Jump to content

தமிழ் தலை­மையின் விட்­டுக்­கொ­டுப்பை உதா­சீனம் செய்யும் இன­வா­திகள்


Recommended Posts

தமிழ் தலை­மையின் விட்­டுக்­கொ­டுப்பை உதா­சீனம் செய்யும் இன­வா­திகள்

 

எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அவரை அந்தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கும் பொது எதி­ரணி உட்­பட பல தரப்­புக்­களும் தற்­போது முயன்று வரு­கின்­றமை கண்­கூ­டாக தெரி­கின்­றது.

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான பொது எதி­ர­ணியின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­க­வேண்டும் என்று பொது எதி­ர­ணி­யி­னரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஒரு பிரி­வி­னரும் வலி­யு­றுத்தி வந்­தனர்.

இந்த விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­ட­வேண்­டு­மென்றும் இல்­லையேல் பார­தூ­ர­மான விளை­வு­களை சந்­திக்­க­வேண்டி வரும் என்றும் இந்தத் தரப்­பினர் பல தட­வைகள் எச்­ச­ரிக்­கை­க­ளையும் விடுத்­தி­ருந்­தனர். ஆனாலும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வான முடிவை எடுத்து பிரே­ர­ணைக்கு எதி­ராக கூட்­ட­மைப்­பி­னரை வாக்­க­ளிக்கச் செய்­தி­ருந்தார்.

இந்த நிலை­யில்தான் தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்சி இடம்­பெற்று வரு­கின்­றது. அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிள­வு­பட்­ட­தை­ய­டுத்து பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்கள் எதி­ர­ணியில் அம­ர­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர். இவ்­வாறு முடி­வெ­டுத்­துள்ள இவர்கள் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து தாமே செயற்­ப­ட­வேண்டும் என்ற கருத்தை தெரி­வித்து வரு­கின்­றனர். இதன் மூலம் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கைப்­பற்­று­வ­தற்­கான முயற்­சியில் அந்தத் தரப்­பி­னரும் ஈடு­பட்­டுள்­ளனர்.

சம்­பந்­த­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­வித்து வரு­கின்­றனர். சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாம் கொண்­டு­வ­ருவோம். சில தினங்­களில் கூட­வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­குழு இது குறித்த தீர்­மா­னத்தை எடுக்­க­வுள்­ளது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார். எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­ரிய வகி­பா­கத்தை அவர் வகிக்­க­வில்லை என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லி­ய­ ரம்­புக்­வெல்ல திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக கருத்து கூறி­யுள்­ளனர். இந்த நிலை­யில்தான் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த 16 உறுப்­பி­னர்­களும் எதி­ர­ணிப்­பக்கம் செல்­வ­தனால் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை மாற்றி தாம் அந்தப் பத­வியை கைப்­பற்­றிக்­கொள்­ள­வேண்டும் என்ற நிலைப்­பாடு மேலோங்கி வரு­கின்­றது.

 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 106 உறுப்­பி­னர்­க­ளையும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி 95 உறுப்­பி­னர்­க­ளையும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது 16 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றி­ருந்­தன. இந்த நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த உறுப்­பி­னர்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து மூன்­றா­வது பெரும்­பான்­மையைப் பெற்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரிடம் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டது. இதே­போன்றே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான செல்வம் அடைக்­க­ல­நாதன் பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாகப் போட்­டி­யிட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்த போதிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணி­யினர் அர­சாங்­கத்­துடன் இணை­யாது பொது எதி­ர­ணி­யாக செயற்­பட்­டு­வந்­தனர். இவ்­வாறு செயற்­பட்ட இவர்கள் பாரா­ளு­மன்­றத்தில் எதி­ர­ணியில் தாமே பெரும்­பான்­மையைக் கொண்­டி­ருப்­பதால் தமக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி வந்­தனர். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த உறுப்­பி­னர்கள் இவர்கள் என்­ப­தனால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வழங்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால் தற்­போது சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த 16 உறுப்­பி­னர்கள் எதி­ர­ணிப்­பக்கம் செல்­வ­தனால் அவர்­களும் ஒன்­றி­ணைந்து பிர­தான எதிர்க்­கட்சி தாமே என்று அறி­விப்­ப­துடன் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியே எங்­க­ளது அடுத்த இலக்­காகும் என்றும் கோரி­வ­ரு­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்­சியின் பொறுப்­புக்­களை முன்­னெ­டுக்கும் நோக்­கி­லேயே நாம் செயற்­படப் போகின்றோம். அதற்­காக பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்து எமக்கு அவ­சியம். எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியே எமது அடுத்த இலக்­காகும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ரணில் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதி­லி­ருந்து எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யினை கைப்­பற்­று­வ­தற்கு பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து சுதந்­தி­ரக்­கட்­சியின் ஒரு தரப்­பினர் வியூகம் அமைக்­க­வுள்­ளமை தெளி­வா­கின்­றது.

