Jump to content

எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்?


Recommended Posts

  •  
  • எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்?
 

எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்?

மனித உரிமை மீறல்­கள் உல­கின் எல்­லாப் பகு­தி­க­ளி­லும் இடம்­பெ­று­கின்­றன.இத­னைப் பல்­வே­று­பட்ட ஆய்­வுத் தக­வல்­கள் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.குறிப்­பாக இந்­தப் பிரச்­சி­னையை விசேட கவ­னத்­துக்­கு­ரிய பேசு பொரு­ளாக கொள்­வ­து­டன், அது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அனைத்து அர­சு­க­ளும் அக்­கறை கொள்­வது அவ­தா­னத்­துக்­கு­ரி­யது.

இது குறித்­த­தான உடன்­ப­டிக்­கை­க­ளும், அனு­ச­ர­ணை­க­ளும் அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக கொண்­டு­வ­ரப்­பட்டு, அதி­கா­ரத் தரப்­புக்­க­ளது ஒப்­பு­த­லோடு விடை­க­ளற்ற வினாக்­க­ளாக நீண்ட ஓய்வு கொள்­கின்­றன.

தவிர இவை அனைத்­துமே ஆய்வு ரீதி­யில் எடுத்து நோக்­கப்­ப­டின், பன்­மு­கத் தன்மை அடைந்­தி­ருப்­பது கண்­கூடு.

‘உரிமை’ அல்­லது ‘தீர்வு’

இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே தென்­னா­சி­யா­வின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தேச­மா­கக் கொள்­ளப்­ப­டக்­கூ­டிய இலங்கை, ஆழ்ந்த புல­ னாளுமை சார் நோக்­கு­தற்கு உரி­யது.இங்கு வாழ்­கின்ற சமூ­கங்­க­ளி­டை­யே­யான இணக்­கப்­பாடு என்­பது பிராந்­திய ரீதி­யில் பிரித்து ஆரா­யப்­பட வேண்­டி­யது.

பிர­தா­ன­மாக தமி­ழர் தாய­கத்­தின் மீதான அறு­பது ஆண்­டு­கால வன்­மு­றை­கள், ஆய்­வு­நி­லைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

தமிழ்க் குடி­க­ளின் ஒரு­மித்த வேண்­டு­கை­யான ‘உரிமை’ அல்­லது ‘தீர்வு’ என்­கின்ற நிலை­பெ­றுதி நோக்­கி­ய­தான கட்­டு­மா­னங்­கள் ,ஆக்­க­பூர்­வ­மான உறு­திப்­பாட்­டைப் பெற்­றிட வழி ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட வேண்­டும்.இதற்கு பன்­னாட்டு ரீதி­யான ஆத்­மார்த்­த­மான பங்­க­ளிப்பு வேண்­டப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக தமி­ழர்­கள் கொண்­டி­ருந்த மற்­றும் தற்­கா­லத்­தின் வழி அடித்­த­ள­மா­கக் கொண்­டி­ருக்­கின்ற, இனத்­து­வம் சார்ந்த, கலா­சார,பாரம்­ப­ரிய அபிப்­பி­ரா­யங்­கள் மற்­றும் அர­சி­யல் உரி­மை­கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட திட்­ட­மிட்ட அழிப்­புக்­கள் குறித்து சிந்­தனை கொள்ள வேண்­டும்.

அவற்­றுக்­கான தீர்வு நாடி­கள் முன்­வைக்­கப்­பட வேண்­டும். பாதிக்­கப்­பட்ட சமூ­கம் என்ற வகை­யில், ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய தனிப்­பட்ட அனு­ப­வங்­கள்,பட்­ட­றி­வு­கள்,பிரச்­சி­னை­க­ளை­யும் ­ட்­மீளாய்வு செய்ய வேண்­டும்.அதுவே ஆரோக்­கி­ய­மான செயல்­நிலை.

