Jump to content

சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும்


Recommended Posts

சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும்

samakalamsathees-b4b96a300fc7336b7309fad5875b018387f7742b.jpg

 

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

 

இலங்­கையில் சமூக ஊட­கங்கள் முடக்­கப்­பட்­டி­ருந்த சமயம், மியன்­மாரில் பேஸ்புக் பற்­றிய தருஸ்மான் அறிக்கை வெளி­யா­னது. மியன்­மாரின் கல­வ­ரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்­சுகி தருஸ்மான் தலை­மை­யி­லான ஐ.நா. அதி­கா­ரிகள், தாம் அறிந்த விட­யங்­களை பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்கள். இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களில் பேஸ்­புக்கின் வகி­பாகம் தீர்க்­க­மா­னது என தருஸ்மான் தெரி­வித்தார். அவர் பேஸ்­புக்கை பயங்­க­ர­மான மிருகம் என்று வர்­ணித்­த­துடன், இந்த சமூக வலைத்தளம் கசப்­பு­ணர்­வையும், முரண்­பா­டு­க­ளையும் வெகு­வாகத் தீவி­ரப்­ப­டுத்­தி­ய­தென சாடினார். தருஸ்­மானின் கருத்து, இலங்­கையின் நில­வரம் குறித்த அர­சியல் விமர்­ச­னங்­களை நேர­டி­யாக பிர­தி­ப­லித்­தது. திகன அசம்­பா­வி­தங்­க­ளுக்­கான மூல­கா­ரணம் குறித்து அர­சியல் விமர்­ச­கர்கள் என்ன சொன்­னார்­களோ, அதையே தான் தாருஸ்­மானும் கூறினார்.

உலகம் முழு­வதும் இன­மு­ரண்­பா­டு­களோ, மதக்­க­ல­வ­ரங்­களோ, வர்க்க பேதத்தின் அடிப்­ப­டை­யி­லான மோதல்­களோ, அதி­கா­ரத்­திற்கு எதி­ரான போராட்­டங்­களோ, கிளர்ச்­சி­களோ எது நடந்­தாலும், அந்த சம­யங்­களில் ஊட­கங்­களைக் குறை சொல்லும் போக்கு தீவிரம் பெற்­றி­ருப்­பதைக் காணலாம். எழு­ப­து­களின் முற்­ப­கு­தியில் முரண்­பா­டுகள் தலை­தூக்­கிய சமயம், பாரம்­ப­ரிய ஊட­கங்கள் பலிக்­க­டாக்­க­ளாக மாற்­றப்­பட்­டன. பத்­தி­ரி­கை­களில் வெளி­யான கார்ட்டூன்­களும், நாட­கங்­களும், திரைப்­ப­டங்­களும், பாடல்­களும் கூட மக்­களின் உணர்­வ­லை­களைத் தூண்டி வன்­மு­றை­க­ளுக்கு வித்­தி­டு­வ­தாக பர­வ­லாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டன. இன்று நிலைமை மாறி, சக­ல­வற்­றிற்கும் சமூக ஊட­கங்கள் காரணம் என்ற குற்­றச்­சாட்டு மந்­திரம் போல் உச்­ச­ரிக்­கப்­ப­டு­வதைக் காணலாம். இத்­த­கைய பின்­பு­லத்தில், கல­கங்கள், புரட்­சிகள், போராட்­டங்கள் போன்­ற­வற்­றிற்கும், சமூக ஊட­கங்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்த தர்க்க ரீதி­யான ஆய்வு அவ­சி­ய­மா­கி­றது.

