Jump to content

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா?


Recommended Posts

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 1 #Neutrino

 
 

1930 ம் ஆண்டு. சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜூரிச் நகரத்தைவிட்டு சற்று தூரத்தில் அமைந்திருந்தது அந்த ஆய்வுக் கூடம். வெளியில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். ஆனால், ஆய்வுக் கூடத்தின் உள்ளே சற்று கதகதப்பாகத் தான் இருந்தது. ஆய்வுக் கூடம் பெரிதாக இருந்தாலும், அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவருக்கு வயது முப்பதிருக்கலாம். முன் தலையில் சின்ன வழுக்கை இருந்தது. முடியை அழுத்தி பின்புறமாக படியும் வகையில் வாரியிருந்தார். கம்பளித் துணியால் ஆன, கால்வரை நீண்டிருந்த கருப்பு நிற கோட்டை அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு டேபிளில், மஞ்சள் நிறத்திலான ஒரு அட்டையைப் படித்துக் கொண்டிருந்தார். அது அந்தக் காலத்திய கடிதமாக இருக்கக் கூடும்.

நியூட்ரினோ - உல்ஃப் கேங்க் பாலி

உல்ஃப் கேங்க் பாலி (Wolfgang Pauli)

" டியர் உல்ஃப்,

கடந்த இருபதாண்டுகளாகவே, 'அணு'வில் நிகழும்  'பீட்டா சிதைவு' (BETA Decay) குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். பீட்டா சிதைவின் போது, அது எலெக்ட்ரானை (Electron) வெளியிடுகிறது. ஆனால், அதன் முடிவுகளைப் பார்க்கும்போது,  ஏற்கனவே நமக்கு இருக்கும் 'ஆற்றல் அழிவின்மை விதி' (Law of Conservation of Energy) மற்றும் "உந்தம் அழிவின்மை விதி" (Law of Conservation of Momentum) ஆகிய இரண்டையும் அது மீறுகிறது. இது எப்படநிகழ்கிறது என்றே தெரியவில்லை. நாளுக்கு நாள் இந்த 'விதி மீறல்' உறுதியாகிக் கொண்டே போகிறது. ஒருவேளை, நம் அறிவியல் கோட்பாடே தப்பா? அப்படியென்றால் இதுவரை நடந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அனைத்துமே தப்பா? உல்ஃப் இதற்கான விடையை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும். நன்றி"

அந்தக் கடிதத்தை மூடிவைத்துவிட்டு உல்ஃப் சில நொடிகள் யோசித்தார். ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். சில நாட்கள் கழிந்தன.
அந்த நாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உல்ஃப் ஒரு நொடி ஆச்சர்யப்பட்டார். இது உண்மையா? மீண்டும் அதை உறுதிபடுத்த சில விஷயங்களை செய்தார். உற்சாகத்தில் துள்ளி குதித்தார் உல்ஃப்.   

உல்ஃபிற்கு ஒரு விநோத பழக்கம் உண்டு. தான் எந்த புது விஷயங்களைக் கண்டுபிடித்தாலும், அதை முதலில் தன் நண்பர்களுக்கு கடிதத்தில் பகிர்வார். உடனடியாக, தன் நண்பர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்...

" அன்பிற்குரிய கதிரியக்க மற்றும் அணு ஆராய்ச்சியாளர்களே,

நான் மிக முக்கியமான ஒரு விஷயத்தை இன்று கண்டறிந்துள்ளேன். 'பீட்டா சிதைவின்' போது, அணு எலெக்ட்ரானை மட்டுமே வெளியிடுவதாக தான் இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிப்படையில் பார்த்த போது தான், அது நம் அறிவியலின் இரண்டு முக்கிய விதிகளை மீறுவதாக உணர்ந்தோம். அது தவறு என் தோழர்களே...நம் அறிவியல் விதிகள் மிகவும் சரியானவையே. பீட்டா சிதைவின் போது, அணு எலெக்ட்ரானை மட்டுமல்ல... இன்னொன்றையும் வெளியிடுகிறது. ஆனால், அது 'அணுத் துகள்' (Atomic Particle) கிடையாது. நாம் இதுவரை அணுவிற்குள், அணுத்துகள் மட்டும் தான் இருப்பதாக நினைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் ஒரு 'அணு உள்துகள்' (Sub - Atomic Particle) இருக்கிறது. அந்த அணு உள்துகள் தான் பீட்டா சிதைவின் போது வெளியாகிறது. இதை நான் பலமுறை ஆராய்ச்சி செய்து உறுதி செய்துள்ளேன். இன்னும் அது குறித்த ஆராய்ச்சிகளை செய்தால், நம்மால் பல அறிவியல் ஆச்சர்யங்களை கட்டவிழ்க்க முடியும்..." 

என்று பெரும் மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை தன் நண்பர்களான பல ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பினார். ஆனால், அந்த 'அணு உள்துகள்' குறித்து ஆராய்ச்சியை உல்ஃப்கேங் பாலியால் (Wolfgang Pauli) தொடர முடியவில்லை. அதை அவர் கண்டுபிடித்த சில நாட்களிலேயே, அவரின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். உல்ஃபின் தாயும் அதே சமயத்தில் தற்கொலை செய்து இறந்துவிட்டார். மிகக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் உல்ஃப். 

நியூட்ரினோ கடிதம்

நியூட்ரினோ கண்டுபித்தது குறித்து  கோவனும், ரெய்ன்ஸும் உல்ஃபிற்கு அனுப்பிய கடிதம்

உல்ஃப் கண்டுபிடித்திருந்த அந்த அணு உள்துகளுக்கு "நியூட்ரான்" (Neutron) என தற்காலிக பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே நியூட்ரான் என்ற பெயரில் ஒரு அணுத்துகள் இருந்ததால், இதற்கு வேறு பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருந்தது. 
1932ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் ஆராய்ச்சியளர்கள், எடோரடோ அமல்டி (Edorado Amaldi) மற்றும் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) ஆகியோர், அடுத்து சில நாட்களில் நடக்கவிருக்கும் சால்வே (Solvay) அறிவியல் மாநாடு குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அணு உள்துகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அமல்டி விளையாட்டாக, இந்தப் பெயரை வைக்கலாம் என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டார். அந்தப் பெயருக்கு இத்தாலி மொழியில் "A Little Neutral One" என்று அர்த்தம். 

அந்தப் பெயர் "நியூட்ரினோ". அன்று தான் உலகம் முதன் முதலாக "நியூட்ரினோ" என்ற வார்த்தையை உச்சரித்தது. 
நியூட்ரினோ துகள் இருப்பது அனுமானிக்கப்பட்டு 26 வருடங்கள் கழித்து, 1956யில், க்ளைட் கோவன் (Clyde Cowan) மற்றும் ஃப்ரெட்ரிக் ரெய்ன்ஸ் (Frederick Reines) எனும் ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவின் தென் கரோலினாவில்  (South Carolina) இருக்கும் "சவன்னா ரிவர் சைட்" (Savannah River Site) ஆராய்ச்சிக் கூடத்தில், ஒரு உணர் கருவியை (Detector) நிறுவி, உலகிலேயே முதன்முதலாக நியூட்ரினோவைப் பிடித்தனர். 

