Jump to content

“இந்த நேரத்தில் போகணுமா?”


Recommended Posts

மிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா?”

 
 

 

‘‘டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார்.

p4_1523615339.jpg‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து காத்திருந்தனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். சிரித்த முகத்தோடு அவர்கள் இருவரும் மோடியை வரவேற்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து வந்த ரிப்போர்ட், மோடியை மூட் அவுட் ஆக்கியிருந்ததாம். வந்தது முதல் சென்னையிலிருந்து புறப்படும் வரை மோடியின் முகம் மிகவும் இறுக்கமாகவே இருந்தது. இப்படி ஒரு வீரியமான போராட்டத்தைப் பிரதமர் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான போராட்டங்களாக இருக்கும் என்றுதான் அவர் நினைத்துள்ளார். கடந்த வாரம், மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்திருப்பது பற்றி ஏற்கெனவே உமக்குச் சொன்னேன் அல்லவா?’’

‘‘‘ஆமாம்!’’

‘‘பிரதமரின் பயணம் தள்ளிவைக்கப்பட்டால் நல்லது என்ற தொனியில் மத்திய உளவுத்துறையின் அறிக்கை கடந்த வாரம் போனது. பிறகுதான், தமிழகத்தின் சூடான சூழலைப் பிரதமர் உணர்ந்தார். அதன்பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரும் தன் பங்குக்கு சீரியஸை ஏற்றிவிட்டு வந்தார். ‘தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கிறதென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்க, ‘யாரையும் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகக் கைது செய்ததாகத் தெரியவில்லை’ என்றார் கவர்னர். ‘முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யாமல் ஒரு மாநில அரசு எப்படி இருக்கமுடியும்?’ என ராஜ்நாத் சிங் அவரிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டதாம்.’’

‘‘அது என்ன?’’

‘‘மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் மாநில அரசுகள் கவனமாகச் செயல்பட வேண்டும்; அப்படிச் செயல்படாத அரசுகளுக்கு மத்திய உள்துறை சில எச்சரிக்கைகளை விரைவில் செய்யும் என்றதாம் அந்த அறிக்கை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் சென்னை போக வேண்டுமா’ என்ற விவாதமும் நடந்தது. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டால், அது இந்திய அளவில் பெரிய விவாதமாக ஆகும். அவருக்கும் கட்சிக்கும் தலைகுனிவாக அமையும்’ என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கவில்லையாம்!’’

‘‘என்ன சொன்னாராம் அவர்?’’

p4aa_1523615498.jpg

‘‘நிர்மலா சீதாராமன், தன் துறையின் மைல்கல்லாக இந்தக் கண்காட்சியை நினைத்தார். ‘உலக நாடுகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தள்ளிவைக்க முடியாது. பிரதமரும் வந்தாக வேண்டும். ஹெலிகாப்டரில் சென்று தொடங்கி வைக்கலாம்’ என்றாராம் நிர்மலா சீதாராமன். கண்காட்சியை ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்க வருவதாகத் திட்டமிடப்பட்டது. 11-ம் தேதி கறுப்புக்கொடி காட்டினால், அதுதான் ஹைலைட் ஆகும் என்பதால், ‘கண்காட்சியை 11-ம் தேதி தொடங்கிவிடுங்கள். நான் 12-ம் தேதி வருகிறேன்’ என்று பிரதமர் சொன்னாராம். அதனால்தான், 11-ம் தேதி என்பது 12-ம் தேதி என மாறியது.”

‘‘ஓஹோ!”

‘‘எந்தத் தேதியாக இருந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவதற்குத் தயார் என்று கட்சிகள் தயாராகின. ‘நிலைமை மிக மோசமாக இருக்கிறது’ என டெல்லிக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான், 11-ம் தேதி மாலை வரை, பிரதமரின் பயணத் திட்டத்தை அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை!”

‘‘ஏன்?”

‘‘இரண்டு காரணங்கள். பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் வருகையை, ‘உறுதியாகவில்லை’ என்று கடைசிவரை வழக்கமாகச் சொல்வதுண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக அதை மறைத்து வைப்பார்கள். அந்த அடிப்படையில், இப்போது உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். மேலும், இந்தச் சூழ்நிலையில் போகலாமா, வேண்டாமா எனப் பிரதமரால் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை என்கிறார்கள்.’’

‘‘இரண்டாவது காரணத்துக்கு உண்மையான அர்த்தம் என்ன?’’

