Jump to content

விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்?


Recommended Posts

விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்?

 

விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார்.

வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும் கெடுபிடிகள் நிறைந்திருந்த காலகட்டத்திலேயே 2015ம் ஆண்டு வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமைக்குஈடுகொடுக்கக்கூடியவராகவும் பொருத்தமானவராகவும் மக்கள் இவரைக் கண்டுகொண்டனர். கம்பன் கழகம் உள்ளிட்ட பல தமிழ்த்தரப்பும் அதை வரவேற்றது. திரு.சம்பந்தன் உள்ளிட்ட அரசியற்தலைவர்களும் அதை மனமார ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக திரு.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

பதவியைப் பொறுப்பேற்றபோது அவர் ஒரேயொரு நிபந்தனையை மட்டுமே வித்தித்திருந்தார். அதாவது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தாம் இப் பொறுப்பை வகிப்பார் என்று.

பதவி வந்தபின் அவரது எண்ணங்கள் மாற்றமடையத் தொடங்கியது. யாரால் அவர் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே கம்பன் கழகமே அவருடன் பகிரங்கமாக முரண்படத்தொடங்கியது.

தாம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்பட்டவரல்ல என்று ஆரம்பித்தார். இருந்தும,; வாராது வந்த மாகாணசபையைப் போட்டுடைக்கக்கூடாதே என்றுஅவரது போக்கிற்கு இடையூறு விளைவிக்கப்படவில்லை.

வடமாகாண அபிவிருத்திதான் அந்தச் சபையின் முதலாவதும் முக்கியமானதுமான குறிக்கோள். அதை ‘தொப்’ என்று போட்டுவிட்டு அவர் அரசியல் விடயங்களுள் தன் மூக்கை நுழைக்கஆரம்பித்ததுதான் எல்லாவற்றையும் நாசப்படுத்திய செயற்பாடு. அரசியல் விடயங்களைக் கவனிக்க அரசியலில் மிகுந்த அனுபவம்கெர்ண்ட திரு சம்பந்தன், திரு.சேனாதிராஜா போன்றவர்கள்இருக்கும்போது இவர் அவற்றுள் ஏன் மூக்கை நுழைத்துக்கொண்டார் என்பதுதான் பெருங் கேள்வியாக இருக்கிறது. தமக்குத் தரப்பட்ட கடமையை அல்லவா அவர் செய்யவேண்டும். அதற்காககத்தானே அவருக்க இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

சரி ஒருவேளை அதையும் தாண்டி அரசியல் விடயங்களி;ல் அப்படி ஏதவாவது தமக்கு சிறந்த கருத்துக்கள் இருக்குமென அவர் கருதியிருப்பின் அவற்றை அந்தத் தலைமைக்கு தெரியப்படுத்திச்செயற்படுவதுதானே. அதை விடுத்து 2வருடம் மட்டுமே பொறுப்பெடுப்பேன் என்றவர் இப்போது தாமே அரசியலுக்குத் தலைமை தாங்கப் போவதாகவும், புதுக் கட்சி தொடங்கப் போவதாகவும்அறிவித்துச் செயற்படுவது மிகவும் தரந்தாழ்ந்த செயற்பாடன்றி வேறென்ன?

சிலருக்கு பதவி வந்ததும் அதன்மீது வெறிவந்துவிடும். செய்வதறியாது, அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எத்தகைய கீழ்நிலைக்கும் இறங்கத் தயங்கமாட்டார்கள் என்பதை அனுபவரீதியாகநாம் கண்டிருக்கிறோம். அந்த நிலையிலான பதவிப் பித்தில் இவர் தன்நிலை பிறழ்ந்துள்ளார் என்பதைத்தானே இந் நடவடிக்கைகள் காட்டிநிற்கின்றன.

பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். அதைக்கூட ஆளுமையுடன் செயற்படவைக்கத் தெரியவில்லை. அதனை சுரேஷ்பிரேமச்சந்திரனும் பொன்னம்பலமும் ஆக்கிரமித்து வழிநடத்தத்தொடங்கினர். அரசியல் சாராத அமைப்பு என்றும் கூட்டமைப்புத் தலைமைக்கு எதிராகத் தாம் செயற்படமாட்டார் என்றும் பல தடவைகள் கூறிய கூற்றுக்கள் இவரது வஞ்சகச் செயற்பாட்டிற்குஉதாரணம். 2015ம் ஆண்டு தேர்தலின்போதும், அண்மையில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போதும் கூட்டமைப்புக்கு எதிரான அவரது செயற்காடு அவரது கண்ணியமின்மையைப்பறைசாற்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றமை அவரது ஆன்மீக சிந்தனைகளுடன் எப்படி ஒத்துப் போக முடியும்?

அமைச்சர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் வைத்தமை, தவறான விதத்தில் அனந்தி, சர்வேஸ்வரன் போன்றோரை அமைச்சர்களாக்கியமை இவையெல்லாம் இவரின் தரத்தை மிகவும்தாழ்த்திவிட்டுள்ளன.

