Jump to content

மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு


Recommended Posts

  • மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு
 
 

மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதே வேளை 28 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத வீதியான காங்கேசன்துறை – வளலாய் வரையிலான வீதியும் தற்போது இராணுவத் தளபதியால் விடுவிப்புச் செய்யப்பட்டது.

இந்த வீதி காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே மக்கள் பாவைனைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/84315.html

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

17 minutes ago, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

 விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம்.

துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, Dash said:

 விடுவிக்கபட்ட பின்னர் இங்கு வரப்போவதெல்லாம் இஸ்லாமிய குடியேற்றங்கள். பலகாணிகள் முஸ்லிம்கள் கைக்கு போய் விட்டனவாம்.

துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை எல்லாம் இனி இஸ்லாமிய மயம் தான்.

 

தவறான தகவல்!

Link to comment
Share on other sites

யாழ்.வலி, வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு..

யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.  மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.  கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

3458-2.jpg?resize=800%2C6003458-3.jpg?resize=800%2C6003458-4.jpg?resize=800%2C6003458-5.jpg?resize=800%2C6003458-6.jpg?resize=800%2C6003458-7.jpg?resize=800%2C600

 
 வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது….

வலிகாமம் வடக்கில் இன்று 5 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்வு சற்று முன்னர் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

   mil.jpg?resize=464%2C484mil2.jpg?resize=462%2C468mil3.jpg?resize=455%2C491mil4.jpg?resize=465%2C434

http://globaltamilnews.net/2018/74884/

Link to comment
Share on other sites

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

 

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது.

பின்னர் இந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 28 வருடங்களாக வலிகாமம வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனா்.

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

இந்த நிலையில் 40 இற்கும் மேற்பட்ட நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இடா்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 683 ஏக்கர் காணி இன்றையதினம்(13-04-2018) விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்டகாலத்தின் பின் காடுகளாக மாறி கிடக்கும் தங்கள் சொந்த நிலத்தை வலி வடக்கு மக்கள்ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

28 வருடங்களின் பின் கண்ணீர் மல்க காணிகளை பாா்வையிட்ட வலி வடக்கு மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/land-release-in-vali-north-13

Link to comment
Share on other sites

மகிழ்ச்சிகரமான செய்தி. ஒரு தலைமுறையே 28 வருடங்கள் முகாம்களில் வசித்து இருக்கின்றது. இனியாவது தம் சொந்த மண்ணில் வாழும் பாக்கியத்தை தொடர்ந்து பெறட்டும்.

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

தவறான தகவல்!

இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது.

காணிப்பதிவு அறிக்கையை வைத்து உரிமயாளர்களிடம் சென்று  நேரடியாகவே காணிகள் முஸ்லிம்களால் வாங்கப்பட்டு உள்ளது போல் இருக்கிறது.

அதை விட முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு என மேலும் காணிகள் கோரப்பட்டதாகவும் அதை சீ.வீ வழங்க மறுத்ததாகவும் தெரிகிறது.

அப்படி நான் கூறியது தவறாயின்

1.மன்னாரில் எப்படி மன்னாரில் முஸ்லிம்கள் தொகை 46% ஆனது.2016இல்

போருக்கு முன்னர் 1981இல் 25% 

2010இல் 10%

2.முல்லைத்தீவில் எப்படி முள்ளியவளை பிரதேசமே இஸ்லாமிய மயமானது.

3. கிளிநொச்சி எப்பொழுதும் முஸ்லிம் இல்லாத பிரதேசம். அங்கு ஏன் 5 பள்ளிவாசல்கள்.

4.யாழ் மத்தியில் முஸ்லிம்களுக்கு என ஏன் தனியான வர்த்தக மையம் உருவாக்க முயற்சிக் நடக்குது.

 

5. வவுனியாவிலும் வடமராட்சி பிரதேசங்களிலும் வேகமாக நடைபெறும் இஸ்லாமிய மத மாற்றங்களை ஊக்குவிப்பது யார்.

6.200க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள், இதை ஊக்குவிப்பது யார்??

