Jump to content

#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?


Recommended Posts

#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?

 

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஆறாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

திருமா

தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, தேசியம் என்பது தொடர்பான புரிதலைப் பெற வேண்டும். அதிலிருந்துதான் தமிழ்த் தேசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கொண்ட, குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடிய, ஒரு நெடிய கலாசாரத்தைக் கொண்ட மக்கள் வாழும் பகுதி.

ஒரு நிலப்பரப்பு, ஒரு மொழியைப் பேசும் மக்கள், அவர்களது கலாசாரம், அவர்களுடைய பொருளியல் - சமூக உறவுகள், உற்பத்தி உறவுகள் என ஒருமித்த உறவுகளைக் கொண்டதாக இந்த தேசம் என்பது இருக்கும். தன்னிறைவு, தன் ஆளுமை என்பது அதில் நிலைநிறுத்தப்படும்.

தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும், நிர்வகிக்கும் ஆளுமையை அந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அது தேசிய இனமாகப் பரிணமிக்கும். வெறும் மொழி உணர்வும், இன உணர்வும் ஒரு தேசிய இனத்திற்கு இருந்தால் மட்டும் அது தேசிய இனமாக வளர்ந்துவிட்டதாக சொல்ல முடியாது.

மேலே சொன்ன இந்த வரையறைகள் தமிழ்த் தேசியத்திற்கு இருக்கிறதா என்பதிலிருந்துதான் இந்த விவாதத்தைத் துவங்க வேண்டும்.

தமிழ் என்கிற தேசிய இனம், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட சமூகமாக, தங்களுக்கிடையில் ஒருமித்த உறவுகளைக் கொண்டதாக, எந்த நிலையிலும் தனிநாடாக இயங்கும் பக்குவத்தை, இயங்கும் முதிர்ச்சியைப் பெற்றிருக்கிறதா என்று கேட்டால், இந்த தகுதிகள் தமிழ்த் தேசிய இனத்திற்கு முழுமையாக இருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்குள் ஒரு மாநிலம் என்ற வரையறைக்குள் தமிழ்நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது.

ஆகவே தமிழ்த் தேசியத்தை செழுமைப்படுத்த வேண்டுமென்றால் இதைத் தனி நாடாக பரிணமிக்கச் செய்வதுதான் இலக்கு என்ற அடிப்படையில் அது அமைய வேண்டும். அப்போதுதான் தமிழ்த் தேசியம் என்பது முழுமையும் பெறும், செழுமையும் பெறும். ஒரு மாநிலமாக இயங்கும்போது தமிழ்த் தேசியம் செழுமை பெறாது.

ஹிந்தி எழுத்து அழிப்பு

இந்த நிலையில், இந்தியாவுக்குள் இருந்துகொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பேசுவதுதான் தமிழ் தேசியமா அல்லது நாங்கள் ஒரு தனி தேசமாக இயங்கப்போகிறோம் எங்களுக்கு அந்த தகுதியும் முதிர்ச்சியும் இருக்கிறது என்று குரல்கொடுக்கப் போகிறோமா என்ற கேள்விக்கு நாம் விடைதேட வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை வெறும் மொழி உணர்ச்சி, இன உணர்ச்சியின் அடிப்படையில் நாங்கள் அணுகவில்லை.

இந்து - இந்தி - இந்தியா என்ற கட்டமைப்பிலிருந்து வேறுபட்டு, அதிலிருந்து விடுபட்டு இயங்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதுதான் தமிழ்த் தேசியமாக பரிணாமம் பெற முடியும்.

ஆக, இந்திய தேசியத்திற்கு எதிரான போராட்டம்தான் தமிழ்த் தேசியத்திற்கான போராட்டமாக இருக்க முடியும். இந்திய தேசியம் இங்கே வெறும் நிலப்பரப்பை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கே மொழிவழித் தேசியத்தைப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். மதவழி தேசியத்தைப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.

போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆக, இந்த இரு தேசியங்களும் இணைந்து கட்டமைக்கப்பட்ட ஒரு தேசியமாக இந்திய தேசியம் இருக்கிறது. இந்து தேசியம் என்பது மதவழி தேசியம். ஹிந்தி என்பது மொழிவழி தேசியம்.

