• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

பச்சைமிளகாய் கறி

Recommended Posts

உத யாரும் செய்து சாப்பிட்டு பார்த்தனீர்களா? 'பின்' விளைவுகள் எப்படி என்று பார்த்து நானும் செய்ய.

On 5/13/2018 at 3:14 AM, கிருபன் said:

 

உண்மையிலேயே வெள்ளையப்பமும் பருத்துறை வடையும்தான் வடமராட்சியின் தனித்துவமான உணவுகள்.

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, நிழலி said:

உத யாரும் செய்து சாப்பிட்டு பார்த்தனீர்களா? 'பின்' விளைவுகள் எப்படி என்று பார்த்து நானும் செய்ய.

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, நிழலி said:

அப்ப கோழி புக்கை? கோழி புக்கையும் வடமராட்சி ஸ்பெசல் என்று கேள்விப் பட்டனான்.

நான் ஊரில் இருக்குமட்டும் மச்ச மாமிசங்கள் சாப்பிடாததால் கோழிப் புக்கை என்பதைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. இலண்டனில் சில பார்ட்டிகளில் சாப்பிட்டுள்ளேன். ஆனால் மிளகும் அரைத்த செத்தல் மிளகாய்ப்பொடியும் தரும் உறைப்பைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஊருக்குப் போனபோது கரவெட்டியில் கோழிப்புக்கை சாப்பிடும் சந்தர்ப்பம்  வாய்த்தது. வெளிநாட்டுக்காரர் என்று உறைப்பைக் குறைத்துவிட்டதால், காரசாரமாகச் சாப்பிடும் எனக்கு அந்தக் கோழிப்புக்கை பெரிதாகப் பிடிக்கவில்லை. நானே ஒருமுறை செய்து பார்த்தால்தான் திருப்தி வரும் என்று நினைக்கின்றேன்😀

 

Share this post


Link to post
Share on other sites

கோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

kadaleri_1.jpg

 

தலைப்பை கோழிப்பொங்கல் என்று இட வேண்டுமா என எண்ணுகின்றேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரைக்கும் தைப்பொங்கலுக்கு காய்ச்சிப் படைப்பது எங்களுக்கு புக்கையாகத்தான் இருந்தது. ஆனால், கொழும்புக்குள் நகர்ந்த போது - வேறொரு மொழியை உள்வாங்கிய போது உச்சரிக்கப்படக்கூடாத ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தெரிந்த முதல் பதம் இந்த புக்கை தான். வேற்று மொழி பழகிய ஆரம்ப காலங்களில், தெரியாத்தனமாக வாய்க்குள் தட்டுத்தடுமாறி வரும் போதெல்லாம் சகோதர மொழி நண்பனுக்குப் புரியாமல் விழுங்குவதில் உள்ள சங்கடம்... அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

”அடேய்... வடமராட்சியில் கோழிப்புக்கை என்று ஒரு சாப்பாடு செய்வாங்களாமே. உனக்குத் தெரியுமா...?” பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன் கேட்ட நண்பனுக்கு என் பதில் இப்படித்தான் இருந்தது. “தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம்.”

கோழிப்புக்கையின் ருசி மட்டுமல்ல... அதன் நிறம் கூட என்னவென்று அறியாத நான் இப்படிச் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. அது... எப்போது இந்தப் பாதை திறந்து, எப்போது இவர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். குறைப்படாதீர்கள்...! அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல... அப்போது எல்லோருக்கும் தானே இருந்தது.

வடமராட்சியின் சில ஊர்கள் எப்போதும் சில உணவுப்பண்டங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை, நாகர்கோவில் நாவற்பழம், வடமராட்சி கிழக்கின் கரைவலை மீன்.... இலண்டன் சந்தைகளிலும் இவற்றுக்கு கிராக்கி அதிகமாம். அங்குள்ள வல்வெட்டித்துறை நண்பன் புளுகியிருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.

நான்கு வருடங்களுக்கு முதல் கேட்டதை ஞாபகம் வைத்திருந்தவன் அன்றைக்கு அழைப்பெடுத்தான்.
“மச்சான் நாங்களும் யாழ்ப்பாணத்தில் தான் நிற்கிறோம். கொழும்பிலேயிருந்தும் கொஞ்சம் இறக்குமதியாகியிருக்கிறாங்கள்... நாளைக்கு வடமராட்சி வாற ஐடியா. மணற்காட்டுக் கடல்... பிறகு உன் வீட்டிலே கோழிப்புக்கை மத்தியானச் சாப்பாடு...”

