Jump to content

டொனால்ட் ட்ரம்பின் தடு­மாற்­றங்கள்


Recommended Posts

டொனால்ட் ட்ரம்பின் தடு­மாற்­றங்கள்

 

மிகப்­பெ­ரிய மெகா வர்த்­தக பிர­மு­க­ரான டொனால்ட் ட்ரம்ப் குடி­ய­ர­சுக்­கட்சி அபேட்­ச­க­ராக 2016 இல் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தலில் வெற்­றி­யீட்­டினார். தை 20ம் திகதி 2017ம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்றார். பத­வி­யேற்ற பின்னர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி என்ற முறையில் அவரின் பேச்­சுக்கள், செவ்­விகள், டுவிட்டர் செய்­திகள் அவரை வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­களின் பாரம்­ப­ரி­யத்தை விட்டு வில­கி­ய­வ­ராக காட்­டின. சில சம­யங்­களில் அவரின் பேச்­சுகள் ஏனைய அமைச்­சர்­களின் பேச்­சு­கட்கு முற்­றிலும் மாறாக இருந்­தன. ஜனா­தி­பதி ட்ரம்ப் கடந்த ஒரு வரு­டத்தை பூர்த்­தி­செய்­துள்ள காலப்­ப­கு­தியில் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட வெளிநாட்டுக் கொள்கை மாற்­றங்கள் இக்­கட்­டு­ரையில் விவா­திக்­கப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­பதி ட்ரம்ப் சென்ற வாரங்­களில் இச்­சர்ச்­சைக்­கு­ரிய வர்த்­தகத் தீர்­மா­னங்­களை குறிப்­பாக அமெ­ரிக்க, - சீன வர்த்­த­கத்தில் புதிய அணு­கு­மு­றையை புகுத்­தி­யுள்ளார். சீனா­வி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யாகும் ஏரா­ள­மான பண்­டங்­கள மீது வரி விதித்­துள்ளார். அலு­மினியம், உருக்கு உட்­பட பல இறக்­கு­மதிப் பண்­டங்கள் மீது ட்ரம்ப் வரி விதித்­ததால் சீனாவும் பதி­லடி கொடுக்கும் வித­மாக அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யாகும் பல பண்­டங்கள் மீது வரி விதித்­துள்­ளது. வைன், சோயா அவரை உட்­பட பல பண்­டங்கள் மீது சீனா வரி விதித்­துள்­ளது. இந்த வர்த்­தகப் போட்­டியை வர்த்­தக யுத்­த­மாக CNN(சீ.என்.என்) தொலைக்­காட்சி விப­ரித்­துள்­ளது. அமெ­ரிக்க, - சீன இரு­த­ரப்பு வர்த்­த­கத்தில் அமெ­ரிக்­கா­விற்குப் பாத­க­மான வர்த்­தக மீதி 300 பில்­லியன் டொலரைத் தாண்­டி­யுள்­ளது என்­பது அமெ­ரிக்­காவின் தாழ்­வு­ நி­லையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. மேலும் 2016 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஹில்­லரி கிளின்டனிடம் தோற்ற மாநி­லங்கள் சோயா அவ­ரையை உற்­பத்தி செய்யும் மாநி­லங்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சீனாவில் சோயா அவரை மீதான வரி, அமெ­ரிக்க சோயா அவரை விவ­சா­யி­களைக் கடு­மை­யாகப் பாதிக்­கக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி ட்ரம்ப் உள்ளூரில் அர­சியல் பிரச்­சி­னை­களை முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஏனைய நாடு­களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த உலக ஏக வல்­ல­ரசு அமெ­ரிக்கா இன்­றைய நிலையில் சீனாவின் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணி­ய­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஓடமும் ஒரு நாள் வண்­டியில் ஏறும், வண்­டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற தமிழ் பழ­மொழி அமெ­ரிக்க, - சீன இரு­த­ரப்பு வர்த்­த­கத்­திற்கு மிகவும் பொருத்­தப்­பா­டா­க­வுள்­ளது. சீனா­வுடன் வர்த்­தக போட்­டியின் கார­ண­மாக பல பண்­டங்கள் மீது அமெரிக்கா வரி­வி­தித்த சூடு இன்னும் தணி­ய­வில்லை . சீன ஜனாதிபதி தம்­நெ­ருங்­கிய நண்பர் என்றும் சீன அமெரிக்க வர்த்­தக முரண்­பா­டு­களை பேசி தீர்க்­கலாம் என்றும் கூறு­கின்றார்.