இதில் மதவழி தேசியம்தான் மதவாத சக்திகளின் முதன்மையான அடையாளம். அவர்கள் அதைக் கட்டமைப்பதற்குத்தான் ஹிந்தியை பிற மாநிலங்களின் மீது திணிக்கிறார்கள். பிற மொழியைப் பேசுபவர்களிலும் இந்துக்கள் இருந்தாலும் இந்தியைத் திணிப்பதால், மொழிவழி தேசியம் சிதைந்து மதவழி தேசியம் கட்டமைக்கப்படுகிறது.

தமிழனா, இந்துவா என்ற கேள்வி எழும்போது மொழி உணர்வு பெற்றவர்கள் இந்து என்ற அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இது மதவழி தேசியத்தை பாதிக்கிறது.

ஆகவே, பிற மொழிகளைப் பேசும் மாநிலங்களில் மொழிவழி தேசியம் மேலோங்கிவிடக்கூடாது; இந்தியைத் திணிப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இவர்களது நோக்கம், இந்திய தேசியத்தை இந்து தேசியமாக கட்டமைப்பதுதான். இப்போது யதார்த்தத்தில் அப்படித்தான் இருக்கிறது என்றாலும் அதை மேலும் வலுப்படுத்த நினைக்கிறார்கள். ஒரே மொழியைப் பேசினால்தான், ஒரே மதம் என்ற நிலையை உருவாக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

இந்தத் திட்டங்களைப் புரிந்துகொண்டால்தான் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முடியும். ஆனால், இங்கே தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், இந்து மதவழி தேசியம் என்பதை மிக பலவீனமான ஒரு கருத்தாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஜாதியப் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்வதில்லை. அதிலிருந்து விலகி நிற்கிறார்கள்.

ஜாதியப் பிரச்சனைகளைப் பேசினால், தமிழன் என்ற உணர்வு சிதைந்துவிடும்; இந்து, இந்துத்துவ அரசியலை எடுத்தால் தமிழர்களிடம் பிளவு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆகவே இதைத் தாண்டிச் செல்ல முனைகிறார்கள். தமிழ் தேசியம் இதனால்தான் நீண்ட காலமாக ஒரு வறண்ட நிலையில் இருக்கிறது.

ஆகவே, இந்து தேசிய ஒழிப்பில்தான் தமிழ்த் தேசியம் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில், ஜாதி முரண்பாடுகளின் ஒழிப்பில்தான் தமிழ் தேசியம் இருக்கிறது.

தமிழ்த் தேசிய சக்திகள், ஜாதி ஒழிப்பு சக்திகளோடு கைகோர்க்க வேண்டும். துவக்கத்தில் இது பின்னடைவையும் சோர்வையும் ஏற்படுத்தலாம். ஆனால், இதனைக் கூர்மைப்படுத்தி, கூர்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல முடியும்.

இந்த ஜாதி ஒழிப்புக் களத்தில் சொந்தங்களைக்கூட பகைத்துக்கொள்ள நேரிடும். ஆனால், அது ஒரு நட்பு முரண்பாடுதான். இந்துவாக இருந்து கொண்டு, தமிழ் தேசியம் வாழ்க என்பது போலித்தனமானது.

தமிழ் தேசியம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உயர் ஜாதியாக கருதிக்கொண்டு தமிழ் தேசியம் வாழ்க என்பது போலித்தனமானது. ஜாதிப் பெருமை பேசிக்கொண்டே தமிழ் தேசியம் பேசினால், அது அந்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லாது.

தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடினால், ஒருவேளை தமிழைப் பாதுகாக்கலாம். ஆனால், அது தமிழ்த் தேசியமாக வளர்ச்சியடையாது. தனித் தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி நகர வேண்டும்.

ஜாதி ஒழிப்பை முதன்மை கருத்தியலாக ஏற்க வேண்டும். மதவழி அடிப்படையிலான இந்திய தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியத்தை கட்டமைக்க முடியும்.

