Jump to content

வடக்கும் மலையகமும் கைகோர்க்க வேண்டும்


Recommended Posts

வடக்கும் மலையகமும் கைகோர்க்க வேண்டும்

 

சிறு­பான்மை மக்கள் இந்த நாட்டில் பல்­வேறு நெருக்­கீ­டு­க­ளுக்கும் உள்­ளாகி வரு­கின்­றார்கள். இவர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அதி­க­முள்­ளன. எனினும் இவற்­றுக்­கான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­பதில் இழு­பறி நிலையே இருந்து வரு­கின்­றது. ஆட்­சி­யா­ளர்கள் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­க­ளுக்கு இதய சுத்­தி­யுடன் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க முற்­ப­டு­கின்­றார்­களா? என்­பது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இந் ­நி­லையில் சிறு­பான்­மை­யினர் தங்­க­ளுக்குள் முரண்­பா­டு­களை வளர்த்­து கொண்டு பிரிந்­தி­ருக்­காமல் ஒற்­று­மை­யுடன் கைகோர்த்து உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்க வேண்­டிய ஒரு தேவை மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. முஸ்லிம் சகோ­த­ரர்­களை இணைத்­து கொண்டு வடக்கும் மலை­ய­கமும் கைகோர்க்க வேண்டும். இது பல சாதக விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

சிறு­பான்­மை­யி­னரின் ஆதிக்கம்

சிறு­பான்­மை­யினர் இந்த நாட்டின் முக்­கிய சக்­தி­யாக இப்­போது உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். நாட்டின் எழுச்­சியில் காத்­தி­ர­மான வகி­பா­கத்­தினை கொண்­டுள்ள இவர்கள் தேசிய வரு­மா­னத்­தினை ஈட்­டிக் ­கொ­டுப்­ப­திலும் பிர­தான இடத்­தினை வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அர­சி­யலில் ஒரு காலத்தில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக சிறு­பான்­மை­யினர் இருந்து வந்­தனர். எனினும் இன­வா­தி­களின் மேலெ­ழும்­பு­கை­யா­னது இந் ­நி­லை­மையை மழுங்­க­டிக்க செய்­தி­ருக்­கின்­றது என்றே கூறி­யாதல் வேண்டும். எனினும் அண்­மைக்­கால நிலை­மைகள் சிறு­பான்­மை­யி­னரை ஓரம் கட்­டி­ விட்டு எத­னையும் செய்­து­ விட முடி­யாது என்­கிற ஒரு நிலை­மை­யினை தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இந் ­நாட்டில் இப்­போது சுமார் ஐம்­பது இலட்சம் பேர் சிறு­பான்மை சமூ­கத்­தினை சேர்ந்­த­வர்­க­ளாக உள்­ளனர். உலகின் பல நாடு­களில் சிறு­பான்­மை­யி­னரின் தொகையில் வீழ்ச்சி நிலையே காணப்­ப­டு­கின்­றது. எனவே ஐம்­பது இலட்சம் என்­பது சிறு­பான்­மை­யி­னரை பொறுத்­த­வ­ரையில் ஒரு பல­மாகும். இலங்கை பல்­லின மக்கள் வாழு­கின்ற பல்­லின கலா­சா­ரத்­தையும் கொண்ட ஒரு நாடு என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எனவே இந்த ஐம்­பது இலட்சம் பேரை அலட்­சியம் செய்­து ­விட்டு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளக்­ கூ­டாது. மேற்­கொள்­ளவும் முடி­யாது. இதனை கருத்­திற் கொண்டு செயற்­பட வேண்­டிய ஒரு அம்­ச­மாகும். உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு சிறு­பான்­மை­யினர் மத்­தி­யிலும் ஒரு­மைப்­பாடு என்­பது மிகவும் அவ­சி­ய­மாகும். ஒரு­மைப்­பாட்டின் ஊடா­கவே பல உயர்­வு­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். சிறு­பான்­மை­யினர் ஒற்­று­மையின் ஊடாக கடந்த காலத்தில் பல்­வேறு சாத­னை­க­ளையும் நிகழ்த்தி காட்டி இருக்­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்தன மாவட்ட சபை­க­ளுக்கு மேலாக எத­னை­யுமே வழங்­க­ மு­டி­யாது என்­கிற ஒரு நிலைப்­பாட்டில் இருந்­த­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். ஆனால் இன்று மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்டு செயற்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றன. மாகாண சபையை எதிர்த்­த­வர்கள் இன்று அவற்­றுக்கு ஆத­ர­வாக பேசி கொண்­டிருக்கின்­றனர். 1956 ஆம் ஆண்டில் தனிச்­சிங்­கள சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. சிங்­கள மொழிக்கு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. சிங்­கள மொழியை ஏற்­கும்­படி சிறு­பான்­மை­யி­னரை நிர்ப்­பந்­திப்­பது இனக்­க­ல­வ­ரத்­துக்கு வழி­வ­குக்கும் என்று லெஸ்லி இதன்­போது எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். மேலும் இலங்­கைக்கு மிகப்­பெரும் ஆபத்து வர­வுள்­ளது. அம்­மக்கள் தமக்கு அநி­யாயம் நடப்­ப­தாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போகக்­ கூட தீர்­மா­னிக்­கலாம் என்றும் லெஸ்லி ஆழ­மாக வலி­யு­றுத்தி இருந்தார். எனினும் இவை­யெல்லாம் கருத்தில் கொள்­ளப்­ப­டாது தனிச்­சிங்­கள சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டதால் நாடு அதி­க­மான இன்­னல்­களை சந்­திக்க நேர்ந்­ததும் தெரிந்த விட­ய­மே­யாகும்.

