Jump to content

திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, தமிழ்மொழி மிகத் தொன்மையானது - ஆய்வில் தகவல்


Recommended Posts

திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, தமிழ்மொழி மிகத் தொன்மையானது - ஆய்வில் தகவல்

 
Dravidian%20language%20family%20group

மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்   -  படம்: ட்விட்டர்

திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையும், டேராடூனில் உள்ள இந்தியன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் அமைப்பும் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திராவிட மொழிக்குடும்பங்கள் என்பது 80 வகையான மொழிகளைக் கொண்டது. ஏறக்குறைய தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதியில் 22 கோடி மக்களால் பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த மொழிகளின் ஏறக்குறைய 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன. அதிலும் தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழியாகக் கருதப்படுகிறது.

உலகளவில் சமஸ்கிருதமும், தமிழ்மொழியும் மிகவும் பழமையான மொழியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருத மொழியைப் போல் அல்லாமல், தமிழ்மொழி தன்னுடைய பழமைக்கும், இப்போதுள்ள நவீனத்துவத்துக்கும் இடையே தன்னை தொடர்புப் படுத்திக்கொண்டுள்ளது.

இது குறித்து மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையின் ஆய்வாளர் அன்னேமரே வெரீக் கூறுகையில், 

‘‘ஐரோப்பியவும், ஆசியா பகுதிகளும் இணைந்திருந்த ஈரோசியா வரலாறு குறித்து புரிந்து கொள்ள திராவிட மொழிக் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். மற்ற மொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதிலும் திராவிட மொழிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

திராவிட மொழிகள் பூகோளரீதியா பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவான காலம் இல்லை. ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன் இந்திய-ஆரியர்கள் வருகைக்கு முந்தைய மொழியாக இருக்கலாம்.

இப்போதுள்ள நிலையைக் காட்டிலும், திராவிட மொழிகள் அந்த காலத்தில், மேற்கு திசையில் பரவலாகப் பரவி இருக்கலாம்.

திராவிடமொழிகள் எப்போது உருவாகின, எங்கே தோன்றின என்பது குறித்த கேள்விகளுக்கு விடை தேடும் போது, 20 திராவிட மொழிகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் தெரியவந்தது எனத் தெரிவித்தார்.

இது குறித்து வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் பேராசிரியர் விஷ்ணுபிரியா கொலிப்பாக்கம் கூறுகையில் ‘ ‘‘திராவிட மொழிபேசும் மக்களிடம் இருந்து முதல்கட்ட தகவல்களை சேகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் திராவிட மொழிகளின் வரலாற்றுக் காலம் என்பது 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/article23319420.ece

Link to comment
Share on other sites

4,500 ஆண்டுகள் பழைமையானது தமிழ் மொழி! - ஆய்வில் தகவல்

 
 

இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திராவிட மொழி

 

திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுகிறது இதை தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள மக்களே அதிகம்பயன்படுத்துகின்றனர். திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியமொழிகள் உள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் மிகவும் தொன்மைவாய்ந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. ஆனால், தமிழ் தன்னுடைய பழைமையை இப்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதை விட முன்னாள் இருந்த காலகட்டங்களில் திராவிட மொழி மேற்கத்திய நாட்டில் உள்ள பலரால் பேசப்பட்டுள்ளது என்றும் திராட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் தற்போதும் உள்ளன என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://www.vikatan.com/news/world/119902-tamil-and-dravidian-languages-originated-4500-years-ago.html

Link to comment
Share on other sites

`பழமையான மொழி... வரலாற்று தொடர்ச்சி ` - திராவிட மொழிகளின் தொன்மையை விளக்கும் ஆய்வு!

 

தெற்கு ஆசியாவில் ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழிகள், இந்திய பழங்கால வரலாற்றை புரிந்துக் கொள்ள மட்டும் உதவவில்லை, மொத்த யுரேசியாவின் வரலாற்றையும் புரிந்துக் கொள்ள உதவுகிறது.

`திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது`

திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 80 மொழிகளை, தெற்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும், இந்தியாவின் அருகே உள்ள நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 22 கோடி பேர் பேசுகிறார்கள். இந்த திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது எனலாம் என்கிறது சர்வதேச குழு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வு.

ராயல் சொசைட்டி ஓபன் சைன்ஸில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வானது, திராவிட மொழிகள் மற்றும் அதனை பேசுவோரின் தொல் வரலாற்றை புரிந்து கொள்ள உதவி புரிகிறது.

சமஸ்கிருதத்துக்கு இல்லை

மேற்கில் ஆஃப்கானிஸ்தான் முதல் கிழக்கு வங்கதேசம் வரை பரந்து விரிந்திருக்கும் தெற்கு ஆசியா, ஆறு மொழி குடும்பத்தைச் சேர்ந்த அறுநூறு மொழிகளுக்கு தாயகமாக இருக்கிறது. இவற்றில் திராவிட மொழி குடும்பமும் ஒன்று.

திராவிட மொழி குடும்பத்தில், 80 மொழி வகைகள் உள்ளன (மொழி மற்றும் உள்ளூர் பேச்சு வழக்குகள்).

இவை ஏறத்தாழ 22 கோடி மக்களால் பேசப்படுகின்றன.

திராவிட மொழி குடும்பத்தில் பழமையான மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னடம்.

`திராவிட மொழி குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது`படத்தின் காப்புரிமைHTTP://WWW.SHH.MPG.DE

இந்த நான்கில் மிகவும் பழமையானது தமிழ் மொழி.

உலகில் உள்ள செம்மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்றாகும். ஆனால், அதே நேரம் சம்ஸ்கிருதம் போல அல்லாமல், தமிழின் மொழிக் கட்டமைப்பில் ஒரு தொடர்ச்சி இருந்துகொண்டிருக்கிறது. இது, தமிழின் கவிதைகள், செய்யுள்கள், கல்வெட்டுகள் எனப் பல வகைகளில் தொடர்கிறது. இத்தொடர்ச்சி சமஸ்கிருதத்துக்கு இல்லை.

மேக்ஸ் பிளான்க் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆனிமேரி, "திராவிட மொழிகள் பிற மொழிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளதால், திராவிட மொழிகளை ஆய்வு செய்வது யூரேசியாவின் தொல்வரலாற்றை புரிந்துக் கொள்ளவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்கிறார்.

`திராவிடர்கள் பூர்வகுடிகள்`

திராவிட மொழிக் குடும்பம் புவியியல் தோற்றம் எங்கு என்று தெரியவில்லை. அதுபோல, எப்படி அது காலப்போக்கில் பரவியது என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இத்திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தென்னிந்தியாவில் வசித்தனர் என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் ஒருமித்த கருத்து. அதாவது இந்திய துணைகண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள், இந்தோ- ஆரியர்களுக்கு முன்பாகவே அவர்கள் அங்கு வசித்தனர் என்பதும் உறுதி என்பது இந்த ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்து.

எங்கு, எப்போது திராவிட மொழிகள் வளர்ச்சிப்பெற்றன என்ற கேள்விகான விடையை கண்டறிய, 20 திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள வரலாற்று உறவை இந்த ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் பயன்படுத்திய புள்ளியியல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானதும் முன்னேறியதுமானதாகும். பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் ஒரே முடிவே கிடைத்துள்ளது. ஆகவே தான் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழைமையானது என உறுதியாக கூறுகிறார்கள். அதேநேரம், இம்முடிவுகள் அகழ்வாராய்ச்சியின் முடிவுகளோடும் ஒத்துப்போகின்றன.

(Source: http://www.shh.mpg.de/870797/dravidian-languages)

http://www.bbc.com/tamil/india-43501454

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.