Jump to content

தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!


Recommended Posts

  • தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!
 
 

தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!!

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழிப்­ப­தற்­காக அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற, அதனை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலை­வர் அனு­ர­கு­மார திஸ­நா­யக பொறுப்­பேற்­றுள்­ளார்.

குறித்த பிரே­ரணை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­ற ப் பட்­ட­தும் தற்­போ­தைய நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கலைத்­து­விட வேண்­டு­மென்ற நிபந்­த­னை­யின் அடிப்­ப­டை­யில் குறித்த பிரே­ர­ணைக்கு கூட்டு எதி­ர­ணித்­த­ரப்பு ஆத­ரவு வழங்­கத் தயா­ரா­யி­ருப்­ப­தாக கூட்டு எதி­ர­ணிப் பிர­மு­க­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பந்­துல குண­வர்த்­தன அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்­கும் அர­ச­மைப்­புத் திருத்­தப் பிரே­ரணை விட­யத்­தில் கூட்டு எதி­ரணி எடுக்­க­வுள்ள நிலைப்­பாட்­டுக்­க­மை­யவே மகிந்த அலை­யின் பய­ண­மார்க்­கம் அமை­யும். நாட்­டின் சாதா­ரண பொது­மக்­கள் மத்­தி­யில் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை இல்­லா­தொ­ழிக்­கும் விட­ யத்­தை­விட வேறு எத்­த­னையோ சமூக பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­கள் முக்­கி­யத்­து­வம் பெற்­றுத் திகழ்­கின்­றன.

இத்­த­கைய நிலை­யில் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழிப்­பது குறித்து ஜே. வி.பி இவ்­வ­ளவு அக்­க­றை­யும், அவ­ச­ர­மும் காட்­டு­வ­தன் நோக்­கம் என்ன? உண்­மை­யில் இது விட­யத்­தில் ஒரு கல்­லெ­றி­யில் இரண்டு குரு­வி­களை வீழ்த்­தும் திட்­டமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கக் கொள்ள முடி­கி­றது.

பதின்­மூன்­றா­வது திருத்­தத்தை
நடை­மு­றைப்­ப­டுத்­தத்­தக்க ஆபத்து

நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பில், அதற்­கான 13வது திருத்த விதி­கள் உள்­ள­டங்­கி­யுள்ள நிலை­யில், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிப்­பது சரி­யா­னது தானா? இந்த நாட்டு மக்­க­ளது நிறை­வேற்று அதி­கா­ரம், முழு நாட்டு மக்­க­ளது வாக்­கு­க­ளால் தெரி­வு­செய்­யப்­பட்ட ஒரு தனி மனி­த­ரது கைவ­சம் இருப்­பது, அர­சி­னது பிள­வு­ப­டாத ஒரே நாடு என்ற தன்­மை­யைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு வாய்ப்­பா­கும்.

அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தத்­தின் மூலம் கூட்­டாட்சி உரு­வா­காத வகை­யில் தடுக்­கும் ஒரு வாய்ப்­புக் கிட்­டி­யமை, 1978ஆம் ஆண்­டின் அர­ச­மைப்­பின் மூல­மாக நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­த­னாலே ஆகும். வடக்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரா­க­வி­ருந்த வர­த­ரா­ஜப்­பெ­ரு­மாள் தமக்­கான அதி­கார வரம்பை மீறிச் செயற்­பட்­ட­போது, வடக்கு கிழக்கு மாகாண சபை­யைக் கலைக்­காது, அதனை ஆளு­ந­ரது நிர்­வா­கத்­தின் கீழ் கொண்டு வர வாய்ப்­புக்­கிட்­டி­யமை, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை அப்­போது நடை­மு­றை­யில் இருந்­த­தி­னா­லேயே ஆகும்.

1987ஆம் ஆண்­டில், இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­தின் மூலம் அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தம் இணைக்­கப்­பட்ட வேளை வரை, இந்த நாட்டு மக்­க­ளது வாக்­கி­னால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ருக்கு நிறை­வேற்று அதி­கா­ரம் இருந்­தி­ருக்­கா­விட்­டால், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் எவ­ருக்­கும் அர­ச­மைப்­பின் 13வது திருத்­தத்­தின் மூலம் அர­சி­னது பிள­வு­ப­டாத ஒரே நாடு என்ற தன்­மைக்­குப் பாதிப்­பே­தும் ஏற்­ப­டாது எனக் கூற வாய்ப்­புக் கிட்­டி­யி­ருந்­தி­ருக்­க­மாட்­டாது.