இதற்­கி­டையே நீண்ட இடை­வே­ளையின் பின்னர் தமிழ்­மொ­ழிக்கும் அர­ச­க­ரும மொழி என்ற அந்­தஸ்து கிடைத்­தது. 13 ஆவது திருத்தச் சட்டம் முன்­வைக்­கப்­பட்டு மாகாண சபை முறை உரு­வாக்­கப்­பட்­டது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த மாகாண ஆட்சி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ் மொழிக்கு சம அந்­தஸ்து வழங்­கப்­பட வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் வலி­யு­றுத்தி இருந்­தது. எனவே மாகா­ண­ சபை முறை மற்றும் தமி­ழுக்கு அரச கரு­ம ­மொழி வழங்­கப்­பட்­டமை என்­பன சிறு­பான்­மை­யி­னரின் ஒற்­று­மைக்கு கிடைத்த வெற்­றி­யாக கரு­த­மு­டியும். உலகில் உள்ள சிறு­பான்மை

இலங்­கையில் வாழும் சுமார் ஐம்­பது இலட்சம் சிறு­பான்­மை­யி­னரை அலட்­சியம் செய்து அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளக்­ கூ­டாது. அவ்­வாறு அலட்­சியம் செய்தால் அதனால் ஏற்­படும் பாதக விளை­வு­க­ளையும் அர­சாங்­கமே அனு­ப­விக்க வேண்டி நேரிடும்.

யினர் தங்­க­ளது தனித்­து­வங்­களை பேணு­வ­தற்­காக பல்­வேறு வகை­யான போராட்­டங்­க­ளையும் நடத்தி இருக்­கின்­றனர். அந்த போராட்­டங்கள் பின்னர் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு உரி­மை­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கவே இந்த நாடு­களில் பன்மை கலா­சாரம் என்ற சொல்லே உரு­வா­னது. இந்த நாட்டில் வாழு­கின்ற சிறு­பான்­மை­யினர் தங்­க­ளது மொழி­யு­ரிமை, தனித்­துவ உரிமை, பிராந்­திய உரிமை, இன உரிமை என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தி கொள்ள வேண்டும்.

