அருள்மொழிவர்மன்

கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`

Recommended Posts

பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன்.
 
பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும்.
 
kurinji.jpg
 
பொதுவாக குறிஞ்சித் திணையாவது - தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியொருத்திக்குமிடையே நிகழும் ``புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகும் (கூடல்)’’. 
 
குறுந்தொகைப் பாடல்  எண்: 40 (நாற்பது)
 
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்
 
திணை - குறிஞ்சி
 
தலைவன் கூற்று – தலைவியிடம் தலைவன் கூறுதல்
 
thalaivan-thalaivi.jpg
தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:
 
``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.
 
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்;
எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்;
செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;
 
பாடலின் பொருள்:
 
என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்?
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
 
இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.
 
சங்கப் பாடலின் சுவையை உணர்த்தும் அருமையான பாடல்,  வாசித்து மகிழுங்கள்.
  • Like 6
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

somebody reacted to a post in a topic கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`
17 minutes ago

என்னாசு எனக்கு யார் பச்சை குத்தியது என்று தெரியவில்லை .

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு  பதிவுக்கு பச்சை போட்டு இருப்பவர்   உடையார்.

ஏன் உங்களக்கு தெரியவில்லை என்பதுக்கான காரணம் தெரியாது.

18 minutes ago, spyder12uk said:

somebody reacted to a post in a topic கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`
17 minutes ago

என்னாசு எனக்கு யார் பச்சை குத்தியது என்று தெரியவில்லை .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

என்னமோ தெரியவில்லை இப்ப தெரிகிறது நன்றி நவீனன் .

அடிக்கடி யாழ் வராமல் விடுவதால் யாழ் என்னை மறந்துவிடுது போல் உள்ளது .

Edited by spyder12uk

Share this post

Link to post
Share on other sites
On 4/20/2018 at 7:13 AM, spyder12uk said:

somebody reacted to a post in a topic கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`
17 minutes ago

என்னாசு எனக்கு யார் பச்சை குத்தியது என்று தெரியவில்லை .

ஸ்பைடருக்கே பச்சை குத்தி சாதனை படைத்த உடையாருக்கு வாழ்த்துக்கள்:cool:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சரி சரி உங்களுக்கும் ஒரு பச்சை ஓகேயா ?

Share this post

Link to post
Share on other sites
On 20.4.2018 at 1:13 PM, spyder12uk said:

somebody reacted to a post in a topic கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`
17 minutes ago

என்னாசு எனக்கு யார் பச்சை குத்தியது என்று தெரியவில்லை .

இவன் யாரோ.....இவன் யாரோ??? :8_laughing:

Share this post

Link to post
Share on other sites

 வணக்கம் அருள் மொழி வர்மன் ...உங்கள் ஆக்கம் கவிதைப் பூங்காடு பகுதியில்  பதிவது பொருத்தமானது .

அல்லது நிர்வாகத்திடம் உரிய பகுதிக்கு  மாற்றும் படி   கேட்கலாம்.  அரிச்சுவடிப்பகுதியுள்    பதிந்துள்ளீர்கள். தொடர்ந்து

உங்களாக்கங்கள் வரவேண்டும் 

Share this post

Link to post
Share on other sites

தங்களின் குறுந்தொகைப் பதிவு பாமரர் உள்ளங்களிலும் தமிழின் சுவை கொண்டு சேர்ப்பது. தற்போதைய (அநாவசியமான) அவசர உலகில் வாசிப்போர்க்கு சுருக்கமாகவும் அழகியல் குறைவின்றியும் உள்ளது. இதேபோல் உங்கள் மனம் கவர்ந்த இலக்கியக் காட்சிகளை யாழ் நண்பர்களுடன் பகிர இயலுமானால் மிகச் சிறப்பு. சமூகச் சாளரத்தில் எனது " நான் காணும் தொ.ப" விற்கு  இலக்கிய ஆர்வலரான தங்களின் கருத்தாக்கம் எனக்குப் பயன் தரும். வாழ்த்துக்கள்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 4/26/2018 at 12:41 AM, நிலாமதி said:

 வணக்கம் அருள் மொழி வர்மன் ...உங்கள் ஆக்கம் கவிதைப் பூங்காடு பகுதியில்  பதிவது பொருத்தமானது .

அல்லது நிர்வாகத்திடம் உரிய பகுதிக்கு  மாற்றும் படி   கேட்கலாம்.  அரிச்சுவடிப்பகுதியுள்    பதிந்துள்ளீர்கள். தொடர்ந்து

உங்களாக்கங்கள் வரவேண்டும் 

தோழி நிலாமதி அவர்களுக்கு வணக்கம்.

கவிதைப் பூங்காடு பகுதியில் கவிதைத் தொகுப்புகளும் பாடல் வரிகளுமே இடம்பெற்றுள்ளன. சங்கப்பாடல் பற்றிய பதிவுகள் இப்பகுதிக்குள் அமைப்பது உகந்ததாக இல்லையோ என்று  தோன்றுகிறது. இத்தளத்திற்குப் புதியதாதலால் குழப்பமாகவுள்ளது !

நன்றி.
 
Share this post

Link to post
Share on other sites
On 5/2/2018 at 11:11 AM, சுப.சோமசுந்தரம் said:

தங்களின் குறுந்தொகைப் பதிவு பாமரர் உள்ளங்களிலும் தமிழின் சுவை கொண்டு சேர்ப்பது. தற்போதைய (அநாவசியமான) அவசர உலகில் வாசிப்போர்க்கு சுருக்கமாகவும் அழகியல் குறைவின்றியும் உள்ளது. இதேபோல் உங்கள் மனம் கவர்ந்த இலக்கியக் காட்சிகளை யாழ் நண்பர்களுடன் பகிர இயலுமானால் மிகச் சிறப்பு. சமூகச் சாளரத்தில் எனது " நான் காணும் தொ.ப" விற்கு  இலக்கிய ஆர்வலரான தங்களின் கருத்தாக்கம் எனக்குப் பயன் தரும். வாழ்த்துக்கள்.

@ சுப.சோமசுந்தரம், தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

நண்பர் குறிப்பிட்டதுபோல் இனிவரும் நாட்களில் என் மனம் கவர்ந்த இலக்கியக் காட்சிகளையும் பாடல்களையும் யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாகவுள்ளேன். 

தங்களின்  "நான் காணும் தொ.ப" எனும் பதிவை வாசித்து நிச்சயம் பின்னூட்டமளிக்கிறேன். 

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now