சோக இடு­கு­றி­யின்  அடை­யா­ள­மாக  தமி­ழர் தாய­கம்

நீண்ட காலப் போர் வல­ய­மாக விளங்­கிய தமி­ழர் தாய­கம் ய தார்த் தத்­தில் அழி­வு­க­ளும், தீராத வடுக்­க­ளும் மலிந்து போயுள்ள சோக இடு­கு­றி­யாக அடை­யா­ளம் பெறு­கி­றது.

2009ஆம்­ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இலங்கை அரசு, உலக வல்­ல­ர­சு­க­ளின் தன்­னல விசு­வா­ச­மான ஆத­ர­வுக் கரங்­க­ளோடு, கூட்­டாக மேற்­கொண்ட இனப் படு­கொலை நட­வ­டிக்கை , ஞாப­கங்­களை விட்­ட­க­லாத படிப்­பி­னை­யாக விளங்­கு­கி­றது.

இந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் இடம்­பெற்ற ஆள்­க­டத்­தல்­கள், காணா­மல் போகச் செய்­தல், பாலி­யல் சுரண்­டல் மற்­றும் பாலி­யல் துஷ்­பி­ர­யோக செயல்­நி­லை­கள், இலங்கை அர­சின் இரா­ணு­வம் கொண்­டி­ருந்த கீழ்­மைக் குணங்­களை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

அதன் தொடர்­நி­லை­கள் இன்­ன­மும் இந்­தப் பிராந்­தி­யத்­தில் தொடர் கின்­றன.தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உரிமை மீறல்­கள் தற்­போ­தும் முனைப்­பு­டன் இடம்­பெற்று வரு­கின்­றன.

இவற்­றுக் கெதி­ரான போராட்­டங்­களை தமிழ்­மக்­கள் முன்­னின்று வலு­வாக மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.ஆனா­லும் அவற்­றுக்­கான பொருத்­த­முறு தீர்­வுப் பொறி­மு­றை­கள் இது­வ­ரை­கா­ல­மும் முன்­வைக் கப்­பட்­ட­தா­கத் தோன்­ற­வில்லை.

பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமி­ழர்­களை அழிவு நிலை­யில் இருந்து வலுப்­ப­டுத்­து­வ­தற்­கும் பாது­காப்­ப­தற்­கும் உரிய பரி­கார வழி­மு­றை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. தனித்து ‘நல்­லி­ணக்­கம்’, ‘நல்­லாட்சி’ என்ற சொல்­லா­டல் பரி­வட்­டங்­கள் மாத்­தி­ரமே எங்­கும் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன.

அதற்­கு­ரித்­தான அலங்­கா­ரங்­களே அர­சி­யல் என்­கின்ற ஆக்­க­வு­ரி­மை­யின் வெளிப்­பா­டா­க­வும், ஜன­நா­ய­கப் பிர­தி­நி­தித்து ­வங்­கள் கொள்­ளும் வார்த்தை­ களின் பகு­மா­ன­மா­க­வும் காட்­டப்­ப­டு­கின்­றன. ஒவ்­வோர் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் தேர்­தல் ஊர்­வ­லமா கவும்,ஊர்க்­கோ­ல­மா­க­வும் சந்­தர்ப்­ப­வாத நாவ­டக்­கம் பெறு­கி­றது.

வலு­வற்ற சட்­ட­வாக்­கம்

உண்­மை­யில் வன்­மு­றை­க­ளைத் தடுப்­ப­தற்கு அர­சி­னால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சட்­டக் கட்­ட­மைப்­பா­னது போது­மா­ன­தாக இல்லை.சட்­ட­வாக்­கங்­கள் முறைப்­படி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் வெறு­மனே புத்­த­கங் களில் மட்­டுமே பொதிந்து போயுள்­ளன.

ஒட்டு மொத்­தத்­தில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான மீறல்­க­ளின் ஆரம்­ப­மா­க­வும், பிரச்­சினை ­களின் சூட்­சு­ம­மா­க­வும் இலங்கை அர­சின் செயல்­வெளி ஒன்­றோ­டொன்று பின்­னிப் பிணைந்து சொல்­லி­ணக்க விளம்­ப­லாக பன்­னா­டு­க­ளின் சமூக வெளி­யில் உலா­வ­ரு­கி­றது.

