­பாடு செய்­தி­ருந்த பேர­ணி­யா­னது முள்­ளி­வாய்க்கால் நினை­வி­டத்தை காலை 10.52 மணிக்கு வந்­த­டைந்த்து. யாழ்­பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் வாக­னங்­க­ளிலும் கறுப்பு கொடி­களை ஏந்­தி­ய­வாறும், உணர்­வு­பூர்­வ­மான பாடல்­களை இசைக்­க­விட்­ட­வாறும் பேர­ணி­யாக பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முள்­ளி­வாய்க்கால் நினை­வி­டத்தை வந்­த­டைந்­தனர்.

இதே­போன்று யாழ்ப்­பா­ணத்தில் இருந்து நினைவு சுட­ரேற்­றிய வாக­னமும் வடக்கின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் சென்று நேற்று 11.10 மணி­ய­ளவில் முள்­ளி­வாய்க்கால் நினை­வி­டத்தை வந்­த­டைந்­தது.

முதல் தட­வை­யாக அதி­க­ள­வான மக்கள் பங்­கேற்பு

இறு­தி­யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூரும் ஒன்­ப­தா­வது ஆண்டு முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வா­னது வடக்கு மாகாண சபையின் ஏற்­பாட்டில் நான்­கா­வது தட­வை­யாக சுதந்­தி­ர­மான முறையில் நேற்று இடம்­பெற்­றது. இந்­நி­லையில் இம்­மு­றையே அதி­க­ள­வான மக்கள் கலந்­து­கொண்டு தமது உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தார்கள்.

குறிப்­பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்டு அவர்கள் நினை­வஞ்­ச­லியில் கலந்­து­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்­டங்­களில் இருந்தும் 5000 ற்கும் மேற்­பட்ட மக்கள் நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

நினை­வேந்தல்

நினை­வேந்தல் நிகழ்­வா­னது முள்­ளி­வாய்க்கால் நினை­வி­டத்தில் பெரு­ம­ள­வான மக்கள் மக்கள் சூழ்ந்து நிற்க ஆரம்­ப­மா­னது. முற்­பகல் 11 மணி­ய­ளவில் பிர­தான சுட­ரா­னது ஏற்­றப்­பட்­டது.

இறுதி போரில் தனது தாய் தந்­தை­களை இழந்து தற்­போது உற­வி­னர்­க­ளோடு வசித்து வரும் யுவ­தி­யான கேசவன் விஜித்தா பிர­தான நினைவுச் சுடரை ஏற்­றி­வைத்தார். வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் பிர­தான சுட­ரினை எடுத்­து­கொ­டுக்க அவ் யுவதி நினைவுச் திடலில் சுட­ரினை ஏற்­றி­வைத்தார்.

அதனை தொடர்ந்து மலர் அஞ்­சலி நிகழ்­வுகள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து நினை­வி­டத்தில் ஏற்­க­னவே தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நினைவுச் சுடர்­களும் மக்­களால் ஏற்­றப்­பட்­டன.

கத­றி­ய­ழுத உற­வுகள்

இந்த நினை­வேந்­தலின் போது கொல்­லப்­பட்ட தமது உற­வு­களை நினைத்து உற­வி­னர்கள் கத­றி­ய­ழு­தனர். ஒரு­வ­ரை­யொ­ரு­வரைக் கட்­டிப்­பி­டித்தும் மண்ணில் வீழ்ந்தும், தமது உற­வு­க­ளது பெய­ரினை கூறியும் கதறி அழு­தி­ருந்­தனர். இதனால் இப்­ப­குதி பெரும் சோக­ம­ய­மாக மாறி­யது.

காத்­தி­ர­மான முத­ல­மைச்­சரின் உரை

நினை­வேந்­தலைத் தொடர்ந்து முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் நி.னைவேந்தல் உரை இடம்­பெற்­றது. இந்த உரை­யின்­போது யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் தமிழ் மக்­க­ளுக்கு உரிய தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­பதன் அவ­சியம் தொடர்­பா­கவும் சர்­வ­தே­சத்தை வலி­யு­றுத்தும் வகையில் முத­ல­மைச்­சரின் உரை அ.மைந்­தி­ருந்­தது.