எந்த ஒரு பிரச்சனையிலும் ஜனநாயக சக்திகளை அடையாளம் காண்பது முக்கியம். அதை எப்படிச் செய்வது? தமிழ் தேசிய அரசியலுக்கு நட்பு சக்திகள் யார், பகை சக்திகள் யார்? மொழிவழி தேசியத்திற்கு எதிரானவர்கள் யாரும் தமிழ் தேசியத்திற்குப் பகை சக்திகள்தான்.

அவர்கள் மதவழி அடிப்படையிலான இந்திய தேசியவாதிகள். குறிப்பாக இந்துத்துவ, ஹிந்தி அடிப்படையிலான இந்திய தேசியம் ஒரு பகை சக்தி.

ஆக, இந்து - ஹிந்தி - இந்தியா என்பதுதான் தமிழ் தேசியத்திற்கு பகை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிதீவிர இந்துத்துவவாதிகள் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு பகைவர்கள்தான். பிற மொழி பேசுவதாலேயே, பிற மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பதாலேயே அவர்களை பகைவர்கள் என்று கருதுவது ஏற்புடையதல்ல.

தமிழ்

தமிழ் தேசியத்தின் வரையைறையை உள்வாங்கியவர்கள், களப்பணி ஆற்றுபவர்கள், ஆற்றியவர்கள் தமிழ் அல்லாத மொழிகளைப் பேசினாலும் அவர்கள் நட்பு சக்திகள்தான்.

ஆகவே, வெறும் மொழி அடிப்படையிலான அடையாளத்தை தமிழ்த் தேசிய அடையாளமாக பார்க்க முடியாது. தமிழர் யார் என அடையாளம் காண்பதைவிட, தமிழ் தேசிய சக்திகள் யார், யார் என்று அடையாளம் காண்பதுதான் சரி.

பிற மொழியைத் தாய் மொழியாக கொண்டோர்

தமிழ் பேசாத ஒருவரிடம் ஆட்சியதிகாரத்தை எப்படிக் கொடுப்பது என்பது, துவக்கத்தில் ஓர் அவநம்பிக்கையில் வரும் அச்சம்.

களத்தில் பணியாற்றும்போது, தமிழ்மொழியை தாய்மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழ் தேசிய சக்தியாக வலுப்பெறுவார். அந்தக் களம் அவரை முழுமையான தமிழ் தேசிய சக்தியாக வளர்த்தெடுக்கும். அந்த நேரத்தில் அவருடைய தாய்மொழி அடையாளம் நீர்த்துப்போய்விடும்.

ஒருவர் எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் அவரைத் தமிழ்த் தேசிய சக்தியாக வளர்த்தெடுப்பதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அவர் தமிழ்த் தேசிய சக்தியாக மாறுவதை பிறகு களம் தீர்மானிக்கும்.

தமிழ்த் தேசியத்தில் ஆதிக்க சாதிகள் தங்களை மேலும் ஒடுக்குவார்களோ என்ற அச்சம் ஒடுக்கப்படுபவர்களுக்கு எழுவது இயல்புதான்.

ஆனால், தமிழ் தேசிய சக்தியாக நாம் பரிணாமம் பெற்று வளர்ந்தால் அங்கே ஜாதி அடையாளம் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழ் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தினால், இந்த அச்சத்திலிருந்து நாம் விடுபட முடியும்.

அண்ணா, பெரியார்

தமிழ் தேசியம் என்ற களத்தில் அணி திரட்டப்படுகிறவர்கள், ஜாதி அடையாளங்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். ஆகவே, தமிழ் தேசிய சக்தி என்ற அடையாளம்தான் இருக்கும். அவருடைய ஜாதி உதிர்ந்துவிடும். அதாவது அவர் உண்மையான தமிழ் தேசிய சக்தியாக வளர வேண்டும்.

ஆனால், அமைப்பு ரீதியாக அணிதிரளாத பொதுமக்கள் ஜாதி ரீதியாக, மத ரீதியாக அணிதிரள்வது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களையும் அரசியல்படுத்துவதில்தான் தமிழ் தேசியத்தின் வெற்றியிருக்கிறது.