தமிழர்கள் இன்று பிரிந்துபட்டு நிற்கும் நிலையை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். பொன்னம்பலம், பிரேமச்சந்திரன் போன்றோரை உசுப்பேத்தியது அல்லது அவர்கள் இவரைப்பயன்படுத்தியமை யாவுமே இவரது தூரநோக்கற்ற, தமிழர்க்குப் பாதகமான செயற்பாடுகளேயாகும். தமிழர் மத்தியில் ஒரு எதிர்மறையான, அங்கலாய்ப்பான, விரக்தியான நிலையை இவர்தோற்றுவித்துள்ளார்.  இவரது செயற்பாடுகளால் இவர் தமிழர்களுக்கு இதுவரை எதுவித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான நிலையற்ற கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கொண்ட திரு.விக்னேஸ்வரன் இனிமேலும் தமிழர் தொடர்பான விடயங்களில் எந்தவிதமான  பங்கினையும் வகிக்காது ஒதுங்குவதே தமிழர்க்கு செய்யக்கூடிய சேவையாகும்.

s3-4.jpg

http://www.newsuthanthiran.com/2018/04/23/விக்னேஸ்வரன்-என்ன-செய்யவ/

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில் விக்கினேஸ்வரன் போன்ற நம்பிக்கையான தலைவர்கள் விட்டால் சம்பந்தன் சுமத்திரன் போன்றவர்களிடம் தமிழ் இனம் சிக்கி சீரழியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புதிய சுமந்திரன், கொஞ்சம் பீதியாகுது போல. முதலமைச்சரே உங்கள் தளம்பலற்ற அரசியல் உறுதிக்கு எப்போதும் மக்கள் ஆதரவளிப்பார்கள்.

Link to comment
Share on other sites

31 minutes ago, Eppothum Thamizhan said:

இதனை எழுதிய பெரும் குடிமகன் யாரோ?

தங்கடை கடையிலை தாங்களே மாறி மாறி டீ அடிக்கினம் http://www.newsuthanthiran.com தமிழரசு கூட்டத்தின் லங்காபுவத்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவையே! வாங்கிற  காசுக்கு எதையாவது  எழுத்தத்தானே வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடம் தான் என்று கூறி வந்தவர் தொடர்ந்து செயற்பட கூடாது ஆனால் அடுத்த தீபாவளிக்கு தீர்வு, இந்த பொங்கலுக்கு தீர்வு, மேதினத்திற்கு தீர்வு, தீர்வு இன்றேல் போராட்டம் என்றவை தொடரலாம், போடாங்.....

Link to comment
Share on other sites

Quote

வடமாகாண அபிவிருத்திதான் அந்தச் சபையின் முதலாவதும் முக்கியமானதுமான குறிக்கோள். அதை ‘தொப்’ என்று போட்டுவிட்டு அவர் அரசியல் விடயங்களுள் தன் மூக்கை நுழைக்கஆரம்பித்ததுதான் எல்லாவற்றையும் நாசப்படுத்திய செயற்பாடு. அரசியல் விடயங்களைக் கவனிக்க அரசியலில் மிகுந்த அனுபவம்கெர்ண்ட திரு சம்பந்தன், திரு.சேனாதிராஜா போன்றவர்கள்இருக்கும்போது இவர் அவற்றுள் ஏன் மூக்கை நுழைத்துக்கொண்டார் என்பதுதான் பெருங் கேள்வியாக இருக்கிறது. தமக்குத் தரப்பட்ட கடமையை அல்லவா அவர் செய்யவேண்டும். அதற்காககத்தானே அவருக்க இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

ம்ம் பெரிய அரசியல் காய்கள் கிழித்தார்கள். அரசியலுக்கு சம்பந்தரும்,சேனாதிராஜாவும் தான் வரலாம் என்றால் மிகுதியானவர்கள் வானத்தை பார்த்து கொட்டாவி விடுவதா??tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிராகரிப்பின் மூலம் முதலமைச்சரை ஓரங்கட்டி  விடலாம், அவரும் ஒதுங்கி விடுவார்  என்று நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த டோஸில் வயிறு கலக்கி எதிர்கால அரசியல் சேடம் இழுக்குது அதுதான் இந்தப் புலம்பல். இதுவரை எதுவும் சாதிக்காமல் மக்களை ஏமாத்தி மக்களில் சவாரி செய்து சிங்களவனுக்கு முதுகு சொறியும் சிரங்குக் கூட்டம் முதலில்  அரசியலை விட்டு விலகி புதியவர்களுக்கு வழிவிட வேணும். முதலமைச்சருக்கு அறிவுரை சொல்பவர்கள் முதலில் தங்களை ஆராய்ந்து பார்க்கவேணும். சம்பந்தர், மாவை பூம், பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலை ஆட்டுவினம். இல்லை என்றால் அரசியல் விபச்சாரியளிடம் வழிகாட்டி  அழைத்துச் சென்று  வாங்கிக் குடுத்தது, வாங்கியது எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிடுவார். அதனாலே இந்தத் தரகர் சொல்லும்  எல்லாத்துக்கும் எதிர் கேள்வி கேட்க்காமல் தலையாட்டுகிறார்கள்.. இவர்களை நிழல் முதலமைச்சராக வைத்து கூத்துப் போட துடிக்குது ஒரு ஓணான். அதுதான் ரொம்ப துள்ளுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.