Jump to content

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு


Recommended Posts

கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு

08-67c64ccf20289e969b73b6ebdd8b4a039e114ca7.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட போது, அக்­க­டத்தல் தொடர்பில் அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தக­வல்­களை அறிந்­தி­ருந்­த­தாக சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதி­மன்றில் தெரி­வித்தார்.  

கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணைகள் தொடர்­பி­லான வழக்கு நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

'கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­த­பாய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.' என இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் கீத் நொயார் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஏற்­க­னவே கைதாகி பிணையில் உள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்­ளியூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேம­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்­பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவ தள­பதி அமல் கரு­ணா­சே­கர சிறைச்­சாலை அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் மன்றில் ஆஜர்ச் செய்­யப்­பட்டார். அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் இருந்து அவர் சக்­கர நாட்­கா­லி­யி­லேயே கல்­கிசை மேல­திக நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். இந் நிலை­யி­லேயே வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

 இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா மற்றும் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமார ஆகி­யோ­ருடன் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம ஆஜ­ரானார்.

  8 ஆம் சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மேஜர் அஜித் பிர­சன்ன, நலின் இந்­தி­ர­திஸ்ஸ ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

 மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த அரச சட்­ட­வாதி லக்­மினி,

 ' 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரால் அமல் கரு­ணா­சே­கர, துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் 44 (அ) அத்­தி­யா­யத்தின் கீழும், தண்­டனை சட்டக் கோவையின் 32,102,113 (அ),140 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுடன் இணைத்து கூறப்­பட்­டுள்ள 314,315,316,317,300,332,333,355, 380 ஆம் அத்­தி­யா­யங்­களின் பிர­கா­ரமும் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்­தி­ர­வதை மற்றும் பிற கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற அல்­லது சீர­ழிக்கும் நட­வ­டிக்­கைகள் அல்­லது தண்­ட­னை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 2 ஆம் உப அத்­தி­யா­யத்தின் அ,ஏ ஆகிய பிரி­வு­களின் கீழும் தண்­டனைக் குரிய குற்­றங்­களைப் புரிந்­துள்ளார்.

 இந்த சந்­தேக நப­ரிடம் நாம் கைது செய்­தது முதல் இன்னும் வாக்கு மூலம் பெற­வில்லை. அவ­ரிடம் வாக்கு மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. எனவே சிறையில் அவ­ரிடம் வாக்கு மூலம் பெற அனு­மதி கோரு­கின்றோம். உண்­மையில் இவ்­வ­ழக்கின் பிர­தான சந்­தேக நபர் இந்த 8 ஆவது சந்­தேக நப­ரான மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வே­யாவார். அவ­ரது கட்­ட­ளையின் பிர­கா­ரமே அனைத்தும் நடந்­துள்­ளன.

 கீத் நொயார் கடத்­தப்­பட்டு வெள்ளை வேனொன்றில் நிர்­வா­ண­மாக்­கப்­பட்டு கட்டி தலை கீழாக தொங்­க­வி­டப்­பட்டு கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். சுயா­தீ­ன­மாக தனது பேனையை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ரான அவர் இவ்­வ­ளவு கொடூ­ர­மாக நடத்­தப்­பட்­டுள்ளார். இன்று அந்த ஊட­க­வி­ய­லாளர் நாட்டை விட்டு வெளி­யேறி அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழும் அள­வுக்கு அந்த கொடூரம் அவரை பாதித்­துள்­ளது.

இவ்­வாறு கடத்­தப்­பட்­டவர் தொம்பை - பதி­வத்தை பாது­காப்பு வீட்­டி­லேயே தடுத்து வைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான சாட்­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பது­வத்தை தொலை­பேசி கோபுரத் தக­வல்கள் இதனை உறுதி செய்­கின்­றன.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லலித் அழ­கக்கோன் நேஷன் பத்­தி­ரிகை உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­துக்கு அதனை கொண்டு வந்­தனர். கீத் நொயாரைக் கண்­டு­பி­டிக்­கா­விட்டால் சர்­வ­தேச அளவில் சிக்­கல்­களை சந்­திக்க வேண்­டி­வரும் என அவர்கள் கூறி­யுள்­ளனர்.

 இதன்­போது கோத்­தா­பய ராஜ­பக்ஷ, கீத் நொயார் பெண்­ணொ­ருவர் தொடர்­பி­லான விவ­கா­ரத்­தி­னா­லேயே கடத்­தப்­பட்­டுள்­ள­தாக உட­ன­டி­யா­கவே பதி­ல­ளித்­துள்ளார். பின்னர் தற்­போது கைதா­கி­யுள்ள அப்­போது இரா­ணுவ புல­னாய்வுப் பிர­தா­னி­யாக செயற்­பட்ட அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்து அவரை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்ளார். அதன்­பி­ர­கா­ரமே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்டார். இல்­லை­யெனில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நடந்­ததைப் போன்று அவரும் கொல்­லப்­பட்­டி­ருந்­தி­ருப்பார்.

