Jump to content

உன் தோள் சாய ஆசைதான்......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன் தோள் சாய ஆசைதான்......

 

2032824843.jpg

 

அன்பே...

உன் தோள் சாய  நான்

தூங்காமல் கத்திருக்கிறேன்

தூக்கத்தில் மட்டும்தான்

நீ வருவயா?

நான் விழித்திருக்கும் நேரமெல்லாம்

நீ விழி மூடிக் கிடக்கிறாய்

நான் விழி மூடும் நேரமெல்லாம்

என் விழிகளுக்குள் நடக்கிறாய்

இருவரும் சேர்ந்தே விழிப்பதும்

சேர்ந்தே நடப்பதும் எப்போது?

பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்

புரிந்து கொள்ளவும்

எம்மால் முடிகிறது

உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள்

மனதுக்கும் உண்டு

முடிவே இல்லாத வாழ்வும்

பிரிவே இல்லாத உறவும்

என்றுமே இல்லை

இருந்தும்

ஏகாந்தத்தை ரசிப்பதுவும்

நேசிப்பை ருசிப்பதுவும்

எமக்குப் பழக்கமானவை

பொத்தி வைத்த தருணங்கள்

பூக்களாய் இதழ் விரிக்க

மயிலிறகாய் வருடும்

உன் நினைவுகளால் சிலிர்க்கிறேன்

கரை தொடும் அலையென

என் கனவில் மட்டும்

வாஞ்சையுடன் வருடும்

உன் பிரிவினில் உணர்கிறேன்

வாழ்வின் அர்த்தத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காதலன் /காதலியின் ஏக்கத்தை கச்சிதமாக கூறியிருக்கின்றிர்கள்....நன்றாக இருக்கின்றது. அது மட்டுமல்ல இன்று நேரமின்மையால் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் சந்திப்புகள் கூட கனவில்தான் சாத்தியமாகின்றது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையைப் படித்துக் கருத்திட்ட சுவிக்கும் விருப்பிட்ட நவீனன் குமாரசாமிக்கும் நன்றிகள். இது கணவனைப் பிரிந்த ஓர் மனைவியின் மன ஏக்கமாக எழுதப்பட்டது. காதலன் காதலிக்கும் பொருந்தும். பிரிவில்தான் வாழ்வின் அர்த்தம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவுகள் எப்பொழுதும் நினைவுகளை கூர்மையாக்கும்

பிரிவுக்கு இது தான்  என்ற நிலையில்லை

தாய்  தந்தையரை பிரிவதிலிருந்து

வளர்த்த  மரம் செடியை  பிரிவது வரை 

வாழ்வில்  அர்த்தத்துடன் வாழ்வேரை  அது கொல்லவே  செய்யும்

நன்றியக்கா

ஞாபகப்படுத்திமைக்கும்  கவிதைக்கும்

 

(சில  எழுத்துப்பிழைகளா?  

அன்பே...

உன் தோள் சாய  நான்

தூங்காமல் கத்திருக்கிறேன்

தூக்கத்தில் மட்டும்தான்

நீ வருவயா? )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவுகள் நினைவுகளைக் கூர்மையாக்கும். சில பிரிவுகள் நிரந்தரமாய் எம்மை குடைந்துகொண்டே இருக்கும். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் விசுகு. எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.