Sign in to follow this  
நவீனன்

முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்

Recommended Posts

முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்

 

 

2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது.

இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின் தேவை எதுவரைக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கு.

அதையும் கடந்து, இலங்கை அரசாங்கத்தால் இதுவரை தடை எடுக்காத காரணத்தால், இவர்களுடன் இணைந்து செயற்படுவதால் அசைலம் கோரி விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வலுவான சாட்சியாக இந்த அமைப்பு இருப்பதனால்இ தஞ்ச கோரிக்கையாளருக்கு பெரும் தேவையான இடமாக இந்த நாட்டைக் கடந்த நிறுவனம் இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முள்ளிவாய்காலில இருந்து தப்பி வந்த தம்பிமாரிடம் பணம் பறிக்கும் செயற்பாட்டில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளமை வேதனையானது.

அசைலம் கேட்டு இருப்போர் தமக்கான ஒரு ஆவணமாக ஒரு கடிதம் வேண்டுவதற்கு போனால் கடிதம் வழங்கஇ உறுப்புரிமைக்கு, அடையாள அட்டைக்கு என்று பலதரப்பட;ட விதங்களில் ஏற்கனவே நொந்துள்ளவர்களிடம் பணம் பெறப்படுகின்றது.

ஆனால் அவைக்கு பற்று சீட்டு கொடுப்பதில்லை.

தற்போது நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சைக்கிளோட்டம் ஒன்றை நடாத்த திடடமிட்டுள்ள இந்த நிறுவனம் , அதில் பங்குபற்றுவோர் விசா இல்லாமல் வேலை இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட, தலைக்கு 35 பவுன்கள் செலுத்தி பங்குபற்றுமாறு வற்புறுத்தி வருகின்றார்கள்.

அதற்கும் பற்றுசீட்டு இல்லை.

காசை மட்டும் பற்றுசீட்டு இல்லாமல் இன்னும் எத்தனை காலத்திற்குதான் கோலோச்ச முடியும் ''நீதி'' மான்களே என்று கேட்கிறார் அண்மையில் புலம்பெயர்ந்து பிரித்தானியா வந்துள்ள ஒரு முன்நாள் போராளி தம்பி.

http://www.ibctamil.com/gossip/80/100394?ref=rightsidebar

Share this post


Link to post
Share on other sites

புலம்பெயர்ந்த நாடுகள் என்று சொன்னால் அதில் பல நாடுகள் இருக்கு அதில எந்த நாட்டில் இப்படி நடக்கின்றது என்று விபரமாய் எழுதினால் நல்லம் .....இப்படி வந்தவர்களுக்கு பல நல்ல காரியங்களையும் பல அமைப்புக்களும் தனிநபர்களும் செய்துள்ளனர்.அவர்களயும் கொச்சைபடுத்துவது போன்று உள்ளது இவர்களின் இந்த குற்றச்சாட்டு

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

வேற எங்கு இங்கு பிரித்தானியாவில் தான்......

வீசா கிடைக்கும் வரை இப்படியானவர்கள் பம்முவார்கள் பிறகு பின்பக்கத்தை காட்டிவிட்டு போவார்கள்.

அந்த நிறுவனமும் ஓர் விலைப்பட்டியல் வைத்திருக்கிறார்கள் அதன்படி கட்டணம் அறவிடுகிறார்கள், ஆனால் பற்றுச் சீட்டு வழங்காமல் விடுவது தவறு.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ibc கூட்டமும் கொசிப்பு போடும் விதத்தில் செய்தி போடுகிறது பேரை போட  முதுகெலும்பு இல்லையாக்கும் .இங்கு இப்படியான நிருவனம்கள் uk அரசிடம் இருந்தும் உதவி எடுத்துகொண்டு நடத்திக்கொண்டு இருப்பினம் அதனால்த்தான் பற்று சீட்டு குடுக்காமல் டபுள் ஆட்டையை போடுகினம் பிறகென்ன 50வயது பிறந்தநாளுக்கு தனி விமானத்தில் வந்து குத்து டான்ஸ் ஆடுவினம் .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைத்தான் சொல்லுகினம்

விசுவநாதன் உருத்திரகுமார் சோக்குப்பண்ணக் காசுதேவைதானே

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, Elugnajiru said:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைத்தான் சொல்லுகினம்

விசுவநாதன் உருத்திரகுமார் சோக்குப்பண்ணக் காசுதேவைதானே

அவ்வளவுக்கு வங்கிரொத்திலயா இருக்கின்றார் அவர்.....நான் நினைக்க‌வில்லை ....

Share this post


Link to post
Share on other sites

இப்படித்தான் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து ஒரு இளைஞர் அமெரிக்கா வழியாகக் கனடா போக எத்தனித்தவர் அமெரிக்காவில் அவரை இமிக்கிறேசன் பிடிச்சுப்போட்டுது யாராவது பிரக்கிராசியைப் பிடித்து வெளியாலை எடுத்தால் உடனடியாக அவர் கனடாவுக்குள்ள நுளைஞ்சாரெண்டால் அதுக்குப்பிறகு பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் பிடித்து ஓரிரு நாளுக்குள் வெளியாலை எடுக்கவேணும் இங்கிருந்து உருத்திரகுமாரை அவரது நண்பர்கள் அணுகினார்கள் ஆனால் அவர் குறிப்பட்டளவு பணம் அனுப்பினால்தான் நான் கேசை எடுப்பன் எண்டுட்டார்  அங்கை இங்கை என அடிச்சுப்பிடிச்சு காசு பிரட்டி அனுப்பியாச்சு ஆனால் காலதாமதமாச்சு ஆளை ஊருக்கு அனுப்பிட்டாங்கள் உருத்திரகுமார் அனுப்பினகாசைக்கூட அந்தப்பொடியனுக்குத் திருப்பிக்கொடுக்கவில்லை

இந்தப் பொறுக்கி எல்லாம் நாடு கடந்த தமிழீழத்துக்குப் பிரதமராம். ஐரோப்பிய நாடுகளில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் அதிக வாக்குகள்பெற்று வெற்றிபெற்ற பலபேரை அவர்கள் மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளாமல் தங்கட எண்ணத்துக்கு ஆக்களை நியமிச்சிருக்கினம். அதைவிட பின்லாந்து நாட்டில் இவர்கள் யாரையும் தமது பிரதிநிதியாக நியமிக்கவே இல்லை. காரணம் இங்கு ஊர் இரண்டுபடாமல் (இதுவரை) ஒற்றுமையாக இருக்கு

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this