Jump to content

கரித்துண்டால் மதிலில் எழுதுவது.


Recommended Posts

கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. 

உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான்.

பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடக்கூடாது. அது இதன் நோக்கமல்ல. ஒரு படைப்பாளியாக, விமர்சனங்களைச் சந்திக்கும் பக்குவம் உங்களிற்கு இருக்கும் என்ற அபார நம்பிக்கையில் இதை முன் வைக்கிறேன்.

மதிலும் கரிக்கட்டையும்

நாங்கள் அனைவரும் பதின்மத்தில் அல்லது அதிகபட்சம் இருபதுகளின் ஆரம்பத்தில் ‘மதிலும் கரிக்கட்டையும்’ என்றொரு பருவத்தைக் கடந்து வந்திருப்போம். ‘மதிலும் கரிக்கட்டையும்” என்பதனை வெறுமனே சுவற்றில் கரிக்கட்டையால் எழுதுவதாக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, நமது கருத்து வெளிப்பாடுகளின் தன்மையினை அச்சொட்டாகப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு படிமமாகக் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒரு துணுக்கு நமக்குக் கிடைத்தவுடன் அது சார்ந்து எதிர்வினையாற்றுவது. பொழுதுபோக்குப் பெறுமதியில் நமக்குக் கிடைக்கும் ஒற்றைப் பரிமாணத்தைச் சுவற்றில் எழுதுவது (சுவர் இணையமாகக் கூட இருக்கட்டும்). சுடச்சுட எழுதியதைப் பார்த்து மக்கள் ஆற்றும் அனைத்து எதிர்வினைகளையும் எமது புகழாகக் கருதிக்கொள்ளுதல். ஆனால், எப்போதும் நாம் எவரும் நம்மைப் பற்றிச் சுவற்றில் எழுதுவதில்லை. மாற்றமின்றி மற்றையவரின் கதைகளே கிறுக்கப்படும். காரணம், கதை சார்ந்த பொறுப்பினை நாம் சட்டைசெய்வதில்லை. வரவு முழுவதும் எனக்கு இழப்பு முழுவதும் மற்றையவரிற்கு என்பதான மனநிலையில் செயற்பட்டுக்கொண்டிருப்போம்.

எவ்வளவிற்கு எவ்வளவு மேற்படி புகழிற்கு நாம் அடிமைப்படுகின்றோமோ அவ்வளவிற்கவ்வளவு நாம் அதிகம் அதிர்வேற்படுத்தும் கதைகளைத் தேடிச்செல்வோம். இந்த “மதிலும் கரிக்கட்டையும்” மனநிலை அதிகபட்சம் இரண்டாண்டுகள் நீடிக்கும். அனேகமாக ஒரு எதிர்பாராத் தருணத்தில் மற்றையவரிற்குத் தமது துணுக்கு ஏற்படுத்திய பாதிப்பின் கனதி இடியாக உணரப்படுவதில் இந்தக் கட்டத்தை நாங்கள் தாண்டுவது வழமையாக இருக்கும். பொதுவாக மிக இழமையில் நாம் இப்பருவத்தைத் தாண்டி விடுவது வழமையாக இருக்கும். குறிப்பாக எமது பிணைப்புக்கள் அது காதலோ, கலியாணமோ, குழந்தைகளோ, பணியோ, பணமோ என அதிகரிக்கையில் சுவரின் தாக்கம் இயல்பாக நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும். மற்றையவர் வலியினை நம்வலியாக உணர்ந்து கொள்ளல் சாத்தியப்படும். 

அப்படியாயின் மற்றையவர் கதைகளை நாம் பேசவே கூடாதா? ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா? நிச்சயமாக மற்றையவர் கதைபேசுதல் தொன்மை மிகு மானிடத் தன்மை தான். ஆயினும், அனைத்தையும் போல இதன் பாத்திரம் மறக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

ஊர்வம்பினால் என்ன லாபம்?

