Jump to content

செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா'


Recommended Posts

செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா'

 

செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக 'இன்சைட்' என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

இன்சைட் செயற்கைக் கோள்படத்தின் காப்புரிமைNASA

இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் நிலநடுக்க ஆய்வுக் கருவியைப் பொருத்தி, செவ்வாய் கோளின் நிலநடுக்கங்களை இக்கருவி உணர்ந்து ஆராயும்.

செவ்வாயின் தரையின் உள்ளே இருக்கும் பாறை அடுக்குகளின் தன்மையை இந்த அதிர்வுகள் மூலம் அறியமுடியும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகளை பூமியின் தரவுகளோடு ஒப்பிடுவதன் மூலம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவான விதம் பற்றிய புதிய விளக்கங்களைப் பெற முடியும்.

"செவ்வாயின் நிலநடுக்க அதிர்வுகள் மாறுபட்டப் பாறைகளின் ஊடாகப் பரவும்போது, அந்தப் பாறைகளின் தன்மைகள் தொடர்பான தகவல்களை அதிலிருந்து பெறமுடியும்" என்று விளக்குகிறார் இன்சைட் பயணத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரூஸ் பேனர்ட்.

"சீஸ்மோமீட்டர் பதிவு செய்யும் சீஸ்மோகிராம் என்னும் அதிர்வு வரைபடத்தின் ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுவது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். வெவ்வேறு திசைகளில் நடக்கும் பல பல செவ்வாய் நடுக்கங்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிறகு செவ்வாயின் உள் அமைப்பைப் பற்றிய ஒரு முப்பரிமாண சித்திரத்தை உருவாக்க முடியும்," என்கிறார் அவர்.

செவ்வாயை சுற்றிவந்து ஆராயும் மங்கள்யான் செயற்கைக் கோளை 2013ல் ஏவியது இந்தியா. அது வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப் பாதையில் 2014 செப்டம்பர் 24ம் தேதி நுழைந்தது. தன் முதல் முயற்சியிலேயே செவ்வாயை அடைந்த முதல் நாடு இந்தியா.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வேண்டன்பெர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லாஸ் ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி காலை 04.05 மணிக்கு இன்சைட் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் வானில் அடர்த்தியான பனிப்புகை சூழ்ந்திருந்தது செயற்கைக் கோள் ஏவுவதை பாதிக்கவில்லை.

1970களில் முயற்சி தோல்வி

வைக்கிங் தரையிறங்கிகள் மூலம் 1970களிலேயே சீஸ்மோமீட்டர் கருவிகளை செவ்வாய்க்கு அனுப்பியது நாசா. ஆனால், தரையிறங்கிகளின் உடலிலேயே இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட அந்தக் கருவிகளால் செவ்வாய்த் தரையில் இருந்து அதிர்வுகளை உணர முடியாமல் போனது.

காற்று வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தரையிறங்கி அதிரும் சத்தத்தை மட்டுமே அந்தக் கருவிகளால் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், அதற்கு மாறாக, இன்சைட் செயற்கைக் கோள் நேரடியாக தனது சீஸ்மோமீட்டரை செவ்வாயின் தரையில் பொருத்தவுள்ளது.

மெல்லிய அதிர்வுகள் போதும்

ஓராண்டு காலத்தில் எத்தனை செவ்வாய் நிலநடுக்கங்களை இந்தக் கருவி பதிவு செய்யும் என்பது நிச்சயமற்றது. ஆனால், சில டஜன் அதிர்வுகள் பதிவாகலாம் என்று ஒரு மதிப்பீடு உள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை 3 புள்ளிகளுக்கும் குறைவான வீரியத்தில் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் நடந்தால் நடந்ததுகூடத் தெரியாமல் மக்கள் தூங்கக்கூடிய அளவு மிக மென்மையானவை இவை.

ஆனால், இவ்வளவு மென்மையான நடுக்கங்களேகூட, செவ்வாயின் தரைக்குக் கீழே உள்ள அமைப்பு பற்றிய போதிய தகவல்களை தரக்கூடியவையாக இருக்கும். இதைக் கொண்டு செவ்வாயின் அடியாழங்களைப் பற்றியும், அமைப்பைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஒரு மாதிரியை உருவாக்கமுடியும்.

 
 
DcbbmATVMAMiWAJ?format=jpg&name=small
nasalogo_twitter_normal.jpg
 
 

LIFTOFF! Humanity’s next mission to Mars has left the pad! @NASAInSight heads into space for a ~6 month journey to Mars where it will take the planet’s vital signs and help us understand how rocky planets formed. Watch: https://www.pscp.tv/w/1BdxYRQjdwoKX 

 

இந்தத் திட்டத்தில் செவ்வாய்த் தரையில் வெளிப்படும் கீழ் அலையெண் கொண்ட அதிர்வுகளை கண்டுபிடிக்கும் பிராட்பேண்ட் உணர்விகளை பிரான்ஸ் அளித்துள்ளது. உயர் அலையெண் அதிர்வுகளை உணரும் மைக்ரோ சீஸ்மோ மீட்டர்கள் மூன்றினை பிரிட்டன் தந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் பவுண்டு நாணயத்தின் அளவே உள்ளவை.

ஜெர்மன் தொழில்நுட்பத்தோடு இன்சைட்டில் வடிவமைக்கப்பட்ட சுத்தியல் போன்ற ஒரு கருவி செவ்வாயின் தரையை 5 மீட்டர் அளவுக்குத் தோண்டி ஆழத்துக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் தரையின் உள்ளே உள்ள வெப்பத்தை ஆராய்வதன் மூலம் அதன் மேற்பரப்பில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு அதனிடம் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை அது கணக்கிடும்.

செவ்வாயில் தரையிறங்கும் இன்சைட்படத்தின் காப்புரிமைNASA Image captionசெவ்வாயின் வளிமண்டலத்தை இன்சைட் செயற்கைக் கோள் விநாடிக்கு 6 கி.மீ. வேகத்தில் தொடும்.

எல்லா தரையிரங்கும் விண்வெளித் திட்டங்களைப் போலவே செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைவதும் தரையிறங்குவதும் இன்சைட்டுக்கு சவால் மிகுந்ததாகவே இருக்கும். விநாடிக்கு 6 கி.மீ. வேகத்தில் அது செவ்வாயின் வளிமண்டலத்தைத் தொடும். பிறகு உடனடியாக தனது வேகத்தை படிப்படியாக மட்டுப்படுத்தி தரையிறங்கும் போது அப்படியே நிற்கும் நிலைக்கு அது வந்தாகவேண்டும். சவால் நிறைந்த இந்தப் பணிக்கு 7 நிமிடங்கள் ஆகும். இதனை "ஏழு நிமிட பயங்கரம்" என வருணிக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/science-44014701

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.