Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 இழப்பு 

 

கணவன் / மனைவி    இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ?

https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது  யாரும் பேச  விரும்புவதில்லை. . அது வரும் போது  பார்த்து   கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால்   எப்படி தாங்கி கொள்வது ...? 

Link to comment
Share on other sites

மனித மனம் என்பது இழப்பு வரும் வரைக்கும் அதை தாங்க முடியாது என நினைத்து பயந்து கொண்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு இழப்பு வந்த பின் அதை தாங்க / துயரத்தில் இருந்து கடந்து போக தன்னை தயார் படுத்தி விடும். Time heals என்பார்கள். காலம் எல்லா துயரங்களையும் கடந்து போக செய்து விடும்.

இப்படியான பொது தன்மையில் இருந்து விலகி  ஒரு இழப்பின் பின் மனம் பேதலித்து போகின்றவர்களும் உண்டு. மனம் ஒரு புள்ளியில் நிலைத்து நின்று அசைய மறுத்து வேதனை படுகின்றவர்களையும் கண்டுள்ளேன்.

ஒரு பிள்ளை ஷெல் அடியில் இருந்தமையால் என் நெருங்கிய உறவு ஒருவர் இன்றும் சற்று மனம் பேதலித்த நிலையில் தான் உள்ளார். அதே நேரம் சுனாமியில் தன்  4 பிள்ளைகளையும் இழந்த தாய் ஒருவருக்கு இப்போது  (சுனாமியின் பின்) இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வருகின்றனர்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் இறந்தால் மனைவி பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன் என்பார்...அதெல்லாம் ஒரு சாட்டு...ஒரு சிலரைத் தவிர யாருமே யாருக்காவும் சாக விரும்புவதில்லை...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் அருகில் இருக்கும்போது அவற்றின் அருமை பெருமை தெரிவதில்லை. அது கணவன் / மனைவி உறவுகளுக்கும் பொருந்தும்......! நல்லதொரு பகிர்வு சகோதரி......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான நதியில் திடீரென வெள்ளம் வருவது போல எனது குடும்பத்திலும் எனது கணவரின் இழப்பு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஆறு மாதங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரை நாம் இழந்து விட்டோம். பிள்ளைகள் உயர் படசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் எனக்கு வங்கி அட்டைகூட அடிக்கத் தெரியாது. அப்பொழுதுதான் கார் ஓடக் கற்றுக்கொண்டிருந்தேன்.அந்த வேளையில் என் மனவேதனையைவிட பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். (அடிக்கடி தனியாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை இடுகாடு என்று சென்று வந்தது வேறுகதை.) ஆனாலும் வீட்டில் திருமணம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளின் போது மனதை வேதனை பிசைவதுண்டு. இருந்தும் நான் இல்லாமல் அவர் இருந்து தனியாக கஸ்ரப்படுவதை விட அவர் இல்லாமல் நான் கஸ்ரப் பட்டாலும் பரவயில்லை என மனதைத் தேற்றிக்  கொள்வேன். உண்மையிலேயே யாழ் இணையமும் என் கவலையை மறக்க மருந்தாக இருந்தது.இருக்கிறது. இழப்பைப் பற்றி எழுதி உணரவைக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.