Jump to content

கொள்கையற்ற கூட்டுக்கள்


Recommended Posts

கொள்கையற்ற கூட்டுக்கள்

a1-d05102ce675ca9f0d1c954bb011f0a3f54f1b63b.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்­றன இணைந்த ஒரு கூட்­டணி உரு­வாகும் என்று பர­வ­லான எதிர்­பார்ப்பு ஒன்று காணப்­பட்­டது. ஆனால் திடீ­ரென, சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் கூட்­டணி வைத்துக் கொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி, புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட தமிழ் விடு­தலைப் புலிகள் கட்சி, ஈரோஸ் உள்­ளிட்ட சில கட்­சி­களை இணைத்து உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தவ­றான பாதையில் செல்­கி­றது, தேவை­யின்றி அர­சாங்­கத்­துக்கு முண்டு கொடுக்­கி­றது, சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் சர்­வா­தி­கா­ரத்­த­ன­மாக முடி­வெ­டுக்­கி­றார்கள், என்­றெல்லாம் குறை சொல்லித் தான், ஈ.பி.ஆர்.எல்.எவ்., கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தது..

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி என்று தம்மைக் கூறிக் கொண்ட, சுரேஸ் - சங்­கரி அணி, உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்த போதிலும், எங்­குமே பெரி­ய­ளவில் வெற்­றியைப் பெற­வில்லை.

பத்­தோடு பதி­னொன்­றாக இருந்­ததே தவிர, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி போன்று தமக்­கான தனித்­து­வத்தை வெளிப்­ப­டுத்­த­வில்லை.. ஆங்­காங்கே சில உள்­ளூ­ராட்சி சபை­களில் ஆச­னங்­களைக் கைப்­பற்­றி­யது அதுவும், கலப்பு தேர்தல் முறையின் புண்­ணி­யத்­தினால் தான் கிடைத்­தது.

வவு­னி­யாவில் தமக்கு பெரிய செல்­வாக்கு இருப்­ப­தாக நினைத்துக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு, பெரும் ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபைகள் தொங்கு நிலையில் இருந்த போது, தமிழர் விடு­தலைக் கூட்­டணி எந்தத் தரப்­பையும் ஆத­ரிக்­காமல் நடு­வு­நிலை வகிப்­பது என்று முடிவு செய்­யப்­பட்­டது .

அதற்­குள்­ளா­கவே, புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி, இந்தக் கூட்­ட­மைப்பில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் அதற்குப் பிர­தான காரணம். தமது கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் அதிக வாக்­கு­களைப் பெற்ற இடங்­களில், விகி­தா­சார பட்­டியல் ஆச­னங்­களை தமக்கு வழங்­காமல், ஈ.பி.ஆர்.எல்.எவ். தமது ஆட்­களை நிய­மிப்­ப­தா­கவும், அது­கு­றித்து ஆனந்­த­சங்­க­ரி­யிடம் முறை­யிட்ட போதும் அவர் மௌன­மாக இருப்­ப­தா­கவும், புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி கூறி­யி­ருந்­தது.

அத்­துடன், கூட்­டணி உரு­வாக்­கப்­பட்ட போது, ஒரு கட்­சியின் உறுப்­பி­னரை இன்­னொரு அங்­கத்­துவ கட்­சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் விதி­முறை வகுக்­கப்­பட்­டது, அதற்கு மாறாக திரு­கோ­ண­ம­லையில் தமது அமைப்­பா­ளரை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தமது பக்கம் இழுத்துக் கொண்­ட­தா­கவும், புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

கூட்­ட­மைப்­புக்குள் தமி­ழ­ரசுக் கட்சி அதி­காரம் செலுத்­து­வ­தா­கவும் பங்­காளிக் கட்­சி­களை ஒழிக்கும் வேலையைச் செய்­வ­தா­கவும் குற்­றம்­சாட்டி அதி­லி­ருந்து வெளியே வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும், இப்­போது அதையே செய்­வ­தாக அந்தக் கட்­சியின் தலைவர் இன்­ப­ராசா ஓர் அறிக்­கையில் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அதனைப் பலரும் அப்­போது கண்­டு­கொள்­ள­வில்லை. பல ஊட­கங்­களும் கூட அந்தச் செய்­தியை வெளி­யி­ட­வில்லை.