மனிதனின் தன்மைகளைக் குறிக்கும் படிமங்கள் வேண்டுமாயின் வரையறைக்குட்பட்டதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படிமத்திற்கும் எண்ணற்ற வெளிப்பாடுகள் சாத்தியம். மனிதன் ஒரு சமூக விலங்கு. நன்மையோ தீமையோ பிறருடன் பகிர்வதால் வாழ எத்தனிக்கும் ஒரு விலங்கு. அவ்வகையில் ஊர்வம்புகளின் மிகமுக்கிய பங்கு மனிதனின் தனிமையினைப் போக்குதல். அதாவது, உனக்கு என்னதான் பிரச்சினை உள்ளதாக—அது உடல், உள, உடமை எதுவாக வேண்டினும் இருக்கட்டும்—நீ நினைக்கிறாயோ அது உனக்கு மட்டுமானதல்ல. உன்னை ஒத்த பலர் உலகில் உள்ளார்கள். நீ தனியன் அல்ல. இப்பிரச்சினையில் இருந்து இவ்வாறு அவர்கள் மீண்டுவந்தார்கள் என்பதாக, ஒவ்வொரு தனிமையின் கனம்மிக்க தருணத்திலும் ஒரு கூட்டத்தைக் காட்டுவதில் ஊர்வம்புகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

தன்னைப்போன்ற பிறரை ஒருவர் ஊர்வம்புக் கதைகள் வாயிலாகத் தனது அண்மையில் கண்டுகொள்ளல் சாத்தியம்.
ஆனால் ஊர்வம்பளப்பவரும் வளருதல் அவசியம். கரிக்கட்டையால் மதிலில் எழுதிய மனநிலையில் ஒரு வளர்ந்த எழுத்தாளர் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வம்பைப் பேசத் துணியின், கதைமாந்தர் பக்க நியாயங்களிற்கும் நியாயம் செய்யவேண்டும். ஏனெனில் ஒருவர் கதையினை அவர் இல்லாதபோது பேசுபவர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பொழுதுபோக்கு

கதையின் பொழுதுபோக்கு அம்சத்தைக் கிஞ்சித்தும் கெடுக்காது, அதே நேரம் பொறுப்பாக எழுதல் சாத்தியம். ஆனால் அது உழைப்பினை வேண்டுவது. இதனால் தான் பல சமயங்களில் உண்மை மனிதரின் முகம் அடையாளப்படுத்தப்படமுடியாத வகையில் வம்பில் இருந்து புனைவிற்கு எழுத்தாளர்கள் மாறிக்கொள்கிறார்கள். இல்லை வம்மைப் தான் பேசுவேன் அப்போது தான் எனது கதைக்களம் நான் ரசித்த வகையில் வெளிப்படும் என்று எழுத்தாளர் உணரின், அவசியம் உழைப்புச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தரவுகள் சரிபார்க்கப்படவேண்டும். பார்வைகள் நிறுக்கப்படவேண்டும். பாதிப்புக்கள் எடைபோடப்படவேண்டும். அனைவரிற்கும் குரல் கொடுக்கப்படவேண்டும். இல்லையேல், வழக்குகள் சட்டம் என்பனவற்றிற்கப்பால் மனசாட்சி சாட்டைவீசும். குறைந்தபட்சம் மனசாட்சியின் சாட்டையினை உணரப்பழகல் வேண்டும்.

மேற்படி தளத்தில் நின்று, சற்றும் குறையாத பொழுதுபோக்கினை வளங்குதல் முற்றிலும் சாத்தியம் என்பதற்கப்பால் அறமும் கூட.

புலப்பெயர்வைத் தொடர்ந்த குழந்தைத் தனம்

எமது சமூகத்தில் பல வளர்ந்தவர்கள் பதின்ம வயதின் தன்மையில் தங்கிநிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஏகப்பட்ட உளவியல் காரணங்களைக் காரணம் காட்டமுடியும் என்றபோதும், எனது அபிப்பிராயத்தில் இப்பிரச்சினை சார்ந்த முதற்படி எதிர்வினை காரணத்தைக் காட்டல் என்பதல்ல. மாறாக, இப்படி ஒரு பிரச்சினை சமூகத்தில் இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்வதே.