உள்­நாட்­டிலும் பல நிர்­வா­கத் தீர்­மா­னங்கள் அமெ­ரிக்க ஜனாதிபதியை சங்­க­டத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. அமெ­ரிக்க சட்­டமா அதிபர், பிரதிச் சட்­டமா அதிபர் ஆகி­யோ­ரையும் பத­விகளிலி­ருந்து அகற்றி புதி­ய­வர்­களை நிய­மிக்­க­வுள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ரஷ்யா விவ­கா­ரத்தில் எழுந்த சர்ச்­சை­யினால் நடை­பெறும் விசா­ர­ணை­களில் சட்­டமா அதிபர் இவ்­வி­ட­யத்­தைக் கையாள்­வதில் ட்ரம்பும் அவ­ரது ஆலோ­ச­கர்­களும் திருப்­தி­ய­டை­ய­வில்லை.

அண்­மையில் ரஷ்யாவில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் புட்டின் மீண்டும் நான்­கா­வது தட­வை­யாக ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். ஒரு நாட்டின் பொதுத்­தேர்தல் அல்­லது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்றால் உலக நாட்டின் தலை­வர்கள் வெற்றி பெற்­ற­வர்­களுக்கு பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்­பு­வதும் அந்­தந்த தலை­வர்­களின் ஆட்சிக் காலத்தில் தத்தம் நாடு­க­ளுடன் இரு­த­ரப்பு உற­வுகள் மேம்­ப­ட­வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்­தி­களில் கூறப்­ப­டு­வது மிகவும் சாதா­ர­ண­மாக நடை­பெறும் சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர நடை­மு­றைகளாகும். அமெ­ரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய தலைவர் புட்­டி­னுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்­பி­யுள்ளார். அமெ­ரிக்கா உயர் நிர்­வாக மட்­டத்தில் ட்ரம்ப் அனுப்­பிய வாழ்த்துச் செய்தி சர்ச்­சை­களை தோற்­று­வித்­துள்­ளது பொது­வாக ஜனா­தி­பதி செய­லகம், அந்­தந்த வெளிநாட்டு அமைச்சு அதி­கா­ரிகள் வாழ்த்­துச்­செய்தி வரை­யினை தயா­ரித்து ஜனா­தி­ப­தியின் உயர் ஆலோ­ச­கர்­கட்கு சமர்ப்­பிப்­பது வழ­மை­யான காரி­ய­மாகும். அந்த வகையில் ட்ரம்ப் புட்­டி­னுக்கு வாழ்த்­துச்­செய்தி அனுப்­பக்­கூ­டாது என ஆலோ­சனை வழங்­கி­னார்கள். தினந்­தோறும் நடை­பெறும் ஆலோ­சனைக் கூட்­டங்­க­ளிலும் தெரி­வித்­துள்­ளார்கள். ஜனா­தி­பதி ட்ரம் இவ்­வா­லோ­ச­னை­களை புறம்தள்ளி வாழ்த்துச் செய்தி அனுப்­பி­யுள்ளார். ஜனா­தி­பதி ட்ரம்ப் இவ்­வா­றாக தமது வெளிநாட்­ட­மைச்சர், பாது­காப்பு அமைச்சர், பாது­காப்பு ஆலோ­ச­கர்கள், புல­னாய்வு துறை­யி­னரின் ஆலோ­ச­னை­களை பத­வி­யேற்ற காலத்­தி­லி­ருந்து நிரா­க­ரித்த சம்­ப­வங்கள் பல உண்டு. வாழ்த்­துச்­செய்தி அனுப்­ப­வேண்டாம் என்ற ஆலோ­ச­னையை முன்­வைத்­த­வர்கள் சில கார­ணங்­களை குறிப்­பிட்­டனர். இறு­தி­யாக நடை­பெற்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய அர­சாங்க உயர்­மட்டத் தலை­மையின் ஆசிர்­வா­தத்­துடன் ரஷ்ய உள­வா­ளிகள் தேர்­தலில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தார்கள் எனவும் அவ்­வி­டயம் தொடர்­பாக அமெ­ரிக்க செனட் விசா­ர­ணை­யொன்று இடம் பெறு­வ­தா­கவும் அத்­துடன் அண்­மையில் ரஷ்ய உள­வாளி ஒரு­வ­ரையும் அவரின் மக­ளையும் ரஷ்ய உள­வா­ளி­களால் இர­சா­யன நச்­சு­ம­ருந்து மூலம் கொலை செய்ய முயற்­சித்­தார்கள் என்றும் இக்­கா­ர­ணங்­களால் அமெ­ரிக்க ஜனாதிபதி வாழ்த்­துச்­செய்தி அனுப்பக் கூடா­தென்றும் ஆலோ­சனை வழங்­கினர். மேலும் பிரித்­தா­னிய அர­சாங்கம் லண்­ட­னி­லுள்ள ரஷ்ய தூதாக 23 இரா­ஜ­தந்­தி­ரி­களை விரும்­பத்­த­கா­த­வர்கள் எனக்­கூறி பிரித்­தா­னி­யாவை விட்டு வெளியே­று­வ­தற்கு காலக்­கேடும் விதித்­துள்­ளது. ரஷ்ய உள­வாளி இர­சா­யன மருந்­தூட்டி படு­கொலை முயற்சி நடந்­துள்­ள­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா இங்­கி­லாந்தைப் பின்­பற்றி பல ரஷ்ய இரா­ஜ­தந்­தி­ரி­களை வெளியேறும் படி கேட்­டுள்­ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்­டினும் பதி­லடி கொடுக்கும் வித­மாக பல அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரி­களை வெளியே­றும்­படி கேட்­டுள்ளார். தனிப்­பட்ட முறையில் புட்­டி­னுடன் சினே­கி­த­பூர்­வ­மான உற­வினைப் பேணி­வரும் ட்ரம்ப் இர­சா­யன நஞ்­சூட்­டப்­பட்­ட­தாகச் சொல்­லப்­படும் விவ­கா­ரத்­திலும் உறு­தி­யான போக்­கினை கடைப்­பி­டிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ட்ரம்பின் சர்ச்­சை­களில் பிர­தா­ன­மா­னது அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ரஷ்ய

அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் சில ரஷ்ய பிர­ஜைகள் அமெ­ரிக்க ரைபிள் சங்­கத்­துக்கு பெரு­நிதி வழங்­கி­யுள்­ளனர் என்ற குற்றச் சாட்­டாகும். அமெ­ரிக்க ரைபிள் சங்கம் குடி­ய­ரசுக் கட்­சி­யி­ன­ருடன் நெருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்­கி­றது. ட்ரம்ப் குடி­ய­ரசுக் கட்சி அபேட்­ச­க­ரா­யி­ருந்­த­ப­டியால் அவர் ரஷ்ய தலை­

யீட்­டினால் பய­ன­டைந்­தா­ரென குற்­றச்­சாட்டு எழுந்து விசா­ர­ணையும் நடை­பெ­று­கி­றது.

சென்ற வாரம் அமெ­ரிக்க வெளிநாட்­ட­மைச்சர் பதவி நீக்கம் செய்­யப்­பட்டார். அவ­ருக்குப் பதி­லாக அமெ­ரிக்க உளவு ஸ்தாப­ன­மா­கிய சிஐஏ இன் தலை­வ­ரான மைக்­பொம்­பியோ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். சிஐஏ அமைப்பில் இரண்­டா­வது நிலை­யி­லிருந்த பெண்­மணி ஜினா­கஸ்பெய் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அமெ­ரிக்க வர­லாற்றில் முதன் முறை­யாக பெண்­மணி ஒருவர் சிஐஏ க்கு தலைமை தாங்­கு­வது குறிப்­பி­டத்­தக்­கது. ட்ரம்­புக்கும் வெளிநாட்­ட­மைச்சர் டில்­லர்­ச­னுக்கும் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பில் அபிப்­பி­ராய பேதங்கள் உண்டு. கியூபா, வட­கொ­ரியா, ஈரான், கட்­டா­ருக்­கெ­தி­ரான சவூதி­ அ­ரே­பி­யாவின் நட­வ­டிக்­கைகள் கட்­டாரை பயங்­க­ர­வா­தத்­துக்கு உதவி செய்யும் நாடு என்­கின்ற விட­யங்­களைக் குறிப்­பி­டலாம். வட­கொ­ரி­யாவின் அணு­ஆ­யுத உற்­பத்தி அபி­லா­ஷைகட்கு எதி­ராக உரத்து குரல் எழுப்­பிய ட்ரம்ப் மிக அண்­மையில் அறி­வித்தல் ஒன்றை விடுத்து உலகை ஆச்­ச­ரி­யத்துள் மூழ்க வைத்தார்.

