Jump to content

'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர்


Recommended Posts

'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர்

 
 

கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ.

 

ஜெனிஃபர்

``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். 

``சின்ன வயசுல படங்களில் நடிச்சிட்டு இருந்த மாதிரி சீரியலிலும் நடிச்சிட்டு இருந்தேன். ‘கில்லி’ படம் பண்ணதுக்கு அப்புறம் படிக்கணும்னு கொஞ்சம் பிரேக் எடுத்தேன். சின்னத்திரைக்குள் ‘மானாட மயிலாட’ மூலமா ரீ - என்ட்ரி கொடுத்தேன். அதைத் தொடர்ந்து சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு கேரக்டரில் நடிச்சிருந்தாலும், என்னுடைய ஃபேவரைட் நெகட்டிவ்தான்” என்றவர் இத்தனை வருடம் கழித்தும் கில்லி புவியை மக்கள் ஞாபகம் வைத்திருப்பது குறித்துப் பேசினார்.

ஜெனிஃபர்

`` வெளிய எங்க போனாலும் இன்னமும் ‘புவி’ன்னு தான் கூப்டுறாங்க. எல்லா நடிகைகளுக்கும் இமேஜ் ரொம்ப முக்கியம். எனக்கு அந்த இமேஜை புவி தந்தா.  அந்தப் படத்துல நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். குறிப்பா, பொறுமை எவ்வளவு முக்கியங்கிறதை விஜய் அண்ணா தன்னோட செயல்களால புரிய வைச்சார். பார்க்க அமைதியா உட்கார்ந்து இருப்பார்; ஆனா, கேமராவை ஆன் பண்ணின உடனேயே பட்டாசு மாதிரி வெடிப்பார். அமைதிங்குற ஆயுதத்தை வைத்தும் சாதிக்க முடியுங்குறதை எப்பவும் நிரூபிப்பார். இப்பவும் எதாவது ஒரு நிகழ்ச்சியில என்னைப் பார்த்தா கில்லி தங்கச்சி வசனத்தைப் பேசச் சொல்லி ரசிப்பார். விஜய் அண்ணாவுக்கு தங்கச்சின்னா ரொம்பப் பிடிக்கும். அண்ணன், தங்கச்சி பட லிஸ்டுல நிச்சயம் கில்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. இத்தனை வருஷம் கழிச்சும் மக்கள் அதைப் பத்தி பேசுறது ஆச்சர்யமா இருக்கு.

நடிப்பைப் பொறுத்தவரைக்கும், எப்போ வாய்ப்பு அமையும், அமையாதுன்னு சொல்லவே முடியாது. அதனால துபாயில் ஹேர் & மேக்கப் புரொபஷனல் கோர்ஸ் படிச்சேன். கடந்த ஒன்றரை வருஷமா பிரைடல் மேக்கப் பிஸினஸ்ல இருக்கேன். பிரைடல் மேக்கப்பை பொறுத்தவரை என் ஸ்டைல்... மணப்பொண்ணோட கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதுதான். எங்க இருந்து பார்த்தாலும் மணப்பெண்ணோட கண்கள் பளிச்சுனு தெரியணும்.  கூடவே, ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியும் நடத்திட்டு இருக்கேன்” என்கிறவருக்குப் புத்தகம் படிப்பது என்றால் கொள்ளை பிரியமாம். 200 புத்தகங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். யாரிடம் புத்தகத்தை கொடுத்தாலும் அதை மறக்காமல் திரும்ப வாங்கிவிடுவாராம்.

ஜெனிஃபர்

``நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு  நிகழ்ச்சிக்காக தோஹா போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் ‘தசாவதாரம்’ நிகழ்வுகளை பிரதிபலிக்குற மாதிரி நடனம் ஆடினேன். அதைப் பார்த்து ரசித்த பார்வையாளர்களில் ஒரு அம்மா, என்னைத் தேடி டிரெஸிங் ரூமுக்கு வந்து ரொம்ப கண் கலங்கி பாராட்டினாங்க. பாராட்டுனதோட விடாமல், அவங்க கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை என் கையில் மாட்டிவிட்டாங்க. இப்போ வரைக்கும் அந்த மோதிரத்தை நான் கழட்டவே இல்ல. அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 

 

பிரெஞ்ச், ஜெர்மன்னு ரெண்டு மொழிகளிலும் நாலு லெவல் முடிச்சிருக்கேன். அதைப் பயன்படுத்தி டிரான்ஸிலேஷன் ஜாப் பண்ணணும்னு எண்ணம் இருக்கு.  அதோட, என் பிஸினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகணுங்கிறதுதான் என் ஆசை’’ எனப் புன்னகைக்கிறார் ஜெனிஃபர்.

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/122739-actress-jennifer-talks-about-her-experience-in-ghilli-movie.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.