முள்­ளி­வாய்க்கால் இறுதி தரு­ணத்தை நினை­வு­ப­டுத்­திய நிகழ்வு.

நினை­வேந்தல் நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த மக்கள் உண்­ப­தற்­காக கஞ்சி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இறுதி யுத்­தத்தில் மக்கள் உண­வின்றி கஞ்­சி­யையே உண்டு பசியை போக்­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் அதனை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­கா­லுக்கு செல்லும் வழி­க­ளிலும் பலர் கஞ்சி தயா­ரித்து வழங்­கி­யி­ருந்­தனர்.

கணக்­கி­லெ­டுக்­கப்­ப­டாத அர­சியல் தல­மைகள்.

இந்த நினை­வேந்தல் நிகழ்வில் அர­சியல் தலை­வர்கள் எவ­ரையும் நினை­வஞ்­சலி ஏற்­பாட்டு குழு­வா­னது முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை மாத்­தி­ரமே பிர­தான நினைவு சுடர் ஏற்றும் இடத்­திற்கு அவர்கள் அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

குறிப்­பாக நினை­வேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராசா, த. சித்­தார்த்தன், ஈ.சர­வ­ண­பவன், சிவ­சக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா, சிவ­மோகன் , எஸ்.ஸ்ரீதரன் ஆகி­யோரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி்.கே.சிவ­ஞானம், வடக்கு மாகாண சபையின் அமைச்­சர்கள் உறுப்­பி­னர்கள் என பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் தலை­மையில் முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான குழு­வி­னரும் இந்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்­தனர். இவர்­களை விட தமிழ் முற்­போக்­குக்­கூட்­ட­ணியின் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார் கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் பாஸ்­கரா உட்­பட வேறு­ப­லரும் நினை­வேந்தல் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர்.

இவ்­வாறு அர­சியல் தலை­மைகள் கலந்­து­கொண்­டி­ருந்த போதும் அவர்கள் எவ­ரையும் பொதுச்­சுடர் ஏற்றும் இடத்­திற்கு செல்ல ஏற்­பாட்­டா­ளர்கள் அனு­ம­தித்­தி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் நினை­வேந்தல் நிகழ்­வுகள் நிறை­வ­டைந்த உட­னேயே அனைத்து அர­சியல் கட்­சி­களின் உறுப்­பி­னர்­களும் மக்­க­ளோடு மக்­க­ளாக அஞ்­சலி நிகழ்வில் பங்­கு­பற்­றி­விட்டு உட­ன­டி­யா­கவே அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தனர்.

இறுதி வரை தொடர்ந்த புல­னாய்­வா­ளர்கள்.

நினை­வேந்தல் நிகழ்­வுகள் ஆரம்­ப­மா­னதில் இருந்து முடி­வ­டைந்து செல்லும் வரை தொடர்ச்­சி­யாக புல­னாய்­வா­ளர்­க­ளது கண்காணிப்பு காணப்பட்டிருந்தது. நி்னைவேந்தலில் ஈடுபட்ட பொது மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையுமே புலனாய்வாளர்கள் கண்காணித்திருந்தனர்.

குறிப்பாக வழமையாக அப் பகுதியில் கடமையில் ஈடுபடும் புலனாய்வாளர்களை தவிர்த்து வேறு பகுதிகளில் உள்ள புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன் இவர்கள் அங்கு இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்திருந்தனர்.

வடக்கில் கடைகள் பூட்டு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினையடுத்து வடக்கில் பல இடங்களில் நேற்று பிற்பகல் 1 மணிவரையில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் கறுப்புக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

பாடசாலைகளிலும் மாகாண அலுவலகங்களிலும் மாகாணக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.