வட­கொ­ரிய தலை­வரை தாம் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்தப் போவ­தாக வெளியிட்ட அறி­விப்பு வெளிநாட்­ட­மைச்­ச­ருக்கு சரி­யா­கப்­ப­ட­வில்லை இப்­பத்­தி­யாளர் முன்னர் எழு­திய கட்­டு­ரை­களில் ட்ரம்பின் சில நட­வ­டிக்­கைகள் வெளிநாட்­ட­மைச்சர், பாது­காப்பு அமைச்­சர்­களின் ஆட்­சே­ப­னை­களின் விவ­ரங்­களைக் குறிப்­பி­ட்டி­ருந்தார். வெளிநாட்­ட­மைச்­ச­ராக கட­மை­யாற்­றிய டில்­லர்சன் அமெ­ரிக்க இரா­ஜ­தந்­திர பாரம்­ப­ரி­யத்­தினை தொடர்ச்­சியைப் பேணு­வதில் அக்­கறை காட்­டினார். அமெ­ரிக்­காவில் ஆட்சி மாறி­னாலும் வெளிநாட்டு பாது­காப்பு கொள்­கை­களில் தொடர்ச்சி காணப்­படும். சில அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு­களைப் போன்று கொள்­கை­களை அதி­ர­டி­யாக மாற்­ற­மாட்­டார்கள். டில்­லர்சன் வட­கொ­ரிய விவ­கா­ரத்தில் ஐ.நா பாது­காப்புச் சபையில் வட­கொ­ரி­யா­விற்கு எதி­ராக தடை­களை ஏற்­ப­டுத்தும் தீர்­மா­னத்­திற்கு ரஷ்ய , சீனா ஆகிய நாடு­களின் ஆத­ரவைப் பெற்றார். லத்தீன் அமெ­ரிக்க பிராந்­தி­யத்தில் வெனி­சு­லா­வுக்கு எதி­ராக எண்ணெய்த் தடையை ஏற்­ப­டுத்த லத்தீன் அமெ­ரிக்க நாடு­களின் ஆத­ரவைப் பெறு­வதில் முனைப்பு காட்­டினார். ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கி­டையே ஈரானின் அணு­சக்­தித்­திட்­டங்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்டைப் பெறு­வதில் கருத்­தொற்­று­மையை ஏற்­ப­டுத்­தினார். இந்தோனேஷியா பசுபிக் பிராந்­தி­யத்தில் இந்­தியா, யப்பான், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் சுதந்­தி­ர­மா­னதும் திறந்­த­து­மான வர்த்­த­கத்தை ஊக்­கு­விப்­பதில் குறிப்­பி­டத்­தக்க அடை­வு­களைப் பெற்றார்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக ஜனா­தி­பதி ட்ரம்ப் டுவிட்­டரில் வெளியிடும் முரண்­பா­டான செய்­தி­க­ளையும் தலை­கீ­ழான அறி­விப்­பு­க­ளையும் அமெ­ரிக்க நட்பு நாடு­க­ளிலும் ஏனைய நாடு­க­ளிலும் சரிக்­கட்­டு­வ­திலும் ஈடு­பட்டார். அண்­மையில் டில்­லர்சன் பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யொன்றில் ஜனா­தி­பதி ட்ரம்ப் பைத்­தி­ய­கா­ரத்­த­ன­மாக பேசு­கிறார் எனக் கூறி ட்ரம்பின் சீற்­றத்­திற்கு உள்­ளானார். ட்ரம்பின் அமைச்­சர்­களில் முதலில் பத­வியை ராஜி­னாமா செய்­தவர் சுகா­தார அமைச்­ச­ரா­க­வி­ருந்த ரொம் பிறைஸ் அவர் சென்ற ஆண்டு புரட்­டாதி மாதம் பத­வியை துறந்தார். ட்ரம்­புடன் கருத்து வேறு­பாடு எதுவும் அவரின் பத­வித்­து­றப்­புக்கு கார­ண­மில்லை. அரச ஹெலி­காப்­டரில் சொந்த தேவை­கட்­காக பெருஞ்­செ­லவில் பய­ணங்கள் மேற்­கொண்ட குற்­றச்­சாட்டின் கார­ண­மா­கவே பத­வியை துறந்தார். தற்­போது ட்ரம்ப் அர­சாங்க சட்ட ஆலோ­ச­கர்­க­ளுடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக சில சட்ட ஆலோ­ச­கர்­களை நீக்கி புதி­யவர்­களை நிய­மித்­துள்ளார். 2017 இல் பணிப்­பா­ள­ரா­க­வி­ருந்த கொமி பத­வி­நீக்கம் செய்­யப்­பட்டார்.

ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர் என்ற குற்­றச்­சாட்டை விசா­ரிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டை எவ்.பீ.ஐ பணிப்­பாளர் கொமி எடுத்­தி­ருந்­ததால் ட்ரம்ப் அவரைப் பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப் பதவி ஏற்­றபின் பாரிஸ் மகா­நாட்டு தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வதில் அமெரிக்கா அக்­கறை காட்­ட­மாட்­டாது எனவும் அந்த ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து விலகப் போவ­தா­கவும் கூறினார். ட்ரம்பின் முடிவு ஐரோப்­பிய நாடு­க­ளி­டையே சல­ச­லப்பை உண்­டாக்­கி­யது. ட்ரான்ல் பசுபிக் வர்த்­தக ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கு­வ­தாக தீர்­மா­னித்தார். இஸ்­ரேலின் தலை நக­ர­மாக கிழக்கு ஜெரு­சலேம் அமைய வேண்டும் என்றும் டெல்­அவிவ் நகரில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை கிழக்கு ஜெரு­ச­லேத்­திற்கு மாற்றப் போவ­தா­கவும் தெரி­வித்தார். பல சமா­தான மகா­நா­டுகள் ஐ.நா சபை தீர்­மா­னங்கள் பல தலை­வர்கள் கூடிப் பேசிய விவ­காரம் என்றால் அது பாலஸ்­தீன விவ­காரம் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். எடுத்த எடுப்பில் கிழக்கு ஜெரு­சலேம் இஸ்­ரேலின் தலை­ந­க­ர­மாக்க முடிவு எடுத்­தமை சகல முன்­னைய முயற்­சி­க­ளையும் பூச்­சி­ய­மாக்கும் நட­வ­டிக்­கை­யாகும். பராக் ஒபாமா காலத்தில் நீண்ட பிர­யத்­த­னத்­திற்கு பின்னர் கியூபா அமெரிக்கா இரு­த­ரப்பு உற­வுகள் மேம்­பட்­டது. தூது­வ­ரா­ல­யங்கள் ஐம்­பது வருட காலத்­திற்கு பின்னர் அந்­தந்த தலை நக­ரங்­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. ட்ரம் மீண்டும் கியூபாவை தனி­மைப்­ப­டுத்த வேண்டும் என்ற தோர­ணையில் செய­லாற்­று­வது அமெ­ரிக்க ஆலோ­ச­கர்­க­ளி­டையே அதி­ருப்­தியை கிளப்­பி­யுள்­ளது.