அண்மையில் எதேச்சையாக யாழ் இந்துவில் கூடப்படித்த ஒருவரை பலகாலம் கடந்து சந்திக்க நேர்ந்தது. எமது வகுப்பினரிற்கு ஒரு whatsapp குழுமம் இருப்பதாகவும் என்னை இணைக்கலாமா என்றும் கேட்டார். இணைந்தபோது மலைப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பில் இருந்த மனநிலை இன்னமும் அபரிமிதமாக குழுமத்தில் வெளிப்படுகிறது. நாற்பது வயது கடந்தும் பெண்களின் படம் பார்ப்பது அங்கு கிழர்ச்சி குடுக்கிறது. புரியவே இல்லை. பெண்களைப் பிடிக்கும் என்றால், பெண்துணை தேடிக்கொள்வது அத்தனை சிரமமா என்ன? எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார்? எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது? சற்று இதுபற்றிச் சிந்திக்கையில் பதின்மத்தின் பல தன்மைகள் பலரில் நமது சமூகத்தில் அப்படியே தங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மதிலில் கரித்துண்டால் எழுதுவது கூட அத்தகைய ஒரு வெளிப்பாடு தான். 

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

இவ்வாறு பலகேள்விகளோடு இருந்த ஒரு பொழுதில் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மேற்படி விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. அதனால் இந்தப் பதிவு.

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

மதிலும் கரிக்கட்டையும் என்றதும் ஞாபகத்துக்கு வந்தது. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லை' என்று ஒரு மதிலில் எழுதப்பட்டிருந்தது.. நான் அவ்விடத்தை கடந்து போகும போது அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இவ் வசனம்  கிறிததுவ மதம் சார் வசனம் என நினைக்கின்றேன். ஆனல் இவ்வசனத்தை  படிக்கும் போது இறந்த எனது அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வதாக தோன்றும்.. . வாழ்வின் நெருக்கடிகள் சார்ந்து  வாழ்வின் எனெர்ஜி லெவல் மிகவும் கீழநிலைக்கு செல்லும் இவ்வாறான உணர்வுத் தொடர்புகள் என்னை தாங்கிப் பிடிக்கும்.  எழுதியவரின் நோக்கம் வேறாக இருக்கலாம் ஆனால் அது சென்றடையும் திசை வேறாக இருக்கும். அதே போல் என்னுமொரு அனுபவம் ஒரு மாணவனுக்கு வாத்தி அடித்த ஆத்திரத்தில் அவரது மகளைப் பற்றி மதிலில் மிக ஆபாசமாக எழுதியது.. அநத சம்பவத்துக்கு பின்னர் அவரது உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றது. ஒருவரில் இருந்து வெளிப்படும் எழுத்துக்கள் அது கரித்துண்டால் ஆரம்பித்தாலும் சரி அவைகளின் விழைவுகள் நீண்ட தொடர்சியை கொண்டிருக்கலாம்...  அளவிட முடியாது.. 

ஊர் வம்பு.. என்பது மிக ஆழமான தலைப்பு.. மிக சிக்கலான நிலைகளை சதீயச் சமூகத்தில் உருவாக்கவல்லது.. ஒரு குடும்பத்தில் இருந்துதான் ஒரு சமூகம் உருவவது போல் இந்த ஊர் வம்பு என்பதும் ஒருவரில் அல்லது ஒரு சம்பவத்தில் ஒருவரின் ஈடுபாட்டில் இருந்து என்னுமொருவரின் விசயத்தில் தலையிடுவதில் ஆரம்பித்து பின்னர் அது விரிவடையும்.  இதில் முக்கியமாக ஆரம்பித்தவர் கட்டுபாட்டை விட்டு ஆரம்பித்த விசயம் வேறு கைகளளுக்கு சென்றுவிடும். வேறுவிதமாகவும சென்றுவிடும். நன்மைகளையும் தீமைகளையும் வீரியத்துடன் உருவாக்கவல்ல சக்தி ஊர்வம்புக்கு உண்டு. 