தமது உழைப்பைச் சுரண்­டிய ரஷ்ய நிறு­வ­னத்தின் முத­லா­ளியை தொழி­லாளி பேஸ்புக் வாயி­லாக அம்­ப­லப்­ப­டுத்­து­கிறார். தம்மை ஹீரோ­வாக கற்­பிதம் செய்து கொண்­டி­ருக்கும் முத­லாளி உண்­மையில் பரத்­தையின் மகன் என்று சாடு­கிறார். நிறு­வ­னத்தின் தொழி­லா­ளிகள் முத­லா­ளிக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழு­கி­றார்கள். இஸ்­லாத்தைத் தழுவிக் கொண்ட பிரெஞ்சு மனி­த­ருக்கு ஐ.எஸ். அங்­கத்­த­வர்கள் வட்ஸ்அப் மூலம் குரல் பதிவை அனுப்­பு­கி­றார்கள். பத்­தி­ரிகை செய்­தி­களை நம்­பாமல் சிரி­யாவின் ரக்கா நக­ருக்கு வாருங்கள், இங்கே முஸ்­லிம்கள் நிம்­ம­தி­யாக வாழ்­கி­றார்கள் என்று கூறு­கி­றார்கள். இந்த மனிதர் சிரியா சென்று ஆயுதப் போரில் இணைந்து கொள்­கிறார். இஸ்­ரேலின் குண்­டு­ம­ழைக்கு மத்­தியில், காஸா­வி­லுள்ள பலஸ்­தீன சிறுமி டுவிற்­றரின் ஊடாக தமது பயத்தை வெளிப்­ப­டுத்­து­கிறார். தாம் குண்டுச் சத்­தங்­க­ளுக்கு மத்­தியில் அழுது கொண்­டி­ருப்­ப­தா­கவும் விரைவில் காது செவி­டாகப் போகி­றது எனவும் அவர் பதி­வி­டு­கிறார். இந்த சிறு­மியின் உணர்­வ­லைகள் காஸாவில் வாழும் பலஸ்­தீ­னர்­களை இஸ்­ரே­லியப் படை­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெழச் செய்­கின்­றன.