1974யில் க்ளைட் கோவன் இறந்துவிட்டாலும் கூட, இந்த ஆராய்ச்சிக்காக ஃப்ரெட்ரிக் ரெய்ன்ஸிற்கு 1995யில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இப்படித் தான் தொடங்கியது "நியூட்ரினோ" எனும் மிகச் சிறிய துகளின் வரலாறு. அது முதல் இன்று... "தமிழக மக்களை மோடி ஏமாற்றிவிட்டார். நியூட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை..." என்று சொல்லி சிவகாசியைச் சேர்ந்த ரவி தீக்குளித்து எரிந்து, இறந்து போனது வரை நியூட்ரினோவின் வரலாறு உலகில் பதிந்துக் கொண்டேயிருக்கிறது. 

அடங்காதவன், அசராதவன் இந்த நியூட்ரினோ:

இதை உங்கள் வாழ்வின் ஏதோ ஓர் தருணத்தில் பார்த்திருப்பீர்கள்.  காலை சூரியன் வந்திருக்கும் நேரம். உங்கள் அறையின்  ஜன்னலை திறக்கிறீர்கள். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்த   சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை சின்ன அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம்.

இந்த உலகில் இருக்கும் எதுவும், எல்லாமும் அணுக்களால் (Atom) ஆனவை என்பது அடிப்படை அறிவியல். முதலில் "அணு" தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. லத்தின் மொழியில் "அணு" (Atom) என்றால் "பிளக்க முடியாதது" என்று பொருள். பின்னர், அறிவியல் வளர்ச்சி அணுவைப் பிளந்தது. அணுவினுள் ப்ரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் (Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர், உல்ஃப்கேங்க் பாலி அணுவில் துகள்கள் மட்டுமல்ல "அணு உள்துகள்கள்" (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். இந்த அணு உள்துகள் தான் நியூட்ரினோ. 

சட்பரி நியூட்ரினோ ஆய்வகம் இ கனடா

சட்பரி நியூட்ரினோ ஆய்வகம் - கனடா

அந்த காலை நேர சூரிய ஒளியில் நம் கண்ணுக்கு புலப்பட்ட அந்த துகள்கள் மாதிரியே, கண்ணுக்குத் தெரியாத பல நூறு லட்சம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியுமே வானிலிருந்து பொழிந்துக் கொண்டிருக்கின்றன. நம் பூமியின் ஒவ்வொரு சது சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. 

நியூட்ரினோ யாருக்கும், எதற்கும் அடங்காதவன். நியூட்ரினோ எவற்றோடும் வினை புரியாத இயல்பைக் கொண்டவன். இன்றைய நிலையில், உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோ தான் என்பதால் அது ஒளியின் வேகத்தில்...சமயத்தில் ஒளியை விடவும் வேகமாக எதையும் ஊடுருவிச் செல்லும் அசராதவன். ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிமீ தூரம் பயணித்து,  யாருக்கும் அடங்காமல் சுற்றுகிறானே...இவனைப் பிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே? ஒருவேளை இவனைப் பிடித்து, அடைத்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தியாவும், நியூட்ரினோ ஆய்வும்:

நியூட்ரினோ ஆராய்ச்சியில், உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. கர்நாடகத்தின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1962 ஆண்டிலேயே நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டது இந்தியா. ஆனால், அதன் பின்னர் அந்த ஆராய்ச்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், மீண்டும் 1990களில் நியூட்ரினோ முக்கிய பேசு பொருளானது. 

தேனி - நியூட்ரினோ ஆய்வகம்

இந்தியாவில் நிச்சயம் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்க சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா என பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின்னர் இறுதியாக, தங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான கார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) இருக்கும் தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கு தான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான  ஐ.என்.ஓ (Indian based Neutrino Observatory) அமைக்க பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. 

திட்டம் என்ன?

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் அதை 2.5 கிமீ தூரத்திற்கு குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும்.  மலையின் நடுப்பகுதியில் ஆய்வுகூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடை கொண்ட  உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன "அயர்ன் கலோரிமீட்டர்" (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி ( Nutrino Detector) அமைக்கப்படும். யாருக்கும், எதற்கும் கட்டுப்படாமல் சுற்றித் திரியும் நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். எளிமையாக, இது தான் திட்டத்தின் அடிப்படை. 

இந்த நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் என்ன செய்ய முடியும் என்பது யாருக்கும் தெரியாத விஷயம். ஒருவேளை இந்த பூமி எப்படித் தோன்றியது என்பதைக் கூட அந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியலாம்.  இது ஒரு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி அவ்வளவே என்று தான் ஆரம்பத்திலிருந்தே இதில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. 

ஒரு ஆராய்ச்சி மையம் கட்டப்போகிறார்கள். உலகளவில் இதுவரை விடை காண முடியாத பல விஷயங்களை தன்னுள் கொண்டிருக்கும் நியூட்ரினோவை அங்கு ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள். ஒருவேளை இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உலகின் பல அறிவியல் ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்த்தால், அது மொத்த தேசத்திற்குமான பெருமையாக இருக்கலாம். 

நியூட்ரினோ திட்டம்

எனில், இந்தத் திட்டத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இதை தமிழ்நாட்டில் தான் செயல்படுத்துவோம் என மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? திட்டத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை... இதனால் எந்த அச்சுறுத்தல்களும், ஆபத்துகளும் இல்லை என்று அரசு தரப்பில் சொல்வது உண்மை தானா? கடும் வெயிலிலும், மழையிலும் பல ஆண்டுகளாக களம் கண்டு திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் குரல் அறிவீனத்தின் வெளிப்பாடா? இந்தத் திட்டத்தை எதிர்த்து ஒரு உயிரே போன பிறகும் கூட, இந்தத் திட்டத்தை இங்குதான் கொண்டு வந்தே தீருவோம் என்று அரசு சொல்வதன் பின்னணியில் என்ன இருக்கிறது? அல்லது யார் இருக்கிறார்கள்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? நியூட்ரினோ திட்டம் அறிவியலா? அழிவியலா? அரசியலா? 

இப்படி பல கேள்விகள் இதில் எழுகின்றன. கண்ணை மூடிக் கொண்டு அதை ஆதரிக்கவும் வேண்டாம்... கண்ணை மூடிக் கொண்டு அதை எதிர்க்கவும் வேண்டாம். திட்டத்தின் சாராம்சங்களை ஆராயலாம். திட்டத்தின் நோக்கங்களை அலசலாம். அறிவியலை படிக்கலாம். அரசியலை கற்கலாம். எந்தவித முன் முடிவுகளுமின்றி பயணத்தை தொடங்கலாம். 