3 hours ago, Innumoruvan said:

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் பொருந்தாது என்றே எண்ணுகின்றேன். நீங்கள் கேட்ட கேள்விகளை அவரவர் கேட்டுக்கொள்ளும் போது அவரவருக்குள் சில மாற்றங்கள் வரும். 

நல்ல பதிவுக்கு நன்றி.. இப்பதிவு குறித்து சிந்திக்கவே முடிகின்றது தவிர நிறைவாக கருத்து எழுத முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்போது எனது அபிப்பிராயத்தையும் எழுதுகின்றேன்.

மனிதன் பேசக் கற்றுக்கொண்டதே பிறரைப் பற்றி வம்பு கதைக்கமுற்பட்டபோதுதான். அதனால் வம்பளப்பது முக்கியமானது? 

நானும் கூடப்படித்த நண்பர்களின் வாட்ஸப் குழுமங்களில் இருக்கின்றேன். ஒன்று பத்தாம்  வகுப்பு மட்டும் வடமராட்சியில் படித்தவர்களின் குழுமம். அது பத்தாம் வகுப்பிலேயே உறைந்து நிற்பதால் வம்புகள், சில்லறைப் பிரச்சினைகள், கரிக்கட்டியால் சுவரில் எழுதுதல் என்று போகின்றது. 

இன்னொன்று இங்கிலாந்தில் உயர்தரம் படித்தவர்களின் குழுமம். கொஞ்சம் முதிர்ச்சி இருந்தாலும் 18- 19 வயதைத் தாண்டிய கதைகள் இல்லை. ஆனால் வம்புகள் குறைவு.

மற்றையது பல்கலைக்கழகத்தில் படித்த தமிழ் நண்பர்களின் குழுமம். புலம்பெயர்ந்த நாட்டில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், உள்நோக்கம் இல்லாமல் ஒற்றுமையாக பல விடயங்களைச் செய்யக்கூடிய பக்குவமும் உள்ளவர்கள்.

ஒவ்வொன்றில் கதைக்கும்போது அந்தந்த முகமூடியைப் போட்டுக்கொண்டுதான் போகின்றேன். ஆனால் இதுவரை ஒன்றிலிருந்தும் விலகவில்லை.?

இன்னொமொருவன் யாழ் இந்துக் குழுமத்தில் இருக்கின்றீர்களா அல்லது விட்டால் போதும் என்று விலகிவிட்டீர்களா??

Link to comment
Share on other sites

Quote

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

ஆம்

பாடசாலை காலங்களில் கடுகடுப்பு வெயிலில் நின்றாலும்  பேருந்து தரிப்பு மதிலில் எழுதப்பட்ட வாசகங்களில் பல பேருந்தில் வீடு செல்லும் வரை சிரித்த வாசகங்களும் உண்டு. அவை நாகரீகம் கருதி இங்கு எழுத முடியவில்லை. என்றாலும்  அவற்றை எழுதியவரின் மனநிலையை ஓரளவு  உணர முடியும்.
சில வரிகள் மிக சிந்திக்க வைத்தன. அவற்றில் ஒரு சில இன்றும் நினைவில் உண்டு. சில நுண்கணித நிறுவல்களும் அவற்றின் கீழ் தாறுமாறாக தரப்படுத்தலை பற்றிய வசனங்களும் அதனை எழுதியவர் எத்தகைய மனப்பாதிப்பை ஏற்படுத்தி இருந்திருக்கிறது என்பதை முற்று முழுதாக உணர முடிந்தது.

