கிருபன் 2,331 Report post Posted April 15 விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் மதவெறியும் அதைத்தானே செய்கிறது பெண்ணுடலைச் சிதைத்துப் புசித்துக் கோரப்பசி தீர்க்கிறது பூட்டிய கோயிலில் நீ உயிர் துடித்த போது உன் குரல் எவருக்கும் கேட்கவில்லை பிரிந்த உன் உயிரிலிருந்து முனகும் குரலொலி உலகின் திசையெங்கும் நீதிகோரி அதிர்கிறது மகளே உன்போன்ற பிஞ்சுகளையேனும் காமவெறி காவுகொள்ளாதிருக்க உன் ஆன்மக்குரல் காவலிருக்கும் உன் குதிரைகளோடு நீ உலவித்திரிந்த காடு மலை மேடுகளில் http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=22de1775-4fa3-4039-b58b-c956821ce737 Share this post Link to post Share on other sites