கிழிஞ்சுது போ... வேறு வழி தெரியவில்லை... தொலைபேசி ஆமென்று பதில் சொல்லி அணைவதைத்தவிர!!! பத்து செக்கன் உரையாடலின் முடிவில் கைத்தொலைபேசி நூறு டிகிறியில் சுட்டது.

அம்மாவைப் பார்த்தேன்... ம்கூம்... என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன்.
 

★ ★ ★
 

வல்லிபுரக்கோவிலின் சுற்றாடலில் கிளைவிட்டு நின்ற பனைமரத்தை தரிசித்த வண்ணம் மணற்காட்டுக் கடலை அடைந்தாயிற்று. 
kadaleri_2.jpg

மணற்காடு என்றதும் எப்போதும் பதினாறு வயது இளங்குருத்தொன்றுதான் என் ஞாபகத்திரைகளில் தோன்றி மறைவான். 1993 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். கப்பல் வடிவிலான ஊர்தியில் பவனி வந்த அவனுக்கு காத்திருந்து பூக்கள் சொரிந்ததும் - அந்தப் பூ வாங்கிப் போட்டவள் இன்னொரு நாள் அதே மாதிரிக்கப்பலில் பவனி வந்ததும் மனது மறக்காத வரலாறுகள்.

வெயில் சுட்டெரித்தது... ஆனாலும், கடல் நீர் இதமாகத் தான் இருந்தது. மூன்று மணித்தியாலங்கள்.... அருமையான பொழுது. கடலுக்குள் நாங்கள் தாண்டு போனாலும் தூக்குவதற்கென்று துணையொன்றைக் கரையில் இருத்தி விட்டு கும்மாளம் நடந்தது. பாவம்.... எங்கள் போட்டோப் பிரியன்.

அந்த மண் மலை, சவுக்கம் தோப்பு, தூர்ந்து போன மணலில் இருந்து வெளிப்படும் தேவாலயம், எங்களுக்காய் உயிர் துறந்த நண்டு, ஒரு துண்டு எச்சமுமின்றி துடைத்து வழித்த இடியப்பமும் சொதியும்.... என்றைக்கும் மறக்காது!!!

kadaleri_3.jpg

இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.

அடுத்ததாய் மதிய உணவு... அது தான் கோழிப்புக்கை. என்ன நடந்ததென்று நான் சொல்வது சுயதம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். ஆனாலும், கூடவே ஒரு மூடை சீனியும் வாங்கி வைத்திருக்கலாம் என நண்பர்கள் உணர்ந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடன் கூட இருந்து உண்டவன் தானே நானும்.

ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்... நல்லது தானே!!! ம்ம்ம்.... யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிற்கின்ற மின்சாரம் போல தண்ணிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. தப்பிக் கொண்டார்கள்.

கடந்தது கடந்து போகட்டும்...!!! எந்தளவுகளில் தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய் இடுவதென இப்போது அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.... இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!

http://srikaran-blog.blogspot.co.uk/2010/05/blog-post_06.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதைப்புளித்தீயல் என்று நம்மபக்கம் சொல்வார்கள். இந்தச் செய்முறையில் நெத்தலி மீனை இணைத்தால் நெத்தலித்தீயல் என்றும் சூடை மீனை போட்டால் சூடைத்தீயல் என்றும் இறாலைப் போட்டால் இறால் தீயல் என்றும் சொல்வோம் காரமும் புளிப்பும் தூக்கலாக இருக்கும். கண்களில் நீர் முட்டும்.

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, Nathamuni said:

மச்சியோ....

அக்கா... இது... தம்பி.... அக்கா... தம்பி... பாசக்கார தம்பி... 🤦‍♀️

 

முனி, எனக்கு யாழில் நெடுக்கர் மட்டும் தான் தம்பி 😶
 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

 

முனி, எனக்கு யாழில் நெடுக்கர் மட்டும் தான் தம்பி 😶
 

எனக்கு யாழில், ரதியக்கா மட்டும் தான் அக்கா ! 

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

எனக்கு யாழில், ரதியக்கா மட்டும் தான் அக்கா ! 

 

இதோடா😪...ஊருக்குப் போய்ட்டு வரும்  போது கோப்பியும்,தூளும் கொண்டு வரச் சொன்னால் கொண்டு வராத தெரியாது🙂...அக்காவாம் அக்கா 😧

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, ரதி said:

இதோடா😪...ஊருக்குப் போய்ட்டு வரும்  போது கோப்பியும்,தூளும் கொண்டு வரச் சொன்னால் கொண்டு வராத தெரியாது🙂...அக்காவாம் அக்கா 😧

இதப்பாருங்கோவன்..