 

Quote

மதுவிற்கு அடிமையாதல்

ஆம்/ இல்லை

மதுவுக்கு அடிமையாவர்கள்  பெரும்பாலும்  மரபியலாக வருகிறது என் கிறது ஆராட் சிகள், அத்தோடு சிலர் ந|ண்பர்களோடு சேர்ந்து குடிக்க  சிறிதளவாக ஆரம்பித்து  குடிக்கும் அளவு நாளடைவில் கூடி மீளமுடியாமல் உள்ளவர்களும் உள்ளனர்.
ஏனையவர்கள் வாழ்வில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல்  தற்காலிகமாகவேனும் பிரச்சனையை தீர்க்கும் என எண்ணி குடிக்க ஆரம்பித்து மீள முடியாமல் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

ஒவ்வொன்றில் கதைக்கும்போது அந்தந்த முகமூடியைப் போட்டுக்கொண்டுதான் போகின்றேன். ஆனால் இதுவரை ஒன்றிலிருந்தும் விலகவில்லை

அப்ப நீங்கள் சுயமாய் இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரியால் எழுதுவது என்பது கிராமியங்களுடன் நின்றுவிடும்.

அந்த கிராமியங்களை  இழிவுபடுத்தும் நகர்ப்புற மை பேனாக்களுக்கு கரியைப்பற்றி என்ன தெரியும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளில் பூங்காக்களில் பெரிய மதிலை கட்டி வைத்துள்ளார்கள் அதில் பெயிண்டினால் எழுவதற்கு அனுமதித்துள்ளார்கள் பலர் வந்து தங்களது கை, மற்றும் மன‌வித்தையை காற்றுவார்கள்....இதற்கும் மதிலும் கரிகட்டைக்கும் தொடர்பு இருக்குமோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, spyder12uk said:

அப்ப நீங்கள் சுயமாய் இல்லை ?

அந்தந்த வயதுக்கேற்ற முகமூடி என்பதால் அவையும் நானே?

Link to comment
Share on other sites

20 hours ago, சண்டமாருதன் said:

மதிலும் கரிக்கட்டையும் என்றதும் ஞாபகத்துக்கு வந்தது. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதும் இல்லை' என்று ஒரு மதிலில் எழுதப்பட்டிருந்தது.. நான் அவ்விடத்தை கடந்து போகும போது அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இவ் வசனம்  கிறிததுவ மதம் சார் வசனம் என நினைக்கின்றேன். ஆனல் இவ்வசனத்தை  படிக்கும் போது இறந்த எனது அம்மா எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வதாக தோன்றும்.. . வாழ்வின் நெருக்கடிகள் சார்ந்து  வாழ்வின் எனெர்ஜி லெவல் மிகவும் கீழநிலைக்கு செல்லும் இவ்வாறான உணர்வுத் தொடர்புகள் என்னை தாங்கிப் பிடிக்கும்.  எழுதியவரின் நோக்கம் வேறாக இருக்கலாம் ஆனால் அது சென்றடையும் திசை வேறாக இருக்கும்....

 

நன்றி அனைவரின் கருத்துகளிற்கும்

நீங்கள் சொல்வது உண்மை தான். சுவர் எழுத்துக்கள் பரபரப்பு, பிரச்சாரம், நகைச்சுவை, வீரம், அரசியல், வன்மம், வம்பு முதலிய அனைத்தையும் அடக்கிக் தான் இருந்தன. சுவரில் இருந்த வேதாகமவரி தாய்மையின் வெற்றிடம் சார்ந்து உங்கள் மீதாற்றிய பங்கினை மிகவும் நுண்ணியதாய் அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அனேகம் வம்புகளையே சுவர் சுமந்து நின்றது. அதை எழுதியவர்கள் கெட்டவர்கள் என்பதல்ல, அதை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பரிமாண மனநிலை அவசியம். அது அனேகமாக வாலிபத்தில் தான் பலரிற்குக் சாத்தியப்படடிருக்கும்.