அமெ­ரிக்­காவில் செவ்­விந்­தி­யர்­களை ஒடுக்கும் முயற்­சிகள் ஒரு காலத்தில் இடம்­பெற்­றன. அப்­போது செவ்­விந்­தி­யர்­களின் தலைவன் பின்­வ­ரு­மாறு கூறி இருந்தார். நீங்கள் எங்­களை அழிக்­கின்­றீர்கள். அது­ மட்­டு­மல்­லாது எங்­களின் சுற்­றா­டலை அழிக்­கின்­றீர்கள். எங்­களின் மரம், செடி, கொடி காடு­க­ளையும் அழிக்­கின்­றீர்கள். எங்­க­ளது மந்­தை­க­ளையும் அழிக்­கின்­றீர்கள். இவற்­றை­யெல்லாம் அழித்­து­ விட்டால் நாங்கள் எப்­படி உயிர்­வாழ்­வது என்று அந்தத் தலை­வனின் கேள்வி அமைந்­தி­ருந்­தது. அந்தத் தலை­வனின் உரை­யா­னது இன்று சுற்­றா­டலை பேணு­கின்ற சர்­வ­தேச பிர­க­டன உரை­யாக அமைந்­தி­ருப்­ப­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் குறிப்­பிட்டு காட்டி இருக்­கின்றார். செவ்­விந்­தியர் என்­கின்ற பழங்­குடி மக்­களை அடக்கி ஒடுக்­கிய அமெ­ரிக்கா இன்று அம்­மக்­களின் நலன்­களை பேணு­கின்ற ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.

சிறு­பான்­மை­யினர் என்ற ரீதியில் முஸ்­லிம்கள் இந்த நாட்டில் சொல்­லொணா துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். அண்­மையில் இடம்பெற்ற திகன, தெல்­தெ­னிய மற்றும் அம்­பாறை சம்­ப­வங்கள் இன­வா­திகள், முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள வக்­கி­ர­மான தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வக்­கி­ரங்கள் எந்த நேரத்­திலும் இலங்கை தமி­ழர்­க­ளுக்கோ அல்­லது இந்­திய தமி­ழர்­க­ளுக்கோ எதி­ரா­ன­தாக மாற்றம் பெறக்கூடும். இது தொடர்­பான விழிப்­புடன் செயற்­பட வேண்­டிய கால­கட்டம் இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. முஸ்­லிம்கள் பலர் தமி­ழர்­க­ளுடன் கைகோர்த்து செயற்­பட எண்ணம் கொண்­டுள்­ளனர். எனவே சிறு­பான்­மை­யினர் என்ற ரீதியில் அவர்­க­ளையும் அர­வ­ணைத்­து கொண்டு நாம் எமது உரி­மைக்­கான போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து செல்ல வேண்டும். சிறு­பான்­மை­யி­னரின் ஒற்­றுமை சீர்­கு­லை­யு­மானால் உரி­மைகள் பறி­ போ­வ­தோடு தனித்­து­வத்­தி­னையும், அடை­யா­ளத்­தி­னையும் இம் ­மக்கள் இழந்­து­ வி­டுவர் என்­ப­தையும் மறந்­து­ வி­ட­லா­காது.

வடக்கு – மலை­யக உற­வுகள்

வடக்­குக்கும் மலை­ய­கத்­திற்கும் இடை­யே­யான உறவு என்­பது நீண்ட கால­மா­கவே தொடர்ந்து வரு­கின்ற ஒரு விட­ய­மாக உள்­ளது. வடக்கு மக்­களின் கண்­களில் தூசு விழுந்தால் மலை­யக மக்­களின் கண்கள் கலங்­கு­கின்­றன. அதைப்­போ­லவே மலை­ய­கத்­திற்கு அடி விழுந்தால் வடக்­கிற்கு வலிக்­கின்­றது. மொத்­த­மாக இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­கின்­ற­ போது தமி­ழகம் பொங்கி எழு­கின்­றது. இந்த பிணைப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.

