Jump to content

வாழ்க்கை எப்படிப் போகின்றது?


Recommended Posts

முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு.

போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டிருந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்?

தற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

மேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது.

உத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள்ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன.

இந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்வின் அர்த்தம் என்ன என்று வெறுமைக்குள் தேடும்போது ஒருவித பயமுண்டாகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு போதைகளில் மனத்தை திசைதிருப்பி மூளைக்கு ஓய்வைக் கொடுக்காமல் வாழ்வை ஓட்டப் பழகுகின்றோம். ஒருநாள் லீவு கிடைக்காதா என்று ஏங்குவதும், ஒன்றுக்கு இரண்டு நாள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருந்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்று அச்சப்படுவதுமான வாழ்க்கை போகின்றது. இன்னும் விரிவாக எழுதலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

மட்டக்களப்பு சரிவருமா?? ரதி tw_confused:

 

5 hours ago, Innumoruvan said:

புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது

இப்படித்தான் போகிறது இன்னுமொருவன் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னோட இப்போதைய நான் ஊரில் சாக வேண்டும்....தப்பித் தவறி நான் இங்கே செத்தால் ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டும்...நடக்கிற ஆசையா இது?????????????
 

Funeral directors இடம் காசு கட்டினால் நீங்கள் விரும்பியபடி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

Funeral directors இடம் காசு கட்டினால் நீங்கள் விரும்பியபடி செய்வார்கள்.

 

காசு வேணுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

 

காசு வேணுமே

உழைக்கிறதை என்ன செய்கிறீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

உழைக்கிறதை என்ன செய்கிறீர்கள்...

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

32 minutes ago, ரதி said:

 

காசு வேணுமே

கன பேர் இப்படித்தான் சொல்கிறார்கள் ரதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

உண்மையாகவே பலருக்கு இப்படியான சம்பவங்கள் ஏற்படுகிறது, உடல் சுகவீனம், வியாபாரத்தில், சீட்டில், கடன், வட்டி என்று பல..

எனக்கும் சீட்டில் 7 வர இருக்கிறது. 6/7 மாதமாக இழுபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

உண்மையாகவே பலருக்கு இப்படியான சம்பவங்கள் ஏற்படுகிறது, உடல் சுகவீனம், வியாபாரத்தில், சீட்டில், கடன், வட்டி என்று பல..

எனக்கும் சீட்டில் 7 வர இருக்கிறது. 6/7 மாதமாக இழுபடுகிறது

 

ம் நானும் அவரிடம் சொன்னேன் பேசாமல் அங்க உள்ள சொத்துக்களை விற்று விட்டு இங்கே வந்து செட்டிலால சொல்லுங்கல் என்று சொன்னேன் இன்னும் வரவில்லை என்றார் அவர்  ஆனால் வருடத்திற்கு ஒரு தடவை வந்து விட்டு செல்கிறார்கள் என்றார் அவர் சம்பந்தம் இல்லாத குடும்பம் ஒன்று சுவிஸில் இருந்து வந்து இங்கு செட்டிலாகிவிட்டது 

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றிகள் இன்னுமொருவன்..

எனது அனுபவத்தில் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவது, அர்த்தம் தருவது அல்லது அதை நாடிய முயற்சிகள் எனபது அவரவரோடு சேர்நத வாழ்விடமும் சேர்ந்தது.  ஊரில் வயதான ஒருவர் தனது காணியின் வேலிக்கு கதியால் போட்டு அடைத்துக்கொண்டிருப்பார்,  தனத காணியில் மரங்கள் நடுவார், பாராமரிப்பார் இப்படியே சதா தோட்டம் வயல்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார். அவர் இயல்பாகவே அதைச் செய்வார், யாரும் அவருக்கு செய் என்று கட்டளை இடமாட்டார்கள். கட்டளைக்கு கட்டுப்பட்டு செய்வதை விட அதிகமாக வேலைகளை செய்வார். அதிலிருந்து தனது வாழ்வாதாரத்துக்கானதையும் எடுத்துக்கொள்வார். தொடர்ச்சியாக உயிர்வாழுதல் என்பது தான் அடிப்படை.  அதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். அதை எப்படி செய்வது என்பதில் தான் அர்த்தம் இருக்கின்றது அல்லது நிறைவு இருக்கின்றது.  வயதானவர் அவரது வழ்வை முடிந்தளவுக்கு அவரே தீர்மானிக்கின்றார். இங்கே எமது வாழ்வை நாம் தீர்மானிக்க முடியாது.  "நான்" என்பது வயதானவரை பொறுத்தவரை அவரது வளவு தோட்டம் மரங்கள் என்ற பெருவட்டத்தைக்கொண்டிருக்கும். அவர் தனியே ஒரு மனித உருவமாக மட்டும் அடயாளம் பெற மாட்டார். இங்கே "நான் " என்றால் எதுவும் இல்லை. எனது வட்டத்துக்குள் என்ன என்று பார்த்தால் ஒரு வீடு ஒரு கார் இரண்டும் எனக்கு சொந்தமா என்று பார்த்தால் அதற்கான கடனை கட்டும் வரை எனக்கு சொந்தமில்லை. கடன் எப்போ முடியும் என்று பார்த்தால் அண்ணளவாக எனது ஆயுள் முடியும் காலம் வரை அது இருக்கும். வேலை நிரந்தரமா என்று பார்த்தால் அதுவும் எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் வயதானவரும் அவரது காணியை விட்டு விரட்டப்பட்டு விட்டார். 

