Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அவலை நினைத்து உரலை இடித்தது போல் நீங்கள் அவரை நினைத்து பெடலை மிதிச்சிருப்பீங்கள்?

சைக்கிளும்...தன்ர எதிர்ப்பை..எப்படியாம்...வெளியால காட்டிறது?

அதனால் உண்ணாவிரதம் ...எல்லாம் இருக்க முடியாது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அவலை நினைத்து உரலை இடித்தது போல் நீங்கள் அவரை நினைத்து பெடலை மிதிச்சிருப்பீங்கள்?

happy01941.gif happy01941.gif happy01941.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடரட்டும் அக்கா அண்ணன் வந்து மட்டக்களப்பில பழுதான வேனை தள்ளும் போது நினைச்சன் அண்ண பாவம் என்று  ஆண்களே இப்படித்த்தான் பெண்களிடம் மாட்டிக்கொண்டு முளிப்பது வருடக்கணக்கில் தொடரும் அவலம்  .:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்.... ஒரு வருடத்தில் அரைவாசி நாட்கள் ஜேர்மனிக்கு,   சுற்றுலா வருவதால்...
அவருக்கு,  "ஜேர்மன்  சிற்றிசன்"   வழங்க, அந்த நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. :grin: :D:

 

ஒவ்வொரு முறையும் உங்களை  நினைப்பேன் சிறி

போன  கிழமையும் வந்திருந்தேன் (அக்காவின்  60வது பிறந்த  தினத்துக்கு)

யேர்மனிப்பயணம் ஒரு  சில மணித்தியாலங்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13.4.2018 at 6:48 PM, விசுகு said:

கனடா  போவது

அல்லது  யேர்மனி வருவது

சுற்றுலாவுக்கு அல்ல அண்ணை

அது  உறவுகளின்  கொண்டாட்டத்துக்கு...

போன  இடத்தில

நம்ம  யாழ் உறவுகளையும்  சந்திப்பதுண்டு

அது  எந்த  நாடாகிலும்.

 

அர்யூன் அண்ணை  வரவே  இல்லையே

எப்படி  பிரச்சினை  வந்ததுதுதுது??

உங்கள் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைத்ததிற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைத்ததிற்கு மன்னிக்கவும்.

இவ்வாறான  நோக்குடன் எழுதவில்லை  அண்ணா

மனத்தை  சங்கடப்படுத்துவதாக  நீங்கள்  உணர்ந்தால்

மன்னித்தருள்க

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது போய் சுமேயை களுத்தைப் பிடித்து ச்சா கையைப்பிடித்துக் கொண்டு வாங்கோ.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

1 hour ago, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப்பிடித்து ச்சா கையைப்பிடித்துக் பொன்டு வாங்கோ.:)

இஞ்சை ஆரோடையோ கோபம் எண்டு  நினைக்கிறன்...:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப்பிடித்து ச்சா கையைப்பிடித்துக் பொன்டு வாங்கோ.:)

சுவைப்பிரியன் கவனம் உங்கள் தமிழ் ஏடாகூடமாக விளங்கி தொலைக்கபோகுது..:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள் உறவுகளே வேலைப்பழு காரணமாக எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2018 at 10:22 PM, புங்கையூரன் said:

சைக்கிளும்...தன்ர எதிர்ப்பை..எப்படியாம்...வெளியால காட்டிறது?

அதனால் உண்ணாவிரதம் ...எல்லாம் இருக்க முடியாது தானே!

நல்லாய் இருங்கோ ?

On 4/28/2018 at 10:24 AM, நவீனன் said:

சுவைப்பிரியன் கவனம் உங்கள் தமிழ் ஏடாகூடமாக விளங்கி தொலைக்கபோகுது..:grin:

ஏன் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கிப் போடுறது தானே நவீனன் ???

On 4/28/2018 at 8:57 AM, சுவைப்பிரியன் said:

யாராவது போய் சுமேயை களுத்தைப் பிடித்து ச்சா கையைப்பிடித்துக் கொண்டு வாங்கோ.:)

வந்து ???