உங்கள் அழகான விரல்களில் இருக்கும் நகங்களை உற்று பாருங்கள். உங்கள் சுண்டு விரலின் நகத்தில் மட்டும், ஒவ்வொரு நொடியும்  6,500 கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன...அவற்றுக்கு ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு நம் "நியூட்ரினோ" பயணத்தைத் தொடங்கலாம்... 

https://www.vikatan.com/news/coverstory/122237-a-detailed-study-on-neutrino-project-part-1.html

Link to comment
Share on other sites

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 2 #Neutrino

 
 
 

"ஜக்கம்மா... தாயே... காப்பாத்தும்மா...

அழியப் போகும் அம்பரப்பர் மலைய...

ஜக்கம்மா...தாயே...காப்பாத்தும்மா..." 

டுமையான வெயிலில் ஆடு, மாடுகளை அம்பரப்பர் மலையில் மேய்த்துவிட்டு ஊர் திரும்பியிருந்தனர் சிலர். பலதரப்பட்ட கூலி வேலைகளை முடித்துவிட்டு வந்திருந்த ஒரு பெண்கள் கூட்டம், இரவுக்கு சோற்றை உலையில் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்திருந்தது. முடியப்போகும் அந்த நாளின், கடைசி சரக்குகளை ஏற்றிக் கொண்டு அம்பரப்பர் மலையை நோக்கி  மணல் லாரியும், தண்ணீர் லாரியும் புழுதி கிளப்ப அந்தக் கிராமத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. 

இந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டதிலிருந்தே, கிராம மக்கள் மாலை நேரங்களில் கூடி, தங்கள் குல தெய்வத்தை வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அம்பரப்பர் மலை இவர்களுக்கு குல தெய்வம். மலையின் உச்சியில் ஒரு கோவிலும், மலையடிவாரத்தில் ஒரு கோவிலும் இருக்கின்றன. 

அம்பரப்பர் மலைப் பகுதியில் மொத்தம் ஏழு மலைகள் இருக்கின்றன. சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனசாரிபட்டி  ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு இந்த ஏழு மலைகள் தான் குல தெய்வம். மலையடிவாரத்தில், ஒரு சிறிய ஓலைக் குடில் ஒன்று உள்ளது. அந்தக் குடிலில் ஏழு மலைகளைக் குறிக்கும் விதமாக ஏழு நடுகற்கள் இருக்கின்றன. இந்த மலையை உடைக்கப் போகிறார்கள் என்றதும், இந்த மக்களுக்கு... அது என்ன திட்டம்? அது என்ன செய்யும்? என்ற கேள்விகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகத் தானிருந்தன.

நியூட்ரினோ திட்டம் வரவிருக்கும் அம்பரப்பர் மழை

தாங்கள் தெய்வமாக வழிபடும் மலையை, தங்கள் தெய்வம் குடி கொண்டிருக்கும் மலையை உடைக்கப் போகிறார்கள் என்ற கோபம் தான் முதற்கட்டத்தில் எழுந்தது. மேலும், இந்த மலைகள் அவர்களின் வாழ்வாதாரம். பலரும் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதி இந்த மலைகள் தான். 

ஒரு தேசத்தின் அறிவியல் ஆராய்ச்சி குறித்து பேசுமிடத்தில், ஒரு சில கிராமத்தைப் பற்றியும், அவர்களின் கலாசார, பண்பாட்டு முறைகள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், இறை நம்பிக்கைக் குறித்தும் பேச வேண்டியது அவசியம் தானா? என்ற கேள்வி எழலாம். 

ஆம்...பேசத் தான் வேண்டும் என்கிறார்கள் ஒருசாரார். இந்திய தேசத்திற்கே பெரிய அடையாளமாகவும், பொருளாதார ரீதியில் பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய "சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை", இந்தியாவின் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் இந்துக்களின் நம்பிக்கை காயப்படும் என்ற நல்ல நோக்கிற்காக, அந்தத் திட்டத்தை செயல்படுத்த மறுத்த மத்திய அரசு இருக்கும்பட்சத்தில்... அம்பரப்பர் சாமியின் வாழ்விடத்தை உடைத்து, பெயர்த்து எடுப்பதை அனுமதிக்க முடியாது என்ற குரல்களும் பொட்டிபுரம் பகுதியில் கேட்கத்தான் செய்கின்றன. 

சரி... இந்தக் கூற்றுகள் எல்லாம் விவரம் தெரியாத, விவரம் புரியாத கிராமத்து மக்களின் கேள்விகளாகவே இருக்கலாம். உல்ஃப்கேங் பாலியின் சுவிட்சர்லாந்த் ஆய்வுக் கூடத்தில் தொடங்கிய நியூட்ரினோவின் வரலாற்றுக்கு முன், தேனி அம்பரப்பர் மலைப் பகுதி மக்களின் இந்தக் கருத்துக்கள் விளையாட்டுத்தனமாக, வேடிக்கையாக தெரியலாம். இருந்தாலும், எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முனையும் போது, அதன் அத்தனைக் கோணங்களையும் பார்க்க வெண்டியது அவசியமாகிறது. அதன் பொருட்டே, இந்தக் கருத்துக்களை இங்கு பதிந்துள்ளேன். 

தேனி மக்கள்

"ஐ.என்.ஓ" (INO) தொடக்கமும், தொடர்ந்த சர்ச்சைகளும் :  

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவைச் சேர்ந்த, பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அம்பரப்பர் மலையில், இந்தியாவின்  நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான ஐ.என்.ஓவிற்கு (India Based Neutrino Observatory), 1-06-2011 அன்று சுற்றுசூழல் அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். அதாவது, திட்டம் தொடங்க பச்சை கொடி காட்டப்பட்டது. 

அதே சமயத்தில், சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மதுரை உயர்ந்தீமன்ற கிளையில் வழக்குத் தொடுக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 

நியூட்ரினோ குறித்த ஆவணங்களை ஆராயத் தொடங்குகிறார்கள் சூழலியலாளர்கள். 

"இந்தியாவிலிருக்கும் அணு உலைகளிலிருந்தும், இன்னும் பிற இடங்களிலிருந்தும் அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து இங்கு கொட்டப் போகிறார்கள்..." என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்தார்கள் சூழலியலாளர்கள். 

" அணுக்கழிவா? கிடையவே கிடையாது. இது நியூட்ரினோ ஆராய்ச்சி மையம். இங்கு அதெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை." என்று சொல்லி, நியூட்ரினோ குறித்த விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர் ஆராய்ச்சியாளர்களும், அதிகாரிகளும். 

தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஒரு ஆவணத்தை சுட்டிக் காட்டினார்கள் எதிர்ப்பாளர்கள். 

பொதுவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற, மொத்தம் 12 பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஐ.என்.ஓவை பிரிவு 1 (E) யின் கீழ் பதிந்திருந்தார்கள். அது அணுக்கழிவு மற்றும் அணுக்கழிவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பிரிவு. அதன் அடிப்படையில் தான், "அணுக்கழிவு கொட்டப் போகிறார்கள்" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஐ.என்.ஓ அதை மாற்றியும் கூட, இன்றும் பலர் அணுக்கழிவு தான் இங்கு கொட்டப்போகிறார்கள் என்ற தவறான பிரசாரத்தைத் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

அம்பரப்பர் மலை அருகே வசிக்கும் மக்கள்

"அணுக்கழிவு பிரிவில் இதைச் சேர்த்தது ஒரு எழுத்தர் பிழை (A Clerical Error)" என்று சொல்லி, அடுத்ததாக  பிரிவு 8-யின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்கிறது ஐ.என்.ஓ. பிரிவு 8 என்பது, ஒரு பொதுவான கட்டடத்திற்கான அனுமதி கோரும் பிரிவு. அதாவது அங்கு 2.5கிமீ சுரங்கம் தோண்டும்  நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அல்ல... ஒரு சாதாரண கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அனுமதி கோரும் பிரிவு தான் " 8 ". 

இதற்கிடையில், பிப்ரவரி 14, 2015 அன்று "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் சார்பாக சென்னையில் இருக்கும், "தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டல பிரிவில்" நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்கிறார்கள். 

அந்த வழக்கு எதன் அடிப்படையில் போடப்படுகிறது என்றால்...

" 2010யில் ஐ.என்.ஓ, ஒரு "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு"  அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை கோவையைச் சேர்ந்த "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்" மேற்கொண்டது. இதில் இரண்டு பிரச்னைகள். 

ஒன்று, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு" அறிக்கையைத் தயாரிப்பதற்கான மத்திய அரசின் அங்கீகாரம் சலீம் அலிக்கு கிடையாது. 

மற்றொன்று, "நியூட்ரினோ ஆய்விற்காக தோண்டப்படும் சுரங்கத்தினால்...அதற்கு வைக்கப்படும் வெடிகளால்... வெடிகள் உடைத்து நொறுக்கும் பாறைகளால்... (Blasting Impact) என்ன மாதிரியான சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டும். ஆனால், எங்களால் அதை செய்ய இயலாது. நாங்கள் அதைச் செய்யவில்லை " என்று சலீம் அலியின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், 2.5 கிமீ சுரங்கம் தோண்ட,பல்லாயிரம் கிலோ வெடி மருந்துகள் கொண்டு,  6 லட்சம் டன் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் இந்தத் திட்டத்தினால் ஏற்படும்  "Blasting Impact" குறித்த எந்த ஆய்வுகளுமே இது நாள் வரை மேற்கொள்ளப்படவில்லை. 

சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற, மொத்தம் இருக்கும் 12 பிரிவுகளையும் செக்‌ஷன் A மற்றும் செக்‌ஷன் B என்று இரண்டாகப் பிரிக்கிறார்கள். செக்‌ஷன் A என்பது சாதாரணமான கட்டடங்களுக்குரிய பிரிவு. செக்‌ஷன் B என்பது சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம் அல்லது கவனத்துடன் பரீசிலிக்க  வேண்டிய கட்டடங்களுக்கான பிரிவு. இதில், நியூட்ரினோ திட்டத்தை செக்‌ஷன் A பிரிவில் தான் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. இந்தச் சட்டத்தின் பொது விதி என்பது..." சில திட்டங்கள் செக்‌ஷன் B பிரிவில் வந்தாலும் கூட, திட்டத்தின் இடம் தேசிய பூங்காக்களுக்கு அருகில் அமைந்திருந்தால் அதை செக்‌ஷன் Aஆவாக கருத வேண்டும்" என்று இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகத்தைப் பொறுத்தவரை, அது கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவிலிருந்து 4.5 கிமீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது. 

அதனடிப்படையில், பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் "இந்தத் திட்டத்தை கண்டிப்பாக செக்‌ஷன் A பிரிவில் தான் சேர்க்க வேண்டும். எனவே திட்டத்தை மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்யுங்கள்" என்று சொல்லி 20-03-2017 அன்று திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம். 

பொட்டிபுரம் மக்கள்

இதற்குப் பிறகு, ஐ.என்.ஓ மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்து (இந்த முறையும் செக்‌ஷன் B பிரிவில் தான் விண்ணப்பித்தது) பல சட்ட சிக்கல்களை கடந்து...இறுதியாக, மத்திய நிபுணர் குழு (Expert Appraisal Committee) அளித்த பரிந்துரையின் பேரில்... "நியூட்ரினோ திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதி, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும்" என்று 26-03-2018 அன்று உத்தரவிட்டது மத்திய அரசு. 

இத்தனைத் தடைகளைக் கடந்து, இன்று திட்டத்திற்கான அனுமதி கிடைத்துவிட்டது. "நியூட்ரினோ"  எந்த வகையிலும், மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ ஆபத்து விளைவிக்கும் ஒரு துகள் அல்ல என்பதை இந்திய விஞ்ஞானிகளும் தொடர்ந்து விளக்கி வருகின்றனர். உலக ஆராய்ச்சியாளர்களும் அதை நிரூபித்து உள்ளனர். இருந்தும், இன்றும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் தான் என்ன? 

"நியூட்ரினோ ஆபத்து இல்லை. ஆனால், நியூட்ரினோவைக் கொண்டு இவர்கள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி யாருக்காக? எதற்காக ? என்பதெல்லாம் எங்களுக்கு அச்சத்தைக் கொடுக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்துடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏன் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளாமல் மறைக்கிறது? நியூட்ரினோவின் இந்த ஆராய்ச்சியே அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்வதற்கும், செயலிழக்கச் செய்வதற்கும் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று முழுவதுமாக மறுத்திட முடியாது... " என்று நியூட்ரினோ திட்டத்தின் மறுபக்கத்தை உடைக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன். 

https://www.vikatan.com/news/coverstory/122236-a-detailed-study-on-neutrino-project-part-2.html

Link to comment
Share on other sites

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 3 #Neutrino

 

 

ரம்பக்காலங்களில் இருந்தே நியூட்ரினோவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும், வழக்குகளை நடத்தியும் வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ. மற்றொருவர் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். 

நியூட்ரினோவை ஏன் எதிர்க்கிறீர்கள் என்ற கேள்வியோடு சுந்தர்ராஜனை சந்தித்தோம்...

" நாங்கள் தேச நலனிற்கோ, அறிவியல் வளர்ச்சிக்கு எதிராகவோ கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்விகளாக எழுப்புகிறோம். சட்ட ரீதியில் அதற்கான விடைகளைக்  காண முயற்சிக்கிறோம். 

நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம் தான் எங்களுக்குப் பல கேள்விகளையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு "உயர் ஆற்றல் இயற்பியல்" (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன் பொருட்டு, 12வது 5 ஆண்டு திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கையாகக் கூட தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது. 