இந்­த­நி­லையில், தமிழ்த் தேசிய விடுலைக் கூட்­ட­மைப்பு மீண்டும்

 ஓர் உடைவைச் சந்­தித்­தி­ருக்­கி­றது.

கொள்­கைகள் கொள்ளை போன பின்னர், தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பில் இருப்­பதில் பய­னில்லை, அதை விட்டு வெளியே போகிறோம் என்று ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி கடந்த வாரம் அறி­வித்­தி­ருக்­கி­றது. இந்தக் கூட்டில் இருந்து, தாம் வெளி­யே­று­வ­தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் கொள்­கை­யற்ற நடை­மு­றைகள் தான் காரணம் என்று, அந்தக் கட்­சியின் செய­லாளர் சிவ­கரன் கூறி­யி­ருக்­கிறார். (11ஆம் பக்கம் பார்க்க)

வவு­னியா நக­ர­ச­பையைக் கைப்­பற்­று­வ­தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் ஆத­ரவை மாத்­தி­ர­மன்றி, ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வையும் கூட பெற்­றி­ருந்­தது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேரி­ன­வாதக் கட்­சிகள் மற்றும் ஈ.பி.டி.பி. போன்­ற­வற்றின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைப்­பதை விமர்­சித்து விட்டு, அதே­வ­ழியில், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயற்­பட்­டது அதை­விட மோச­மான செயல் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

யாழ். மாந­க­ர­ச­பையில், ஆட்­சி­ய­மைக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முதலில் மோதிய ஈ.பி.டி.பி., பின்னர் ஒத்­து­ழைத்­தது. வேறும் பல சபை­களில் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு அளித்­தி­ருந்­தது ஈ.பி.டி.பி.

இதனை சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் வெட்­கக்­கே­டான செயல் என்று விமர்­சனம் செய்­தி­ருந்தார்.

ஆனால், வவு­னியா நகர சபை­யிலும், வவு­னியா வடக்கு உள்­ளிட்ட ஏனைய பிர­தேச சபை­க­ளிலும் கூட ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஈ.பி.டி.பி. போன்­ற­வற்றின் ஆத­ரவை மாத்­தி­ர­மன்றி, மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வையும் பெற்று ஆட்­சி­ய­மைத்­தது அல்­லது ஆட்­சியைப் பிடிக்க முயன்­றது சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்.

அதிலும் 21 உறுப்­பி­னர்­களைக் கொண்ட வவு­னியா நக­ர­ச­பையில், வெறும் 3 உறுப்­பி­னர்­களை மட்டும் வைத்துக் கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது ஆச்­ச­ரி­ய­மான விடயம்.

பேரி­ன­வாத கட்­சிகள் மற்றும், ஈ.பி.டி.பி.யுடன் கூட்டு அமைத்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்த போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அதனை நிரா­க­ரித்து ஒரு கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

கூட்டு வைத்துக் கொள்­வது என்­பது, ஆட்­சியைப் பகிர்ந்து கொள்­வது, தலைவர் பத­விக்­காக, உப தலைவர் பத­வியை விட்டுக் கொடுப்­பது போன்ற பேரங்கள் செய்து தான் கூட்டு வைத்துக் கொள்­ளப்­படும். ஆனால் கூட்­ட­மைப்பு அப்­ப­டி­யான எந்த கூட்­டையும் யாரு­டனும் வைத்துக் கொள்­ள­வில்லை என்று அவர் கூறி­யி­ருந்தார்.

ஆனால் வவு­னியா உள்­ளூ­ராட்சி சபை­களில், நடந்த சம்­ப­வங்­களைத் தொகுத்துப் பார்த்தால், அங்கு ஆட்­சியைப் பிடிக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் மாத்­தி­ர­மன்றி, பொது­ஜன முன்­ன­ணி­யு­டனும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., கூட்டு பேரங்கள் நடத்­தி­யுள்­ளதா என்ற வலு­வான சந்­தே­கங்கள் உள்­ளன.

அதா­வது, வவு­னியா நக­ர­ச­பையின் ஆட்­சியை 3 உறுப்­பி­னர்­க­ளுடன் கைப்­பற்­றி­ய­தற்கு கைம்­மா­றாக, உப தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தாரை வார்க்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு ஆத­ர­வாக ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் வாக்­க­ளித்­தது.