 அன்று இருந்த ஆட்சி தொடர்பில் நாம் அனை­வரும் அறிந்­துள்ளோம். அந்த ஆட்சி மாற்­றப்­பட்­ட­மைக்­கான கார­ணத்­தையும் நாம் அறிவோம். சுயா­தீ­ன­மாக பேனையைப் பயன்­ப­டுத்­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு நடந்த இந்த கொடு­மை­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது இந்த நீதி­மன்றின் கடமை. இல்­லா­விட்டால் இந்த நீதி­மன்றில் எந்த பெறு­ம­தியும் இல்லை என்றார்.

 இதன்­போது ஏற்­க­னவே பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு முன்­வைக்க போதிய சான்­றுகள் இல்லை என கல்­கிசை மேல­திக நீதிவான் தீர்­மா­னித்­தமை தொடர்பில் வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன.

 இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி, கட­மைக்­காக வழங்க்­கப்­பட்ட துப்­பாக்­கி­யாக இருப்­பினும் அர­சியல் வாதி­களின் குறு­கிய நோக்­கங்­களை நிறை­வேற்ற பயன்­ப­டுத்­தப்­படும் போது அது சட்ட விரோ­த­மே­யாகும். அது துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடி­யு­மா­னதே என்றார்.

 எனினும் சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­த­ர­திஸ்ஸ, ஏற்­க­னவே கொழும்பு மேல் நீதி­மன்றம் பிணை வழங்­கிய முதல் 6 சந்­தேக நபர்கள் மற்றும் கல்­கிசை நீதி­மன்றம் பிணை வழங்­கிய 7 ஆம் சந்­தேக நபர்­களின் பிணை உத்­த­ர­வினை சுட்­டிக்­கா­டடி துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் உள்­ள­டங்­காது எனவும், நீதிவான் நீதி­மன்றில் பிணை வழங்­கு­வதை தடுக்கும் முக­மாக துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்டம் 8 ஆம் சந்­தேக நப­ருக்கு போடப்­பட்­டுள்­ள­தா­கவும் வாதிட்டார்.

துப்­ப­க­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் 8 ஆவது சந்­தேக நப­ருக்கு குற்றம் சுமத்த சான்­றுகள் இல்லை என நீதிவான் லோச்­சன அபே­விக்­ரம தீர்­மா­னிக்­கவே, மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு பிணை கோரி வாதப் பிர­தி­வா­தங்கள் அரம்­ப­மா­கின.

 இதன்­போது முதலில் வாதிட்ட சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி நலின் இந்­தி­ர­திஸ்ஸ,

 பினை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம் பிணையை மறுப்­ப­தற்­கான எந்த கார­ணி­களும் மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கு எதி­ராக இல்லை என்றார்.

 எனினும் அதனை மறுத்த அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி, சந்­தேக நப­ரா­னவர் நாட்டின் தற்­போ­தைய பாது­கா­பபு செயலர் கபில வைத்­திய ரத்ன மற்றும் இந்த நீதி­மன்­ருக்கு தவ­றான தக­வல்­களை அளித்து வெளி­நாடு செல்ல முற்­பட்டார். அத்­துடன் இவ்­வ­ழக்கில் சாட்சி வழங்கவுள்ளவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள இராணுவத்தின் நேர்மையான உறுப்பினர்கள். இவரோ மேல் நிலை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றுள்ளதுடன் தற்போது பாதுகாப்பு கல்லுரியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். எனவே அவரால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும்

 அதே போன்று கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்ட வீடு தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் இவரால் மறைக்கப்பட்டுள்ளன. அதனை தேட வேண்டிய பொறுப்பு சி.ஐ.டி. க்கு உள்ளது. இவர் வெளியில் இருந்தால் விசாரணைகளுக்கு பாதிப்பு. என்றார்.

 இவற்றை ஆராய்ந்த நீதிவான் அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினியின் வாதத்தை ஏற்று சந்தேக நபரான மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை எதிர்வரும் மே 2 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்கவும் அன்ரைய தினம் விசாரணை அரிக்கையை மன்றில் தாக்கல்ச் செய்யவும் உத்தரவிட்டார்.

 நேற்றைய தினம் இந்த வழக்கானது சுமார் மூன்றரை மணி நேரம் வரை விசாரணைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.