மனிதன் ஒரு வேட்டை விலங்கு. இந்த உலகம் ஒரு வேட்டைக்காடு. இந்த அடிப்படைக்கு உள்ளகவே வழ்க்கை அமைகின்றது. எமது சந்தோசம், நிறைவு, அர்த்தம் ஆன்மீகம் கடவுள் என அனைத்தும் இந்த அடிப்படைக்கு உள்ளகவே தனது எல்லையை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வாழ்வின் பொருள் அர்த்தம் நிறைவு என்பதை பெரிய விசயமாக உணர்வதில்லை. அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன திருப்திகளை அனுபவிப்பது. வேணுமான தருணத்தில் நல்ல ஒரு தேத்தண்ணி உள்ளடங்கலாக. வாழ்க்கை போகுது... 
 

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 வாழ்வின் அர்த்தம் என்ன என்று வெறுமைக்குள் தேடும்போது ஒருவித பயமுண்டாகின்றது. அதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு போதைகளில் மனத்தை திசைதிருப்பி மூளைக்கு ஓய்வைக் கொடுக்காமல் வாழ்வை ஓட்டப் பழகுகின்றோம். ஒருநாள் லீவு கிடைக்காதா என்று ஏங்குவதும், ஒன்றுக்கு இரண்டு நாள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருந்தால் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்று அச்சப்படுவதுமான வாழ்க்கை போகின்றது. இன்னும் விரிவாக எழுதலாம்.

 

நல்ல அர்தமுள்ள காணொலி கிருபன். 

 

 

Link to comment
Share on other sites

அனைவரது வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. 

உண்மைதான் கிருபன். காட்சிச்சாலையில் இருக்கின்ற குரங்கிற்கும் காட்டில் இருக்கும் குரங்கிற்கும் மனநிலையில் அதிகம் வித்தியாசம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் தனக்கு சாவு இருக்கிறது என்பது பற்றியோ நேரம் பற்றியோ விலங்குகள் உணர்வதில்லை. ஆனால் அந்தக்கணத்தில் மட்டும் பூரணமாக வாழ்வது என்பது மனிதனிற்கு அத்துணை சர்தியமானதில்லை. இது பற்றி மனிதன் பலகாலம் பேசிவருகின்ற போதிலும் குளப்பங்களே அதிகரிக்கின்றன. living in the moment என்பதைப் புரிந்து கொண்டதாய் கூறும் பலர் இது பற்றிக் கதைக்க ஆரம்பித்ததும் குளம்பிப் போய்விடுகிறார்கள். முடிந்தால் நன்மை தான்.

ரதி உங்கள் ஆதங்கமும் வலியும் புரிகிறது. ஆனால் இறப்பின் பின் உடல் என்னாகும் என்பதில் நிஜத்தில் உங்களிற்குக் கரிசனை இருக்கின்றதா?

சுகன் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். காணியில் கதியால் போடுவதும் வேலை செய்வதும் இயற்கையின் அங்கமாக மனிதனைச் சேர்த்து வைத்திருந்தன. முதலீடுகள் எல்லாம் இலத்திரனியல் பரிமாற்றங்கள் ஆகிப்போயுள்ள நிலையில் ஒருவர் தமது தேட்டத்தை தொட்டுப் பார்த்தலே சாத்தியமின்றி அனைத்தும் இலக்கங்கள் மட்டுமே என்றாகிவிட்டன. 