ஒரு காலத்தில் இலங்கை தமிழர், இந்­திய தமிழர் என்று பெரி­ய­ளவில் வேறு­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் இன்று பொது­வாக தமி­ழர்கள் என்ற ரீதி­யி­லேயே இன­வாத சிந்­த­னை­யா­ளர்­களின் கண்­ணோட்டம் அமைந்­தி­ருப்­ப­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. மலை­யக தமி­ழர்கள், இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்று நாங்கள் தனித்து கூறிக் ­கொண்­டி­ருந்­தாலும் இலங்கை தமி­ழர்­க­ளோடு இம்­மக்­களின் வாழ்வு, சாவு, முன்­னேற்றம் என்­பன தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக புத்திஜீவிகள் கூறி­யி­ருக்­கின்­றனர். பிரச்­சினை என்று வரு­கையில் தமி­ழர்கள் என்ற பொது­ நி­லை­யி­லேயே தாக்­கப்­ப­டு­கின்­றனர். வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­க­ளோடு ஒட்­டியே நோக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­க­ளோடு ஒட்­டிய நோக்கு காணப்­பட்­டதன் விளை­வாக இந்­திய வம்­சா­வளி மக்கள் இன­ வன்­செயல்களின் போது அதி­க­மான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளானதாகவும் ஒரு கருத்து இருந்து வரு­கின்­றது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்­வ­தற்கு ஒரு தனித்­துவம் தேவை என்றும் மொழி ரீதி­யான உரி­மைகள் தேவை என்றும் வடக்கு மக்கள் அதி­க­மா­கவே சிந்­திக்­கின்­றனர். இது மிகச்சிறந்த ஒரு விட­ய­மா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது. எனினும் மலை­ய­கத்­த­வர்­களில் மிகச்­சிலர் சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து போக தயா­ராக இருந்­த­போதும் சிங்­க­ள­வர்கள் அதனை ஏற்­றுக்­கொள்ள தயா­ரில்லை என்­கிற ஒரு விட­யமும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னாலும், சமூக ஆய்­வா­ளர்­க­ளி­னாலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. தமி­ழர்கள் என்ற பொது கண்­ணோட்டம் சிங்­க­ளவர் மத்­தியில் நில­வு­கின்­றது. அர­சியல் ரீதி­யாக சிறு­பான்­மை­யினர் அண்­மை­க்கா­ல­மாக ஒரு ஒற்­று­மை­யினை ஏற்­ப­டுத்தி கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கு மற்றும் மலை­ய­கத்­த­வரின் ஒற்­றுமை இதில் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. நாட்டில் நல்­லாட்சி உத­ய­மா­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால தெரி­வா­வ­தற்கும் இவர்­களின் ஒத்­து­ழைப்பு என்­பது அதி­க­மா­கவே இருந்­துள்­ளது. வடக்கு மக்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­வதை மலை­ய­கத்­த­வர்கள் ஆத­ரித்­தனர். மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­வ­தனை வடக்கில் உள்­ள­வர்கள் எதிர்க்­க­வில்லை. செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான், ஜி.ஜி. பொன்­னம்­பலம், செல்­வ­நா­யகம் போன்றோர் முக்கிய ­கூட்டு தலை­மை­யாக இருந்து செயற்­பட்­டனர். எனினும் தொண்­டமான் சில தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் முக்­கூட்டில் இருந்தும் வில­கினார். ஆனாலும் அவர் முரண்­பட்­டு கொண்டு வில­க­வில்லை. வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தொண்­டமான் எப்­போதும் தனது உய­ரிய ஆத­ர­வினை வழங்­கியே வந்­தி­ருக்­கின்றார்.

வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் விட­யத்தில் தோள்­கொ­டுக்க வேண்­டுமே தவிர விட்­டுக்­கொ­டுக்கக் கூடாது என்­கிற மனப்­பான்மை தொண்­டா­விடம் காணப்­பட்­டது. மொழி, அதி­காரப்பர­வ­லாக்கல் குறித்த பிரச்­சினை வடக்கு, கிழக்­குக்கு மட்­டு­மல்­லாது மலை­ய­கத்­திற்கும் உரி­ய­தாகும். மலை­ய­கத்­திற்கு அதி­காரப்பர­வ­லாக்கல் அவ­சியம் என்­ப­தனை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி என்­ப­வற்றின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்றார். மலை­ய­கத்தில் அதி­க­மான புத்­தி­ஜீ­வி­களின் நிலைப்­பாடும் இது­வா­கவே உள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாகும். அதி­காரப்பர­வ­லாக்கம் என்று வரு­கின்­ற­ போது மலை­ய­கமும் அதில் உள்­ளீர்க்­கப்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். வடக்கு மற்றும் மலை­யக மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு இடையில் ஒரு தொடர்பு காணப்­ப­டு­கின்­றது.