இந்திய அணுசக்திக் கழகமும், அமெரிக்காவின் "ஃபெர்மி" ஆராய்ச்சிக் கூடமும் (Fermi Lab) நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக சில ஒப்பந்தங்களைப் போடுகிறார்கள். ஐ. என். ஓவின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள்  (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், அடுத்தகட்டமாக செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial/ Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறது. இந்த செயற்கை நியூட்ரினோக்களை நம்மால் தயாரிக்க முடியாது. அதைத் தயாரிப்பது ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்கள்  தான். 

இது எப்படி இயங்கும் என்றால், அந்த ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம்  ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருப்பது உணர்கருவிகள் (End Detectors) மட்டும் தான். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த "மியூவான் கொலைடர்ஸ்" (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக் கொண்டதாக இருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி ஒருவேளை அது கதிரியக்கத் தன்மைக் கொண்டதாக இருக்கும்பட்சத்தில், ஒரு ஆராய்ச்சிக்கான மூலப் பொருள் கதிரியக்க தன்மைக் கொண்டதாக இருக்கும் போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. 

நியூட்ரினோ திட்டம் செயல்படவிருக்கும் அம்பரப்பர் மலை

எல்லாவற்றிற்கும் மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்த தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?  ஃபெர்மி மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்தின் "CERN" போன்ற ஆராய்ச்சிக் கூடங்களோடும் இவர்கள் இப்பந்தம் போட்டிருக்கிறார்கள். நியூட்ரினோ குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளை எல்லாம், பல நாடுகளும், பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டனர். நியூட்ரினோ ஆராய்ச்சியில் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களைத் தான் உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று Long BaseLine Neutrino Experiment (LBNE) . மற்றொன்று Deep Underground Neutrino Experiment. தூரம் போக, போக நியூட்ரினோக்களின் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்போது அந்த மாற்றங்கள் குறித்த ஆய்வுகளைத் தான் மேற்கொள்ளவிருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிக்கு தான் இந்தத் திட்டம் உதவப் போகிறது. 

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

ஐ.என்.ஓவின் அறிக்கையிலேயே கூட, பொட்டிபுரம் பகுதியை "Magic Baseline" என்று குறிப்பிடுகிறார்கள். இந்தப் பகுதியிலிருந்து சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்திற்கு 7,500கிமீ தான். உலகின் இன்னும் பல நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் தொலைவு இந்த ரீதியில் தான் இருக்கும். இப்போதைக்கு அதிகபட்சமாக 1300கிமீ தூரம் வரை நியூட்ரினோவை பயணிக்க வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இதன் அடுத்தக்கட்டமாக, இங்கு அந்த நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி, ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். 

சரி...இப்படி உலகின் பல நாடுகளும் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்று தேடும் போது எங்களுக்கு இன்னும் ஒரு முக்கிய விஷயம் தெரிய வருகிறது. 2008யில் Alfred Tang எனும் ஆராய்ச்சியாளர், " Neutrino Counter, Neutrino Weapon" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்கிறார். அதில் அவர், நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம். அணு ஆயுதங்களை செயலிழக்க வைக்கலாம். அதே சமயம். அணு ஆயுதங்களை வெடிக்கவும் வைக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல, அதற்கு முன்பும், அதே போன்ற ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. எனில், இந்த ஆராய்ச்சியின் நோக்கம் குறித்த கேள்வி எழுகிறது. நியூட்ரினோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட, தன் கட்டுரையில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். 

அம்பரப்பர் மலை

அதுமட்டுமில்லாமல், இதைக் கட்டும்போது ஒரு சின்ன அதிர்வலைகள் கூட ஏற்படாது. எந்த மாசு கேடும் இருக்காது என்று சொல்வதையும் ஏற்க முடியாது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பூகம்பம் குறித்த தரவுகளில் -  "ஹைக்குவேக்" ( Hiquake - Human Induced Earth Quakes), 37% நிலநடுக்கங்கள் சுரங்களினாலும், 22% நிலநடுக்கங்கள் பெரிய அணைகளினாலும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உட்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தை தோண்டும் போது எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய் மொழியாக சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இது போன்ற ஒரு சுரங்கத்தை கட்டும் போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது. அதை உடனடியாக நிறுத்திவிட்டனர். ஒரு பெரிய விபரீதம் நடந்து, பல ஆயிரம்  உயிர்கள் பலியான பிறகு தான் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வோம் என்ற பிடியில் இருக்காதீர்கள். முன்னெச்சரிக்கையாக இருங்கள். வெளிப்படைத்தன்மையோடு இயங்குங்கள். எங்கள் நிலத்தையும், வளத்தையும் சுரண்டும் நோக்கோடு வராதீர்கள். அவ்வளவு தான். மற்றபடி நாங்கள் அறிவியல் வளர்ச்சிக்கே எதிரானவர்கள் அல்ல. அதே சமயம் எங்களின் இயற்கை வளங்களை சுரண்டி, சூழலைக் கெடுக்கும் எதையும், எந்த நாளும் அனுமதிக்க மாட்டோம்..." என்று காட்டமாக சொல்லி முடிக்கிறார் சுந்தர் ராஜன். 

நியூட்ரினோ துகள் என்பது ஆபத்தில்லை. ஆனால், செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து சுந்தர்ராஜன் எழுப்பிய கேள்விகளோடு, மும்பையிலிருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்புக் கொண்டோம்...

அம்பரப்பர் மலை

" நியூட்ரினோ திட்டத்திற்காக வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 90% தமிழக அரசுக்கு தான். அதை அவர்கள் விற்று, அதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பது போல் எல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மை தான். ஆனால்...." 

(ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரின் முழு பேட்டியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். )


1. நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமும்   தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

"தீவிரவாதிகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களக் கண்டுபிடிக்க நியூட்ரினோக்கள் உதவும். இதன் மூலம் உலகில் அமைதியைக் கொண்டு வர முடியும். அது மட்டுமல்லாமல், கனிம வளங்கள் இருக்கும் இடங்களையும் நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியும்" என்று நியூட்ரினோவுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரையில் அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளார்.


2. பொட்டிபுரம் பகுதியை "கல்லடிக் காற்று" பகுதி என்று சொல்கிறார்கள். மிக அதிகப்படியான காற்று வீசும் பகுதியாக இது இருக்கிறது. இதற்கு அரணாக இருப்பது, அந்தப் பகுதியிலிருக்கும் "Shrub" வகை காடுகள். இப்போது நியூட்ரினோ திட்டத்திற்காக அந்தக் காடுகளை அழிப்பார்கள். அப்போது, காற்று மிக பலமாக வீசும். அது அவர்களுக்கே கூட பாதகமாக அமையலாம் என்று எச்சரிக்கிறார்கள் சில சூழலியலாளர்கள். 


3. வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்: 

" இது அபாயகரமான திட்டம். நாசகாரத் திட்டம். இது மட்டும் நடந்தால் தேனி மாவட்டமே பஞ்சப்பிரதேசமாகி விடும். பாலைவனமாகும். என்னால், இன்னும் கூட கடுமையாக நீதிமன்றங்களில் இதற்கு எதிராகப் போராட முடியும். ஆனால், பிரதமர் மோடியின் தீவிரத்தைப் பார்க்கும்போது தான் பயமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளமும் பெரிய அழிவை சந்திக்கும். இந்தத் திட்டத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கிறது. ஃபெர்மி ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தில் தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. இதை ஒரு நாளும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்." 

https://www.vikatan.com/news/coverstory/122235-a-detailed-study-on-neutrino-project-part-3.html

Link to comment
Share on other sites

நியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா? - பகுதி 4 #Neutrino

 

 

நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவாக பல ஆராய்ச்சியாளர்கள் பலவித கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டேதானிருக்கிறார்கள். ஆனால், திட்டத்திற்கான எதிர்ப்புகள் நாளுக்கு, நாள் வலுவடைந்துக் கொண்டேதானிருக்கின்றன. இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரை (Vivek Datar) தொடர்பு கொண்டு பேசினோம்...

"இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இது நம் தேசத்திற்கே பெரிய பெருமையைத் தேடி தரும் திட்டம். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  இதை நிச்சயம் ஆதரிப்பார்கள். இது தமிழ்நாட்டில் வருவதற்கு தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தான் கொங்கன் ரயில்வே தடம் அமைந்துள்ளது. அது எத்தனை சுரங்கங்களை அங்கு வெட்டியுள்ளது? அதனால் எல்லாம் அழிந்துவிட்டதா என்ன? இன்றைக்கு இருக்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்க இருகிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது. 

இப்படியான கற்கள் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. தமிழ்நாட்டில் இது இருப்பதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வெண்டும். வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 90% தமிழக அரசுக்கு தான். அதை அவர்கள் விற்று, அதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். 

விவேக் டத்தார்

நாங்கள் நிலத்தடி நீரை உறியப் போகிறோமோ? மாசு படுத்தப்போகிறோமா? என்று கேட்டால், 'நிச்சயம் இல்லை' என்பது தான் பதில். தண்ணீர் எங்களுக்குத் தேவைதான். இப்போதைக்கு எங்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இதைவிட சற்று கூடுதலாக தேவைப்படலாம். 2 லட்சம் லிட்டர் தண்ணீர் என்பது நாம் மலைக்கும் அளவிற்கானது கிடையாது. அது குடியிருப்புப் பகுதி ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தும் அளவு தான் அது. அதே போல், இந்தத் திட்டத்தால் எதையும் நாங்கள் கண்டிப்பாக மாசு படுத்தமாட்டோம். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. வெளிப்படையாகத் தான் இருக்கிறோம்..." என்றவரிடம்...

அமெரிக்காவின் ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தோடு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

" தேவைப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவோடு மட்டுமல்ல, பல உலக நாடுகளோடும் ஒப்பந்தம் போடத் தான் செய்வோம். அறிவியல் என்பது மொத்த உலகிற்குமான பொதுவான ஓர் விஷயம். "

ஆனால், அமெரிக்காவின் ஃபெர்மியோடு ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அதை எந்த இந்திய வலைதளத்திலும் பதியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்களே? எதிர்காலத்தில் போடலாம் என்பது சரி. இப்போது ஃபெர்மியோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதா? இல்லையா?

" ஃபெர்மியோடு ஒப்பந்தம் போட்டிருப்பது உண்மை தான். ஆனால், அது நீங்கள் நினைக்கும் வகையிலானது கிடையாது. நம் வளர்ச்சிக்காகத் தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அவர்களால் நாம் தான் பயனடைவோம். நம்மால் அவர்கள் பயனடைய மாட்டார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்குத் தான் என்பது போல் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை."

நியூட்ரினோ திட்டம் அமையவிருக்கும் அம்பரப்பர் மலை

நியூட்ரினோ கற்றைகளை அவர்களிடமிருந்து பெற்று ஆராய்ச்சி செய்யப்போவது உண்மையா?

" இல்லை. இப்போதைக்கு நியூட்ரினோ கற்றைகளை அவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்பம் இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் அது நடந்தால், அதை நாம் செய்யலாம். அதில் எந்தத் தவறு ஏதுமில்லையே. ஒரு அறிவியல் ஆராய்ச்சி என்றால் பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத் தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா?"

இந்த ஆய்வுகள் கதிரியக்கங்களை வெளியிட ஏதும் வாய்ப்புகள் உண்டா?

" கண்டிப்பாக கிடையாது. கதிரியக்கம் இருந்தால் நியூட்ரினோக்களைப் பிடிக்கவே முடியாது. "

Alfred Tang சொல்லியிருக்கும் கோட்பாடு குறித்து? ( நியூட்ரினோவைக் கொண்டு அணு ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை வெடிக்கச் செய்யவும், செயலிழக்கச் செய்யவும் முடியும்)

"ஆம்...அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகத் தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு அறிவியல் வளர்ச்சி வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தை எதிர்க்காதீர்கள். இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியது தான்..." என்று கோபத்தோடு சொல்லி முடிக்கிறார் விவேக் டத்தார்.

அணுகுண்டு தயாரிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், அவரின் கண்டுபிடிப்புகள் தான் அதற்கான அடித்தளத்தை அமைத்தன. ஆல்ஃப்ரெட் நோபலின் (Alfred Nobel) கண்டுபிடிப்புகள் பலவும் ஆயுதங்கள் தயாரிக்க வித்திட்டன. அந்த வருத்தத்தில் தான் அவர் "அமைதிக்கான நோபல் பரிசு" வழங்குவதைத் தொடங்கினார்.

 இப்படியாக, நல்ல அறிவியல் கெட்ட அரசியலோடும், கெட்ட அறிவியல் நல்ல அரசியலோடும் இணைந்து அழிவுகளை ஏற்படுத்துவது தான், உலக வரலாற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளும் "அறிவியல் அரசியல்" கோட்பாடாக இருக்கிறது. நியூட்ரினோ,  ஆகச்சிறந்த அறிவியலாகவே இருந்தாலும் கூட, அது அறமற்ற அரசியலின் பிடியில் சிக்கி கேடுகளை ஏற்படுத்திடக் கூடாது என்பது தான் அனைவரின் நல்லெண்ணமுமாக இருக்க முடியும்... 

https://www.vikatan.com/news/coverstory/122234-a-detailed-study-on-neutrino-project-part-4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்ரினோ திட்டத்தால் பெரிய ஆபத்து இல்லை என நாம் இன்று நம்ப போதிய முகாந்திரம் உள்ளது. எனினும் இப்போது தமிழகத்திற்கு வேண்டாம் என்னும் நிலைப்பாட்டினை எடுக்க சில காரணங்கள் உண்டு. அவை :

1. அழிவுத் திட்டங்கள் அனைத்தும் தமிழனுக்கு என்று முடிவாகி விட்டது. இத்திட்டம் குறித்து மட்டும் தமிழனுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ? உண்மையில் இது மனித சமூகத்திற்கு பயனுள்ள திட்டம் என்றே வைத்துக் கொள்வோம். அதை தேசியக் கட்சிகளுக்கு ஒத்து வருகிற வேற்று மாநிலத்திற்குக் கொண்டு செல்லட்டுமே ! தமிழ்நாடுதான் உகந்த இடம் என்கிற பம்மாத்தை எல்லாம் தமிழன் நம்பித்தான் ஆக வேண்டுமா ? 

2. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று இத்துறை சார்ந்த அறிஞரே சொல்லும்போது அதைப் பரீட்சித்துப் பார்க்க தமிழன்தான் கிடைத்தானா ? ஆம். அழிவென்றால் தமிழனுக்குத்தானே ? ஆரிய இன மேன்மையையும், தேவபாடையின் மேன்மையையும் தூக்கிப் பிடிக்கும் வடபுலத்தாரையும் இங்குள்ள புல்லுருவிகளையும் கேள்விக்குள்ளாக்கும் இனம் தமிழினம்தானே ! (கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை வேறு என்னென்று சொல்வது ? ) 

3. நன்மை என்று நம்பித்தான் 'பசுமைப் புரட்சி'க்கு பச்சைக்கொடி காட்டினோம். அன்றைய பஞ்சத்தின் தேவையாயிருந்திருக்கலாம். உடனே மரபுவழி விவசாயத்தை மீட்டிருக்க வேண்டும். ருசி கண்ட பூனை விடவில்லை. என்டோ சல்ஃபானுக்கு அடிமையாகி மண் மலடானது.  Point of no return. நச்சுணவிலிருந்து யாருக்கும் மீட்சியில்லை. சமூகத்தில் புற்றுநோய்க்கு இனி பஞ்சமில்லை. நியூட்ரினோவும் நன்றெனச் சென்று நம்மைக் கொன்று குவிக்க லாம்.

4.எல்லாவற்றுக்கும் மேலாக சனநாயகத்தில் மக்கள் வேண்டாம் என்றால் வேண்டாம்தான். No means No என்பதற்குப் பொருளை ' Pink' அமிதாப் பச்சனிடம் கேளுங்கள்.

நிறையப் பேசலாம்.

 

Link to comment
Share on other sites

https://www.newscientist.com/article/dn3800-pollution-hazard-closes-neutrino-lab/

நீர் மாசுபாடு அடைந்ததால் இத்தாலியில் இத்தகைய ஆய்வுக்கூடங்களை மூடியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

நியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா?

 
 

இரா.கலைச்செல்வன், படம்: வீ.சக்தி அருணகிரி

 

காலை நேரம். சூரிய ஒளி ஜன்னல் வழி ஊடுருவுகிறது. கோடுகளாய் விழும் அந்தச்  சூரிய ஒளிக்கதிரில் பல லட்சம் துகள்கள் தெரியும். இந்தக் காட்சியை அறிவியலோடு பொருத்திப் பார்த்தால் நியூட்ரினோவை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த உலகில் இருக்கும் எதுவும் எல்லாமும் அணுக்களால் ஆனவை. முதலில் ‘அணு’தான் உலகிலேயே சிறிய துகள் என்று நம்பப்பட்டது. பின்னர், அணுவினுள் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய மூன்று துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.  உல்ஃப்கேங்க் பாலி என்ற விஞ்ஞானி அணுவில் துகள்கள் மட்டுமல்ல, நியூட்ரினோ என்ற அணு உள்துகள்களும் (Sub Atomic Particles) இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்.  பூமியின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் கிட்டத்தட்ட 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.

p8a_1523430349.jpg

உலகின் மிகச் சிறிய துகள் நியூட்ரினோதான் என்பதால் ஒளியின் வேகத்தில், சமயத்தில் ஒளியைவிடவும் வேகமாக ஊடுருவிச் செல்லும். நியூட்ரினோவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் பல அறிவியல் முடிச்சுகளை அவிழ்க்கலாமே என்ற எண்ணத்தில், உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் பலவும் நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்தியாவிலும் ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க இந்தியா முழுக்கச் சுற்றியது ஆராய்ச்சியாளர் குழு. இமயமலையில் தொடங்கி, குஜராத், கோவா எனப் பல இடங்களைப் பரிசீலித்து இறுதியாக நீலகிரி மாவட்டத்தின் சிங்காரா பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அங்கு முதுமலைப் புலிகள் காப்பகம் இருப்பதால், அனுமதி மறுக்கப்பட்டது.  இறுதியாகத் தங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான சார்னோகைட் பாறைகள் (Charnockite Rock) உள்ள தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலிருக்கும் அம்பரப்பர் மலையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்குதான், நியூட்ரினோ ஆராய்ச்சி மையமான  ஐ.என்.ஓ (India-based Neutrino Observatory) அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

என்னதான் திட்டம்?

அம்பரப்பர் மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்குக் குடைந்து, இரண்டு லாரிகள் ஒரே சமயத்தில் செல்லும் அளவிற்கான அகலத்தோடும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய குகை அமைக்கப்படும்.  மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் எடைகொண்ட,  உலகின் மிகப்பெரிய காந்தத்தால் ஆன ‘அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனும் நியூட்ரினோ உணர்கருவி (Nutrino Detector) அமைக்கப்படும். நியூட்ரினோக்களை இந்தத் தடுப்புகளின் உதவியோடு தடுத்து நிறுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.  இதுதான் திட்டத்தின் அடிப்படை.

ஐ.என்.ஓ அமைக்க 2011-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ‘சூழலியலுக்குப் பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று, முதன்முதலாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார் வைகோ. இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைச் சூழலியலாளர்கள் ஆராயத் தொடங்கியபோது, முதல் கட்டத்திலேயே அவர்களுக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் திட்டத்தைப் பிரிவு 1 (E) கீழ் விண்ணப்பித்திருந்தது ஐ.என்.ஓ. அதாவது, அணு மற்றும் அணுக்கழிவு மேலாண்மைப் பிரிவு.  இந்தியா முழுவதிலுமிருந்து அணுக்கழிவு களை இங்கு கொண்டு வந்து கொட்டவிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், அது எழுத்தர் செய்த பிழை (Clerical Error) என்று சாதாரணமாகக் கூறிக் கடந்தது ஐ.என்.ஓ. இருந்தும் பிரச்னை தீரவில்லை.

p8b_1523430366.jpg

“நாங்கள் தேச நலனுக்கோ, அறிவியல் வளர்ச்சிக்கோ எதிராகக் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. திட்டம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக மத்திய அரசு சொல்ல மறுப்பதால், எங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தொடர்ந்து கேள்வி களாக எழுப்புகிறோம்” என்று தொடர்ந்து பேசத் தொடங்கினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.

