Jump to content

நான் ஒரு ஈழ அகதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய்  இறைச்சியை வாங்கி  இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான்.

 Steakக்குக்கு  Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine  தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wine வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான்.

 அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன்

 கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வெட்டிக் கொள் என்று மரப் பலகையில் அல்வா துண்டு போல்  காத்திருக்கும் சிவந்த இறைச்சித் துண்டு. அருகில் ஒலித்துக் கொண்டிருந்தது வானொலி. யன்னலுக்குள்ளால் இளவேனிலும் 28 கிராட்  வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தந்து கொண்டிருந்த சூரியன். ஆகா அருமையான ஞாயிற்றுக்கிழமை (06.05.2018) என்று மனது மகிழ்ச்சியாக இருந்தது.

 “சட்டென்று வீசிய சூறையில் சாய்ந்து கிடக்கும் பழக் குலைகளே...” யசோதா மித்திரதாஸின் சோகமான குரலில் பாடல்  வானொலியில் போய்க் கொண்டிருந்தது. அதுதான் மதிய செய்தி வரப் போகிறது என்பதற்கான மணியோசை.

 “பருத்தித்துறைக் கடல் பிரதேசத்தில் 14 ஈழ அகதிகள் சிறிலங்கா 

கடற்படையினரால் கைதுசெய்தியை அதிவேகத்தோடு ஒரு பெண் வாசித்துக் கொண்டிருந்தாள். முதலில் தமிழ்நாட்டு வானொலியைக் கேட்பதாக  நான் நினைத்துக் கொண்டு இறைச்சியை வெட்ட ஆரம்பமானேன். பிறகுதான் நினைவு வந்தது, அந்த வானொலிகாற்றலையின் காவலன் கானமிசைக்கும் பாவலன்என்று

 அகதி என்ற வார்த்தையே தவிர்க்கப் பட வேண்டியது  என்றுஇடம் பெயர்ந்தவர்கள்’, ‘புலம் பெயர்ந்தவர்கள்என்ற வார்த்தைகளை எப்பொழுதோ நாங்கள் பாவிக்கத் தொடங்கிவிட்டோம். இப்போ இது என்ன புதுசாஈழ அகதிகள்என்ற வார்த்தையைத் தேடிக் கொண்டு வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 நாங்களே எங்களை வானொலியில்ஈழ அகதிகள்என்று சொல்லிக் கொண்டு உலகம் எல்லாம் வாழும் தமிழர்களுக்கு உறவுப் பாலம் அமைப்போமானால் மற்றவர்கள் எவ்வளவு பேசிக் கொள்வார்கள். போதாதற்குஈழ அகதிகள்என்ற வார்த்தையை அந்த செய்தி வாசிக்கும் பெண் அடிக்கடி பாவித்ததால் போதும் இதுக்கு மேலே வேண்டம் என்று வானொலியை நிறுத்தி விட்டேன்

 உள்ளே இருந்த கோபத்தோடு இறைச்சியை வெட்டிவிட்டுப் பார்த்தால் அது minced meatஆக இருந்தது.

 Minced meatக்கு எதற்கு wine sauce?  Wine அப்படியே வைத்தால் அது vinegarஆக மாறிவிடும் என்பதால் முழுப் போத்தலையும் குடித்து முடித்து விட்டேன்

 மனதில்  எரிச்சலை வைத்துக் கொண்டு வைன் குடித்ததால் கோபம் போக மறுத்து இன்னும்ஈழ அகதிஎன்ற வார்த்தை எனக்குள்  ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை அகதிகளாக ஒருபோதும் கருதுவதில்லை. ஆனாலும் செய்திகள் எழுத, வாசிக்க ஈழத்தமிழர் பற்றாக்குறையால் தமிழகத்தைச் சேர்தவர்கள்தான் புலம்பெயர் ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தளவில் “ஈழ அகதிகள்” என்ற சொல்லாடலைத்தானே பாவிக்கமுடியும். இதில் எரிச்சல்பட்டு ஒன்றும் ஆகபோவதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அகதிகள்' என்ற சொல் நம் உள்ளத்திற்கு உகந்ததாய் இல்லை.  அவர்கள் இன்னும் இடம்/ புலம் பெயரவில்லை என்ற நிலையில், 'இடம் பெயரும் முயற்சியில் ஈழத்தமிழர் கைது' என்று வாசிக்கலாம். ஆனால் சில மென்மைகள்(sensitivities) எல்லோருக்கும் எப்போதும் தோன்றாதாகையால், கிருபன் கூறியதைப் போல் சில சமயங்களில் சில விடயங்களை சீரணித்துப் பழகத்தான் வேண்டும். அதே சமயம் இவ்வுணர்வுகளை இதுபோன்ற நமக்கான தளங்களில் இவ்வாறே மென்மையாய் வெளியிடுவதும் காலப்போக்கில் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.