Jump to content

முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி!


Recommended Posts

முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி!

samakalamzahambdeen-7ca8250a25f68c26e4d3752a043283b63462deff.jpg

 

 

 

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் இலட்­சி­யங்கள் இல்­லாத திசையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் என்­னதான் தங்கள் சாத­னைகள் பற்றி பெருமை பேசிக்­கொண்­டி­ருந்­தாலும் கிடைத்­துள்ள பெறு­மானம் சிறந்­தாக அமை­ய­வில்லை.

முஸ்­லிம்­களும், முஸ்லிம் அர­சி­யல்­வாதி­களும் இணக்க அர­சி­ய­லுக்கே பழக்­கப்­பட்­டுள்­ளார்கள். காலத்­திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரி­ன­வா­தி­க­ளுடன் இணக்க அர­சியல் என்ற போர்­வையில் அமைச்சர் பத­வி­களைப் பெற்று வரு­வதே முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் நிலைத்த முடி­வாக இருந்து வந்­துள்­ளது. ஆளும் தரப்­போடு ஏற்­ப­டுத்திக் கொண்ட இணக்க அர­சியல் மூல­மாக முஸ்­லிம்கள் நன்­மை­களை அடைந்­துள்­ளார்கள்.

 ஆயினும், இணக்க அர­சி­ய­லினால் முஸ்­லிம்கள் அடைந்து கொண்ட தீமைகள் தான் அதி­க­மாகும். இதனால், முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் தெரிவு செய்து கொண்ட இணக்க அர­சியல் தோல்­வியில் முடி­வ­டைந்­துள்­ளது. இதே வேளை, முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­திகள் என்றும், தலை­வர்கள் என்றும் உலாவிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் இணக்க அர­சியல் மூல­மாக நிறை­யவே சம்­பா­தித்­துள்­ளார்கள். இவர்­களின் பசிக்கு முஸ்லிம் சமூகம் விலை போய்க் கொண்­டி­ருப்­பதை பெரும்­பா­லான முஸ்­லிம்கள் இன்னும் உணர்ந்து கொள்­ள­வில்லை என்­ப­துதான் முஸ்லிம் அர­சி­யலை அதன் இலட்­சியப் பாதையில் கொண்டு செல்­வ­தற்கு இருக்­கின்ற மிகப் பெரிய தடை­யாகும்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­திகள் திட்­ட­மிட்ட வகையில் பல பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். அவற்றில் முக்­கி­ய­மா­னவை முஸ்­லிம்­களின் உண­வ­கங்­களில் கருத்­தடை மாத்­திரை கலக்­கப்­ப­டு­கின்­றது என்­பதும், முஸ்­லிம்­களின் ஜவுளிக் கடை­களில் விற்­பனை செய்­யப்­படும் பெண்­க­ளுக்­கான உள்­ளா­டை­களில் கருத்­த­டைக்­கு­ரிய மருந்­துகள் தட­வப்­பட்­டுள்­ளமை என்­ப­து­மாகும். இப்­பி­ர­சாரம் பல வரு­டங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது பொய்ப் பிர­சாரம் என்­ப­தனை அர­சாங்­கமும், முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், மக்கள் பிர­தி­நி­தி­களும், புத்­தி­ஜீ­வி­களும் தெளி­வாக அறிந்து வைத்­துள்ள போதிலும் அவற்றை தடுப்­ப­தற்­கு­ரிய முன் ஆயத்­தங்கள் எத­னையும் மேற்­படி தரப்­பினர் செய்­ய­வில்லை.

இந்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தி­களின் இந்த பிர­சாரம் சிங்­கள மக்கள் மத்­தியில் காலூன்றி போன பின்­ன­ணி­யில்தான் தர்கா நகர், பேரு­வளை பிர­தே­சங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களும், இன்­றைய அர­சாங்­கத்தில் ஜிந்­தொட்ட, கண்டி மாவட்­டத்தில் தெல்­தெ­னிய, திகன உட்­பட மாத்­தளை, குரு­நாகல், புத்­தள, ஆன­ம­டுவ என பல இடங்­களில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள், வீடுகள், வாக­னங்கள் , வர்த்­தக நிலை­யங்­களின் மீது தாக்­கு­தல்கள் நடை­பெற்­றுள்­ளன.