இது மாத்­திரமல்ல, ஒரு காய்­கறி வியா­பா­ரியின் தற்­கொலை ரியூ­னி­ஸி­யாவில் ஆட்சி மாற்­றத்­திற்கு வித்­திட்ட போராட்டம் முதற்­கொண்டு திகன கல­வ­ரங்கள் வரை­யி­லான சகல சம்­ப­வங்­க­ளிலும் மக்­க­ளையும், வன்­மு­றை­யா­ளர்­க­ளையும் ஒன்­று­தி­ரட்டும் சக்­தி­யாக சமூக ஊட­கங்கள் திகழ்ந்­த­தாக விமர்­சிக்­கப்­பட்­டது. இன்­றைய உலகில் சமூக ஊட­கங்­க­ளுக்கு உள்ள ஆற்றல் மிகவும் வலு­வா­னது. முன்­னைய காலத்தில் எந்த வகை­யிலும் சாத்­தி­யப்­ப­டாத அள­விற்கு சமூக ஊட­கங்கள் மக்கள் மத்­தியில் ஊடு­ரு­வி­யுள்­ளன. மக்­களை சடு­தி­யாக ஒன்று திரட்­டு­வ­திலும், பிள­வு­ப­டுத்­து­வ­திலும் சமூக ஊட­கங்கள் கொண்­டுள்ள வீரியம் கணிப்­பிட முடி­யா­தது என்­பது விமர்­ச­கர்­களின் கருத்­தாக இருந்­தது. இன்று பல நாடு­களில் சமூக ஊட­கங்கள் பாரம்­ப­ரிய ஊட­கங்­களை விஞ்சி நிற்­கின்­றன. பாரம்­ப­ரிய ஊடங்கள் தக­வல்­களைத் தரு­கையில், சமூக ஊட­கங்கள் உணர்­வுகள் கலந்து விவ­ரணத் தொனியில் பேசு­கின்­றன. சமூக ஊட­கங்கள் தனி­ம­னி­தனின் உணர்வைத் தொடு­கின்­றன. ஆழ்­ம­னத்தை ஸ்பரி­சிக்­கின்­றன. இதன் மூலம் பொய் சொல்­லலாம். வதந்தி பரப்­பலாம். போலி­யாக உரு­வாக்­கப்­பட்ட படங்­களை பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு சம்­பவம் நிகழ்ந்தால் அதற்­கு­ரிய காரணம் என்ன என்­பதை தமது பாணியில் விப­ரிக்­கலாம். அது கற்­ப­னை­யா­கவும் இருக்­கக்­கூடும். இவை தவிர, சமூக ஊட­கங்கள் சக­ல­ரையும் செய்­தி­யா­ள­ராக, கதை சொல்­லி­யாக, பிர­சார முக­வ­ராக மாற்­றி­யுள்­ளன. இத்­த­கைய குணா­தி­ச­யங்கள் கார­ண­மாக ஒவ்­வொரு கல­வ­ரங்­க­ளுக்கும் சமூக ஊட­கங்கள் கார­ண­மாகத் திகழ்­கின்­றன என்ற வாதம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இன்­றைய உலகில் முரண்­பா­டுகள் சமூக ஊட­கங்­களால் எவ்­வாறு மீளக் கட்­ட­மைக்­கப்­ப­டு­கின்­றன என்­பது பற்­றிய உதா­ர­ணங்­க­ளுக்கும் குறை­வில்லை. ஈராக்கில் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த ரக்கா நக­ரத்தைக் கைப்­பற்­றிய ஐ.எஸ் இயக்கம், சமூக வலை­த்த­ளங்கள் ஊடாக செய்­தியைப் பகிர்ந்து கொண்­டது. இந்தப் பிர­சாரம், 2014 இல் ஐ.எஸ் இயக்­கத்தின் பிர­மாண்­டத்தை உல­கிற்கு பறை­சாற்­று­வ­தாக அமைந்­ததை நினை­வு­கூர முடியும். இந்தக் காலப்­ப­கு­தியில், இஸ்­ரே­லிய இளை­ஞர்கள் மூவர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தின் அடிப்­ப­டையில், இஸ்­ரே­லிய இரா­ணுவம் காஸாவில் கடும் யுத்­தத்தைத் தொடங்­கி­யது. இவ்­விரு யுத்­தங்­க­ளுக்கும் இடையில் பொது­வான அம்­ச­மொன்று இருந்­த­தாயின், அது இரு முனை­களின் ஊடாக தொடுக்­கப்­பட்­டமை தான். ஒரு புறத்தில் படைகள் பீரங்­கி­க­ளையும், குண்­டு­க­ளையும் பயன்­ப­டுத்தி களத்தில் எதி­ரியை இல்­லா­தொ­ழித்­தன. மறு­பு­றத்தில், டுவிற்றர், பேஸ்புக் வலைத்­த­ளங்கள் ஊடாக படங்­க­ளையும், காணொ­ளி­க­ளையும் பரவச் செய்து, எதி­ரியின் தோற்­றப்­பாட்டை நாச­மாக்க முனைந்­தன. இவ்­விரு யுத்­தங்­க­ளிலும் பின்­னைய யுத்­தத்தை சிறப்­பாக முன்­னெ­டுத்­த­வர்கள் பெரும்­பாலும் வெற்­றி­யா­ளர்­க­ளாகக் கரு­தப்­பட்­டார்கள் என்­பது சம­கால யதார்த்தம்.

இந்த யதார்த்தம் சமூக ஊட­கங்­களின் ஆற்றல் குறித்த மிகைப்­ப­டுத்­தப்­பட்ட தோற்­றத்தை உரு­வாக்கி, சமூக ஊட­கங்­க­ளுக்கும், சமூ­கத்­திற்கும் இடை­யி­லான தொடர்­புகள் பற்­றிய குதர்க்கக் கோட்­பா­டு­க­ளுக்கு வித்­தி­ட்டுள்­ளன என்றால், அது மிகை­யில்லை. இன்­றைய சூழலில், இலங்கைக் கல­வ­ரங்­க­ளுக்­கான சமூகக் கார­ணி­களை முற்­று­மு­ழு­தாகப் புறந்­தள்ளும் அர­சி­யல்­வா­திகள், சமூக ஊட­கங்­களால் சகல கேடு­களும் விளைந்­துள்­ள­தாகக் கூறு­கி­றார்கள். இது பிரச்சி­னைக்­கு­ரிய உண்­மை­யான கார­ணி­களை மறைக்கும் செயல். உண்­மை­யான கார­ணங்­களில் இருந்து மக்­களின் கவ­னத்தைத் திசை திருப்பி, தமது தவ­று­க­ளுக்குத் திரை­யிடும் நட­வ­டிக்கை. சிக்­க­லான விட­யங்கள் பற்­றிய சமூக கருத்­தா­டல்­களில் இறங்­காமல், எளி­தான தீர்வை நாடும் சோம்­பே­றித்­தனம் என்று அறு­தி­யாகச் சொல்ல முடியும்.