‘‘ஏப்ரல் 12 அன்று பி.ஜே.பி எம்.பி-க்கள் அனைவரும் காங்கிரஸைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர்ந்து நடத்தவிடாமல் முடக்கியதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பி.ஜே.பி அறிவித்தது. 12-ம் தேதி பி.ஜே.பி எம்.பி-க்கள் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும்போது, இரண்டு விழாக்களில் பிரதமர் கலந்துகொள்ளலாமா என்பதுதான் அவரது சந்தேகத்துக்குக் காரணம். இதை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, ‘நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று திடீரெனச் சொன்னாராம் பிரதமர். இதை பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்கவில்லை என்கிறார்கள். ‘பிரதமர் உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல, விதிமுறைக்கு முரணானது என்று விமர்சிப்பார்கள்’ என்றாராம் அவர். ‘பி.ஜே.பி எம்.பி-க்கள் உண்ணாவிரதம் இருக்கும் நாளில், நான் விழாக்களில் பங்கேற்பது சரியா?’ என நினைத்த பிரதமர், ‘எனது வழக்கமான அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்றாராம். சென்னைப் பயணத்தில் அவர் விமானத்திலேயே மதிய உணவு சாப்பிடுவதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அவர் சாப்பிடவில்லை.’’

‘‘காவிரிச் செயல் திட்டம் பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சொல்லியிருக்கிறாரே?”

‘‘மிகவும் ஜாக்கிரதையான வார்த்தைகளைத்தான் அவர் பயன்படுத்தியுள்ளார். ‘மாநிலங்கள் இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி, ஒரு செயல் திட்டம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். ‘செயல் திட்டம்’ என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்துவதை வைத்துப் பார்க்கும்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மறந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது. இது கர்நாடகா தேர்தலில் அவர்களுக்கு உதவும் என டெல்லி நம்புகிறது’’ என்றபடி கழுகார் பறந்தார்.

படம்: வி..ஸ்ரீனிவாசுலு


p4c_1523615130.jpg

dot_1523615237.jpg கே.என்.நேருவின் ஆதரவாளர் நவல்பட்டு விஜி என்பவரது பதவியைப் பறித்துவிட்டார்கள். ‘திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க செயலாளராக இருக்கும் விஜி, தொகுதி எம்.எல்.ஏ-வான மகேஷ் பொய்யாமொழியின் பெயரை விழா பேனரில் போடாமல் விட்டுவிட்டார். அதனால்தான் இந்த நீக்கம்’’ என்கிறது கட்சி வட்டாரம். நேருவுக்கும் மகேஷ் பொய்யாமொழிக்கும் இதனால் உரசல் அதிகமாகியுள்ளது.

dot_1523615237.jpg பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு நடத்தியதில் ஊழல் நடந்ததால், அதைத் தமிழக அரசு ரத்து செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, 800 பக்க ரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் நிறைய சூட்சுமங்கள் இருப்பதால் கல்வித்துறையினர் பயந்து கிடக்கிறார்கள். 

dot_1523615237.jpgபிளஸ் 2 தேர்வுத்தாள்களைத் திருத்தும் வேலை துவங்கிவிட்டது. மே 10-ம் தேதி திருத்தும் பணியை முடித்து, 16-ம் தேதியன்று ரிசல்ட்டை வெளியிடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், தங்களது சில கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்தால்தான், இந்தக் காலக்கெடுவுக்குள் திருத்தி முடிப்போம் என எச்சரித்துள்ளனர். தமிழக அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. அதனால், ரிசல்ட் தேதி தள்ளிப்போகலாம்.


கார்த்தி சிதம்பரத்துக்குச் சிக்கல்!

.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படக் காரணமாக இருந்தது, அந்த மீடியா நிறுவனத்தின் இயக்குநரான இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம்தான். ‘எங்கள் நிறுவனத்துக்கு வந்த அந்நிய முதலீட்டை முறைப் படுத்திக் கொடுப்பதற்காகக் கார்த்தி சிதம்பரத்துக்குப் பணம் கொடுத்தேன்’ என வாக்குமூலம் கொடுத் திருந்தார் இந்திராணி. வேறொரு வழக்கில் கைதாகி மும்பை சிறையில் இருக்கும் இந்திராணி, கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றனர். ஐந்து நாள்கள் அவர் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது.

p4b_1523615187.jpg

ஏப்ரல் 11-ம் தேதி அவர் சிறைக்குத் திரும்பினார். அதற்குமுன்பாக மும்பை போலீஸில் அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ‘‘இதே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை அமலாக்கத்துறையும் இப்போது விசாரிக்கிறது. இந்தநேரத்தில், சிறையில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னை சி.பி.ஐ பாதுகாக்க வேண்டும்’’ என அதில் சொல்லியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்துக்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.