On 4/28/2018 at 10:22 AM, குமாரசாமி said:

இஞ்சை ஆரோடையோ கோபம் எண்டு  நினைக்கிறன்...:grin:

ஆரோட கோவிச்சு என்ன ??வேலையும் தான். எழுதவும் ஒரு மூட் வரவெல்லோ வேணும் குமாரசாமி ???/

On 4/27/2018 at 9:18 PM, கிருபன் said:

விசுகு ஐயா கதையை வாசிக்காமல் தனது பயணக் கதையை செருகியதால் சுமே ஆன்ரி மிச்சக் கதையை எழுதி முடிக்கவில்லை மாதிரித் தெரியுது.

எதோடையோ கோவிச்சுக்கொண்டு எதோ செய்யாமல் விட்ட கதைஎல்லோ.

On 4/14/2018 at 3:25 PM, தனிக்காட்டு ராஜா said:

ம் தொடரட்டும் அக்கா அண்ணன் வந்து மட்டக்களப்பில பழுதான வேனை தள்ளும் போது நினைச்சன் அண்ண பாவம் என்று  ஆண்களே இப்படித்த்தான் பெண்களிடம் மாட்டிக்கொண்டு முளிப்பது வருடக்கணக்கில் தொடரும் அவலம்  .:11_blush:

ஏன் பெண்களோ பழுதான வாகனத்தைத் தள்ளுறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் பெண்களோ பழுதான வாகனத்தைத் தள்ளுறது ?

ஏன் வாகனத்தை தள்ள முடியாதா ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 6:00 PM, தனிக்காட்டு ராஜா said:

ஏன் வாகனத்தை தள்ள முடியாதா ??  

அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். கடைசியில கதிர்காமத்துக்குப் போய் இரவு தங்கிவிட்டு காலை வெளிக்கிட வான் கிளம்பவில்லை. நானும் மனிசனும் சேர்ந்துதான் தள்ளி ஸ்டார்ட் ஆனது தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டலுக்கு உள்ளேயே போய் டக்சி நின்றுது. நேரம் மதியம் இரண்டரை மணி. முன்புறம் ஒருமாதிரி இருந்தாலும் உள்ளே மிக ஆடபரமான இருக்கைகளும் மின்விளக்குகளும் அட நல்ல ஹோட்டல் தான் புக் செய்திருக்கிறம் என்ற நின்மதி வந்தது. எங்கள் இரண்டு பெரிய சூட்கேஸ்களை அங்கு வேலை செய்யும் ஒருவர் இழுத்துக்கொண்டு வர நாமும் ஒவ்வொன்றை இழுத்தபடி லிப்டில் நான்காம் மாடிக்குச் சென்றால் அழகிய பெரிய அறையில் ஒரு சிறிய கட்டிலும் ஒரு இரட்டைக் கட்டிலும். யன்னலைத் திறந்தால் எதிரிலும் கட்டடங்கள் தானேயன்றி வேறு காட்சிகள் தெரியவில்லை.

மகள் வந்த உடனேயே குளித்துவிட்டுப் படுத்துவிட்டாள். நாமும் குளித்து உடை மாற்றி ஒரு மனித்தியாலத்தில் எழும்பிச் சாப்பிடப் போவோம். எலாம்  வை என்று கணவர் கூற எலாம் வைத்து வேலைக்கோ போகப்போரியள். இங்காவது நின்மதியாப் படுக்க விடுங்கோ என்றுவிட்டுப் படுத்ததுதான். எழும்பிப் பார்த்தால் மாலை ஆறு ஆகிவிட்டிருந்தது. மீண்டும் முகம் கழுவி வெளிக்கிட்டு கீழே போய் பக்கத்தில் எங்காவது நல்ல உணவகம் இருக்கிறதா என்று கேட்டால், இரண்டு நிமிடம் நடந்தால் ஒரு தமிழ் உணவகம் இருப்பதாகக் கூற அங்கு சென்றால் எங்கும் தமிழ் முகங்களும் எம் உணவின் வாசனையும்.