கடவுள் அடையாளம்

கலாச்சார ரீதியில் தமிழ் தேசிய சக்திகளை ஒருங்கிணைக்க விரும்பி, சில அமைப்புகள் கடவுள் அடையாளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக, முருகன் தமிழ்க் கடவுள். முருகனை வழிபடுவது தமிழர்களின் வழிபாட்டு முறை என்று வாதிடப்படுகிறது. ஆனால், முருக வழிபாடு தமிழ் வழிபாடாக இருந்தாலும், அந்த வழிபாடு என்பது எப்போதோ இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கு அந்த வழிபாட்டை முன்னிறுத்துவது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் அது இந்துத்துவத்திற்கு துணைபோவதாக அமைந்துவிடும்.

கர்நாடகத்தில் பசவா இயக்கம் இந்துத்துவத்திற்கு எதிராக உருவாகி, போராடியது. ஆனால், இறுதியில் அவர்கள் ஒரு தனி ஜாதியாக, தீவிர இந்துக்களாக மாறிப்போனார்கள்.

இன்று அந்த லிங்காயத்துகள், தங்களைத் தனி மதம் என்று சொன்னாலும் அவர்கள் இந்து கலாச்சாரத் தளத்தில்தான் இயங்குகிறார்கள். லிங்கத்தை வழிபடுகிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், முருகனை முன்னிறுத்துவது தமிழ் தேசியத்திற்கு எவ்விதத்திலும் உதவாது.

திராவிடத்தை எதிராகப் பார்க்க முடியுமா?

இறுதியாக, திராவிட தேசியத்தை தமிழ் தேசியத்திற்கு எதிராகப் பார்க்க முடியுமா என்ற கேள்வி.

உண்மையில் திராவிட தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரானதல்ல. திராவிட தேசியம் தற்போதுவரை சொல்லாடலாக இருக்கிறதே தவிர, அது ஒரு நாடாக பரிணமிக்கவில்லை.

திராவிட தேசியத்தில் உள்ள பிற மொழிபேசுபவர்கள், தங்கள் மொழி அடையாளத்தைத்தான் வைத்துக்கொள்ள விரும்புகிறார்களே தவிர, திராவிட அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே அது வெறும் கருத்தியலாக நின்றுவிட்டது.

மற்றொரு பக்கம் திராவிட சித்தாந்தத்தை தி.மு.க., அ.தி.மு.க. என்ற அரசியல் கட்சிகளின் செயல்பாட்டோடு பொருத்திப் பார்க்கிறோம்.

அவர்கள் இந்திய அரசோடு செய்துகொண்ட சமரசங்களால்தான் அவர்கள் மொழி உரிமைகளையும் இன உரிமைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற பார்வை இருக்கிறது.

ஜிஎஸ்டிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இந்த இரு கட்சிகளின் செயல்பாடு மட்டுமே திராவிட தேசியமாகிவிடாது. திராவிட தேசியம் என்பது, தென்னிந்திய நலன்கள், தென்னிந்திய மொழிகளின் நலன்கள், அந்த இனங்களின் நலன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

திராவிட தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம்

இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான அம்சம்.

ஒரு காலகட்டத்தில் திராவிட தேசியத்திற்கான தேவை இருந்தது. அந்த காலகட்டத்தில் நாம் இருந்திருந்தால் அதைதான் பேசியிருப்போம்.

அந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கான சூழல் இல்லை. ஆனால், தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் மொழி அடிப்படையிலான தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறோம்.

ஆக, திராவிட தேசியம் என்ற களத்தில் இருந்துதான் தமிழ் தேசியம் என்ற அரசியல் உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் மாகாணத்திலிருந்துதான் தமிழ்நாடு உருவாகியிருக்கிறது.

ஆகவே, திராவிட தேசியத்தை பகையாக நிறுத்தி, தமிழ் தேசியத்தை அடைய முடியாது. இந்திய தேசியத்தை முதன்மை பகையாக நிறுத்தி, இந்து தேசியத்தை பகையாக நிறுத்தி போராடுவதில்தான் தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க முடியும்.

https://www.bbc.com/tamil/india-43843991

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.