புள்ளிகளை தொடுத்து பாருங்கள் போல் யதார்த்தம் புரியும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுகளுக்குச் சொந்தமான ஒரு காணியில் மயிலிட்டியைச் சேர்ந்த நாலைந்து குடும்பம் இருக்கு நான் ஊருக்குப்போனபோது மிகவும் சந்தோசமாகக் காணப்பட்டார்கள் எங்கட காணியெல்லாம் விடுபடப்போகுது இப்போ மயிலிட்டித் துறைமட்டும் போகலாம் எங்கடகாணி கூப்பிடுதூரத்தில் இருக்கு அதுவரைக்கும் போய் அங்கால போகப்பார்த்தம் ஆனால் அவங்கள் விடுகிறாங்கள் இல்லை என மிகவும் ஏக்கத்துடன் கூறினார்கள் கேதக்கவலையாக இருந்தது இப்போ அவர்கள் தங்கள் சொந்தப்பிரதேசத்துக்குப்ப்போகப்போகிறார்கள் என நினைச்சால் சந்தோசமாகவும் ஒருபுறத்தில் அவர்கள் எங்கட காணியை மிகவும் சரியான முறையில் பராமரித்தார்கள் எப்போதுபோனாலும் இக்காணியில் நீங்கள் எங்களை இருக்கவிட்டதுக்கு கோடி புண்ணியம் எனக்கூறுவார்கள் இந்தமுறை போகும்போது அவர்களது மீள்குடியேற்றத்துக்கு ஏதாவது உதவி ஒழுங்குகள் செய்யவேணும். அவர்கள் எங்களது காணிக்குள் வந்து குடியேறமுதல் எனக்கு அவர்களைத் தெரியாது ஆனால் இப்போது அவர்கள் எங்களது உறவுகள்போல் எண்ணுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஒரு குறுப்பும் வராமல் இருந்தால் சந்தோசம்:104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மகிழ்ச்சியான விடயம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

 

 

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.

வலிகாமம் வடக்கில் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர்.

நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.

இதனையடுத்து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டும் மயிலிட்டி மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Sticky-posters-People-of-Mylity

Link to comment
Share on other sites

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

 

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் மயிலிட்டி - கட்டுவன் வீதியில் வடக்குப் புறமாக இருந்த 683 ஏக்கா் காணிகள் மக்கள் பாவனைக்காக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த காணி விடுவிப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மக்களுக்கு முன் பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் புகுந்து அங்கு கிடந்தவற்றையெல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

மக்கள் தமது வீடுகளைக் காணிகளைப் பார்க்கச் சென்ற போது அவர்களின் எதிரே பழைய இரும்புகள், பாத்திரங்கள், பித்தளைகளுடன் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்கள் லான்ட் மாஸ்டர்கள் என்பவற்றில் வந்து அவர்கள் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்வதில் மும்முரமாக இருந்துள்ளனர்.

முதல் நாளே இப்படி என்றால் இனிவரும் நாட்களில் வீடுகளில் எஞ்சிக் கிடக்கும் ஒன்றிரண்டு பொருட்கள் கூடக் கிடக்காது என்று அச்சமாக இருக்கின்றது. எனவே இதற்கு உடனடியாக உரியவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய இரும்பு வியாபரிகளின் அநாகரிக செயல்! அச்சத்தில் மக்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Old-Iron-dealer-ndecent-act

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2018 at 8:46 PM, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கொலைகார்கள் கொள்ளையடித்த தமிழர் காணிகளை மீண்டும் கையளித்துள்ளார்களாம்.

பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் மூலமும், சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக முறையான ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்திவரும் சூழ்நிலையில் அவற்றை புறக்கணிக்க முடியாத சர்வதேசத்தின் அழுத்தங்களின் விளைவாகவும் இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இப்ப பொறுங்கோ எத்தனை அரசியல்வாதிகள் நாங்கள் தான் இதுக்கெல்லாம் காரணம். என்று கூவிக்கொண்டும், சவால் விட்டுக்கொண்டும் வருவினம். அடுத்த தேர்தல் மேடையில முழங்குவினம் பாருங்கோ. ஆனால் மேடையிலேயே வாங்கிக் கட்டுகினமோ, மேடையை விட்டு  இறக்கப் படுவினமோ பொறுத்திருந்து பாப்போம். எத்தனை அரசியல் வாதிகள் அந்த மக்களை போய்ப்பார்த்து, ஆறுதல் சொன்னவை? இதுக்கெல்லாம் காரணம் யார் என்று காலம் ஒருநாள் உரத்துச் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!
 
