நவீனன் 9,238 Report post Posted April 13 மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதே வேளை 28 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத வீதியான காங்கேசன்துறை – வளலாய் வரையிலான வீதியும் தற்போது இராணுவத் தளபதியால் விடுவிப்புச் செய்யப்பட்டது. இந்த வீதி காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே மக்கள் பாவைனைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/84315.html Share this post Link to post Share on other sites
போல் 504 Report post Posted April 13 சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம். பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. Share this post Link to post Share on other sites
Dash 198 Report post Posted April 13 17 minutes ago, போல் said: சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம். பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம். துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான். Share this post Link to post Share on other sites
போல் 504 Report post Posted April 13 1 minute ago, Dash said: விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம். துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான். தவறான தகவல்! 1 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 13 யாழ்.வலி, வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு.. யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது. மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார். கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது…. வலிகாமம் வடக்கில் இன்று 5 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்வு சற்று முன்னர் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. http://globaltamilnews.net/2018/74884/ Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 13 28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்! 28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். 28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது. பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில் 40 இற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இடா்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் காணி இன்றையதினம்(13-04-2018) விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள்ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/land-release-in-vali-north-13 Share this post Link to post Share on other sites
நிழலி 3,870 Report post Posted April 13 மகிழ்ச்சிகரமான செய்தி. ஒரு தலைமுறையே 28 வருடங்கள் முகாம்களில் வசித்து இருக்கின்றது. இனியாவது தம் சொந்த மண்ணில் வாழும் பாக்கியத்தை தொடர்ந்து பெறட்டும். 2 Share this post Link to post Share on other sites
Dash 198 Report post Posted April 13 3 hours ago, போல் said: தவறான தகவல்! இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது. காணிப்பதிவு அறிக்கையை வைத்து உரிமயாளர்களிடம் சென்று நேரடியாகவே காணிகள் முஸ்லிம்களால் வாங்கப்பட்டு உள்ளது போல் இருக்கிறது. அதை விட முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு என மேலும் காணிகள் கோரப்பட்டதாகவும் அதை சீ.வீ வழங்க மறுத்ததாகவும் தெரிகிறது. அப்படி நான் கூறியது தவறாயின் 1.மன்னாரில் எப்படி மன்னாரில் முஸ்லிம்கள் தொகை 46% ஆனது.2016இல் போருக்கு முன்னர் 1981இல் 25% 2010இல் 10% 2.முல்லைத்தீவில் எப்படி முள்ளியவளை பிரதேசமே இஸ்லாமிய மயமானது. 3. கிளிநொச்சி எப்பொழுதும் முஸ்லிம் இல்லாத பிரதேசம். அங்கு ஏன் 5 பள்ளிவாசல்கள். 4.யாழ் மத்தியில் முஸ்லிம்களுக்கு என ஏன் தனியான வர்த்தக மையம் உருவாக்க முயற்சிக் நடக்குது. 5. வவுனியாவிலும் வடமராட்சி பிரதேசங்களிலும் வேகமாக நடைபெறும் இஸ்லாமிய மத மாற்றங்களை ஊக்குவிப்பது யார். 6.200க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள், இதை ஊக்குவிப்பது யார்?? புள்ளிகளை தொடுத்து பாருங்கள் போல் யதார்த்தம் புரியும். Share this post Link to post Share on other sites
Elugnajiru 334 Report post Posted April 13 எங்களுகளுக்குச் சொந்தமான ஒரு காணியில் மயிலிட்டியைச் சேர்ந்த நாலைந்து குடும்பம் இருக்கு நான் ஊருக்குப்போனபோது மிகவும் சந்தோசமாகக் காணப்பட்டார்கள் எங்கட காணியெல்லாம் விடுபடப்போகுது இப்போ மயிலிட்டித் துறைமட்டும் போகலாம் எங்கடகாணி கூப்பிடுதூரத்தில் இருக்கு அதுவரைக்கும் போய் அங்கால போகப்பார்த்தம் ஆனால் அவங்கள் விடுகிறாங்கள் இல்லை என மிகவும் ஏக்கத்துடன் கூறினார்கள் கேதக்கவலையாக இருந்தது இப்போ அவர்கள் தங்கள் சொந்தப்பிரதேசத்துக்குப்ப்போகப்போகிறார்கள் என நினைச்சால் சந்தோசமாகவும் ஒருபுறத்தில் அவர்கள் எங்கட காணியை மிகவும் சரியான முறையில் பராமரித்தார்கள் எப்போதுபோனாலும் இக்காணியில் நீங்கள் எங்களை இருக்கவிட்டதுக்கு கோடி புண்ணியம் எனக்கூறுவார்கள் இந்தமுறை போகும்போது அவர்களது மீள்குடியேற்றத்துக்கு ஏதாவது உதவி ஒழுங்குகள் செய்யவேணும். அவர்கள் எங்களது காணிக்குள் வந்து குடியேறமுதல் எனக்கு அவர்களைத் தெரியாது ஆனால் இப்போது அவர்கள் எங்களது உறவுகள்போல் எண்ணுகிறேன் 3 Share this post Link to post Share on other sites
கலைஞன் 443 Report post Posted April 13 மிகவும் மகிழ்ச்சியான செய்தி, பழையபடி மக்கள் மயிலிட்டியில் நன்றாக வாழவேண்டும். Share this post Link to post Share on other sites
தனிக்காட்டு ராஜா 1,238 Report post Posted April 14 இதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஒரு குறுப்பும் வராமல் இருந்தால் சந்தோசம் Share this post Link to post Share on other sites