லண்டனில் எந்த உணவகம் என்றாலும் சுத்தமாகவே இருக்கும். அனால் கொஞ்சம் பார்க்க அப்பிடி இப்படி இருந்தது. வேறு எங்காவது போவோமா என்று நான் கேட்க, இந்த இரவில எங்க தேடுறது. நாளைக்கு நல்லதாப் பார்த்துப் போவம் என்று மனிசன் கூற மகளும் தலையாட்ட வேறு வழியின்றி ஒரு மேசையில் போய் இருந்தம். மேசை நன்றாகத் துடைக்கப்பாடாமல் இருக்க நானும் பாக்கிறன் வேலையாட்கள் அதாலையும் இதாலையும் போயினமே தவிர எங்களைக் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அத்தனை சனம் அங்கு. எனக்கோ பொறுமை தேயத் தொடங்கியது. ஒருக்கா அவனைக் கூப்பிட்டுத் துடைக்கச் சொல்லுங்கோ அப்பா என்றால் அவசரப்படாதை வருவாங்கள் தானே என்றுவிட்டு மனிசன் வாற போறவையை பிராக்குப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும் யாரும் எட்டிப் பார்க்கவே இல்லை. எனக்கு ஏற்கனவே மூக்கு சிறிய மனத்தையே பெரிதாக இழுத்து வைக்கும். விதவிதமான உணவுகளின் மணம் என்றால் கேட்கவே வேணும் .பசிக்கவும் ஆரம்பிச்சிட்டுது. வேற வழியில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்க இன்னும் ஒரு ஆணும் பெண்ணும் எமக்கு அடுத்த மேசையில் வந்து இருக்க எதோ அவைக்காகவே வந்தவர் போல ஒருவர் வந்து என சாப்பிடுறீங்க என்று மெனு காட்டிக் குடுக்க என் பொறுமை பறந்து போக, எஸ்கியூஸ்மி நாங்கள் வந்து இருபது நிமிடம் ஆச்சு. யாருமே எமது மேசைக்கு வரவில்லை என்று பக்கத்து மேசைக்கு வந்தவரைப் பார்த்துக் கூறுகிறேன். சொறி மேடம் என்றுவிட்டு எமக்கும் மெனு காட்டைக் கொண்டுவந்து தர, தயவு செய்து மேசையில் இருக்கும் நீரைத் துடைத்து விட முடியுமா என்கிறேன் நான். அதன் பின் ஓடர் செய்து மகள் பூரி மனிசன் மசாலத் தோசை நான் நெய் முறுகலும் வடையும் உண்டுவிட்டு பால்த் தேநீருக்கு ஓடர் செய்தோம். தேநீரை குடித்தபின் அந்தக் கடைக்காரரில் இருந்த கோபம் எல்லாம் போய்விட்டது. அத்தனை உருசி. பணம் செலுத்தப் போய் நின்றால் நீங்கள் சிலோனில் இருந்து வர்றீங்களா என்கிறார் கல்லாவில் இருக்கும் இந்தியர். ஓம் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் எட்டு மணி. தெரியாத இடத்தில் இரவில் திரிவது பாதுகாப்பு இல்லை என்று கருதியதால் மீண்டும் கோட்டலுக்கே வந்து அடுத்த நாள் எங்கு போவது என்று திட்டமிட ஆரம்பித்தோம். இங்கிருந்து கிளம்பும்போதே எல்லாம் திட்டமிட்டதுதான். ஆனாலும் மீண்டும் செய்வதுதானே பாதுகாப்பு.

