Jump to content

பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்.


Recommended Posts

பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்.

ms-rajewary.jpg?resize=260%2C194

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் தனது 87வது வயதில் இன்று காலமானார். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல் ஆகும்

 

கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்தார்.

ms-rajewary-1.jpg?resize=246%2C205

குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ‘துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

ms-rajewary-2.jpg?resize=318%2C159

புகழ்பெற்ற பாடல்கள் சில…

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா(டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே( களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா( மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் பிரபலமானவை, இன்றும் ரசிக்கப்படுபவை.

இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி எஸ்பிபியுடன் பாடிய அனைத்து கால இனிமைப் பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே பாடலை மறக்க முடியுமா? ராஜாவின் வயலின் இழைமங்களுடன் ஒன்றிணைந்த எம்.எஸ்-இன் குரல் இழைமங்களைத்தான் மறக்க முடியுமா?

ms-rajewary-3.jpg?resize=218%2C150

வாழ்க்கைக்குறிப்பு

சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

ஏவிஎம் காரைக்குடியில் இருந்து சென்னை இடம் மாறிய போது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

நன்றி இந்து தமிழ்

http://globaltamilnews.net/2018/76450/

Link to comment
Share on other sites

"அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே..." பாடிய பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

எம்.எஸ்.ராஜேஸ்வரிபடத்தின் காப்புரிமைMS RAJESWASI/FACEBOOK

குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடலைகளை இவர் பாடியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை காலை முதுமை காரணமாக இவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.வி.எம் நிறுவனத்தின் ஸ்டூடியோ பாடகியாக வெகுகாலம் இருந்துள்ள இவர், நடிகர் கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே..' பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவரே.

1950-களில் வெளியான திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி பிரபலமாக தொடங்கிய எம்.எஸ் ராஜேஸ்வரி, 90-களில் வெளியான படங்கள் வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிக அளவிலான பாடல்களை பாடினார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரிபடத்தின் காப்புரிமைMS RAJESWASI/FACEBOOK

துவக்கத்தில் இசையமைப்பாளர் ஆர்.சுதர்ஷனம் இசையமைப்பில் அதிகமாக பாடிய இவர், பின்னாளில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார். தவிர ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா உள்ளிட்டவர்களது இசையமைப்பிலும் குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியுள்ளார்.

1960-கள் தொடங்கி 1990-கல் வரை வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெற்ற மழலைக்குரல் கொண்ட பாடல்களை இவர் பாடியதால், குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகியாக இவர் அறியப்பட்டார்.

நடிகை பேபி ஷாமிலி நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் இடம்பெற்ற குழந்தை பாடல்கள் அனைத்தையும் இவரே பாடியிருந்தார்.

https://www.bbc.com/tamil/india-43896004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடகி.....ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

கமலஹாசன் ற்விற்றரில் இவ்வாறு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

“களத்தூர் கமலை  மக்களுக்குக்கொண்டு  சேர்த்தது  அம்மாவும்  நீயே என்ற பாடலும்   தான்.அதைப்பாடிய  அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி  நம்மை  விட்டு அகன்றார்.அவர் ரசிகர்களுக்கும்   குடும்பத்தாருக்கும்  என் ஆழ்ந்த  அனுதாபங்கள்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜியின் முதல் படம் பராசக்தியிலும் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் “புதுப் பெண்ணைத் தொட்டு விட்டுப் போறவரே உங்க எண்ணத்தை சொலிலிவிட்டுப் போங்க” என்ற அருமையான பாடல்இருக்கிறது. இன்னுமொன்று  படிக்காதத மேதையில், “படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு “ பாடலும் பல காலம் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் சிட்டுக்குருவி சேதி தெரியுமா பாடல்தான் அவரை பிரபலமாக்கியது.

அவரது மழலைக் குரலில் அவர் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்

Link to comment
Share on other sites

`திரையுலகிலிருந்து யாருமே வரலியே!’ - கலங்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி மகன்

 
 

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்குத் திரைத்துறையிலிருந்து அஞ்சலி செலுத்த யாருமே வரவில்லை என அவரது மகன் கலங்கினார். 

எம்.எஸ்.ராஜேஸ்வரி

 

`பொன்னான வாழ்வே' `கோழி ஒரு கூட்டிலே' `சின்ன பாப்பா' `பூப்பூவா பறந்து போவும்' என்று மழலைக் குரலால் மனதை மயக்கிய பழம்பெரும்  பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவு குறித்து மகன் ராஜ் வெங்கடேஷிடம் பேசினோம். ``கடந்த ஆறுமாத காலமாக வயிற்றில் குடம் மற்றும் லிவர் பிரச்னையால் அம்மா அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் ஒன்றரை மணிக்கு அம்மாவின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. எங்க குடும்பம், உறவினர்களை விட தமிழ் சினிமா உலகின் மேல் அதீதமான அன்புகொண்டு நேசித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர், டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறார். இன்று மாலை அடக்கம் செய்யும் இடம் குரோம்பேட்டை என்று அறிவித்திருந்த நிலையிலும், இதுவரை சினிமா உலகிலிருந்து யாருமே என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்காதது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் அம்மா மிகவும் நேசித்த சினிமாவிலிருந்து யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் என் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பதை மறந்து விடாதீர்கள்'' என்று கலங்கினார்

https://www.vikatan.com/news/tamilnadu/123375-singer-ms-rajeswaris-cremation-held-today.html

Link to comment
Share on other sites

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

பதிவு: ஏப்ரல் 25, 2018 19:48

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்
 
சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாடிய காந்தி மகான் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ’ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. இதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
 
பின்னர் சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே (செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் இவரால் பிரபலமானது. 
 
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

இவர் பாடிய மிக அருமையான பாடல்களில் பிடித்த ஒன்று நினைவிலிருந்து..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான குரல், இவர் பாடிய சகல பாடல்களும் மிகவும் பிரபலமானவை. ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்த இவருக்கு  அஞ்சலி  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.