Jump to content

நயகரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Niagara-Falls-48-Hours-1163x775.jpg


ஏரிக்கரைப் பூங்காற்றே...
வானம் சிந்தாமல் மழையின் தூறல்கள்
தேகம் நனைந்தாலும் மனதில் சாரல்கள்
புரவியின் வேகமுடன் பரவிடும் நீரருவி
பறந்திடும் பரவசத்தில் விரைந்திடும் நீர்த்திவலை
வியப்பால் விழிவிரிய வனப்பால் மனம் நிறைய
தமிழ்ப்பால் வார்த்தையின்றி தவித்தேன் உனைரசிக்க
பாறை இடுக்ககளில் பனியின் துகள் சிதற
சீறும் அரவமென உன் சீற்றம் எழுந்து நிற்க
பொங்கு தமிழெனவே பொங்கி நீ நிமிர
திங்கள் உன் அழகால் தினமும் நாணி நிற்க
தாயாய் உனைக்கண்டேன் பேயாய் உனைக்கண்டேன்
வெஞ்சினத்தால் துடிதுடிக்கும் வீரப்பெண்ணாய் உனைக்கண்டேன்
காதலருக்கெல்லாம் நீ கண்ணுக்கு விருந்தானாய்
கவிஞருக்கெல்லாம் நீ கவிதைப் பொருளானாய்
கலைஞருக்கெல்லாம் நீ ஓவியக் கலையானாய்
கன்னியருக்கெல்லாம் நீ கனவுக்கு கருவானாய்
ஒரு நிமிடம்கூட நீ உறங்கிநாம் பார்த்ததில்லை
நீ உறங்கிட மறந்ததனால் நாம் ஒளியது இழந்ததில்லை
இவ் இயந்திர உலகத்தை இயக்கிடும் இறைவன் நீ
நிரந்தரமானவள் நீ வரம் தரும் தேவதை நீ
உன் புன்னகை வெண்புகையோ பொன்னகை வானவில்லோ
இந்த விந்தையை விளக்குதற்கு என் சிந்தையில் விளக்கமில்லை
தேவதை உன் எழிலை தேடி என் விழி சுமந்து
பூமழையே உன்னை புதுக்கவிதையில் சுவாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நயமான வரிகள் நிறைந்த கவிதை.......இதயத்தில் இருந்து வந்ததனால் இயல்பாய் இருக்கு.....!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமழையே உன்னை புதுக்கவிதையில் சுவாசித்தேன். நானும்   ரசித்து வாசித்தேன்   tw_blush:

Link to comment
Share on other sites

நயகரா..சிறப்பு. மிகவும் ரசித்தேன்.'

" புன்னகை வெண்புகையோ பொன்னகை வானவில்லோ"...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயகராவை ரசித்த நிலாமதி அருய்மொழி வர்மன் இருவருக்கும் நன்றிகள்  விருப்பப் புள்ளியிட்ட  நவீனனுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.