வடக்கு மக்­களின் போராட்­டத்­திற்கு தமிழ் நாட்டு மக்கள் கூடு­த­லான மக்கள் கூடு­த­லான ஆத­ர­வினை வழங்கி வரு­கின்­றனர். தமிழ்நாட்டு மக்கள் வட­கி­ழக்கு மக்­களை பற்­றியே பேசு­கின்­றனர். மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை இவர்கள் உரி­ய­வாறு கவ­னத்தில் கொள்­வ­தில்லை என்­கிற ஒரு குறை­பாடும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். வடக்கு,கிழக்கு தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு வைகோ, சீமான், உள்­ளிட்­ட­வர்­களும் எம்.ஜி.ராமச்­சந்­தி­ரனும் கூட ஆத­ர­வினை வழங்கி இருந்­தனர். வடக்கு, கிழக்கு பிரச்­சி­னையில் தமிழ்­ நாடு முக்­கிய கார­ணி­யாக உள்­ளது. தமிழ்­நாடு என்று சொல்­கையில் மலை­யக மக்­க­ளுக்கும் அதில் தொடர்பு இருக்­கின்­றது. எனவே உற­வுகள் ஒன்­றோ­டொன்று பின்னிப் பிணைந்­தி­ருப்­ப­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. மலை­யக மக்கள் முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் அமரர் சந்­தி­ர­சே­கரன் விடு­தலைப்புலி­க­ளுக்கு சார்­பா­னவர் என்று முத்­திரை குத்­தப்­பட்டு நெருக்­கீ­டு­களை சந்­தித்­ததும் தெரிந்த விட­ய­மே­யாகும்.

இடம்பெயர்­வுகள்

மலை­யக பகு­தி­களில் இந்­தி­ய­ வம்­சா­வளி மக்கள் செறிந்து வாழ்ந்­தி­ருந்­தனர். எனினும் இந்த செறி­வு­ நிலை பல கார­ணங்­க­ளினால் சீர்குலைந்­த­தையும் அறிந்­து­ கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. ஒப்­பந்­தங்கள் வன்­செ­யல்கள் உள்­ளிட்ட பல கார­ணிகள் இதில் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் நோக்­கு­கின்ற போது 1987 இறு­தி ­வரை மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேர் இந்­தியா திரும்­பி­யி­ருந்­தனர். 1981 ஆம் ஆண்டின் குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கை­யின்­படி 75 ஆயிரம், பேர் வரை வட­மா­காணம் சென்று குடி­யே­றி­யி­ருந்­த­தாக கண்­ட­றி­யப்­பட்­டது. 1958, 1977, 1981, 1983 என்று பல காலங்­களில் இலங்­கையில் வன்­செ­யல்கள் இடம்பெற்­றன. இத்­த­கைய வன்­செ­யல்­களின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட பலர் வட­மா­கா­ணத்­திற்கு சென்று குடி­யேறி இருந்­தனர். அத்­தோடு 1972 ஆம் ஆண்டில் பெருந்­தோட்­டங்­களை அர­சாங்கம் பொறுப்­பேற்ற பின்னர் ஏற்­பட்ட வேலை­யின்மை பிரச்­சினை, உணவு பற்­றாக்­குறை என்­ப­வற்றால் ஏற்­பட்ட பாதிப்­பு­களும் மலை­ய­கத்­த­வர்கள் வட­மா­காணம் சென்று குடி­யே­று­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­தன. இவ்­வாறு சென்­ற­வர்கள் இலங்கை தமி­ழர்கள் செறிந்து வாழும் வவு­னியா, கிளி­நொச்சி மாவட்­டங்­களில் காலப்­போக்கில் தமது இந்­திய, மலை­யக அடை­யா­ளங்­களை கைவிட்டு உள்ளூர் மக்­க­ளுடன் கலந்து வாழும் போக்­குகள் காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