ஆனால் அர்த்தம் தேடல் என்பது நாம் றூம் போட்டு யோசிப்பதனால் மட்டும் வருவதாக இல்லையே. மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கையில் இத்தகைய தேடல் உள்ளார்ந்து எங்கோ ஒளிந்திருந்து ஆனால் துருத்திக்கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்கும் அவகாசம் வாழ்வு கொடுக்கும் போது தேடல் முன்னணிக்கு வந்து விடுகிறது--தவிர்க்க முடியாததாகிப் போகிறது.. அதை ஒதுக்கிவிடல் சிரமமாகிறது. இருப்பினும் நீங்கள் எழுதியிருக்கும் விதம் அழகாக இருக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

கலைஞன் உங்கள் காணொளிகளிற்கு மிக்க நன்றி. உண்மை தான் கோப்பிக்கும், கப்பிற்கும் இடையேயான வித்தியாசம் மிக உண்மை என்றபோதும்¸ வாழ்வு, குறிப்பாக சந்தை¸ இந்த வித்தியாசத்தை நாளாந்தம் இல்லாதபடி ஆக்கிக்கொண்டிருக்கிறது. சூப்பை சூப்பிற்காக மட்டும் குடித்தலோ கோப்பியோ இன்னும் இதர அனைத்தும் அசாத்தியங்கள் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது மிக ஆழமான பிரச்சினை. அனைத்து முனைகளையும் பாதிப்பது. அதே நேரம்¸ மேற்படி வித்தியாசங்களையோ சந்தையின் அரூபகரங்களையோ ஒரு கணம் நாம் ஒதுக்கிவிட்டு¸ விதிப்படி விளையாடி, நாம் இந்த ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று அனைவராலும் வியந்து பார்க்கப்படும் அதியுன்னது கப்பினை வைத்திருக்கும் போது கூட¸ மற்றையவர்கள் நம்மைப் பார்த்துப் பெருமூச்சு விடும் போது கூட, அர்த்தம் தேடும் தேடல் வலுக்கத் தானே செய்கிறது. வாழ்வின் ஆரம்பநிலை தொழில் சார் உழைச்சல்களை வென்று, பொருளாதார ரீதியில் நாற்பதிற்கு னரேயே சுதந்திரம் அடைந்துவிடினும் கூட¸ அர்த்தம் சார்ந்த தேடல் வலுப்படத்தானே செய்கிறது. இது மற்றையவர்களோடான ஒப்பீடு அன்றி உள்ளூர நடக்கும்¸ நாம் எம்மில் இருந்து ஒளித்துக்கொள்ள முடியாத தேடலாக இருக்கின்றது அல்லவா?

 

Link to comment
Share on other sites

தேடல்


ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு தேடல் உண்டு….தேடல் இல்லா மனிதனே இல்லை எனலாம்….தேடல் மனிதனின் சிந்தனை மற்றும் செயல்களை பொருத்தும் மாறும்…சிலருடைய தேடல் பணமாக இருக்கலாமி சிலருடைய தேடல் அறிவாக இருக்கலாமி சிலருடைய தேடல் புகழாக இருக்கலாம்…ஆனால் தேடல் என்ற ஒன்று அனைவரின் வாழ்விலும் செயலிலும் மறைந்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது….

தேடல் என்ற செயல் நமது வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமிப்பதோடுஇவாழ்க்கையை சற்று நீளவுமிவாழ்க்கையை திருப்தி அடையவும் வழி செய்கிறது…

தேடலை பற்றி சிந்திக்கும் போது எனக்கு எழுந்தது இந்த கேள்வி?

எதற்காக இந்த தேடல் என்று ?

நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்காகவே…இன்னும் கொஞ்ச நாள் வாழப் போகிறோமிஅதுவரை சந்தோசமாக வாழ்ந்து விடுவோமே என்ற அற்ப மனப்போங்கு…வேறு எந்த காரணமும் இல்லை….

மனித வாழ்வின் தேடலை எழுதும் போதுஇஎனக்கு ஒன்றும் புலப்படவில்லை…என் எண்ணங்களுக்கு தெளிவாய் தெரிந்ததது இரண்டுவகை தேடல் மட்டுமே…

அதை விவரிக்கிறேன்….