வன்­மு­றை­கள்  குறித்த மீளாய்வு

இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே கடந்த 2016ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 15 ஆம் மற்­றும் 16 ஆம் திக­தி­க­ளில் இலங்கை பற்றி விவா­திப்­ப­தற்­காக கூடிய சித்­திர­ வதைக்கு எதி­ரான ஐ.நா ஆணைக்­கு­ழு­வின் 59 ஆவது கூட்­டத்­தொ­டர் குறித்து கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

அதில் இலங்­கை­யில் இடம்­பெற்று­ வரு­கின்ற சித்­திர­ வதை, ஆள்­க­டத்­தல் மற்­றும் பாலி­யல் வன்­மு­றை­கள் குறித்த மீளாய்வு இடம்­பெற்­றது.இறு­தி­யாக கடந்த 2011ஆம் ஆண்டு இது குறித்­த­தான மீளாய்­வு­கள் இடம்­பெற்­றி­ருந்­த­மை­யும் கவ­னத்­துக்­கு­ரி­யது.

இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் இலங்கை சார்­பில் அப்­போ­தைய சட்­டமா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான 11 பேர் கொண்டு குழு பங்­கு­பற்­றி­யி­ருந்­தது.இந்­தக் குழு­வில் இலங்கை தேசிய புல­னாய்வு தலைமை அதி­காரி, இளைப்­பா­றிய பிர­திப் பொலிஸ்மா அதி­பர் சிசிர மெண்­டி­சும் கலந்­து­கொண்­டி­ருந்­தார்.

இதன்­போது ஐ.நா அதி­கா­ரி­கள், இலங்­கை­யில் இடம்­பெற்ற மேற்­படி வன்­முறை சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் மற்­றும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான பிரி­வி­னரே விளங்கு­ கின்­ற­னர். இது குறித்து பதி­ல­ளிக்க வேண்­டும் என தொடர்ச்­சி­யான கேள்­வி­களை முன்­வைத்­த­னர்.

பொறுப்­புக்  கூற­லின் வெறுமை

இதன்­போது ஐ.நா அதி­கா­ரி­யொ­ரு­வர், “என்­னி­டம் வேறு சில குறிப் பிடத்­தக்க கேள்­வி­கள் இருக்­கின்­றன.நான் ‘மனிக்­பாம்’ முகாம் குறித்­துக் கேட்­டி­ருந்­தேன். போர் நிறை­வ­டைந்­த­தைத் தொடர்ந்து அங்கு இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் சித்­தி­ர­வ­தை­கள் மற்­றும் முறை­கே­டான நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேட்­டி­ருந்­தேன்.

இவை ‘மனிக்­பாம்’ முகாம் அமைந்­தி­ருந்த இடத்­தி­லேயே இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.இத­னைக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும், பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­ன­ருமே மேற்­கொண்­ட­தா­கக் குற்­றம்­சாட் டப்­ப­டு­கி­றது.

இந்த விட­யம், கடந்த 2011 ஆம் ஆண்­டுக்­கு­ரிய எமது மீளாய்­வுச் செயற்­பாட்­டின் ஒரு பகு­தி­யாக இருந்­த­போ­தி­லும், அது அலட்­சி­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.நான் இலங்­கை­யைப் பிரதி­ நிதித் துவம் செய்து கலந்­து­கொண்­டுள்ள எந்­த­வொரு உறுப்­பி­ன­ரி­டம் இருந்­தா­வது இதற்­கு­ரித்­தான பதில்­க­ளை­யும் விவ­ரங் களை­யும் கேட்­டி­ருந்­தேன்.