இத்­த­கைய மக்கள் வெளி­யேற்ற அல்­லது இடம்பெயர்வு நிலை­மை­க­ளா­னது மலை­யக மாவட்­டங்­களில் இந்­தி­யர்­களின் வலி­மையை குறைத்து விட்­டது. இதே­வேளை 1958 இனை தொடர்ந்து ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களும் பெருந்­தோட்ட தேசிய மயம் ஏற்­ப­டுத்­திய பாதக விளை­வு­களும் இந்­திய தமி­ழர்கள் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தங்­களின் கீழ் தமது தாய­கத்­தினை நாடு­வதை ஊக்­கு­வித்­த­தாக வலி­யு­றுத்­தல்கள் இடம் பெற்­றி­ருக்­கின்­றன. மலை­ய­கத்தில் நெருக்­கீ­டு­க­ளையும் துன்­பங்­க­ளையும் சந்­தித்த மக்கள் வட­மா­கா­ணத்தை தாய்­ம­டி­யாகக் கருதி சென்­றுள்­ளதை காண­ மு­டி­கின்­றது. வடக்கும் இம்­மக்­களை புறந்­தள்­ளாது அர­வ­ணைத்து கொண்­டி­ருக்­கின்­றது.

தன்­னாட்சிப் பிராந்­தியம்

பல்­வேறு புறக்­க­ணிப்­புகள் யுத்தம் மேலெ­ழும்­பு­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­தன. யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு என்­பது இன்னும் இழு­பட்டு கொண்­டு தான் இருக்­கின்­றது. யுத்த வெற்­றி­யினை கொண்­டா­டு­வதில் இருந்த முனைப்பு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பதில் காட்­டப்­ப­ட­வில்லை என்­பது கசப்­பான உண்­மை­யே­யாகும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் பெரும்­பான்மை அர­சி­யல்­ வா­திகள் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­ப­ட­வில்லை என்­கிற குற்­றச்­சாட்டு அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. இந் ­நி­லையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்வு ஆட்­சி­யா­ளர்­க­ளினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்­ப­தனை மலை­யக அர­சி­யல் ­வா­தி­களும் புத்­தி­ஜீ­வி­களும் ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்தி இருந்­தனர். இன்றும் வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றனர். இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சினை என்று ஒன்று காணப்­ப­ட­வில்லை. பயங்­க­ர­வாத பிரச்­சி­னையே காணப்­பட்­டது. அதுவும் பிர­பா­கரன் இறந்த கையோடு முடிந்­து ­விட்­டது என்­கிற நிலைப்­பாட்டில் இருந்து வரும் இன­வா­தி­களின் கருத்­து­களை மறு­த­லித்து இனப்­பி­ரச்­சி­னையே இங்கு உள்­ளது என்றும் இதற்­கான தீர்வு உரி­ய­வாறு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் மலை­யக அர­சி­யல்­வா­தி­களும், புத்­தி­ஜீ­வி­களும் ஏற்­க­னவே வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர்.

இதற்­கி­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான முன்­னெ­டுப்­புகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கடந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தமை தெரிந்த விட­ய­மாகும். இந்­நி­லையில் வட­மா­காண சபை­யா­னது அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் யாப்­புக்­கான கொள்கை வரை­புக்­கான திட்டம் ஒன்­றினை தயா­ரித்­தி­ருந்­தது. இதில் பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. கொள்கை வரைபு முன்­மொ­ழி­வு­களை முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முற்­ப­கு­தியில் சபையில் முன்­வைத்­தி­ருந்தார். இதில் மலை­யகம் தொடர்­பிலும் விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. அதா­வது மலை­யக தன்­னாட்சி பிராந்­தி­யத்தின் உரு­வாக்­கத்தின் அவ­சியம் இதில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. மேலும் வட­கி­ழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்­னாட்சி பிராந்­தியம் மற்றும் மலை­யக தன்­னாட்சி பிராந்­தியம் பாதிக்­கத்­தக்­க­வாறு மத்­திய கூட்­டாட்சி சமஷ்டி பாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­படும் சட்­டங்கள் உரிய மாநி­லத்­தாலோ அல்­லது தன்­னாட்சி பிராந்­தி­யங்­க­ளாலோ அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத வரை நடை­மு­றைக்கு வரக்­கூ­டாது. வட­கி­ழக்கு மாநில பாரா­ளு­மன்றம் வட­கி­ழக்கு முஸ்லிம் பிராந்­திய சபை ஆகி­ய­வற்­றுக்கு தமது சொந்த அனு­ப­வங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஏற்ற வகையில் முழு­மை­யாக அதி­கா­ரங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும். இப் ­பா­ரா­ளு­மன்­றத்­திற்கும் பிராந்­திய சபை­க­ளுக்கும் போதிய சுயாட்­சி­யா­னது ஏற்­பாடு செய்­யப்­ப­டுதல் வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