தேடல் 1:

நீங்கள் சிறுவனாக இருக்கும் போது நிச்சயமாக இதை நினைத்திருப்பிர்கள் நன்கு படித்து மற்றவர்களை போல் பெரியாளாகி விட வேண்டும் என்று….பெரியாள் என்றால் பணக்காரானாகி விட வேண்டும் என்று பொருள்..இப்போது நீங்கள் நினைத்தது நிறைவேறியதா?….சிலருக்கு இருக்கலாம்….ஆனால் பலருக்கு இல்லை….உங்கள் சிறுவயதில் உங்களின் தேடல் சினிமா காரர்களால் பொய்யாக உங்கள் மேல் திணிக்கப்பட்டது…..அவை திணிக்கப்பட்டதாக இருந்தாலும் அதற்காக முயற்சிக்கிறிர்கள் ஆனால் படித்து முடித்த பினிபட்டதாரிகளாய் இருந்து பல  இன்னல்களை அனுபவிக்கிறிர்கள்….பிறகு களைப்பால் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறிர்கள்…பின் ஐந்து ஆறு ஆண்டுகள் கழிந்த பின் திருமணம் செய்து கொள்கிறிர்கள்.அதன் பின் நீங்களும் குட்டி போட்டுவிடுகிறிர்கள்…பிறகு நீங்கள் குடும்பத்திற்காகவுமி குழந்தைகளுக்காகவும் வாழ்க்கையை வாழ்வோம் என்ற எண்ணத்தின்  ஆதிக்கத்தால் உங்களின் தேடல் திசையை மாற்றுகிறிர்கள்.இ

பின் பணம் சம்பாதித்தலிகுடும்பம் வாழ்க்கையை நடத்துதலிகுழந்தைகளை வளர்த்தல் போன்ற செயலை செய்து உங்கள் வாழ்க்கையின் காலத்தை நகர்த்துகிறிர்கள்…இடையிடையில் உங்களை மகிழ்வித்து கொள்ளும் சில செயல்களை செய்துஇஅதாவது  போலித்தனமான மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்களை செய்து நீங்களே உங்களை மகிழ்வித்து கொள்கிறிர்கள்.உதாரணத்திற்கு பொருள் வாங்குதலிபடத்திற்கு செல்லுதலிகுழந்தைகளுடன் விளையாடுதலிசுற்றுலா…போன்ற செயல்களை செய்து மகிழ்ச்சியாக இருப்பது போல் உங்களை நீங்களே ஏமாற்றுகிறிர்கள்…

அதையும் தாண்டி குடும்ப சுமை அதிகரிக்கும் போதுஇபொறுப்புக்களை தவிர்க்க சன்யாசம் பூண்டுவிடுகிரார்கள்…..சிலருக்கு அதிக பணமிவசதி இருந்தால் ஆன்மிகம் நோக்கி சென்றுவிடுகின்றனர்…இவ்வளவு தான் உங்கள் தேடல்……….

மாற்றொரு வகை தேடலும் உள்ளது….அதையும் பார்ப்போம்…

தேடல் 2:

இம்முறை எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும்….அல்லது வித்தியாசமாக செய்யவேண்டும் …பலரின் கவனத்தை கவர வேண்டுமி… தன்னால் கவரப்பட்டவர்கள் பலர் தன்னை தொடர வேண்டும்….

இதில் எதையாவது நீங்கள் செய்ய விரும்பும் போது புதிய முயற்சியை எடுக்கிறிர்கள் …அதை விடாமுயற்சிடன் செய்து சாதிக்கிறிர்கள்…..அதன் பின் என்ன???? அடுத்தைஎந்த செயல் உங்களை சந்தோசமாக வைத்திருக்கும் என ஆராய்ந்துஇஅதை அடைவதற்கான செயலையே செய்கிறிர்கள்  ஆகவே தேடல் என்பது ஏதாவது ஒன்றை அடையவதற்க்கான செயலே….

தேடல் 1 ல் குடும்பமிகுட்டி னு வாழ்கிறிர்களிதேடல் 2ல் புதிய சாதனைஇபுகழ் என்ற ஆர்வத்தில் வாழ்கிறிர்கள்…இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை…

சரி தேடல் எப்போது ஆரம்பிக்கிறது.?

புரிந்த தேடல் நீங்கள் இளைஞான இருக்கும் போதுமிபுரியாத தேடல் சிறுவனாக இருக்கும் ஆரம்பித்துவிடுகிறது….அதென்ன புரிந்த தேடலிபுரியாத தேடல்…??

புரிந்த தேடல்.. பணத்தேவைஇமேற்படிப்பு தேவைஈருப்பிடமிஎன அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும் போது பொருளாதார நிலைஇஒருவனால் உணரப்படும்……அவ்வாறு உணர்ந்தவனிஅவன் சிறப்பான வாழ்க்கையை அடைவதற்காகவுமிநல்ல பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசையுடன் முயற்சிக்கிறான்.ஆகவே அவனுடைய தேடல் பொருளாதார நிலையை சரி செய்யும் வகையில் அமைந்திருக்கும்….இது புரிந்த தேடல்..