ஆனா­லும், இலங்­கைக் குழு­வில் இடம்­பெற்­றி­ருந்த அங்­கத்­த­வர்­க­ளில் ஒரு­வ­ரி­டம் குறிப்­பாக எனது கேள்­வி­களை முன்­வைத்­தேன்.அவர் தான் இலங்கை தேசிய புல­னாய்வு தலைமை அதி­காரி சிசிர மெண்­டிஸ்.அவர் இந்த அமர்­வு­க­ளில் கலந்­து­கொண் டுள்ள போதும் பதி­லே­தும் தெரி­விக்­க­வில்லை” என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இலங்கை அர­சின் மீதான  நம்­பிக்­கை­யீ­னங்­கள்

மேலும், “போர் முடி­வ­டைந்த பின்­ன­ரான உட­ன­டிக் காலப்­ப­கு­தி­யில் சி.ஐ.டி மற்­றும் ரி.ஐ.டி பிரி­வி­ன­ரின் நட­வ­டிக்­கை­களை அந்­தக் காலப்­ப­கு­தி­யில் பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிக் கொண்­டி­ருந்த தாங்­களே மேற்­பார்வை செய்­தீர்­கள்.

மனிக்­பாம் முகா­மி­லும் வவு­னியா மருத்­து­வ­ம­னை­யி­லும் விசா­ரணை செய்­யப்­பட்ட முறை குறித்த தக­வல்­களை எம்­மு­டன் பகிர்ந்­து­கொள்ள முடி­யுமா என­வும் கேட்­டி­ருந்­தேன்.

இந்த இரண்டு இடங்­க­ளி­லும் சி.ஐ.டி மற்­றும் ரி.ஐ.டி பிரி­வு­கள் மேற்­கொண்ட சித்­தி­ர­வ­தை­கள் குறித்து ஐ.நா செய­லா­ளர் நாயத்­தின் நிபு­ணர்­கள் குழு முன்­வைத்த அறிக்­கை­யில் இருந்து கிடைக்­கும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த கேள்­வி­களை முன்­வைக்­கி­றேன்.

அவை இடம்­பெற்ற நேரம், அவற்றை மேற்­பார்வை செய்ய மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­கள் என்­ப­வற்­று­டன், குறித்த இடங் களில் 2009 ஆம் ஆண்டு மே மற்­றும் ஜூன் மாதங்­க­ளில் தாங்­கள் பிர­சன்ன ­மாகி­யி­ருந்­தீர்­களா என்­றும், அவை குறித்து எடுத்த நட­வ­டிக்­கை­கள் என்ன என்­றும் கேட்­டி­ருந்­தேன்.

ஆனால் அவற்­றுக்­கான எந்­த­வி­த­மான பதில்­க­ளும் தரப்­ப­ட­வில்லை.” என்ற வித­மா­க­வும் இலங்கை அர­சின் மீதான நம்­பிக்­கை­யீ­னங்­களை எடுத்­து­ரைத்­தி­ருந்­தார்.