இவ்­வாறு முஸ்­லிம்­களின் மீது தாக்­கு­தல்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் நிலையில் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆளுங் கட்­சி­யில்தான் இருக்­கின்­றனர் . இவர்­க­ளினால் இவற்றைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க முடி­ய­வில்லை. இந்த நாட்டை எந்தப் பேரி­ன­வாத கட்சி ஆட்சி அமைத்துக் கொண்­டாலும் அக்­கட்­சியை கொண்டு வழி­ந­டத்­து­ப­வர்கள் இன­வா­தி­களே உள்­ளனர் . மேற்­படி இன­வா­தி­களின் பின்­பு­லத்தில் உள்ள சிறிய தொகை வாக்­கு­க­ளையும் தம­தாக்கிக் கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­காக ஆட்­சி­யா­ளர்கள் இன­வாத அமைப்­புக்­க­ளுடன் நெருக்­க­மான உற­வு­களைக் கொண்­டுள்­ளார்கள். அவர்­களை வெளி­நா­டு­க­ளுக்கும் அழைத்துக் கொண்டு செல்­கின்­றனர். இத­னால்தான், அம்­பா­றையில் ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத சூழ்ச்சி கண்டி மாவட்­டத்தை மட்­டு­மன்றி அதனைத் தாண்­டியும் சென்­று­விட்­டது.

முஸ்­லிம்கள் தாக்­கப்­படும் போது முஸ்லிம் பிர­தி­நி­திகள் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். ஆனால், இணக்க அர­சி­ய­லுக்குள் குப்­புறக் கிடக்கும் இவர்­களால் அவ்­வாறு செய்ய முடி­ய­வில்லை. அர­சாங்கம் இன­வா­தி­களை பகைத்துக் கொள்­வ­தற்கு தயா­ரில்­லாத அதே வேளை, முஸ்­லிம்­களின் வாக்­கு­களை மட்டும் பெற்றுக் கொள்ள நினைக்­கின்­றது. பேரி­ன­வா­திகள் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் பல­வீ­னத்தை மிகச் சரி­யாக எடை போட்டு வைத்­துள்­ளார்கள். அமைச்சர் பத­வி­களை வழங்­கு­வதன் மூலம் முஸ்லிம் அர­சியல் தலைவர் முதல் சாதா­ரண மக்­கள் வரை மிக இல­கு­வாக சமா­ளித்துக் கொள்­ள­லா­மென்று அவர்­கள்­அ­றிந்து வைத்­துள்­ளார்கள்.

1915ஆம் ஆண்டு இன­வா­தி­க­ளினால் மத்­திய மாகா­ணத்­திலும் வேறு இடங்­க­ளிலும் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­கள – முஸ்லிம் இனக் கல­வரம் போன்­ற­தா­கவே கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களும் அமைந்­துள்­ளன. இந்த தாக்­கு­தலைக் கட்­டுப்­ப­டுத்த பாது­காப்பு தரப்­பினர் முறை­யாக செயற்­ப­ட­வில்லை என்­பதும், அர­சாங்­கத்தின் தலை­வர்கள் துரி­த­மாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள­வில்லை என்­பதும் முஸ்­லிம்­க­ளி­டையே பலத்த எதிர்ப்­புக்­களை தோற்­று­வித்­துள்­ளது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்க் கட்­சிக்கு செல்ல வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் நாட்டின் பல பாகங்­க­ளிலிருந்து முன் வைக்­கப்­பட்­டன. இந்தப் பின்­ன­ணி­யில்தான் அமைச்சர் றிசாட் பதி­யுதீன், விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், ஜே.வி.பின் தலைவர் அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க ஆகி­யோர்கள் பாரா­ளு­மன்­றத்தில் மிகவும் சூடான கருத்­துக்­களை முன் வைத்­தார்கள். மேலும், அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் தமக்கே உரித்­தான பாணியில் கருத்­துக்­களை முன் வைத்தார்.