புரியாத தேடல்….சிறுவனாக இருக்கும் போதுஈபெண்களின் மீது உண்டாகும் பாலுணர்வு எழுச்சீநண்பனின் மீது உண்டான எல்லையற்ற வெறுப்பால் உருவாகும் பழிவாங்கும் எண்ணமிபணக்காரானாகி விட வேண்டும் என்ற ஆசை போன்றவை காரணமில்லா தேடல்….

நமது சமுதாயத்தில் சொந்த தேவைகளை பொறுத்துஇபுரிந்த தேடலினால் வாழ்க்கையின் பாதை வெவ்வேறு வகையில் திசைமாற்றப்படுகிறது….

பொதுவாக ஆண்கள் அனைவரும் இபொறுப்புகளை தவிர்க்கவே விரும்புவார்கள்….சிலருக்கு கோபம் வரலாம்..ஆனால் அது தான் உண்மை….

நீங்கள் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையில் சந்தோசமான பகுதி என்ன ? என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் நிச்சயம் அவர்களின் டியெளக்டழச வாழ்க்கையை தான் கை காட்டுவார்கள்….ஏன்?

டியெளக்டழச வாழ்க்கையில் தேடலுக்கான முக்கியத்துவம் குறைவுஇஅவனுடைய சுற்றுப்புறத்தால் உண்டான போலி சந்தோசமிஅவனுடைய தேடலை தற்காலிகமாக மறக்கச்செய்கிறது…மேலும் போலி சந்தோசங்கள் அவன் மனதை திருப்தி அடையச்செய்கிறது.இந்த துயரமில்லா வாழ்வையுமிபொறுப்புகள் இல்லா நிலையை உணரவே இபோலி சந்தோஷ நிலையை அடையவே பலர் மது அருந்துகின்றனர்……

.இது இளைஞனுடைய தேடல் மட்டுமல்லாமலீவாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட அனைவரும் இதே செயலை செய்துள்ளனர்…பொறுப்புக்களை தவிர்க்கவே நினைக்கின்றனர்.என்ன சிலர் தேடலை சற்று வேறு வழியில் தேடுகின்றனர்…அமைதீதியானமிஆன்மிகம் போன்றவைகளை செய்து திருப்தியடைகின்றனர்….இந்த வகை தேடல் அனைத்தும் அவன் வாழ்க்கை இன்னும் சிறிது காலம் சந்தோசமாக நீட்டிக்க வழி செய்யும் அவ்வளவு தான்…

தேடலின் முடிவு தான் என்ன?

பலர் தியான நிலையை அடைய முயற்சிக்கின்றனரிதன்னை உணர வேண்டும் ஞானம் பெற வேண்டும் என்ற தேடலை செய்து போலி சாமியார்களிடம்  பணத்தை வீணாக்குகிறார்கள்..உண்மையில் தன்னிலை உணர்ந்த பல ஞானிகள் கண்டது “வெறுமையே”…தன்னுடைய நிலையை உணர்ந்தவர்கள் சிலர் மனநோயாளியாகவுமி சிலர் எதுவும் பேசாத நிலையை அடைகின்றனர்….தன்னிலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே  மேற்கூறிய போலி சந்தோசங்கள் தேவை ….அவைகளால் மட்டுமே அவர்களின் சுயசிந்தையை மறக்கடிக்க முடியுமிமேலும் அவர்களின் வாழ்க்கையை நீட்டிக்கவும் முடியும்…ஆகவே தான் அவர்கள் போலி சந்தோசங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பார்கள்…..

போலி சந்தோசம் என்றால் என்ன? என கேட்கிறிர்களா???

சில உதாரணங்களை பார்ப்போம்…

ஒருவன் அவன் விரும்பும் பெண்ணிடம் காதலை தெரிவிக்கிறான்…அவள் அதை ஏற்கவில்லை…அவன் அதை உணர்ந்தாலும் அவளை விடாமல் காதலிக்கிறான்….ஏன்?ஒருவகை போலியான மகிழ்ச்சி ….அவள் மீது கொண்ட போலி அன்பின் காரணமாக மீண்டும் அவளை தொடர்கிறான்…வேறு மொழியில் கூறினால் ஒரு வகையான வைஅந ப்யளள தான்…. அவன் அவனை மகிழ்வாக வைத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை….ஆனால் அவளுக்கு தொந்தரவு கொடுக்காத வரை சரி தான்…