புரட்­சிகள், போராட்­டங்கள், கல­கங்கள் போன்­ற­வற்­றிற்கும், சமூக ஊட­கங்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் பற்­றிய ஆழ­மான கருத்­தா­ட­லுக்கு லண்டன் கல­கங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி லண்டன் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி, மார்க் டக்கன் என்ற இளைஞன் பலி­யான சம்­ப­வத்தைத் தொடர்ந்து, இங்­கி­லாந்தின் பல நக­ரங்­களில் கல­வ­ரங்கள் வெடித்­தன. வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. சில கடைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. இந்தக் கல­வ­ரங்கள் டுவிற்றர் மூல­மாகவும், பிளக்­பெரி மெசெஞ்ஜர் ஊடா­கவும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­ட­தாக அப்­போ­தைய பிர­தமர் டேவிட் கெமரூன் குறிப்­பிட்டார். பிரிட்­டனின் பாரம்­ப­ரிய ஊட­கங்­களும் பெரும்­பாலும் பிர­த­மரின் கருத்­துக்­க­ளையே பிர­தி­ப­லித்­தன. ஒரு கும்பல் திறன்­பே­சி­களைப் பயன்­ப­டுத்தி வன்­மு­றை­க­ளையும், கொள்­ளை­க­ளையும் ஒருங்­கி­ணைத்­த­தாக பெரும்­பா­லான பத்­தி­ரி­கைகள் செய்தி எழு­தின. ட்விற்றர், பிளாக்­பெரி மெசெஞ்ஜர் முத­லான சமூக ஊட­கங்கள் 21ஆம் நூற்­றாண்டின் கல­வ­ரங்­களை மாற்­றி­ய­மைத்­துள்­ள­தா­கவும் அவை விப­ரித்­தன.

இந்த சம்­ப­வங்கள் சமூக ஊட­கங்கள் குறித்த வாதப் பிர­தி­வா­தங்­களைத் தீவி­ரப்­ப­டுத்­தின. பிர­தா­ன­மாக மூன்று விட­யங்­களை மைய­மாகக் கொண்­டி­ருந்­தன. இலங்­கையில் பிர­பலம் பெற்­றுள்ள பேஸ்புக் கும்­பல்கள் என்ற வார்த்தைப் பிர­யோ­கத்தைப் போன்று, அங்கு டுவிற்றர் கும்பல் என்ற சொற்­றொடர் பிர­பலம் பெற்­றி­ருந்­தது. 

இந்தக் கல­வ­ரங்­க­ளுக்­கான கார­ணங்­களில் தொழில்­நுட்­பமும் ஒன்று என்­பது முதல் வாதம். திறன்­பே­சி­க­ளையும் இணை­யத்­தையும் கட்­டுப்­ப­டுத்­து­வதன் மூலம் கல­கத்தை அடக்­கலாம் என்­பது இரண்­டா­வது வாத­மாக அமைந்­தி­ருந்­தது. பிளக்­பெரி மெசெஞ்ஜர் சேவையை முடக்­கு­வதன் மூலமும், கல­கக்­கா­ரர்கள் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதைத் தடுப்­பதன் மூலமும் கல­கத்தை நிறுத்த முடியும் என்­பது அதன் சாராம்சம். மூன்­றா­வ­தாக, சமூக ஊட­கங்­களை சாத­க­மான முறையில் பயன்­ப­டுத்­துதல் என்ற வாதம் முன்­வைக்­கப்­பட்­டது. லண்டன் கல­வ­ரங்­களின் பின்னர் வீதி­களை சுத்­தப்­ப­டுத்தும் முயற்­சி­களில் ஆட்­களை ஒன்று திரட்­டு­வ­தற்­காக டுவிற்­றரை பயன்­ப­டுத்த முடியும் என ஊட­கங்கள் வாதிட்­டன.