நிறை­வேற்று அரச அதி­பர்  நடை­மு­றையை ஒழிக்­கத்
திட்­ட­மி­டப்­ப­டுகிறது

இன்று நாட்டு மக்­க­ளது தம்­மைத் தாமே ஆளும் அதி­கா­ரத்­தின் மூலம் உரு­வான நிறை­வேற்று அதி­கா­ரம், ஒரு தனி­ம­னி­த­ரது கைவ­சம் இருக்­கும் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.
ஆனால் 1987ஆம் ஆண்­டில் அர­ச­மைப்­பில் உள்­ள­டக்­கப்­பட்ட 13வது திருத்­தம் அதே விதத்­திலோ அல்­லது அதை­வி­டப் பலம் வாய்ந்­த­தா­கவோ இருந்து வரு­கி­றது. அர­ச­மைப்­புக்­கான 13வது திருத்­தம் நடை­மு­றை­யில் உள்ள நிலை­யில், பிள­வு­ப­டாத ஒற்­றை­யாட்சி நடை­மு­றையே நாட்­டில் செயற்­ப­டு­வ­தா­கக் கூறக் கார­ண­மான நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழித்­தால், 13வது திருத்­தத்­தின் படி­யான தலைமை அமைச்­சரே அர­சுக்­குத் தலைமை தாங்­கும் நடை­மு­றை­யின் கீழ் பிள­வு­ப­டாத நாட்­டின் ஒற்­றை­யாட்­சித் தன்மை பாது­காக்­கப்­ப­டுமா? நிறை­வேற்று அரச அதி­பர் நடை­முறை இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டும் நிலை­யில் நடை­மு­றை­யில் இருக்­கும் 13ஆவது திருத்­த­மும், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை கடைக்­கொள்­ளப்­ப­டும் நிலை­யில், செயற்­ப­டும் திருத்­த­மும் 13வது திருத்­தம் தானா?.

அர­ச­மைப்­புக்­குக் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்ட 19வது திருத்­தத்­தால் நாடு அரா­ஜக நிலைக்கு உட்­பட்­டுள்­ளது என்­பது அதனை நிறை­வேற்ற முன்­னின்ற தரப்­பி­னர்­க­ளுக்­குத் தற்­போது தௌிவா­கப் புரிந்­துள்­ளது. அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் ஆகி­யோர் மத்­தி­யில் நில­வும் பனிப்­போ­ரைத் தவிர நல்­லாட்சி என்­ப­தன் கீழ் இந்த நாட்டு மக்­க­ளால் வேறெந்­தப் பலா­ப­ல­னை­யும் ஈட்ட முடி­ய­வில்லை.

அர­ச­மைப்­புக்­கான 19வது திருத்­தத்­தால் சிக்­க­லைச் சந்­தித்­துள்ள இந்த நாட்­டில், 20வது திருத்­தத்­தின் மூலம் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றை­யை­யும் நீக்­கி­விட்­டால் நாட்­டின் கதி என்­ன­வா­கும் என எண்­ணத் தோன்­று­கி­றது.

தாம­ரை ­மொட்­டுத் தரப்­பி­னர்  நிறை­வேற்று அதி­கா­ரத்தை
ஒழிக்க ஆத­ர­வ­ளிப்­பார்­களா?

இத்­த­கைய அம்­சங்­களை ஆராய்ந்து பார்க்­காது, தாமரை மொட்­டுத் தரப்­பி­ன­ரால், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்க ஆத­ர­வ­ளிக்க இய­லுமா? அவ்­வி­தம் அத­ரவு வழங்­கு­வது சர।­­யா­னது தானா?

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை செயற்­ப­டும்­போது நாட்டு மக்­க­ளது அபி­மா­னம் பெற்ற பிர­மு­க­ரொ­ரு­வரே அரச தலை­வ­ராகச் செயற்­பட வாய்ப்பு அமை­ கி­றது. அந்த அடிப்­ப­டை­யில் நோக்­கி­னால், அத்­த­கைய தகு­தியை இன்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முற்­று­மு­ழு­தாக இழந்து போயுள்­ளார்.

ஐ. தே. கட்­சி­யில் புன­ர­மைப்­பைக்­கோ­ரும் ஐ. தே. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு, அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லுக்கு முன்­னர் ஐ.தே.கட்­சிக்­குப் பொருத்­த­மான தலை­வ­ரொ­ரு­வர்­நி­ய­மிக்­கப்­ப­டு­வார்­என ரணில் தெரி­வித்து வரு­கி­றார்.