கிருபன் அந்தக் குழுமத்தை விட்டு நான் விலகவில்லை. ஆனால் எந்தக் குழுமத்திலும் எதையும் எழுதுவதில்லை. வாரத்தில் ஏதாவது ஒரு பொழுதில் துரிதமாக எழுதியவற்றைப் பார்த்துச் செல்வதோடு போகிறது. ஊர்மீழல் போலத்தான் இதுவும். அந்தப் பழைய வகுப்பறையில் அன்றைக்கு இருந்தவர்கள் குழுமத்தில் கூடியிருந்தபோதும், வகுப்பு அன்றுபோல் இல்லை இருக்கவும் முடியாது. ஏனெனில் அன்றைக்கு இருந்த பொதுமை இப்போதில்லை. அது சாத்தியமுமில்லை.

13 hours ago, குமாரசாமி said:

கரியால் எழுதுவது என்பது கிராமியங்களுடன் நின்றுவிடும்.

அந்த கிராமியங்களை  இழிவுபடுத்தும் நகர்ப்புற மை பேனாக்களுக்கு கரியைப்பற்றி என்ன தெரியும்? :cool:


இதில் கரித்துண்டைக் கேவலப்படுத்தவில்லை. நகரத்து மதில்களுக்கும் கிராமத்து மதில்களிற்கும் அதிகம் வித்தியாசமில்லை. பாத்திரங்கள் தான் மாற்றமே அன்றி கதைகள் ஒன்றுதான். அடியேன் சுத்த கிராமத்தானாக்கும் :)

புத்தன் நீங்கள் graffiti ஒப்பிடிவது மிகவும் சுவாரசியமானது. கரிக்கட்டையால் மதிலில் கிறுக்குவதற்கும் கிறாபிடிக்கும் ஒற்றுமைகள் நிறையவும் காத்திரமான வேற்றுமைகளும் உண்டு. 

கிராபிடி ஒரு கலகக்காரனின் இலச்சினையாக இருக்கின்றபோதும் கிறாபிடியில் ஒரு Elitism இருக்கிறது. வித்தகத்தை வெளிக்காட்டுவதில் போட்டியிருக்கிறது. அது எல்லோரிற்கும் உரியதாயில்லை. விதிகளை இந்த வெளிப்பாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அந்தவகையில் அது ஒழுங்குபடுத்தப்பட்ட கலகக்காரனின் முரசாகிவிடுகிறது. செய்திகளையும் உயர்மட்டத்தில் சித்தரிப்பது போட்டியாகிறது. கிறாபிடி வரைபவர்கள் சார்ந்து இரு முடிவுகள் எட்டப்படுகின்றன. ஒன்று, அதை வரைபவர்கள் தங்களை ஆழுமைகளாக, பிரமிப்புக்களாக வளர்த்துக் கொள்வதோடு வளர்ந்தவர்களாகிச் சென்றுவிடுகிறார்கள். மற்றையது, நகரம் அவர்களைக் குத்தகைக் காரர்களாக்கி நாசூக்காகப் பணியில் அமர்த்திவிடுவதால் கட்டிப்போட்டுவிடுகிறது. ஆனால் கிராபிடி வரைபவர்களிற்கும் பரந்தளவில் ஒரு வயதுக்கட்டுப்பாட்டைப் பார்க்கமுடிகிறது. பெரியளவில் இளையோராயிருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). அனேகமான கிராபிடி வரைவோரிற்கு ஒரு சீற்றம் அல்லது குளப்பம் அல்லது தேடல் கூடவே இருக்கிறது. 

கரித்துண்டிற்கும் கிராபிடிக்கும் நிறைய இன்னும் பல கோணத்தில் ஒற்றுமை வேற்றுமை பேசலாம். நன்றி உங்கள் ஒப்பீட்டிற்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 1:42 PM, Innumoruvan said:

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

470_AAFDF-243_F-4_CE8-940_D-_A9_CD1417_E

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.