மலை­யக தன்­னாட்சி பிராந்­தியம் குறித்த விட­யத்தை தாம் மேலும் விரி­வாக ஆராய உள்­ள­தாக மலை­யக கட்­சிகள் அப்­போது வலி­யு­றுத்தி இருந்­தன. இந் ­நி­லையில் பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன், பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் எஸ்.விஜயச்சந்­திரன், மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ்.சதா­சிவம் போன்றோர் இதனை வர­வேற்று பேசி இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். எவ்­வா­றெ­னினும் மலை­ய­கத்தின் நலனில் அக்­க­றை­ கொண்டு மலை­யக மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் வகையில் கொள்கை வரைபில் இட­ம­ளித்­தி­ருந்­தமை பல­ரி­னது பாராட்­டி­னையும் பெற்­றி­ருந்­தது. இது வடக்கு மற்றும் மலை­ய­கத்­திற்கு இடை­யி­லான உற­வினை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

பிரித்து நோக்கக் கூடாது

வடக்கு மக்கள் எமது சகோ­த­ரர்கள் அவர்­களை ஒரு­போதும் பிரித்து நோக்கக் கூடாது என்­கிறார். பதுளை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ். வடக்கு, மலை­யக தொடர்பு குறித்து மேலும் பல விட­யங்­க­ளையும் இவர் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். வடக்­கிற்கு பிரச்­சினை ஏற்­படும் போதெல்லாம் மலை­யக அர­சி­யல்­வா­தி­களும், மலை­ய­கத்­திற்கு பிரச்­சினை ஏற்­படும் போதெல்லாம் வடக்கு அர­சி­யல் ­வா­தி­களும் குரல் கொடுத்தே வந்­தி­ருக்­கின்­றனர். பிர­தேச ரீதி­யாக வேறு­பட்டு வாழ்ந்­தாலும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­ வேண்­டிய தேவைப்­பாடு இப்­போது அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பிரச்­சி­னைகள் வேறு­பட்­ட­ன­வாக இருப்­பினும் கூட ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்கக் கூடிய சாத்­தி­யப்­பாடு காணப்­ப­டு­மி­டத்து பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வினைப் பெற்­றுக்­கொள்­வது எளி­தாகும்.

முன்­னைய காலங்­களில் வடக்கில் உள்ள பலர் ஆசி­ரி­யர்­க­ளா­கவும், அதி­பர்­க­ளா­கவும், தபா­ல­தி­பர்­க­ளா­கவும், வைத்­தி­யர்­க­ளா­கவும், மலை­ய­கத்தில் கட­மை­யாற்றி இருக்­கின்­றனர். மலை­ய­கத்தின் கல்வி உள்­ளிட்ட பல்­வேறு அபி­வி­ருத்தி கரு­தியும் இவர்கள் அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்றி இருக்­கின்­றனர். வர்த்­தக ரீதி­யி­லான தொடர்­பு­களும் அதி­க­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­ற­மையை அறியக் கூடி­ய­தா­கவே உள்­ளது. வட பகு­தியில் இந்­திய வம்­சா­வளி மக்கள் அதி­க­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். வடக்கு கிழக்கு பகுதி மக்­க­ளுக்கு துன்பம் நேர்ந்­த ே­ப ாது வீட்டில் உள்ள இரண்டு கிலோ அரி­சியில் ஒரு கிலோ­வையும், உள்­ள­துக்குள் நல்ல துணி­ம­ணி­க­ளையும் சுருட்­டிக்­கொண்டு வடக்கு உற­வு­க­ளுக்கு உதவ மலை­யக மக்கள் முன்­வந்­திருக்கின்­றனர். சுனாமி நிலை­மை­களின் போது இது அதி­க­மா­கவே காணப்­பட்­டது. யுத்தம் இடம் பெற்­ற­ போது எமது மக்கள் கண்ணீர் சிந்­தி­னார்கள். வடக்கு, கிழக்கு மக்­களின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­திற்­காக இறை­வனை மன­மு­ருகி பிரார்த்­தித்­தார்கள். இந்தத் தொடர்பு இன்று அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