இன்று இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­க­ளாக இருந்­தா­லென்ன, முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் இடை­யி­லான முறுகல் நிலை­யாக இருந்­தா­லென்ன, இஸ்­லா­மிய கடும்­போக்கு சிந்­த­னை­யா­ளர்­க­ளுக்கும், பௌத்­தத்தின் பெயரால் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து விடும் கும்­பல்­க­ளுக்கும் இடை­யி­லான மோத­லாக இருந்­தா­லென்ன, சக­ல­வற்­றிற்கும் தொழில்­நுட்பம் என்ற விட­யத்­திற்குள் தீர்­வு­களைத் தேடு­வது எவ்­வ­ளவு அபத்­த­மா­னது என்­பதை விப­ரிக்கத் தேவை­யில்லை. லண்டன் கல­கங்­களும் அப்­ப­டித்தான். ஒரு சிக்­க­லான, எதிர்­வு­கூர முடி­யாத, நிச்­ச­ய­மற்ற நிலை­வ­ரத்தைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் வேலையை இல­கு­வாக்­கு­வ­தற்­காக தொழில்­நுட்­பத்­திற்குள் கோட்­பாட்டு ரீதி­யாக தீர்­வு­களை நாடு­வது எந்­த­ள­விற்கு முர­ணா­னது என்­பதை விப­ரிக்­கலாம். இது, ஒரு சமூ­கத்தின் குற்­ற­வு­ணர்­விற்கு வடிகால் தேடு­வ­தற்­காக தொழில்­நுட்பக் கரு­விகள் மீது பழியைப் போடு­வ­தற்கு சம­மா­ன­தாகும்.

இதனை சமூக ரீதி­யாக விப­ரிக்­கலாம். இன்­றைய உலகில் சமூ­கத்தில் தொழில்­நுட்­பத்தின் வகி­பாகம் மிகைப்­ப­டுத்திக் கூறப்­ப­டு­கி­றது. தொழில்­நுட்பம் என்­பது சமூ­கத்தில் பின்னிப் பிணைந்த அம்சம் என்ற உண்மை மறக்­க­டிக்­கப்­ப­டு­கி­றது. இன்று புரட்­சி­க­ளையும், போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்கும் மனி­தர்­களே அதி­கா­ர­பீ­டத்­திற்கு எதி­ரா­கவோ, சமூக உற­வு­க­ளுக்கு எதி­ரா­கவோ கிளர்ச்சி செய்­கி­றார்கள். தொழில்­நுட்பம் சமூ­கத்­திற்கு எதி­ராக போராட்டம் செய்­ய­வில்லை. இன்று தொழில்­நுட்­பத்­திற்கும் சமூ­கத்­திற்கும் இடை­யி­லான தொடர்­பு­களை ஆரா­யலாம். ஒரு சமூ­கத்தில் தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, வடி­வ­மைக்­கப்­பட்டு, பயன்­ப­டுத்­தப்­படும் விதத்தை சமூ­கமே தீர்­மா­னிக்­கி­றது. எனினும், சமூகம் தொழில்­நுட்­பத்தை நிர்­ண­யிக்­க­வில்லை. இதற்கு இலங்கைப் பிரச்சினையை உதா­ர­ண­மாகக் கொள்ள முடியும். ஏனைய நாடு­களில் முரண்­பா­டுகள் நிகழ்ந்த சம­யத்தில் டுவிற்றர் என்ற ஊடகம் கூடு­த­லாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கையில், கூடு­த­லாக வட்ஸ்அப் ஊடகம் அதி­க­மாக உப­யோ­கிக்­கப்­பட்­டது. இலங்­கையில் சமூக ஊட­கங்கள் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்­தாலும், தகவல் தொழில்­நுட்ப எழுத்­த­றிவு (IT Literacy) குறை­வாக இருப்­பதால், எழு­து­வதை விட படங்­க­ளையும் குரல் பதி­வு­க­ளையும் இல­கு­வாக அனுப்­பக்­கூ­டிய வட்ஸ்அப் ஊட­கத்தை அதி­க­மா­ன­வர்கள் பயன்­ப­டுத்­தி­னார்கள் எனலாம்.