காதல் தோல்வியடைந்த சிலர் இப்படி செய்வதை நான் கண்டதுண்டுஇஅவள் இன்னும் தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொள்வார்கள்….அப்போது அவனுடைய மூளை அவனை திருப்திசெய்யைஅவனை  மகிழ்வாக வைத்து கொள்வதற்காக சில ஹார்மோன்களை சுரக்கிறது.விளைவு எல்லையற்ற மகிழ்ச்சி…உதாரணத்திற்கு அவன் செல்போனில் பாடல் கேட்டுகொண்டிருந்தால் அவன் நினைவுகள் பாடலுக்கேற்ப அவனையும் அவளையும் இணைத்து அவனுக்கு ஒரு போலியான மாயையை உருவாக்கீபின் மகிழ்ச்சியை அளிக்கிறது பின் அவன் புத்துணர்வுடன் அடுத்தவேலையை பார்க்க செல்கிறான்….இதே போன்று தான் நாமும் நாம் வாழ்க்கையை நகர்த்த பல வித கற்பனைகளை மனதில் எண்ணிக் கொண்டு நம் எண்ணத்தை நோக்கிய பயணத்தை தொடர்கிறோம்….

நமது எண்ணங்கள் தான் நம் தேடலுக்கு வழிவகை செய்கிறது….உங்களை மகிழ்ச்சியாக வைக்கவுமிசோகமாக வைக்கவும்..அவையே அடிகோல் இடுகிறது….ஏன் நீங்கள் யார் என்று தீர்மானிப்பதும் அதுவே….நீங்கள் கோபமிபொறாமைஇசமுதாயத்தின் மீது வெறி கொண்டவராக இருந்தால் மனநோயாளியாக்கலாம்….மாறாக அனைத்தையும் சகித்து கொண்டு வாழத் தெரிந்தால் நல்ல கணவனாகவுமிநல்ல தந்தையாகவுமிநல்ல பொறுப்புள்ள மாணவனாகவும் இருக்கலாம் இவை அனைத்தும் சமுதாயத்தின் பார்வையே…உங்களின் எண்ணங்கள் அல்ல…ஆகையால் சமுதாயத்தின் பார்வையை உங்கள் மீது இருந்து அகற்றுங்கள்…நீங்கள் யார் என்று தீர்மானிப்பது உங்கள் எண்ணங்கள் மட்டுமே….

ஆகையால் தான் எண்ணங்களை பற்றி விவேகானந்தர் முன்னரே கூறியுள்ளார் “நீ எதை நினைகின்றாயோ அதுவாகவே ஆகிறாய்”என்று..போலியான மகிழ்ச்சியே உங்களை மகிழ்விக்கிறது என்று அதை நீங்கள் தவிர்த்தால் “நம் வாழ்கை எங்கே போகிறது?என்ற கேள்வி ஆதிக்கம் பெற்று உங்கள் மனதை வருத்தும்…..பின் வாழ்க்கை வெறுமையாக காட்சியளிக்கும் ஒன்றுமில்லா வெங்காயம் போல….இதை தான் புத்தர் தன் தியான நிலையில் கண்டார்….

தேடலின் முடிவு தான் என்ன???

தேடல் நமது வாழ்க்கையை பல வழிகளில் நடத்தினாலும் அவற்றை சிறியதாக அல்லது பெரியதாக அமைத்து கொள்வது நம் கையில் தான் உள்ளது…..சிறிதாக இருப்பின் வெறுமை வெகுவிரைவில் உணரப்படும்….உதாரணத்திற்கு வீடு வாங்குதலிகல்யாணமிகாரிசெல்போன் போன்றவை…..அவைகளை அடையும் வரை மட்டுமே அதன் மீது ஆர்வம் அதிகமாக இருக்குமீதனதுடையதான பின்  அதன் மீதான ஆர்வம் குறைந்து விடும்.ஒருவேளை பெரிதாக இருப்பின் சந்தோசம் தான்….உங்களுடைய தேடலின் பாதைஇஉங்களுடையதாகவே கடைசி வரை இருக்கும் எந்த வித மனக் குழப்பங்களும் ஏழாது..முயற்சியுங்கள்…

https://pakuvinpakkangal.wordpress.com/2014/12/11/பகுவின்-பார்வையிலிருந்-4/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அர்த்தமுள்ள ஆழமான ஒரு விடயத்தை கையில் எடுத்திருக்கின்றிர்கள் இன்னுமொருவன்..... இதில் எழுத நிறைய யோசிக்க வேண்டி யுள்ளது....பின்பு எழுதுவேன்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன் உன்மையில் நடந்தது சொந்த காரர் ஒருவர் லண்டனில் உள்ளவரிடம் காசு கேட்டு இருக்கிறார் அவரோ காசு இல்லை மச்சான் இங்க சரியான கஸ்ரம்டா சொன்னா நம்பமாட்டாய் என்று சொல்ல கவலைப்படாத மச்சான் நான் காசு அனுப்புறன் என்று சொல்லி அவரின்ட பாதி வளவ வித்து காசு அனுப்பினார் :11_blush:

 

இப்படி ஒரு சம்பவம் எனது நண்பனுக்கும் நடந்தது. 