உலகின் மிகப் பலம் வாய்ந்த பத­வி­யான அமெ­ரிக்க ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்­பது எல்­லோரும் அறிந்த விட­ய­மாகும். வட கொரிய அதிபர் மின்­னாமல் முழங்­காமல் தமது அணு­குண்டு அபி­ல­ாஷைகளை ஒன்­றன்பின் ஒன்­றாக குண்­டு­களை வெடிக்க வைத்து சாதித்துக் கொண்­டி­ரு­க்­கையில் டோனால்ட் ட்ரம்ப் வட­கொ­ரியா தலை­வரை தாம் சந்­தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவ­தாக எவ­அ­றி­விப்பை விடுத்­தி­ருக்­கிறார். வட­கொ­ரிய ஜனா­தி­ப­தியோ அமெ­ரிக்கா அழித்­து­விடும் என வெருட்­டல்­களை விடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறார்

சித்­திரை 2017ல் சவூதி அரே­பி­யாவில் தலை­நகர் ரியாட்டில் நடை­பெற்ற ரியாட் உச்சி மாநாட்டில் அமெ­ரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசே­ட­மாக பங்­கு­பற்றி அம்­ம­கா­நாட்டில் சவூதி மன்­னரின் கட்டார் வசை­பா­டு­த­லுக்கு உட்­சா­க­மூட்­டினார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பக்க பலமும் சவூதியின் கட்டார் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பலம் சேர்த்­தது. கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு உத­வு­வதை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் கூறினார். சர்­வ­தேச ரீதி­யாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி நிலைப்­பாடு சுவா­ரஸ்­ய­மா­னது. அவர் கடு­மை­யாக கட்­டாரை கண்­டனம் செய்­கிறார். அதேவேளை அவரின் வெளிநாட்டு, பாது­காப்பு அமை­ச­்சர்கள் கட்­டா­ருக்கு ஆத­ர­வாக பேசு­கின்­றன. இந்த நெருக்­கடி விரை­வாக தீர்வு காணப்­பட வேண்டும் என்றும் கட்டார் மிக நெருங்­கிய நட்பு நாடு என்றும் அமெரிக்க இரா­ணு­வ­தளம் அமைந்­துள்ள நாடு என்றும் தெரி­விக்­கின்­றனர். ஜனா­தி­பதி ட்ரம்ப் கட்­டார் எமிர் கல்­தா­னியை வர­வேற்று பேச்சுவார்த்தை நடத்­தினார். கட்டார் மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தின் உற்ற நண்­ப­ரென புக­ழாரம் சூட்­டினார். 300 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான ஏவு­க­ணை­களை கட்­டா­ருக்கு விற்­ப­தற்கு கட்­டளை பிறப்­பித்தார். கட்­டாரின் வான்­ப­ரப்பை மேலும் பாது­காப்­ப­தற்கு இந்த ஏவு­க­ணைகள் கட்­டாரின் வான்­ப­டையின் ஆற்­றலை மேலும் அதி­க­ரிக்கும் என்றார். அண்­மையில் கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை போகின்­றது என்ற குற்­றச்­சாட்­டினை முன்­வைத்த ட்ரம்ப் இப்­போது வேறு வித­மாக பேசு­கின்றார்.இரண்டாம் மகா­யுத்­தத்­திற்கு முன்­னைய காலத்தில் உலகின் அதி­கா­ர­மை­யங்கள் பல இடங்­களில் (Multi Polar world) செறிந்து இருந்­தன. லண்டன், பரிஸ், பேர்லின், டோக்­கியோ, மொஸ்கோ, வாஷிங்டன், வியன்னா, இஸ்­தான்புல் எனக் குறிப்­பி­டலாம். இரண்டாம் மகா­யுத்­தத்தின் பின் உல­க­நா­டுகள் பொரு­ளா­தார, இரா­ணுவ நிலை­களில் இரு அணி­க­ளா­கின.

