Sign in to follow this  
நவீனன்

மஹிந்தானந்த எம்.பி கைது

Recommended Posts

மஹிந்தானந்த எம்.பி கைது
 
 

image_5e7803e8df.jpgநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கெரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39  மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ  கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தானந்த-எம்-பி-கைது/175-214320

Share this post


Link to post
Share on other sites

மஹிந்­தா­னந்­தவை பிணையில் விடு­வித்­தது கோட்டை நீதி­மன்றம் : டிலான், தயா­சிறி, சந்­திம, அனு­ராத ஆத­ரவு தெரி­வித்து நீதி­மன்றில்

04-3f00241d03860e38a589d4fca4d16cee2e6a3e71.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிணை நிபந்­த­னை­களில் ஒன்­றினை பூர்த்தி செய்­யா­ததால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கேயின், கடவுச்சீட்டு தொடர்­பி­லான ஆவ­ணங்கள் நேற்று நீதி­மன்­றுக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை பிணையில் செல்ல கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன நேற்று அனு­ம­தித்தார். 

முன்னாள் விளை­யாட்டுத் துறை அமைச்­சரும் தற்­போ­தைய கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே நேற்று முன் தினம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாத­ம­ளவில் சதொச ஊடாக 28000 கரம், தாம் பல­கைகள் கொள்­வ­னவு செய்­யப்­படும் போது 39 மில்­லியன் ரூபா அரச பணம் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்­பி­லேயே நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்­தது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவர் நேற்று முன் தினம் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர்ச் செய்­யப்­பட்ட போது, அவரை 35 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல நீதிவான் அனு­ம­தித்தார். அத்­துடன் அவ­ரது வெளி­நாட்டுப் பய­ணத்தை தடைச் செய்து அவ­ரது கடவுச் சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

எனினும் நேற்று முன் தினம் மாலை நீதி­மன்ற நட­வ­டிக்கைள் நிறை­வு­று­வ­தற்குள், பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்ய சந்­தேக நப­ரான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தவ­றி­யதால் அவர் வெலிக்­கடை - மெகஸின் விளக்­க­ம­றியல் சிறைக்கு சிறைக்­கா­வ­லர்­களின் பாது­காப்பில் அழைத்துச் செல்­லப்­பட்டார்.

குறிப்­பாக அவ­ரது கடவுச் சீட்டு மேல் நீதி­மன்றில் பிரி­தொரு வழக்கு நட­வ­டிக்கை தொடர்பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிணை வழங்­கிய போது நீதி­மன்­றுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்பில் கோட்டை நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக மேல் நீதி­மன்றை தொடர்­பு­கொண்ட போதும் உட­ன­டி­யாக அதனை உறு­திப்­ப­டுத்த முடி­யாமல் போகவே இவ்­வாறு மஹிந்­தாந்த அளுத்­க­மகே எம்.பி. பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­யா­த­வ­ராக கருதி நீதி­வானின் உத்­தர்­வுக்கு அமைய விளக்­க­ம­றி­ய­லுக்கு அழைத்து செல்­லப்­பட்டார்.

 எவ்­வா­றா­யினும் நேற்று முற்­பகல் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது மஹிந்­தா­னந்த அலுத்­க­ம­கேவின் சட்­டத்­த­ர­ணிகள் கொழும்பு மேல் நீதி­மன்றில் 95/17 எனும் இலக்க வழக்கு தொடர்பில் மஹிந்­தா­னந்­தவின் கடவுச் சீட்டு மேல் நீதி­மன்றில் இருப்­பதை உறுதி செய்து அது குறித்த ஆவ­ணங்­களை நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­தனர். இந்­நி­லை­யி­லேயே நேற்று முன் தினம் விதித்த அதே பிணை நிபந்­த­னை­களின் கீழ் பிணையில் செல்ல மஹிந்­தா­னந்­த­வுக்கு நீதிவான் அனு­மதி வழங்­கினார்.

இத­னி­டையே நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே பிணை நிபந்­த­னை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்ட போது, அங்கு கடந்­த­வாரம் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நால்வர் அவ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்கும் முக­மாக நீதி­மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டிலான் பெரேரா, தயா­சிரி ஜய­சே­கர, சந்­திம வீரக்­கொடி மற்றும் அனு­ராத ஜய­ரத்ன ஆகி­யோரே இவ்­வாறு நீதி­மன்­றுக்கு சென்று மஹிந்­தா­னந்­த­வுக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்­தனர். இதன்­போது இவ்­வா­றான வழக்­குகள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மையப்­ப­டுத்­திய வழக்­குகள் எனவும், நீதி­மன்றின் நியா­ய­மான தீர்ப்­புக்கு தலை வணங்­கு­வ­தா­கவும் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2015.01.25 அன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு அமைவாக மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 11 ஆம் திகதி மீள இடம்பெறவுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-18#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this