அதற்கு முன்­னர் அரச தலை­வர் நடை­முறை ஒழிக்­கப்­ப­டு­மா­னால், ரணி­லுக்­குத் தமது அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்­டிய தேவை எது­வும் எழாது .அதற்­குப் பின்­னர் பொதுத் தேர்­த­லில் பெரும்­பான்­மையை ஈட்­டித் தலைமை அமைச்­சர் பத­வியை ரணில் கைப்­பற்ற எண்­ணு­கி­றார். தமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் வெற்றி பெற்­றமை போன்று, தலைமை அமைச்­சர் பத­வியை மீண்­டும் கைப்­பற்­று­வது சிர­ம­மா­ன­தொன்­றல்ல என ரணில் எண்­ணு­வது நியா­ய மானதே.

நிறை­வேற்று நடை­முறை ஒழிக்­கப்­பட்­டால்
தலை­மை­ அ­மைச்­ச­ரா­கும் வாய்ப்பு மகிந்­த­வுக்­குக் ­கிட்­டக்கூடும்

அதே­ச­ம­யம், தாம­ரை­மொட்­டுத் தரப்பை நோக்­கும் போது, மகிந்­த­வால் மீ்ண்டும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட அர­ச­மைப்பு ரீதி­யில் வாய்ப்­புக் கிடை­யாது. ஆத­லால், அரச தலை­வர் ந­டை­முறையை ஒழி்த்­து­விட்டு, தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான நிர்­வா­க­முறை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மா­னால், மகிந்­த­வுக்கு தலைமை அமைச்­ச­ராக அர­சுக்­குத் தலைமை தாங்க வாய்ப்­புப் கிட்­டக்­கூ­டும்.

அவ்­வி­தம் மட்­டும் எண்ணி மகிந்த நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­து­விட உடன்­ப­டு­வார் என, தற்­போது திருத்­தப் பிரே­ர­ணை­யைக் கொண்­டு­வர முய­லும் தரப்­பி­னர் எண்­ணக்­கூ­டும்.
இவை யாவற்­றை­யும் விட, குறித்த திருத்­தத்­தின்­மூ­லம் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் அர­சி­யல் பாதையே தடுக்­கப்­பட வாய்ப்பு அதி­கம்.

அரச தலை­வர் பத­விக்­கான தேர்­தல் நடத்­தப்­ப­டாது போகு­மா­னால், தாம­ரை­மொட்­டுத் தரப்­புக்கு மகிந்த என்ற பாத்­தி­ரத்­துக்­குப் பதி­லாக கோத்­த­பாய ராஜ­பக்ச என்ற பாத்­தி­ரத்­தின் தேவை ஏற்­ப­டாது. அத்­த­கைய நிலை­யில் மகிந்­த­வுக்­குப் பதி­லாக, அல்­லது மகிந்­த­வுக்­குப் பின்­ன­ரா­வது தலைமை அமைச்­சர் பத­வியை வகிக்க தாம­ரை­மொட்டு தரப்­பால் மற்­றொ­ரு­ ரா­ஜ­பக்­ச­வுக்கு வாய்ப்­புப் கிட்­டும்.

எனவே அத்­த­கைய மற்­றொரு ராஜ­பக்­ச­வும், ஜே.வி.பி.தரப்­பால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள அரச தலை­வர் நடை­மு­றையை இல்­லா­தொ­ழிக்­கும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்­கும் நிலைக்கு கூட்டு எதி­ரணி தள்­ளப்­பட்­டுச் செல்ல அதிக வாய்ப்­புண்டு.

தாம­ரை­மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளா­க­வுள்ள சில­பி­ர­மு­கர்­கள், வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் வெளிப்­ப­டுத்­தி­வ­ரும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து மேற்­கு­றிப்­பிட்ட விட­யம் உறு­தி­யா­கி­றது.

தாமரை மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளது
பல்­வேறு ஆலோ­ச­னைகள்