அமெ­ரிக்கா தலை­மையில் ஒரு அணியும் ஐக்­கிய சோச­லிச சோவியத் ஒன்­றி­யத்தின் தலை­மையில் இன்­னொரு அணியும் உரு­வா­கின. உலகம் இரு துருவ கூட்­ட­மைப்­பா­கி­யது (Bipolar world). இவ்­விரு பிரி­விலும் சேராத ஒரு பிரிவு நாடுகள் தங்­களை அணி­சே­ராத நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட பொழுதும் ஏதோ­வி­தத்தில் ஒரு பகுதி நாடுகள் அமெ­ரிக்­கா­வு­டனும் மற்­றைய பகுதி நாடுகள் சோவியத் ஒன்­றி­யத்­துடன் தொடர்­பு­பட்­ட­ன­வாக இருந்­துள்­ளன. 1989 இல் ஜேர்­ம­னி­களின் மீள் இணைப்பு, 1991 சோவியத் ஒன்­றி­யத்தின் உடைவு, யூ­கோஸ்­லே­வி­யாவின் உடைவு, செக்­கோஸ்­ல­வேக்­கி­யாவின் பிரிவு மற்றும் கிழக்கு ஐரோப்­பிய நாடு­களில் ஏற்­பட்ட அர­சியல், பொரு­ளா­தார கூட்­ட­மைப்பின் மாற்­றங்­களால் உலக இரு துருவ அர­சியல் கூட்­ட­மைப்பு முடிந்து ஐக்­கிய அமெ­ரிக்கா தலை­மையில் உலகம் ஒரு துரு­வ­மாக மாறி­யது. (Unipolar World) இன்­றுள்ள உலக அதி­காரப் பண்பு சிக்­க­லான பல் தன்மை கொண்­ட­தென்று கரு­தப்­ப­டு­கி­றது (Multi Polar World) இன்று அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்து சீனா, பொரு­ளா­தா­ரத்­திலும், இரா­ணுவ பலத்­திலும், சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது. ரஷ்யா பொரு­ளா­தார நிலையில் பின்­தங்­கி­யி­ருப்­பினும் இரா­ணுவ நிலையில் வலி­மை­யாக இருக்­கின்­றது. பெரி­ய­பி­ரித்­தா­னியா, பிரான்ஸ் இன்றும் சர்வதேச விவகாரங்களில் முக்கியத்துவம் பெற்று இருப்பதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாகவுள்ளன. ஜப்பான், ஜேர்மனி உலகபொருளாதாரத்தில் 3வது, 4ஆவது நிலையில் இருக்கின்ற பொழுதும் உலக அரசியலில் முன்னர் போல் இல்லாது சிறிய இடத்தையே வகிக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றதுடன் இந்தியா உலக அரசியலில் துரிதமாக முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. மேற்குறித்த நாடுகளுக்கு வெளியில் பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தோனேஷியா, நைஜீரியா போன்ற நாடுகளினதும் மக்கள் தொகை, உலக வர்த்தகம், உலக அரசியலில் முக்கியம் பெறத் தொடங்கிவிட்டன. மேலும் வடகொரியா அணு ஆயுதம் கொண்ட நாடாக மாறியுள்ளது. மேலும் உலகின் பலபாகங்களில் வாழும் தேசமற்ற தேசிய இனங்கள் அபிலாஷைகளை அடைய போராடுகின்றன. இவை கற்றலோ னியா, குர்தீஸ், பாஸ் என நீண்டு செல்லும். இது போல காலநிலை மாற்றம், கடல்வளம், நீர்ப்பங்கீடு போன்ற விடயங்களில் நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இன்றைய உலக அதிகார மையம் அமெரிக்காவிடமிருந்து சீனாவுக்கு மாறிக்கொண்டிருப்பதாக சில அரசறிவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனத் தலைவரின் அண்மையில் சீனாப் பாராளுமன்றத்தால் காலவறையேதுமின்றி தொடர்ந்து சீனாவின் தலைவராக இருக்க வேண்டும் என தீர்மானித்தது. தலைவர் மாவோவிற்குப் பின்னர் தற்போதைய சீனத் தலைவருக்கு அதிகாரத்தில் தொடர்ந்திருக்கவேண்டுமென்பது கம்யூனிஸ்ட் கட்சியினதும் மத்திய குழுவினதும் பாராளுமன்றத்தினதும் ஏகோபித்த முடிவாகும். மறுபுறத்தில் உலகின் ஏக வல்லரசு அதன் உலக அதிகாரத்தை தக்கவைப்பதில் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைக்கால போக்குகள் அமெரிக்காவின் கீர்த்திக்கு ஊறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்    
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.