முரண்­பா­டு­களில் ஊட­க ­தொ­ழில்­நுட்­பத்­திற்கும், சமூ­கத்­திற்கும் இடை­யி­லான உற­வுகள் பொது­வாக ஒரு திசை சார்ந்­த­தாக விப­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு சமூ­கமோ, அதில் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­படும் ஊட­கமோ எந்­த­ளவு சிக்­க­லா­ன­தாக இருந்­தாலும், சமூக நெருக்­க­டிக்கு காரணம் ஊடகம் அல்­லது தொழில்­நுட்பம் என்று எளி­தாகக் கூறப்­பட்டு விடு­கி­றது. மறு­பு­றத்தில், ஒரு சமூகம் ஊட­கத்தின் மீது செலுத்தும் தாக்­கங்கள் விப­ரிக்­கப்­ப­டு­வது கிடை­யாது. சமூ­கத்தில் அதி­காரக் கட்­ட­மைப்­புக்கள் இருக்­கின்­றன. அந்த சமூ­கத்­திற்­கு­ரிய குணா­தி­ச­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. முரண்­பா­டு­களும் போராட்­டங்­களும் உள்­ளன. இவை பல்­வேறு வழி­களில் ஊட­கங்­களை வடி­வ­மைத்து, அவற்றின் பயன்­பாட்டை தீர்­மா­னிக்கும் விதம் பற்றி தீவி­ர­மாக ஆரா­யப்­ப­டு­வ­தில்லை.

இதற்கு உதா­ர­ண­மாக லண்டன் கல­கங்­களை ஆரா­யலாம். பிரிட்­டனில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்த பின்­பு­லத்தில், வர்க்க பேதங்கள் ஆதிக்கம் செலுத்­திய சூழ்­நி­லையில் கல­கங்கள் இடம்­பெற்­றன. ஒரு வர்க்கம் செல்வச் செழிப்பின் சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கையில், மற்­றைய வர்க்கம் வேலை வாய்ப்­புகள் இல்­லாமல் அன்­றாட உண­வுக்கு அல்­லற்­பட்டுக் கொண்­டி­ருந்த சூழ்­நிலை. தீவி­ர­மான சமூக ஏற்­றத்­தாழ்­வுகள். இவை தொடர்­பான விரக்­தியை வெளிப்­ப­டுத்தும் நோக்கில் போராட்­டத்தில் இறங்­கிய இளை­ஞர்­களை டுவிற்றர் கும்­பலைச் சேர்ந்­தவர் என்று இல­கு­வ­தாக முத்­திரை குத்­தி­வி­டு­வது எவ்­வ­ளவு அநீ­தி­யா­னது என்­பதை உண­ரலாம். 