 

மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ள மரங்கள், பெறுமதியான மரங்கள் என்பன வியாபாரிகளால் வெட்டப்படுகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ”மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) கட்டுவனைச் சேர்ந்த மக்கள் அனுமதியின்றி மரங்கள் கட்டட தளபாடங்களை அனுமதியின்றி வெட்டவோ, சேதமாக்கவோ வேண்டாம். இது ஊர்மக்களின் அன்பார்ந்த கோரிக்கையாகும். இதையும் மீறி செயல்படும் நபர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

30710506_2420135884680660_4897329620125930706379_2420128838014698_5377643718696930716761_2420105958016986_15683853880362

http://newuthayan.com/story/84756.html

Link to comment
Share on other sites

On 4/13/2018 at 8:24 PM, Dash said:

இது எனக்கு ஒரு ஊடகவியல் துறைசார் நண்பர் கூறியது.

மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! 

புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது!

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

மீண்டும் அது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தப்படுகிறது! 

புலம் பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களாவது விரைந்து நாடு திரும்பாவிட்டால் தாயகத்தில் இருக்கும் மக்கள் பலத்த சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது!

நீங்கள் வேற...!!!

எப்படி போகலாம் என்று பிலான் பண்ணுற ஆக்கள் தான் அதிகம்....!!!

Link to comment
Share on other sites

பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள்

 

 
 

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளதை காண கூடியதாகவுள்ளது.

New_Layout.jpg

மேலும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ்வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலே அக் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/32520

Link to comment
Share on other sites

விரைவாக மீளக்குடியேற உதவி

 

 
 

யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களில் மக்கள் விரை­வாக மீளக் குடி­யேறும் வகையில் வலி. வடக்கு பிர­தேச சபை­யா­னது மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது  என்று   வலி. வடக்கு பிர­தேச சபையின் தவி­சாளர் சுகிர்தன் தெரி­வித்தார்.  

வலி. வடக்கு பிர­தேச சபை­யினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக அவர்  மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கடந்த  சித்­திரை 13ஆம் திகதி வலிகாமம் வடக்கில் பொதுமக்­க­ளது காணி­களில் 683 ஏக்கர் காணிகள்  இரா­ணு­வத்­திடம் இருந்து பொதுமக்­க­ளுக்கு மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.  இவற்றில் மக்கள் மீள குடி­யேற்­றத்தை விரை­வாக மேற்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

குறிப்­பாக விடு­விக்­கப்­பட்ட காணி­களில் உள்ள கிண­று­க­ளா­னது பாழ­டைந்து தூர்ந்து போயுள்ள நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கான  நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இவை தவிர மக்கள் காணி­க­ளுக்கு செல்­வ­தற்கு இடை­யூ­றாக பாதை­களில் பற்­றை­களும் காட்டு மரங்­களும் அடர்த்­தி­யாக வளர்ந்­துள்­ளன. எனவே அம் மரங்­களை இயந்­தி­ரங்­களைக் கொண்டு வெட்டி பாதை­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வேலை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

 வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு சொந்­த­மான கட்­டுவன் –மயி­லிட்டி பிர­தான வீதி­யா­னது சேத­ம­டைந்­துள்ள நிலையில் அவ் வீதியினையும் விரைவாக சீர்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

http://www.virakesari.lk/article/32529

Link to comment
Share on other sites

  • வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!!
 

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள்!!

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

30726513_209214816342553_57222238924041030724253_209214663009235_72162754980730630729082_209214773009224_152673164675199

http://newuthayan.com/story/85458.html

Link to comment
Share on other sites

காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)

காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி (படங்கள்)

 

 
 
மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளை இன்று (17) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்துவருகின்றார்கள்.

இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன. சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது.

அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம்.

காணிவிடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது.

6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிருவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=101527

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.

தானா பனம்பழம் விழ இந்த அண்டம்ககாக்கை உரிமை கோரி கரையுது .

அவன் சொறிலன்காவின் கடனை அடைக்க un ஆமியில் போய்சேர விடுபட்ட இடங்களை இந்த கூட்டம் தங்கடை வெற்றி என்று கரையுதுகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.