குற்­றச் செயல்­க­ளின் இருப்­பி­டம்

தவிர, “ஐ.நா மனித உரிமை உயர்ஸ்­தா­னி­க­ரின் ஓ.ஐ.எஸ்.எல் அறிக்­கை­யின் 134 ஆவது பந்­தி­யின் அடிப்­ப­டை­யின் திட்­டமி­ டப்­பட்­ட­படி மேற்­கொள்­ளப்­ப­டும் குற்­றச் செயல்­களை விசா­ரணை செய்­யும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் அமைப்பு சி.ஐ.டி யினரே என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று கொழும்பு பொலிஸ் தலைமை அலு­வ­ல­கத்­தில் அமைந்­துள்ள நான்­காம் மாடி குறித்­தும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இடம், குறிப்­பாக தடுப்­புக்­கா­வ­லில் உள்ள பலர் விசா­ர­ணைக் காக கூட்­டிச் செல்­லப்­ப­டு­வ­தற்கு பெயர்­போன இடம் எனச் சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் 2009 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் சி.ஐ.டியின் பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ராக சிசிர மெண்­டிஸ் கட­மை­யாற்­றி­னார் என்­றும், அந்த அறிக்கை தெரி­விக்­கி­றது.மேலும் அறிக்­கை­யின் 153 ஆவது பந்தி, தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் பொது­வாக அறி­யப்­பட்ட இட­மாக வவு­னி­யா­வில் உள்ள ஜோசப் இரா­ணுவ முகாம்,கொழும்­பி­லுள்ள சி.ஐ.டியி­ன­ரின் நான்­காம் மாடி போன்ற இடங்­க­ளில் சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உப­க­ர­ணங்­க­ளு­டன் அறை­க­ளும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை, ஏற்­க­னவே நன்கு திட்­ட­மிட்ட வகை­யில் சித்­தி­ர­வதை ஒரு ஆயு­த­மாக இலங்கை அரச படை­ களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது என்­ப­தனை பட்­ட­வர்த்­த­ன­மாக எடுத்­துக்­காட்­டு­கி­றது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த உப­க­ர­ணங்­கள் குறித்­தும் விவ­ரிக்கி­ றது.இது மிக­வும் பயங்­க­ர­மா­னது.
ஆகவே உங்­க­ளைப் போன்ற அனு­ப­வம் கொண்ட ஒரு­வரை சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான குழு­வின் முன்­பாக நாம் கொண்­டி­ருப்­பது வழ­மைக்கு மாறா­னது.” என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னூடே இலங்கை அரசு கொண்­டுள்ள நல்­லி­ணக்க வெறு­மை­யின் செய­லற்ற தன்­மையை ஆதா­ர­பூர்­வ­மாக எடுத்­துக்­காட்­டி­யி­ருந்­தார்.

சிறப்பு அறிக்­கை­யா­ளர் ‘யுவான் இ மென்­டெஸ்’ இன் வெளிப்­பா­டு­கள்
இதே­வேளை சித்­தி­ர­வதை, மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யில் இழி­வாக நடத்­து­தல் அல்­லது தண்­டனை வழங்­கு­தல் முத­லி­ய­வற்­றுக் கான சிறப்பு அறிக்­கை­யா­ளர் ‘யுவான் இ மென்­டெஸ்’ கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 29ஆம் திகதி தொடக்­கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்­கைக்கு ப் பய­ணம் மேற்­கொண்டு வெளிப்­ப­டுத்­திய அறிக்­கை­யில் பல விட­யங்­களை தெளி­வு­ப­டச் சுட்­டிக்­காட்டி ­யுள்­ளார்.

பிர­தா­ன­மாக, “கைதா­கித் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் ஆண்­கள், பெண்­கள், இள­வ­ய­தி­னர் என அனை­வ­ரும் பாலி­யல் ரீதி­யான சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை தொடர்­பான நம்­ப­க­ர­மான சாட்­சி­யங்­கள் விசேட ஆணை­யா­ள­ருக்­குக் கிடைக்­கப் பெற்­றன.

அவற்­றுள் அதிக எண்­ணிக்­கை­யி­லா­னவை, சட்­ட­வைத்­திய மதிப்­பீ­டு­க­ளு­ட­னும் , ஆதா­ரத்­து­ட­னும் கூடி­யவை. இவ்­வ­கை­யான துஷ்­பி­ர­யோ­கங்­கள் நுண்­ணாய்வு செய்­யப்­ப­ட­வு­மில்லை. வழக்­குத் தொட­ரப்­ப­ட­வு­மில்லை.

விசேட ஆணை­யா­ள­ருக்கு கிடைக்­கப் பெற்ற சோகச் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வாக ஒரு இளம் பெண் மூன்­றரை வருட காலம் பல்­வேறு இரா­ணுவ முகாம்­க­ளில் பாலி­யல் அடி­மை­யாக இருந்­ததை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

நீதித்­து­றை­யி­ன­தும் வழக்­குத் தொடு­நர்­க­ளி­ன­தும் வகி­பா­கங்­கள் குறித்து தெளி­வு­ப­டுத்­தி­யுள்ள அவ­ரு­டைய அறிக்கை, “சித்­தி­ர­வ­தை­கள் மற்­றும் கொடூ­ர­மான மனி­தா­பி­மா­ன­மற்ற வகை­யில் கீழ்த்­தர­ மாக நடத்­து­தல் அல்­லது தண்­டித்­தல் தொடர்­பான பன்­னாட்டு சட்­டத்­துக்கு அமை­வாக கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­தற்கு சுயா­தீன­ மான பக்­கச் சார்­பற்ற நீதித்­துறை இருப்­பது அவ­சி­யம்.