சரி ஒருநாள் முழுதும் முகநூலுக்குப் போகவில்லை. இப்ப போவம் என்று எண்ணிக்கொண்டு முகநூலைத் திறந்தால் தோழி நீங்கள் மலேசியாவுக்கு வந்துவிட்டீர்களா என்று மலேசியாவிலிருக்கும் ஒரு பெண்தோழியின் செய்தி காவலிருக்க, ஆம் வந்துவிட்டோம். கோலாலம்பூரில் இந்தக் கொட்டலில் தான் தங்கியுள்ளோம். நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்? உங்களுக்கு நேரம் இருந்தால் நாம் சந்திக்கலாம் என்று பதில் போட நான் இருப்பது கொஞ்சம் தூரம் தோழி என்று பதில் போட்ட பின் அந்தப் பெண்ணிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அட இவருக்கு என்னைச் சந்திப்பதில் ஏதும் இடர்பாடாக்கும் என எண்ணியபடி இருக்க கீழே றிசெப்சனில் இருந்து எமக்கு போன். உங்களைக் காண இருவர் வந்து காத்திருக்கின்றனர். இப்ப சந்திக்க முடியுமா என்கின்றனர். நாம் இங்கு வந்து இறங்கியது யாருக்கும் தெரியாதே?? எம்மைச் சந்திக்க யார் என்று யோசனை ஓட நானும் மனுசனும் ஒருவிதப் பதட்டத்துடன்  கீழே போனால் என் முகநூல் தோழியும் தங்கையும் அங்கே. எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. தான் ஒரு அலுவலாக பக்கத்தில் வந்ததாகவும் நான் கொட்டலின் பெயரைக் கூறியதும் எனக்கு ஆச்சரியத்தைத் தருவதற்காக உடனே வந்ததாகவும் கூறி ஒரு மணி நேரம் எம்முடன் இருந்து கதைத்துவிட்டு நாளை மறுநாள் தான் எம்முடன் வருவதாகக் கூறிச் செல்ல மனதில் ஒரு நின்மதி பிறந்தது உண்மை.

 

வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரும்

வரட்டுமன் பாப்பம்........:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்குக் காரணம் அத்தனை சனம் அங்கு. எனக்கோ பொறுமை தேயத் தொடங்கியது. ஒருக்கா அவனைக் கூப்பிட்டுத் துடைக்கச் சொல்லுங்கோ அப்பா என்றால் அவசரப்படாதை வருவாங்கள் தானே என்றுவிட்டு மனிசன் வாற போறவையை பிராக்குப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்

எனக்கென்னவோ....உங்கள் மனுசனின்....பெர்சனாலிட்டி....நல்லாய்ப் பிடிச்சுக்கொண்டுது...!

தொடர்ந்தும் எழுதுங்கள்.....!

பொறுமை என்னும் நகையணிந்து...பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்...என்று கே.பி.சுந்தராம்பாள் ஒரு படத்தில் கூறியதாக நினைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வரட்டுமன் பாப்பம்........:cool:

?

12 hours ago, புங்கையூரன் said:

எனக்கென்னவோ....உங்கள் மனுசனின்....பெர்சனாலிட்டி....நல்லாய்ப் பிடிச்சுக்கொண்டுது...!

தொடர்ந்தும் எழுதுங்கள்.....!

பொறுமை என்னும் நகையணிந்து...பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்...என்று கே.பி.சுந்தராம்பாள் ஒரு படத்தில் கூறியதாக நினைவு!

சுந்தராம்பாளுக்கு என்ன??? பாட்டுப்பாடுறது சுலபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2018 at 3:31 AM, குமாரசாமி said:

வரட்டுமன் பாப்பம்........:cool:

கனநாளைக்கு பின் எழுதுவதால் முன்பு எழுதுனது  எனக்கு மறந்து போச்சு உங்களுக்கு என்ன மாதிரி சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/19/2018 at 2:43 PM, தனிக்காட்டு ராஜா said:

கனநாளைக்கு பின் எழுதுவதால் முன்பு எழுதுனது  எனக்கு மறந்து போச்சு உங்களுக்கு என்ன மாதிரி சாமி 

எனக்கும் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.