Jump to content

கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!


Recommended Posts

கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!

 

கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!

 

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம், நடைபெற்ற விசாரணை மூலமே பூந்தோட்டம் ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-man-death-in-canada

 

 

கன­டா­வில் வசித்த 8 பேர் கொலை!!

கனடா சென்ற யாழ்ப்­பாண இளை­ஞன் உட்­பட 8 பேர் அங்கு வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்­னர் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த அதிர்ச்­சித் தக­வலை அந்­த­நாட்­டுப் பொலி­ஸார் அங்­குள்ள உற­வி­ன­ரி­டம் கூறி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர்.

நயி­னா­தீ­வைச் சேர்ந்­த­வ­ரும் யாழ்ப்­பா­ணம் கச்­சே­ரி­ய­டியை வசிப்­பி­ட­மாக் கொண்­ட­வ­ரு­மான கன­க­ரட்­ணம் கிருஷ்­ண­கு­மார் (வயது – 40) என்­ப­வரே கொல்­லப்­பட்­டார்.

அவர் தனக்­குத் தெரிந்த முக­வர் ஊடாக சன்சீ கப்­ப­லில் வெளி­நாட்­டுக்­குச் சென்­றி­ருந்­தார். கன­டா­வில் அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் அவ­ரைப் பொறுப்­பேற்­றி­ருந்­தார்.

2015 ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் அவ­ரது தொடர்பு அங்­குள்ள உற­வி­ன­ருக்கோ யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பெற்­றோ­ருக்கோ கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில் அங்கு இடம்­பெற்ற ஒரு சம்­ப­வம் ஒன்­றில் அதே நாட்­டைச் சேர்ந்த சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரி­டம் நடத்­திய விசா­ர­ணை­யி­லேயே திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­வந்­தன. இலங்­கை­யர்­கள் இரு­வர் உட்­பட 8 பேர் அவ்­வாறு வெட்­டிக் கொல்­லப்­பட்டு அங்­குள்ள பூந்­தோட்­டம் ஒன்­றில் புதைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. தற்­போது அவர்­க­ளது எலும்­புக்­கூ­டு­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அவர்­க­ளில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வ­ரது என்­ப­தனை அங்­குள்ள உற­வி­ன­ரைக் கொண்டு பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் விசா­ரணை செய்து உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள கு­டும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர். ஏனைய விட­யங்­கள் நாளை அறி­விக்­கப்­ப­டும் என்று அந்­த­நாட்­டுப் பொலி­ஸார் கூறி­யுள்­ள­னர் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/84694.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணமோ ?tw_cold_sweat:

Link to comment
Share on other sites

Since McArthur’s January arrest, the 66-year-old landscaper has been charged in the deaths of seven men with links to Toronto’s Gay Village. He is currently awaiting trial for first-degree murder in the deaths of: Andrew Kinsman, 49; Selim Esen, 44; Majeed Kayhan, 59; Soroush Mahmudi, 50; Dean Lisowick, 47; Skandaraj “Skanda” Navaratnam, 40, and Abdulbasir Faizi, 42.

https://www.thestar.com/news/gta/2018/04/13/toronto-police-have-identified-the-deceased-man-alleged-to-be-bruce-mcarthur-victim.html

 

8 ஆவது ஆள் மேற் கூறப்பட்டவராக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


அண்மைய காலங்களில் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படும் செய்திகளில் இதுவும் ஒன்று..ஆண்; பெண் வரையறைக்குள் அடங்காத ஒருவரால் இவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகத் தான் அறியக் ௬டியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் கொலைக் குற்றவாளி புரூஸ் மெக்கர்தரின் 8ஆவது இலக்கு : டொரோண்டோ காவல்துறையினர்

 
Image may contain: 1 person, closeup
Thesiyam
16 mins · 

8ஆவது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் புரூஸ் மெக்கர்தர் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றார். கிருஷ்ண குமார் கனகரத்தினம் என்ற தமிழரது மரணத்திற்கு மெக்கர்தர் காரணம் என டொரோண்டோ காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் MV Sun Sea மூலம் கனடாவுக்கு வருகை தந்தவர். Scarboroughவில் வாழ்ந்துவந்த இவர் 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 2010ஆம் ஆண்டு முதல் டொரோண்டோவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தமிழரான ஸ்கந்தராஜ் நவரத்தினத்தின் கொலைக் குற்றச்சாட்டு புரூஸ் மெக்கர்தர் மீது பதிவாகியுள்ளது

Bruce McArthur charged with 8th murder count. Toronto Police say latest alleged victim is 37 year old Kirushna Kumar Kanagaratnam. He moved to Canada from Sri Lanka in 2010. He lived in Scarborough, before his death. Police believe he was killed in 2015. Bruce McArthur has already been charged with Scandalaj Navaratnam's murder, who was found missing in Toronto since 2010.

http://www.cbc.ca/…/toronto-police-release-identity-of-8th-…

Link to comment
Share on other sites

பூ தொட்டிக்குள் இலங்கை பிரஜையின் சடலம்: சந்தேக நபரான 'சீரியல் கில்லர்' கைது

ஜனவரி 18ஆம் தேதி ப்ரூஸ் மெக்ஆர்தர் கைது செய்யப்பட்டார்ஜனவரி 18ஆம் தேதி ப்ரூஸ் மெக்ஆர்தர் கைது செய்யப்பட்டார்

இலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா போலீஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்ஆர்தரால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர்.

66 வயதாகும் ப்ரூஸ் மெக்ஆர்தர் மீது, 37 வயதாகும் கிருஷ்ண குமார் கனகரத்திரனம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது. மெக்ஆர்தரால் கொல்லப்பட்டவரர்களில் கனகரத்திரனம் 8-ஆவது நபர் ஆவார்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதிக்குள்ளாக இடைப்பட்ட காலத்தில் கிருஷ்ண குமார் கனகரத்திரனம் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

2010ஆம் ஆண்டு கனடா வந்த கிருஷ்ண குமார் கனகரத்திரனம் டொராண்டோ பகுதியில் வசித்து வந்துள்ளார்.

டொரண்டோ போலீஸார் வெளியிட்ட கிருஷ்ண குமார் கனகரத்திரனத்தின் புகைப்படம்டொராண்டோ போலீஸார் வெளியிட்ட கிருஷ்ண குமார் கனகரத்திரனத்தின் புகைப்படம்

கடந்தவார இறுதியில் கனகரத்தினத்தின் மரணம் குறித்து இலங்கையில் வசிக்கும் அவரது குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக டொராண்டோ போலீஸ் பிரிவை சேர்ந்த அதிகாரி ஹேங்க் இட்ஸிங்கா தெரிவித்தார்.

கனகரத்தினத்தின் குடியுரிமை நிலை குறித்து ஹேங்க் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், கனடாவில் கனகரத்தினம் காணாமல் போனதாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்ஆர்தருக்கு தொடர்புடைய இடம் ஒன்று டொராண்டோவில் உள்ளது. அங்கு செடிகளை வைக்கும் தொட்டிகளிலிருந்து துண்டுகளாக வெட்டப்பட்ட ஏழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஓர் உடலைத்தான் டொராண்டோ போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-43798728

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.