அத்­து­டன் அவ்­வாறு சித்­திர­ வதை செய்­யப்­பட்­ட­தாக அல்­லது வற்­பு­றுத்­தப்­பட்­ட­தாக செய்­யப்­பட்ட முறைப்­பாடு­ களை பத­வி­நி­லை­யில் இருந்து விசா­ரணை செய்­யக் கட்­ட­ளை­யிட்டு, அது தொடர்­பான சகல பாது­காப்­பை­யும் நிலை­நாட்­டக்­கூ­டிய­ தாக இருத்­தல் வேண்­டும்.

இவ்­வி­ட­யத்­தில் பொறுப்­புக் கூறு­த­லும் தடுப்­ப­து­மான இரண்டு கடப்­பா­டு­க­ளும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்துக்கும் நீதித்­து­ றைக்­கும் உள்­ளன. ஆனால், இலங்கை அரசு கொண்­டுள்ள நடை­மு­றை­யில் நீதி­ப­தி­கள் இது குறித்து அதிக சிரத்தை உள்­ள­வர்­க­ளா­க­வும், ஆதா­ரங்க ளைத் தேடிச்­செல்­ப­வ­ரா­க­வும் இல்லை.

அதா­வது குற்­ற­வி­யல் வழக்­கு­க­ளில் தீர்­மா­னம் எடுத்­தல், தனித்து பொலி­ஸா­ரால் சேக­ரிக்­கப்­பட்டு முன்­வைக்­ கப்­ப­டும் ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மாத்­தி­ரமே அவர்­கள் தீர்­மா­னம் எடுக்­கி­றார்­கள்.” என்­பதை சுட்­டிக்­ காட்டி­ யுள்­ளது.

நல்­லாட்­சி­யின்
நல்­லி­ணக்­க­மற்ற பாணி

இந்­த­நி­லை­யிலே அண்­மை­யில் வடக்கு மாகா­ணத்­துக்கு பய­ணம் மேற்­கொண்ட முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான பணி­ய­கத்­தின் தவி­சா­ள­ரு­மான சந்­தி­ரி­கா­வி­டம், “போரி­னால் துவண்டு போயுள்ள வடக்­குப் பகு திப் பெண்­கள் மீது இரா­ணு­வத்­தி­னர், பொலி­ஸார் மற்­றும் அவர்­க­ளோடு சேரந்து இயங்­கும் அரச அதி­கா­ரி­கள் தொடர்ந்­தும் பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கங்ளை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

ஏற்­க­னவே பாதிப்­புக்கு உள்­ளான பெண்­கள் மேலும் துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெண்­கள் மீதான வன்­மு­றை­கள் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றன.

தனித்து வாழ்­கின்ற பெண்­கள், பொரு­ளா­தார ரீதி­யாக பின்­ன­டை­வில் உள்­ள­னர். அவர்­க­ளைக் குறி­வைத்து பாலி­யல் ரீதி­யான வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன. ஆரம்­பத்­தில் இவர்­க­ளின் அலை­பேசி இலக்­கங்­க­ளைத் தெரிந்து கொள்­ளும் இவர்­கள், நாள­டை­வில் அலை­பேசி ஊடாக நட்பை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இரா­ணு­வம் மற்­றும் பொலி­ஸார் தமிழ் பெண்­கள் மீது பாலி­யல் ரீதி­யான வன்­மு­றை­களை மேற்­கொள்­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் அனு­ச­ர­ணை­யு­டன் அங்­குள்ள ஒரு சில­ரும், பெண்­கள் மீது வன்­மு­றை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் ஆதிக்­கம் இருப்­ப­தால் பாதிக்­கப்­ப­டும் பெண்­க­ளுக்கு நியா­யம் கிடைக்க வாய்ப்­பில்லை. உரிய நட­வ­டிக்­கை­யும் எடுக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலமை நாம் பொது­மக்­களை சந்­திக்­கும் போது அறிந்து கொண்ட விட­யங்­க­ளா­கும்.