எனது நன்பனின் நண்பன் ஒருஆள் பாரிஸ் ல இருக்கிறான். அங்கை சொந்த வீடு கார் எண்டு எல்லாம் இருக்குது. ஆனால் அவன் ஒருநாள் எனது நண்பனிடம் யூரோ 5000 கடனாக கேட்டுஇருந்தான் (எனது நண்பன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்பவன்). எனது நண்பனும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை வேறு நண்பர்களிடம் வாங்கி அனுப்புவதாக கூறி, சொன்னது போல பல நண்பர்களிடம் (நான் உட்பட) கடன் வாங்கி ஒருவாறு 5000 யூரோ அனுப்பிவிடான். அதன் பிறகு எனது நண்பன், தனது நண்பர்களிடம் வாங்கிய கடனை தனது சொந்த காசு மூலம் கட்டிவிடான். ஆனால், எனது நண்பனின் நண்பன் இன்னும் எனது நண்பனுக்கு அந்த 5000 யூரோ ஐ கொடுக்கவில்லை. இது நடந்து இப்ப ஒரு 3 வருடத்துக்கு மேல இருக்கும். ஆனால் நண்பனின் நண்பன் ஒவ்வொரு வருடமும் இலங்கை வந்து போறவன். இவனும் கடனை கேட்டால் பாரிஸ் போட்டு அனுப்பிறன் எண்டு ஒரே எமது கதை. இதுவரை வட்டியும் இல்லை முதலும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களை நினைத்து கவலைப்படாமல் ,இனிமேல் இப்படித்தான் நடக்கும் என்று நினைத்து தேவையில்லாமல் வேதனைப்படாமல் நிகழ்காலத்தினை (present in the moment) இரசித்து வாழ்வதினால் இன்பமான இருக்கலாம்  -  எனக்கும் யாழ்களப் புத்தனுக்கும் தெரிந்த ஒருவர் சொல்லும்  அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

What does present in the moment mean?
It means that your awareness is completely centered on the here and now. You are not worrying about the future or thinking about the past. When you live in the present, you are living where life is happening. The past and future are illusions, they don't exist.

     

With that goal in mind, consider this list of ten tips below to start living your life in the present:
  1. Remove unneeded possessions. ...
  2. Smile. ...
  3. Fully appreciate the moments of today. ...
  4. Forgive past hurts. ...
  5. Love your job. ...
  6. Dream about the future, but work hard today. ...
  7. Don't dwell on past accomplishments. ...
  8. Stop worrying.
  9. Think beyond old solutions to problems
  10. Conquer addictions

உங்களுக்கு எதாவது விளங்கியிருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுய  மீட்டல்

 

நீங்கள் மேலே  குறிப்பிட்டது போல

எல்லாவற்றையும்   இலகுவாக அடைந்துவிட  வாங்கிவிட முடிகிற  வாழ்க்கை

சுவையுள்ளதாக  இருக்குமா??

எம் முன்னோர்கள்  எப்பொழுதே  சொன்னார்களே

போதும்  என்ற  மனமே பொன் செய்யும் மருந்து என்று

இன்று  எதை  அடைந்த போதும்

அது போதுமானதாக

திருப்தி  அடைந்ததாக  மாறி  வருகிறதா??

மாட்டுவண்டிச்சவாரிக்கும்

சந்திர  மண்டல  பயணத்துக்குமான  இடைவெளியும்

போட்டியும்

தாகமும்  இருந்து கொண்டு தானே  இருக்கிறது?

சுயநலங்கள்  அதிகரித்திருப்பது உண்மை  என்றால்

புடுங்குப்பாடுகள் தானே  அதை வளர்க்கின்றன?

 

தனிப்பட

நான்  எனது  வாழ்வின்  இலட்சியங்களை

கனவு  கண்ட  வாழ்வை

நான்  வாழ  எண்ணிய வாழ்க்கையை

அடைந்தேனா  என்றால்  இல்லை  என்பது தான் பதிலாக  இருக்கும்

எல்லாம்  இருந்தும் ஏதோ  ஒன்றை  தொலைத்த  வெறுமை

பெரும் புத்தகமாக எழுதக்கூடிய அனுபவங்கள்

அடியெடுத்து வைத்தவை

அல்லது முயற்ச்சித்தவை  

அவற்றில்  வென்றவற்றை  பார்த்தால்????