இதன் மறு­பு­றத்­தையும் ஆரா­யலாம். எகிப்தில் ஹொஸ்னி முபா­ரக்கை பத­வியில் இருந்து தூக்­கி­யெ­றிய வழி­வ­குத்த மக்கள் போராட்­டத்­திற்கு சூழ்­நி­லை­களின் அடிப்­ப­டை­யிலும் சுய­நல ஆர்­வ­லங்­களின் அடிப்­ப­டை­யிலும் பல்­வேறு பெயர்கள் சூட்­டப்­ப­டு­வது வழக்கம். இதனை மேற்­குலம் டுவிற்றர் புரட்சி என்று கூறும். இது டுவிற்­ற­ருடன் தொடர்­பு­டைய போராட்டம் அல்ல. ஆண்­டாண்டு கால அடக்­கு­மு­றை­யாலும், சமூகப் பிரச்சினை­க­ளாலும் சீர­ழிந்த சமூ­கத்தில் மக்கள் அதி­கா­ர­வர்க்­கத்­திற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த புரட்­சி­யாகும். வேலை­வாய்ப்­பின்மை, உணவு நெருக்­கடி, இஸ்­லா­மிய பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கும் நவீ­ன­ம­யப்­ப­டுத்தல் கோட்­பா­டு­க­ளுக்கும் இடை­யி­லான முரண்கள் போன்­ற­வற்றால் விளைந்த சமூக அநீ­திக்கு எதி­ரான புரட்­சியில், தக­வல்­களைப் பரி­மா­றவும், தம்மை ஒருங்­கி­ணைத்துக் கொள்­வ­தற்கும் போராட்­டக்­கா­ரர்கள் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்திக் கொண்­டார்­களே தவிர, சமூக ஊட­கங்கள் பிரச்சி­னைக்கு மூல­கா­ரணம் அல்ல.

ஒரு சமூ­கத்தில் அர­சியல், சமூக, பொரு­ளா­தார, கலாசார வாய்ப்புக்கள் மறுதலிக்கப்படும் சூழ்நிலையில் வாழும் மக்கள், பல்வேறு வழிகளில் தமது அதிருப்தியை வெளிப்படுத்த முடியும். அந்த அதிருப்தி அதிகார வர்க்கத்திற்கு எதிரானதாக இருக்கலாம் அல்லது வாய்ப்புகள் மறுதலிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த கட்டமைப் புக்களுக்கு எதிரானதாக இருக்கவும் கூடும். அந்த அதிருப்தியைத் தூண்டக்கூடிய ஏதேனும் விடயம் இருக்கும் பட்சத்தில், சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக செயற்பட்டு கூட்டு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அத்தகைய கூட்டு நடவடிக்கைகள் கலகங்களாக, புரட்சியாக, போராட்டங்களாக வெடிக்கின்றன. இவை தாமாக பரவி தாமாக தீவிரம் பெற முடியும். எவ்வாறு பரவுகின்றன, தீவிரம் பெறுகின்றன என்பதை சமூகக் காரணிகளே தீர்மானிக்கின்றன. இன்று மேற்குலகில் சமூகத்தில் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், டுவிற்றர் ஊடாக பதிவிட்டு ஆட்களை ஒன்று திரட்டுகிறார்கள். ஐ.எஸ். கோலோச்சும் சமூகங்களில், மேற்குலக பணயக் கைதிகளை சிரச்சேதம் செய்யும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு காணொளிகள் வாயிலாக பகிரப்படுகிறது. இலங்கை கலவரத்தில் பேஸ்புக் ஊடகத்தைப் பயன்படுத்தியவர்கள், முஸ்லிம்களைக் கொல்ல வாருங்கடா என்று பதிவிட்டதைக் கண்டோம். இது சமூகத்தின் பிரச்சினையே தவிர, பேஸ்புக், வட்ஸ்அப், டுவிற்றர் முதலான சமூக வலைத்தளங்களின் பிரச்சினை அல்ல. ஒரு சமூகம் தீமையான விடயங்களைக் கொண்டிருக்குமாயின், அந்தத் தீமைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம்மைப் பெருப்பித்துக் கொள்கின்றன என்பது உண்மை. தவிர, தீமைகளுக்குக் காரணம் தொழில்நுட்பம் என்பது அரசியல்வாதிகளின் பம்மாத்து அல்லது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளப்பார்க்கும் எஸ்கேபிஸம் (Escapism) என்பதே உண்மை.     

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-18#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.