மேலும் போரின் பின்­னர் வவு­னியா முகாம்­க­ளில் இருந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளில், குடும்ப வன்­முறை சம்­ப­வங்­கள் அதிக அள­வில் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.எமது பிர­தே­சங்­க­ளில் உள்ள காணா­மல் ஆக்­கப்­ப­ட­வர்­க­ளின் உற­வு­களை நாம் சந்­தித்த போது தமது பிள்­ளை­கள் ஏதோ ஒரு இடத்­தில் உயி­ரு­டன் இரு­கின்­றார்­கள் என்ற நம்­பிக்­கை­யி­லேயே ஒளிப்­ப­டங்­க­ளு­டன் காத்­தி­ருக்­கின்­றோம் என கூறு­கின்­ற­னர்.

அவர்­கள் மிகுந்த மன உளைச்­ச­லில் இருக்­கின்­ற­னர்.” என்ற தக­வலை உள­வி­யல் செயற்­பாட்­டா­ளர்­க­ளும் பொது அமைப்­பி­ன­ரும் எடுத்­து­ரைத்­தி­ருந்­த­னர்.

ஆனா­லும் இதன் போது குறுக்­கிட்ட முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா, ‘‘காணா­மற் போன­வர்­கள் தொடர்­பில் காண­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கம் உரு­வாக்­கப்­பட்டு விட்­டது தானே? அவர்­கள் அத­னைப் பார்த்­துக் கொள்­வார்­கள்’’ என்று தெரி­வித்­த­தோடு, பெண்­கள் மீதான பாலி­யல் வன்­கொ­டுமை தொடர்­பான குற்­றச்­சாட் டுக்­க­ளுக்கு பதில் எத­னை­யும் வழங்­க­வில்லை.

தேசிய ரீதி­யா நல்­லி­ணக்­கம் சாத்­தி­யமா?

ஆக, அர­சின் இத்­தகு செயற்­போக்கு, மாற்­றம் பெற வேண்­டும். வர­லாற்று ரீதி­யா­ன­தும், அர­சி­யல் ரீதி­யா­ன­து­மான தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­க­ளின் சூழ­மை­வு­கள் முற்­றா­கக் களை­யப்­பட வேண்­டும்.

மனித உரி­மை­கள் சபை­யின் இல 30(1) கொண்ட தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தன் மூலம் குடி­மக்­க­ளின், குறிப்­பாக, சித்­தி­ர­வ­தைக் குள்­ளாக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட­ வர்­க­ளின் ஒரு­மித்த நம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும்.

உண்மை யைக் கண்­ட­றி­தல், நடந்­த­வற்றை வெளிப்­ப­டுத்­து­தல், பார­தூ­ர­மான குற்­றம் செய்­த­வர்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்கை, பாதிப்­புற்­றோ­ருக்கு இழப்­பீடு வழங்­கு­தல் முத­லா­ன­வற்றை பன்­னாட்டு பிர­மா­ணங்­க­ளுக்க­ மைவாக மேற்­கொள்ள வேண்­டும்.

ஐக்­கிய நாடு­கள் சபை சிபா­ரிசு செய்­துள்ள பல்­வேறு நெறி­மு­றை­களை உரிய நேரத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்த ஆத­ரவு வழங்க வேண்­டும்.

தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வு­களை வழங்கி சமூ­கங்­க­ளின் மத்­தி­யில் தேசிய ரீதி­யான நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­ப­டுத்த வேண்­டும்.

http://newuthayan.com/story/84034.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.