இது உங்களுக்கே நல்லாயிருக்கா

கட்டிக் காவி கொண்டு வந்து, எங்க கொண்டாந்து தாரது எண்டு கேட்க, கிருபனிடம் கொடுத்தால், சரி எண்டு சொல்லி நழுவீற்று... இப்ப கதையை பாருங்கோவன்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

இதப்பாருங்கோவன்..

இது உங்களுக்கே நல்லாயிருக்கா

கட்டிக் காவி கொண்டு வந்து, எங்க கொண்டாந்து தாரது எண்டு கேட்க, கிருபனிடம் கொடுத்தால், சரி எண்டு சொல்லி நழுவீற்று... இப்ப கதையை பாருங்கோவன்.

சரி கிருபனிடடை கொண்டு வந்து கொடுத்தநீங்களே😧 இல்லைத் தானே...என்னை பார்க்கவாவது வந்தனீங்களே.😃..அவ்வளவு பயம் 😰

 

Share this post


Link to post
Share on other sites

அங்கை என்ன சத்தம்? என்ரை பேரும் அடிபடுது!🤔

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, கிருபன் said:

அங்கை என்ன சத்தம்? என்ரை பேரும் அடிபடுது!🤔

 

முனியர் எனக்கு என்று கொண்டு வந்த ஊர்க் கோப்பியையும்,தூளையும் நீங்கள் எடுத்து விட்டிர்களாம்...அவர் சொல்கிறார் 😙
 

Share this post


Link to post
Share on other sites

வருசத்துக்கு பத்தாயிரம் பதினைய்யாயிரம் மிளாகாய்க்கண்டு எண்டு  மினைக்கெட்ட நான் உப்பிடியான மிளகாய்க்கறியை நான் கேள்விப்படவேயில்லை.

நாங்கள் இஞ்சை துருக்கி மிளகாயிலைதான் கறி வைக்கிறனாங்கள்.....அந்த மாதிரியிருக்கும்.. :cool:

 

images?q=tbn:ANd9GcSAHhnOp_cY-Z9qp4D8xSqPhu3S347Oxez5vJkCcVMOySK4sySH9Q

Share this post


Link to post
Share on other sites
On 5/17/2018 at 9:19 PM, ரதி said:

 

முனியர் எனக்கு என்று கொண்டு வந்த ஊர்க் கோப்பியையும்,தூளையும் நீங்கள் எடுத்து விட்டிர்களாம்...அவர் சொல்கிறார் 😙
 

நான் ஊர்க்கோப்பித் தூளில் கோப்பியே குடிப்பதில்லை. எப்பவும் NESCAFÉ GOLD BLEND மட்டும்தான். ப்ராண்ட் முக்கியம் அல்லவா!

Share this post


Link to post
Share on other sites
On 5/17/2018 at 11:09 PM, குமாரசாமி said:

வருசத்துக்கு பத்தாயிரம் பதினைய்யாயிரம் மிளாகாய்க்கண்டு எண்டு  மினைக்கெட்ட நான் உப்பிடியான மிளகாய்க்கறியை நான் கேள்விப்படவேயில்லை.

நாங்கள் இஞ்சை துருக்கி மிளகாயிலைதான் கறி வைக்கிறனாங்கள்.....அந்த மாதிரியிருக்கும்.. :cool:

 

images?q=tbn:ANd9GcSAHhnOp_cY-Z9qp4D8xSqPhu3S347Oxez5vJkCcVMOySK4sySH9Q

நானும் மிளகாய்க்கறியை கேள்விப்படவில்லை. இருந்தாலும் வயிற்றை இடைக்கிடை கிளியர்பண்ண இப்படி மிளகாய்க்கறி செய்து பார்த்தால் என்ன என்று யோசிக்கின்றேன்😬

துருக்கி மிளகாய் இனிப்பா அல்லது உறைப்பா?🤔

Share this post


Link to post
Share on other sites
On 5/19/2018 at 8:59 AM, கிருபன் said:

 

துருக்கி மிளகாய் இனிப்பா அல்லது உறைப்பா?🤔

இரண்டும் இருக்கு.அத மிழகாயின் அந்த நேர மனநிலையைப் பொறுத்தது.😀

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this