Jump to content

வலுவடையும் போராட்டம் – இரணைதீவுக்குள் நுழைய ஆயத்தம்!


Recommended Posts

வலுவடையும் போராட்டம் – இரணைதீவுக்குள் நுழைய ஆயத்தம்!

Iranaithivu-2-720x450.jpg

 

கிளிநொச்சி – இரணைதீவு பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் மாபெரும் கண்டன பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இரணைமாதா தேவாலயத்திலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை இப்பேரணி ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இவர்கள் இரணைதீவு கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து இரணைதீவுக்குள் செல்ல தீர்மானித்துள்ளனர்.

இரணைதீவானது கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிலையில், அவர்களை மீறி இம்மக்கள் படகுகளின் மூலம் அங்கு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Iranaithivu-3.jpgIranaithivu-1.jpg

http://athavannews.com/?p=660178-வலுவடையும்-போராட்டம்-–-இரணைதீவுக்குள்-நுழைய-ஆயத்தம்!-(2ஆம்-இணைப்பு

Link to comment
Share on other sites

இரணைதீவிற்குள் மக்கள் அனுமதி! – நல்லிணக்கத்தின் சமிக்ஞையா?

 

கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர்.

எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ந்ததோடு, அங்கு காணப்படும் தமது கட்டங்கள், மரங்கள் என்பவற்றை ஆரத் தழுவியுள்ளனர்.

இரணைதீவை விடுவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு இரணைமாதா நகரில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, இரணைதீவு கடற்கரையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 50 மீன்பிடிப் படகுகளில் மக்கள் இரணைதீவை நோக்கிப் பயணித்தனர்.

கிறிஸ்தவ மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

இரணைதீவு பகுதியில் முதற்கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கடற்படையினர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், பாதுகாப்பை காரணங்காட்டி அந்நடவடிக்கை பிற்போடப்பட்டது.

மேலும், அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் என்றும் குடிநீர் பிரச்சினை காரணம் என்றும் கடற்படையினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு கோரி, கடந்த ஒரு வருடகாலமாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/?p=660178-இரணைதீவிற்குள்-மக்கள்-அனுமதி!-–-நல்லிணக்கத்தின்-சமிக்ஞையா?-(3ஆம்-இணைப்பு

 

Iranaithivu-2-1.jpgIranaithivu-2-1.jpg

Iranaithivu-1-1.jpg

IRANAITHIVU-LAND.jpg

Link to comment
Share on other sites

உரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :

IMG_0054.jpg?resize=800%2C534

கிளிநொச்சிசி ‘இரணை தீவு’ கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள ‘இரணை மாதா’ கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

 

சுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் கிராமத்தில் உள்ள ‘இரணை மாதா’ கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடாந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான ‘இரணை தீவு’ கிராமத்திற்கு இன்று (23) திங்கட் கிழமை காலை படகுகள் மூலம் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மக்களுக்கு தேரவு தெரிவித்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ கலந்து கொண்டு மக்களின் உரிமை சார் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.  முதலில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் படகுகள் மூலம் இரணை தீவு கிராமத்திற்கு சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். எனினும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணை தீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.  தாங்கள் தங்களது பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனவும் கடற்றொழில் நடவடிக்கைகளையும் இரணைத்தீவிலிருந்தே மேற்கொள்ள உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராம மத்தில் தங்கியிறுந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0056.jpg?resize=800%2C534IMG_0059.jpg?resize=800%2C534IMG_0071.jpg?resize=800%2C534IMG_0080.jpg?resize=800%2C534IMG_0094.jpg?resize=800%2C534IMG_0122.jpg?resize=800%2C534IMG_0127.jpg?resize=800%2C534IMG_0132.jpg?resize=800%2C534IMG_0134.jpg?resize=800%2C534iranai-_-_0133.jpg?resize=800%2C534iranai-_0128.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/76134/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களும், மதகுருமாரும் போராடட்டும். நாடா வெட்டவும், அறிக்கை விடவும்உரிமை கொண்டாடிக் கொண்டு  எங்கட ஐயாமார் வருவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.