தாமரை மொட்­டுத் தரப்­பின் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளில் ஒரு­வ­ரான சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­ய­ரொ­ரு­வர், ‘‘தாமரை மொட்­டுத் தரப்­பின் சார்­பில் 2020 ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட மிகப் பொருத்­த­மா­ன­வர் கோத்­த­பா­யவா அல்­லது பஸிலா என்­ப­தல்ல பிரச்­சினை. உண்­மை­யில் அதற்­குப் பொருத்­த­மா­ன­வர் மகிந்­த­வே­யா­யி­னும், துர­திஷ்­ட­வ­ச­மாக அவ­ரால் போட்­டி­யிட இய­லாது. 2020ஆம் ஆண்­டில் அரச தலை­வர் தேர்­தல் இடம்­பெ­றுமா என்­ப­து­கூட நிச்­ச­ய­மில்லை. ஆனா­லும் அவ்­வி­தம் இடம்­பெ­று­மா­னால், எனது தெரிவு பஸில்­ரா­ஜ­பக்­சவே’’ என்று தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வால் பிரச்­சினை வரு­மா­னால், அத­னைத் தீர்த்­துக்­கொள்ள மாற்­று­வழி, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழி்க்­கும் பிரே­ர­ணைக்­கு­ ஆ­த­ர­வ­ளிப்­பதே என்­பது அவ­ரது நிலைப்­பா­டா­கும்.

அதே­வேளை கோத்­த­பாய ராஜ­பக்­ச­வையை அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் கூட்டு எதி­ரணி வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்ள ஒரு தரப்­பி­னர், அர­சி­யல்­வா­தி­கள் தரப்­பில் என்று மட்­டு­மல்­லாது, சிங்­கள இன­வாத புத்­தி­ஜீ­வி­கள் எனத் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­வ­ரும் தரப்­பி­ன­ரி­லும் இருக்­கவே செய்­கி்ன்­ற­னர்.

அதே­வேளை, தாமரை மொட்­டுத் தரப்­பின் எதிர்­கால அரச தலை­வர் வேட்­பா­ளரோ, அல்­லது தலைமை அமைச்­சர் வேட்­பா­ளரோ, சிறு­பான்மை இனத்­த­வர்­ளது ஆத­ர­வைப்­பெ­றும் விதத்­தில் தெரிவு செய்­யப்­பட வேண்­டும் எனவும், தற்­போ­தைய அரச தலை­வர் வச­முள்ள 13வீத நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ரவை தாமரை மொட்­டுத் தரப்­புக்­குப் பெற இய­லாது போகு­மா­னால், மேற்­கு­றித்த யோசனை பரி­சீ­லிப்­ப­ட­லாம் என­வும் கருத்து முன்­வைக்கப் பட்டு வரு­கி­றது.

கடை­சி­யில் என்­ன­தான் ஆகப் போகி­றது? தனிப்­பட்ட பிர­மு­கர்­க­ளது அதி­கார விருப்பை நிறை­வேற்றி வைக்க முயன்று, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை ஒழிக்­கப்­பட்டு, இந்த நாட்­டில் அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்தை முற்­று­மு­ழு­தாக வலு­வு­டன் செயற்­ப­டுத்­து­வ­தாக ஆகப் போகி­றது. முற்­று­மு­ழு­தாக பிள­வு­ப­டாத நாடு என்ற ஒற்­றை­யாட்சி நிலைப்­பாட்­டில் தொங்­கிக்­கொண்­டிக்­கும் நிலை­யும், முற்­று­மு­ழு­தாக அற்­றுப்­போய்­வி­டப் போகி­றது.

மிகப்­பெ­ரும் அர­ச­மைப்­புத் திருத்­தம் இல்­லாது, சம்­பந்­தன் தரப்­பின் எதிர்­பார்ப்­புக்­கள் நிறை­வே­றும் நிலை ஏற்­ப­டப்­போ­கி­றது. இத­னைக் கார­ண­மாக வைத்து மகிந்த தரப்­பின் ஒற்­றுமை குலைந்­து­ போக வாய்ப்பு ஏற்­ப­ட­வுள்­ளது. ஒரே கல்­லெ­றி­யில் நான்கோ அல்­லது ஐந்தோ குரு­வி­களை வீழ்த்­தி­வி­டும் நிலை உரு­வா­கப் போகி­றது.

இந்­தி­யா­வில் முத­லா­வது தலைமை அமைச்­சர் ஜவ­கர்­லால் நேரு­வுக்கு ஆங்­கில விவே­க­மும் இந்­திய உள்­ள­மும் இருப்­ப­தாக மகாத்­மா­காந்தி ஒரு சந்­தர்ப்­பத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார். எமது நாட்­டின் அர­சி­யல் போகும் போக்கை அவ­தா­னிக்­கை­யில், எமது நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­க­ளில் பல­ருக்­கும்­கூட ஆங்­கில விவே­க­மும் இந்­திய உள்­ள­மும் இருப்­ப­தா­கத் தோன்­று­கி­றது. பிரச்­சி­னை­யின் ஆரம்­பமே அங்­கு­தான் உள்­ளது.

http://newuthayan.com/story/87181.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.