suvy 4,204 Report post Posted April 14 மிக மிக மகிழ்ச்சியான விடயம்......! Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 14 திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்! வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. வலிகாமம் வடக்கில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர். நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதனையடுத்து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/Sticky-posters-People-of-Mylity Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 15 பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்! வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் மயிலிட்டி - கட்டுவன் வீதியில் வடக்குப் புறமாக இருந்த 683 ஏக்கா் காணிகள் மக்கள் பாவனைக்காக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது. இந்த காணி விடுவிப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மக்களுக்கு முன் பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் புகுந்து அங்கு கிடந்தவற்றையெல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். மக்கள் தமது வீடுகளைக் காணிகளைப் பார்க்கச் சென்ற போது அவர்களின் எதிரே பழைய இரும்புகள், பாத்திரங்கள், பித்தளைகளுடன் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்கள் லான்ட் மாஸ்டர்கள் என்பவற்றில் வந்து அவர்கள் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்வதில் மும்முரமாக இருந்துள்ளனர். முதல் நாளே இப்படி என்றால் இனிவரும் நாட்களில் வீடுகளில் எஞ்சிக் கிடக்கும் ஒன்றிரண்டு பொருட்கள் கூடக் கிடக்காது என்று அச்சமாக இருக்கின்றது. எனவே இதற்கு உடனடியாக உரியவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Old-Iron-dealer-ndecent-act Share this post Link to post Share on other sites
satan 226 Report post Posted April 15 On 4/13/2018 at 8:46 PM, போல் said: சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம். பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இப்ப பொறுங்கோ எத்தனை அரசியல்வாதிகள் நாங்கள் தான் இதுக்கெல்லாம் காரணம். என்று கூவிக்கொண்டும், சவால் விட்டுக்கொண்டும் வருவினம். அடுத்த தேர்தல் மேடையில முழங்குவினம் பாருங்கோ. ஆனால் மேடையிலேயே வாங்கிக் கட்டுகினமோ, மேடையை விட்டு இறக்கப் படுவினமோ பொறுத்திருந்து பாப்போம். எத்தனை அரசியல் வாதிகள் அந்த மக்களை போய்ப்பார்த்து, ஆறுதல் சொன்னவை? இதுக்கெல்லாம் காரணம் யார் என்று காலம் ஒருநாள் உரத்துச் சொல்லும். 1 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 15 மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!! மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!! வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ள மரங்கள், பெறுமதியான மரங்கள் என்பன வியாபாரிகளால் வெட்டப்படுகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ”மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) கட்டுவனைச் சேர்ந்த மக்கள் அனுமதியின்றி மரங்கள் கட்டட தளபாடங்களை அனுமதியின்றி வெட்டவோ, சேதமாக்கவோ வேண்டாம். இது ஊர்மக்களின் அன்பார்ந்த கோரிக்கையாகும். இதையும் மீறி செயல்படும் நபர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://newuthayan.com/story/84756.html Share this post Link to post Share on other sites
போல் 504 Report post Posted April 16 (edited) On 4/13/2018 at 8:24 PM, Dash said: இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது. மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது! Edited April 16 by போல் 1 Share this post Link to post Share on other sites
Dash 198 Report post Posted April 16 1 hour ago, போல் said: மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது! நீங்கள் வேற...!!! எப்படி போகலாம் என்று பிலான் பண்ணுற ஆக்கள் தான் அதிகம்....!!! 1 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 16 பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளதை காண கூடியதாகவுள்ளது. மேலும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ்வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலே அக் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virakesari.lk/article/32520 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 17 விரைவாக மீளக்குடியேற உதவி யாழ்ப்பாணம் வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் விரைவாக மீளக் குடியேறும் வகையில் வலி. வடக்கு பிரதேச சபையானது மக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது என்று வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். வலி. வடக்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த சித்திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்களது காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு மீள கையளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் மக்கள் மீள குடியேற்றத்தை விரைவாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள கிணறுகளானது பாழடைந்து தூர்ந்து போயுள்ள நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை தவிர மக்கள் காணிகளுக்கு செல்வதற்கு இடையூறாக பாதைகளில் பற்றைகளும் காட்டு மரங்களும் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. எனவே அம் மரங்களை இயந்திரங்களைக் கொண்டு வெட்டி பாதைகளை அடையாளப்படுத்தும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கட்டுவன் –மயிலிட்டி பிரதான வீதியானது சேதமடைந்துள்ள நிலையில் அவ் வீதியினையும் விரைவாக சீர்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/32529 Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 17 வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!! வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!! வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். http://newuthayan.com/story/85458.html Share this post Link to post Share on other sites
சுவைப்பிரியன் 411 Report post Posted April 17 மகிழ்ச்சியான விடயம்.. Share this post Link to post Share on other sites
நவீனன் 9,238 Report post Posted April 17 காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்) மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார். சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளை இன்று (17) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்துவருகின்றார்கள். இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது. அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும். அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம். காணிவிடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது. 6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்.. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிருவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=101527 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,149 Report post Posted April 17 48 minutes ago, நவீனன் said: மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார். தானா பனம்பழம் விழ இந்த அண்டம்ககாக்கை உரிமை கோரி கரையுது . அவன் சொறிலன்காவின் கடனை அடைக்க un ஆமியில் போய்சேர விடுபட்ட இடங்களை இந்த கூட்டம் தங்கடை வெற்றி என்று கரையுதுகள் . 1 Share this post Link to post Share on other sites