வடக்கின் பிரச்­சி­னைக்­காக மலை­ய­கத்­த­வர்கள் சிறை சென்­றுள்­ளார்கள். மலை­யக இளை­ஞர்கள் பலர் இன்னும் அர­சியல் கைதி­க­ளாக சிறை­களில் தனது வாழ்க்­கையை கழித்து கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கும், மலை­ய­கமும் இணைந்து செயற்­ப­ட ­வேண்­டிய கட்­டாயம் இப்­போ­துள்­ளது. முன்­ன­தாக மலை­ய­கத்தின் கட்ட பூலா பகு­தியில் உள்ள இளை­ஞர்கள் கரப்­பந்­தாட்ட விளை­யாட்­டிற்­காக யாழ்ப்­பாணம் சென்ற நிகழ்­வுகள் என் கண்முன் நிழ­லா­டு­கின்­றது. இந்த ஒற்­றுமை மென்­மேலும் வலுப்­பெ­றுதல் வேண்டும். அமரர் தொண்­டமான் பிர­பா­க­ர­னிடம் சில காலங்­க­ளுக்கு ஆட்­சியை ஒப்­ப­டைக்­கு­மாறு முது­கெ­லும்­புடன் வலி­யு­றுத்தி பேசி இருந்ததை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று வடிவேல் சுரேஷ் ஆழமாகவே வலியுறுத்தி இருந்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை

வடக்கும் மலையகமும் இணைந்து செயற்படுவதனால் அரசியல் ரீதியாக நன்மைகள் ஏற்படுவதோடு மேலும் பல சாதக விளைவுகளும் ஏற்படும். புவியியல் ரீதியான வேறுபாடுகளும் கலாசார ரீதியான வேறுபாடுகளும் இருசாராரையும் தனியாக அடையாளப்படுத்தினாலும் வேற்றுமைக்குள்ளும் ஒரு ஒற்றுமை காணப்படுவதாக கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு சாராரும் தத்தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி கொள்வதோடு சிறுபான்மையினர் என்கிற ரீதியில் ஒன்றிணைதல் வேண்டும். இல்லையேல் பெரும்பான்மையினர் அல்லது இனவாதிகள் எம்மை கிள்ளுக்கீரையாக்கி விடுவார்கள். தமிழர்கள் என்ற ரீதியில் பொருளாதாரம், அபிவிருத்தி, அரசியல் மேலோங்குகை என்பவற்றுக்காக ஒன்றிணைந்த செயற்பாடு அவசிய மாக உள்ளது. மேலும் கலை, கலாசாரங்களை மேம்படுத்து வதற்கு இரு பக்கத்திலுமே ஒரு நிறுவன ரீதியான வளர் ச்சி ஏற்பட வேண்டும்.

அண்மைக்காலமாக சிறுபான்மையினரின் பலத்தை நாம் அரசியலில் வெளிப்படுத்தி வருகின்றோம். பெரும் பான்மைகள் சிறுபான்மையினரை நிராகரிக்க முடியாது என்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது. கல்வி, பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல விடயங்களில் மலையகத்தில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் இணைவு என்பது மிகப்பெரும் சக்தி. இரண்டாவது பலம் பொருந்திய சமூகமாக நாம் எம்மை வளர்த்து கொள்ளுதல் முக்கிய தேவையாக உள்ளது.

இ.தொ.கா. – விக்கி சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறு முகன் தொண்டமான், மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ் வரனை சந்தித்து பேசி இருந்தனர். நடந்து முடிந்த உள் ளூராட்சி தேர்தல் நிலைவரங்கள் நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் முன்னெடுப்பு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. உண்மையில் இது ஒரு சிறப்பான விடயமாகும். இத்தகைய சந்திப்புகள் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும். ஒவ்வொரு சமூகத் தினரினதும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அப்பிரச் சினைகளை தீர்த்து கொள்வதற்கான காய்நகர்த்தல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரை யாடல்களின் போது கவனம் செலுத்துவது மிகவும் பய னுள்ளதாக அமையும். ஏனைய கட்சிகளும் இவ்வாறு இணக்கப்பாட்டுடன் செயற்படுவது காலத்தின் தேவை யாகி உள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.