25 உறுப்­பி­னர்­களைக் கொண்ட வவு­னியா வடக்கு பிர­தேச சபையின் தலைவர் பத­விக்கு, வெறும் 3 ஆச­னங்­களைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்­டி­யிட்­டது. ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வுடன் 11 வாக்­கு­க­ளையும் பெற்றுக் கொண்­டது. ஆனாலும் அதிர்ஷ்டம் அவர்­க­ளுக்கு கைகொ­டுக்­க­வில்லை.

சம வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­ததால், திரு­வு­ளச்­சீட்டு முறையில் தெரிவு நடந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ். தோல்­வி­ய­டைந்­தது.

இதை­ய­டுத்து நடந்த உப தலைவர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பொது­ஜன முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் போட்­டி­யிட்­டன. தலைவர் தெரிவில் தம்மை ஆத­ரித்த பொது­ஜன முன்­னணி உதப தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்­டதால், ஈ.பி.ஆர்.எல்.எவ். விலகிக் கொண்­டது.

இந்த தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கூட கூட்­ட­மைப்பு வேட்­பா­ளரை ஆத­ரித்­தது. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ். நடு­நிலை வகித்­தது.

வவு­னியா தெற்கு, மற்றும் வெங்­க­லச்­செட்­டிக்­குளம் பிர­தே­ச­ச­பை­க­ளிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். நடந்து கொண்ட முறை, தனக்கு மூக்குப் போனாலும் சரி, எதி­ரிக்கு சகுனப் பிழை­யாக அமைந்து விட வேண்டும் என்­ப­தா­கவே இருந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், வவு­னியா மாவட்­டத்தில் தாம் அடைந்த பின்­ன­டை­வுக்கு எப்­ப­டி­யா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பழி­வாங்க வேண்டும். அவர்­களை ஆட்­சி­ய­மைக்க விடக்­கூ­டாது என்­ப­தி­லேயே ஈ.பி.ஆர்.எல்.எவ். உறு­தி­யாக இருந்­தது.

அதற்­காக யாருடன் கூட்டுச் சேரவும், எந்த எல்லை வரை செல்­வ­தற்கும் தயா­ராக இருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் இதே அணு­கு­மு­றை­களை சில இடங்­களில் பின்­பற்­றிய போது, அதை விமர்­சித்­த­வர்கள் பலரும் இப்­போது வாய் திறக்­க­வில்லை.

ஆனாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் இந்த அணு­கு­முறை, தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஐந்து, ஆறு கட்­சிகள் இணைந்த கூட்­ட­மைப்பு என்றும், மாற்று அணி என்றும் கூறிக் கொண்ட இந்தக் கூட்­ட­ணியில் இப்­போது, எஞ்­சி­யி­ருப்­பது யார் என்று, அதன் தலை­வ­ரான ஆனந்­த­சங்­க­ரிக்கே தெரி­யாது.

ஏனென்றால், இந்தக் கூட்­ட­ணியில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு கட்­சியின் தலைவர் யாழ். மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்ட நிலையில், திருட்டு வழக்கில் 4 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு இப்­போது சிறைச்­சா­லையில் கம்பி எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார்.

புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி எப்­போதோ வெளியே போய் விட்­டது. ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்­சியும் வெளியே போய் விட்­டது. ஈரோஸ் இதில் இடம்­பெற்­றி­ருக்­கி­றதா, இல்­லையா? என்று தெரியாது.

இந்தநிலையில் இப்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தான் எஞ்சியிருக்கின்றன. இவையும் கூட எங்காவது இடம் கிடைத்தால் ஒதுங்கிக் கொள்ளத் தயங்கமாட்டா.

ஏனென்றால், உள்ளூராட்சித் தேர்தல் இவர்களின் பலத்தை புடம் போட்டுக் காட்டி விட்டது. எனவே, இந்தக் குதிரையை அவர்கள் இனி நம்பப் போவதில்லை.

புதிய குதிரை ஒன்றை அவர்கள் தேட வேண்டியிருக்கும். அதில் இடம் கிடைத்து விட்டால் தொற்றிக் கொள்வார்கள். இல்லையேல் மீண்டும் கூட்டமைப்பிடம் சரணடைந்தாலும் ஆச்சரியமில்லை.

கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அவருக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்தவர்கள், மஹிந்த அணியுடன் இணைந்தேனும் ஆட்சியைப் பிடிக்க முனைந்தவர்கள், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-22#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.