ஆனால் சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த 23 உறுப்­பி­னர்கள் இன்­னமும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து நல்­லாட்­சியை முன்­கொண்டு செல்­வ­தற்கு இணங்­கி­யி­ருக்­கின்­றனர். எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்கள் அர­சாங்­கத்தை எவ்­வாறு முன்­கொண்டு செல்­வது என்­பது தொடர்பில் அவர்கள் திட்­ட­வ­ரை­பொன்­றையும் சமர்ப்­பித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். இவ்­வாறு சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றாது தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்தால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெற முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் அனை­வரும் வெளி­யே­று­வார்­க­ளே­யானால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியில் மாற்றம் வரும் சூழ்­நிலை ஏற்­படும்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் நல்­நோக்­குடன் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்கம் முதற்­ற­ட­வை­யாக எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பாரா­ளு­மன்­றத்தில் பதவி வகித்­தி­ருந்தார். அதன் பின்னர் இரண்­டா­வது முறை­யாக தற்­போது சம்­பந்தன் அந்த பத­வியை வகிக்­கின்றார்.

 கடந்த ஆறு தசாப்­த­கா­லத்­திற்கும் மேலாக தமிழ் மக்கள் தமது உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­காக போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். மூன்று தசாப்­த­கா­லத்­திற்கும் மேலாக தமிழ் மித­வாத தலை­வர்கள் அஹிம்­சா­வ­ழி­யிலும் மூன்று தசாப்­தங்­க­ளாக தமிழ் இளைஞர், யுவ­திகள் ஆயு­த­வ­ழி­யிலும் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். தமிழ் மித­வாத தலை­வர்­களின் போராட்­டங்கள் சிங்­கள பேரி­ன­வாத அர­சாங்­கங்­க­ளினால் அடக்கி ஒடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஈழத்தை நோக்­கிய வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்தை பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டிய நிலைமை தமிழ் மித­வாத த் தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

அதன் பின்னர் ஈழக்­கோ­ரிக்­கையை முன்­வைத்து ஆயுத ரீதி­யி­லான போராட்­டங்கள் இடம்­பெற்­றது. இதன் பின்­ன­ணியில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்த தீர்வைக் காண்பதற்கு தயார் என்ற சமிக்ஞையை தமிழர் தரப்பு வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தீர்வைக் காண்பதற்கும் தமிழர்களின் தலைமை ஒத்துழைப்பு வழங்கி வந்தது. ஆனால் இத்தகைய ஒத்துழைப்புக்களை உதாசீனம் செய்யும் வகையிலேயே தற்போதைய அரசியல் நிலைமை உருவாகியிருக்கின்றது.

பேரினவாதக் கட்சிகள் தமது அரசியல் சுயநலன்களை அடைந்துகொள்ளும் வகையிலேயே தமிழ் தலைமையின் விட்டுக்கொடுப்புக்களை உதாசீனப்படுத்தியிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாகவே தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்தகைய நிலைமை தொடருமானால் அது மீண்டும் இன நெருக்கடியை உக்கிரமடையச் செய்யுமே தவிர அதற்கு தீர்வு வழங்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது .

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-21#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.