அமைச்சர் றிசாட் பதி­யுதீன் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில், கண்டி மாவட்­டத்தில் இப்­ப­டி­யான ஒரு பிரச்­சினை நடை­பெ­ற­லா­மென்று ஏற்­க­னவே பிர­த­ம­ரி­டமும், பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­டமும் தான் தெரி­வித்த போதும் அங்கு போதிய பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர்கள் தன்­னிடம் கூறி, நம்ப வைத்து ஏமாற்றி விட்­டார்கள் எனக் காட்­ட­மாகத் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும், அவர் பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் சந்­தித்த போது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை மிகத் தெளி­வாக எடுத்துக் கூறி­யுள்ளார். அவர் பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­களின் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளித்தார். அதா­வது, இலங்கை முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள், ஆயு­தங்கள் வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதில் உண்­மை­யில்லை. இந்த நாட்டில் பொலிஸ்துறை , உள­வுத்­துறை இருக்­கின்­றது. முஸ்­லிம்கள் சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், ஏன் அவர்­களை கண்­டு­பி­டித்து, கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது? மலட்­டுத்­தன்­மை­யுள்ள மருந்தை உணவுப் பண்­டங்­களில் முஸ்­லிம்கள் கலந்து கொடுக்­கின்­றார்கள் என்றால், அவற்றை ஏன் கண்­டு­பி­டிக்க முடி­யா­தென கேள்வி எழுப்­பினார்.

இவரைப் போன்று பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் கருத்­துக்­களும் முஸ்­லிம்கள் மத்­தியில் பேசு பொரு­ளா­கி­யுள்­ளன. அதா­வது, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தலை நிறுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது போனால் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டு வரப்­படும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணைக்கு 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வேண்­டி­யேற்­படும் எனத் தெரி­வித்திருந்தார்.

இணக்க அர­சி­ய­லி­லிருந்து எதிர்ப்பு அர­சி­ய­லுக்கு செல்ல முடி­யாத முஸ்லிம் காங்­கிரஸ், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக ஹரீஸ் கூறிய கருத்தையிட்டு கொதித்துப் போயிருந்­தது. இத­னால்தான் கட்­சியின் உயர்­பீடக் கூட்­டத்தில் ஹரீ­ஸிற்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் கேட்­டி­ருந்தார். அவர் தமது கருத்தை சொல்லும் வரைக்கும் ரவூப் ஹக்கீம் கால அவ­காசம் வழங்­கி­யி­ருந்தார். மேலும், இது குறித்து உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளி­டையே பலத்த விவா­தங்கள் நடை­பெற்­றுள்­ளன. இவற்றின் அடிப்­ப­டையில் ஹரீ­ஸிற்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்­பது முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் முழு­மை­யான அனு­ம­தி­யு­டன்தான் கொண்டு வரப்­பட்­ட­தென்­பது தெளி­வா­கின்­றது.

 முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் பலரின் பலத்த எதிர்ப்­புக்கள் கார­ண­மாக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை கைவி­டப்­பட்­டுள்­ளது. என்­றாலும், ஹரீஸின் கருத்­துக்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் வர­வேற்­பையும், ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ருக்கு கோபத்­தையும், எதி­ர­ணி­யி­ன­ருக்கு மகிழ்ச்­சி­யையும் கொடுத்­தமை உண்­மை­யாகும். இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் குறிப்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெறுப்­புக்கு தமது கட்சி உட்­பட்­டு­விடக் கூடா­தென்­ப­தற்­கா­கவே ஹரீ­ஸிற்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்கை அம்­பாரை மாவட்­டத்தைச் சேர்ந்த நிஸாம் காரி­யப்பர் மூல­மாக மிகவும் கச்­சி­த­மாக உயர்­பீ­டத்தில் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. இது முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் இணக்க அர­சி­ய­லி­ருந்து ஒரு போதும் விடு­பட முடி­யாத நிலையைக் காட்­டு­கின்­றது. முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் சொத்து விட­யத்தில் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. இதனால், இணக்க அர­சி­யலை தொடர்ந்தும் பேண வேண்­டிய இக்­கட்­டான நிலையில் அக்­கட்சி உள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் இன­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட போது சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே இருந்தார். ஆதலால், அவ­ரிடம் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டு­மென்று கேட்­பது ஒன்றும் தவ­றில்லை. மேலும், முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு கொடுக்­காது போனால் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்டு வரப்­படும் பிரே­ர­ணையை ஆத­ரிப்போம் என்று கூறி­யதும் தவ­றில்லை. அதற்­காக பிரதி அமைச்சர் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க முற்­பட்­டமை முஸ்­லிம்­களின் உணர்­வு­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லா­கவே உள்­ளது. இதனால், இன­வா­தி­க­ளுக்கும், இவர்­க­ளுக்­கு­மி­டையே என்ன வேறு­பா­டுள்­ள­தென்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. மேலும், ஹரீஸின் அர­சியல் செயற்­பா­டுகள் குறித்து பலத்த விமர்­ச­னங்கள் உள்­ளன. ஆயினும், முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் அவர் முன் வைத்த கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மானால் இதற்குப் பின்னர் முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாய் திறக்க மாட்­டார்கள் என்­பதே உண்மை.

தற்­போது தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­பட்­டாலும், தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் கைது செய்­யப்­பட்­டாலும், இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் இத்­துடன் முடிந்து விட்­ட­தென்று நம்­பு­வ­தற்­கில்லை. மேலும், அர­சாங்கம் இன­வா­தி­களை முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தும் என்­ப­தற்கும் எவ்­வித உத்­த­ர­வா­த­மு­மில்லை. ஏனெனில் ஜப்­பா­னுக்கு சென்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்ட கூட்­டத்தில் இன­வா­தி­களும் கலந்து கொண்­டுள்­ளார்கள். குறிப்­பாக கல­கொட அத்த ஞான­சாரத் தேரர் அதில் கலந்து கொண்­ட­தாக ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன. இதன் மூலம் இன்­றைய அர­சாங்­கத்­திற்கும் கடும்­போக்கு இன­வா­தி­க­ளுக்கும் இடையே நெருக்­கங்கள் உள்­ளமை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

இதனால், முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ந்து இணக்க அர­சியல் மூல­மாக முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறுதி செய்ய முடியும் என்று உறு­தி­யாகக் கூற முடி­யாது. முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னா­களும் இணக்க அரசியலில் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை மட்டுமல்ல முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை. புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் நலன்கள் பேணப்படும் என்ற அம்சம் உள்ளடக்கப்படுவதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம் பற்றியும் எவ்வித அக்கறையுமில்லை. இவ்வாறு எல்லாவகையிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பின்னணியில் இணக்க அரசியலை விடவும் எதிர்ப்பு அரசியலே நன்மைகளைக் கொண்டுவரும்.

ஆளுங் கட்சியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுமில்லை. முஸ்லிம்களைப் பற்றி பேசவும் முடியாது. ஆதலால், எதிர்க்கட்சியில் இருந்தால் குறைந்தபட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசலாம். சர்வதேசத்திடம் முறையிடலாம். ஆயினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்க அரசியலையே மேற்கொள்வார்கள். ஏனெனில் இதில் இருப்பது தான் அவர்களுக்கு இலாபமாகும். சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாதவர்கள் தமது பொக்கட்டை நிரப்பவே சமூகத்தைப் பயன்படுத்துவார்கள் . முஸ்லிம் சமூகம் தோல்வியடைந்தாலும் தாங்கள் தோல்வியடைந்து விடக் கூடாதென்பதில் குறியாக உள்ள அரசியல் தலைமைகள் உள்ளவரை இணக்க அரசியலே முஸ்லிம்களின் அரசியல் பாதையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-18#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.