எம்மை ஏமாற்றியவர்கள்

நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள்

இன்னும் இருவேடமிடும் சொந்தங்களுக்கு  மத்தியில்

இவற்றை அறவே துறந்து

இவன் மனச்சாட்சிப்பட  நடப்பவன் என்ற  நல்ல பெயரோடு

வாழ்ந்தால் இவர் போல  வாழணும்

இவர் போல பிள்ளைகளை  வளர்க்கணும் என நாலு பேர்  சொல்லும் அளவுக்கு

வாழ்ந்து முடித்திருப்பதே இப்போதைக்கு  என்னுடன்  கூடவே வருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மையில் படித்ததில் பிடித்தது;
வாழ்க்கை என்பது கனவு போல
வாழ்ந்து பார்க்கணும் கவிதை போல
பாடலில் பிடித்தது;
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
என் அனுபவத்தில் கிடைத்தது;
இதுவும் கடந்து போகும் என்று
எதனையும் இறை அருளுடன்
எதிர் கொண்டு  வாழ்வது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்‘
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎/‎04‎/‎2018 at 12:46 PM, Innumoruvan said:

அனைவரது வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. 

 

ரதி உங்கள் ஆதங்கமும் வலியும் புரிகிறது. ஆனால் இறப்பின் பின் உடல் என்னாகும் என்பதில் நிஜத்தில் உங்களிற்குக் கரிசனை இருக்கின்றதா?

 

 

இல்லை இன்னுமொருவன்...நான் செத்து பிரேதமாய் இருக்கும் போது வடிவாய் இருக்க வேண்டும் என்ட அற்ப ஆசை இருக்குது ...ஆனால் செத்த பிறகு நான் எப்படி இருந்தால் எனக்கு என்ன தெரியவா போகுது:unsure:
வயசு போகப் போக கெதியில் வயசு போகுது என்ட கவலையும் ,கெதியில் செத்திடுவேன்:rolleyes: என்ட பயமும் இருக்கு....அதே நேரத்தில் வாழும் வாழ்க்கை கூட திருப்தி இல்லாமல் இருக்கு.tw_confused:
இருக்கும் வரைக்கும் சந்தோசமாய் இருந்து விட்டு வருத்தம்,துன்பம் வந்து படுக்கையில் கிடக்காமல் சாக வேண்டும் என்பதும் எனது அவா<_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்று பயப்படுவதும்  மற்றவர்களுக்காக வாழாமல் எமக்காக மட்டும் வாழ வேண்டும் என்றும் நினைப்பது உண்டு
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:
இல்லை இன்னுமொருவன்...நான் செத்து பிரேதமாய் இருக்கும் போது வடிவாய் இருக்க வேண்டும் என்ட அற்ப ஆசை இருக்குது ...ஆனால் செத்த பிறகு நான் எப்படி இருந்தால் எனக்கு என்ன தெரியவா போகுது:unsure:
வயசு போகப் போக கெதியில் வயசு போகுது என்ட கவலையும் ,கெதியில் செத்திடுவேன்:rolleyes: என்ட பயமும் இருக்கு....அதே நேரத்தில் வாழும் வாழ்க்கை கூட திருப்தி இல்லாமல் இருக்கு.tw_confused:
இருக்கும் வரைக்கும் சந்தோசமாய் இருந்து விட்டு வருத்தம்,துன்பம் வந்து படுக்கையில் கிடக்காமல் சாக வேண்டும் என்பதும் எனது அவா<_<

கிழவி  மாதிரி  பேசக்கூடாது ரதி

எவ்வளவோ  இருக்கு  வாழ்வில்  இன்னும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 https://m.facebook.com/story.php?story_fbid=1969186426729146&id=1557825057865287

19 minutes ago, விசுகு said:

கிழவி  மாதிரி  பேசக்கூடாது ரதி

எவ்வளவோ  இருக்கு  வாழ்வில்  இன்னும்...

வயசு போக போக அப்படித்  தான் மனசு நினைக்கிறது....நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணா

.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

 https://m.facebook.com/story.php?story_fbid=1969186426729146&id=1557825057865287

வயசு போக போக அப்படித்  தான் மனசு நினைக்கிறது....நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணா

.....

ஆனால்  உங்கள்  வயதில்

நம்பிக்கை  ஒன்றுதான்  வாழ்வாக  இருக்கும்

இருக்கணும்

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.