“நியூட்ரினோவை ஏதோ ஓர் அபாயகரமான பொருள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் நோக்கம்தான் எங்களுக்குப் பல கேள்விகளையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு ‘உயர் ஆற்றல் இயற்பியல்’ (High Energy Physics) ஆராய்ச்சி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பொருட்டு, 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தம் 6 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐ. என். ஓ. இத்தனை ஆண்டுகளில் மற்ற 5 திட்டங்களும் இன்னும் அறிக்கை யாகக்கூடத் தயாராகவில்லை. ஆனால், நியூட்ரினோவிற்கு மட்டும் அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது?

ஐ.என்.ஓ-வின் திட்ட அறிக்கையில், முதல் சில வருடங்களுக்கு இயற்கையான நியூட்ரினோக்கள்  (Natural Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும். பின்னர், செயற்கை நியூட்ரினோக்கள் (Artificial Lab Made Neutrinos) ஆராய்ச்சி செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஃபெர்மி போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து, நியூட்ரினோக்கள் கற்றைகளாக (Muon Colliders) நம்  ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பப்படும். அந்த நியூட்ரினோக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து, அந்த முடிவுகளை நாம் அந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்குக் கொடுக்க வேண்டும். இயற்கையான நியூட்ரினோ குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த ‘மியூவான் கொலைடர்ஸ்’ (Muon Colliders) கதிரியக்கத் தன்மைக்கொண்டது. ஓர் ஆராய்ச்சிக்கான மூலப்பொருள் கதிரியக்கத் தன்மைகொண்டதாக இருக்கும்போது, அதை ஆராய்ச்சி செய்யும் கூடத்திலும் அதன் தாக்கம் ஏதாவது ஏற்படுமோ என்கிற பயம் இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும்மேல், இந்த ஃபெர்மி லேப் உடனான ஒப்பந்தம் குறித்த எந்தத் தகவல்களையுமே மத்திய அரசோ, ஐ. என். ஓவோ எங்குமே குறிப்பிடவில்லை. ஃபெர்மி ஆராய்ச்சிக் கூடத்தின் இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்க வேண்டிய காரணம் என்னவிருக்கிறது?

p8aaa_1523430603.jpg

அம்பரப்பர் மலைப் பகுதியைச் சுற்றி வைகை, முல்லைப் பெரியாறு உள்பட 12 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே அணைகளால் அழுத்தப்பட்டிருக்கும் இந்தப் பகுதியில், இப்படியான ஒரு சுரங்கத்தைத் தோண்டும்போது எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழியாகச் சொல்வதைக் காட்டிலும், தகுந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் க்ரான் சாசோ (Gran Sasso) எனும் நியூட்ரினோ மையத்தில் இதுபோன்ற ஒரு சுரங்கத்தைக் கட்டும்போது, நீரியியல் பூகம்பம் ஏற்பட்டது” என்று எச்சரிக்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.

இது குறித்து, மும்பையில் இருக்கும் ஐ.என்.ஓ திட்ட இயக்குநர் விவேக் டத்தாரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

“இது நம் தேசத்திற்கே பெருமையைத் தேடித் தரும் திட்டம். இது தமிழ்நாட்டில் வருவதற்குத் தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் நவீன  தொழில்நுட்பங்களைக் கொண்டு ஒரே ஒரு சுரங்கத்தை இங்கு அமைக்கவிருக்கிறோம். சின்ன அதிர்வலைகளைக் கூட அது ஏற்படுத்தாது.

நாங்கள் எதையும் இங்கு மாசுபடுத்தப் போவதுமில்லை. வெட்டப்படும் கற்களில் 10% தான் நாங்கள் எடுத்துக்கொள்வோம். 90% தமிழக அரசுக்குத்தான். அதை அவர்கள் விற்று, வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதே அமெரிக்காவிற்காகத் தான் என்பதுபோலெல்லாம் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களோடு கூட்டு வைத்திருப்பது உண்மைதான். ஓர் அறிவியல் ஆராய்ச்சி என்றால், பல உலக நாடுகளோடு இணைந்து வேலை செய்யத்தான் வேண்டும். இதெல்லாம் பெரிய பிரச்னையா?

அணு ஆயுதங்களை நியூட்ரினோக்கள்மூலம் கண்டறிந்து அதை வெடிக்கவும் செயலிழக்கவும் வைக்க முடியும். இது ஆபத்தானது என்றும் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கருத்து பொய்யில்லை. ஆனால், அது இன்று வரை ஒரு தியரி அளவில்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டேயிருந்தால் இங்கு எதையுமே செய்யாமல், வளராமல் அப்படியே இருக்க வேண்டியதுதான்...” என்றார் கோபத்துடன்.

அறிவியலின் பயணம் மேல்நோக்கி முன்னேறலாம். ஆனால் அது அறத்துக்கு எதிர்த்தி சையில் அமைந்துவிடக்கூடாது. நியூட்ரினோ திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என்ற கேள்விகள்தான் சந்தேகங்களையும் போராட்டங்களையும் இன்னும் வலுவாக்குகிறது.


p8e_1523430442.jpg

அ. மார்க்ஸ்:

“கல்பாக்கம், கூடங்குளம், நெடுவாசல் எனச் சுற்றுச்சூழலுக்கான மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக ஆதரிப்பவன் நான். அதேநேரம், இயற்பியல் ஆசிரியன் என்ற முறையில் நான் அறிந்தவரை அணு உலைபோல இது கதிர்வீச்சு ஆபத்து உள்ள திட்டமல்ல. இது குறித்து மிகைப்படுத்தப்பட்ட அச்சம் இங்கு ஊட்டப்படுவதாகவே நான் உணர்கிறேன். பல்வேறு ஆபத்தான திட்டங்களை மத்திய அரசு இங்கு புகுத்தும் பின்னணியில் எது குறித்தும் மக்களுக்கு ஐயமும் அச்சமும் ஏற்படுவது இயல்பே. இத்தகைய சந்தேகங்களை அரசு போக்காமல் தன் திட்டங்களைத் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதில்  ஐயமில்லை. ஆனால், இப்படியான திட்டங்களை முன்வைத்து அரசியல் நோக்கில் அச்சத்தை ஊட்டுவதையும் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களைச் செய்வதையும் ஏற்க முடியாது.  ரவி போன்ற இளைஞர்களின் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!”


p8d_1523430457.jpg

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்:

“இது அபாயகரமான திட்டம். நாசகாரத் திட்டம். இது மட்டும் நடந்தால் தேனி மாவட்டமே பஞ்சப்பிரதேசமாகிவிடும்; பாலைவனமாகும். என்னால், இன்னும்கூடக் கடுமையாக நீதிமன்றங்களில் இதற்கு எதிராகப் போராட முடியும். ஆனால், பிரதமர் மோடியின் தீவிரத்தைப் பார்க்கும்போதுதான் பயமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவும் பெரிய அழிவைச் சந்திக்கும். இந்தத் திட்டத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருக்கிறது. ஃபெர்மி ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தால்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறது. இதை ஒரு நாளும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.”

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.