Jump to content

தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி…


Recommended Posts

தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி…

IMG_8964.jpg?resize=800%2C533

 

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது  மகள்  ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு  காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மீண்டும் காவல்துறையினரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

தந்தை 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில்  கைது செய்யப்பட்ட பின்னர், தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும்  தந்தையை பிரிந்த நிலையில், தற்போது தாயையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_8913.jpg?resize=800%2C533IMG_8916.jpg?resize=800%2C533IMG_8936.jpg?resize=800%2C533IMG_8941.jpg?resize=800%2C533IMG_8951.jpg?resize=800%2C533IMG_8954.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/71315/

Link to comment
Share on other sites

கருணா, KP வெளியில்- ஆனந்தசுதாகரன்கள் சிறையில்- யோகராணிகள் சுடுகாடுகளில்- கொள்ளிகளுடன் பிஞ்சுகள்..

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..

ananthasuthakaran-1.png?resize=800%2C580

 

மனசாட்சி உள்ள எவரும் துடிதுடித்துப் போகும் காட்சி அது. நெஞ்சில் ஈரமுள்ள எவரும் துடிதுடித்துப் போகும் கதை அது. ஆனந்தசுதாகரன் யோகராணி அரசியல் கைதியின் மனைவி, அவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மரணமடைந்தார். இந்த நிலையில் அவரது இறுச்சிடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள வெறும் மூன்று மணித்தியாலம் ஆனந்தசுதாகரன் அனுமதிக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்திருந்த ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் தாயை நிரந்தரமாக இழந்துவிட்ட நிலையில் சிறையிலிருந்து வந்த தந்தையை பார்க்கும் அவர்களின் விழிகளில் தெரியும் துயரம் இந்த நல்லாட்சி (?) அரசை உலுக்கவில்லையா?

ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக யோகராணி இறந்திருக்க மாட்டார் என்பதை நம்பலாம். 2008ஆம் ஆண்டில் கணவனை பிரிந்த இந்தப் பெண் கடந்த பத்து ஆண்டுகளாக தனது கணவனின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தாள். இந்தப் பத்தாண்டு காலமே அவளை கடுமையாக பாதித்திருந்தது. இந்த மரணத்திற்கும் இழப்புக்கும்கூட இலங்கை அரசே பொறுப்பு. இன்று தாயை இழந்து இரண்டு சிறுவர்கள் அநாதை ஆக்கப்பட்டதற்கும் இந்த அரசே பொறுப்பு. இப்போது, தாயின் சாவுடலின் பின்னே கொள்ளிக்குடத்துடன் செல்லும் அந்தச் சிறுவனின் கோலமும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் அந் சிறுமியும் இந்த நல்லாட்சி (?) அரசை உலுக்கவில்லையா?

மனச்சாட்சி உள்ள எவரையும் இது உலுக்கும். எந்தவொரு அரசும் தன் பிரசைகளுக்கு இந்த நிலையை ஏற்படுத்தாது. ஆனந்தசுதாகரனை விடுவித்திருந்து, யோகராணியை காப்பாற்றி இச் சிறார்களுக்கு இந்த நிலமை ஏற்படுவதை தடுத்திருந்தால், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக தெற்கில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இந்த ஆட்சியை பாதுகாக்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் தமது பதவி மற்றும் கட்சிகளை காப்பாற்றிக் கொள்ளவும் ஆனந்தசுதாகரன்களையோ யோகராணிகளையோ இத்தகைய சிறார்களையோ உருவாக்கிக் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய துயரத்தில்தான் இப்போதைய நல்லாட்சி நடக்கின்றது. இப்படியான காட்சிகளின் பின்னரும் இதுவொரு நல்லாட்சி என நம்பிக்கொண்டு நமது தமிழ் தலைவர்களும் ஆதரவளித்துக் கொண்டு எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இலங்கையில் உண்மையின்மீதும் நீதியின்மீதும் ஒரு ஆட்சி நடைபெறுவதில்லை என்பதையோ யோகராணியும் குழந்தைகளும் எடுத்துரைக்கின்றனர். மகிந்த ராஜபக்சவும் அவரைப்போன்ற முன்னைய ஜனாதிபதிகளும் ஈழத் தமிழ் மக்கள்மீது போரை தொடுத்து அவர்களை கொன்று குவித்து அந்த வெற்றிச் செய்தியை தெற்கிற்கு கொண்டு சென்று அரசியல் செய்தனர். தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடியபோது, அதனை தமது அரசியல் ஆதாயங்களுக்காக திரிவுபடுத்தி தமது அரசியலை செய்தனர். அன்று எமது சிறார்கள் கொன்று அரசியல் செய்யப்பட்தற்கும் ஆனந்தசுதாகரன் – யோகராணி குழந்தைகள் நிர்கதி ஆகியிருப்பதற்கும் எந்த வேறும்பாடும் இல்லை. தெற்கின் அரசியல் இருப்பிற்கான யுத்தகளத்தில் இந்தச் சிறுவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் பேசியே ஆட்சிக்கும் அரசியலுக்கும் வந்த பலர் இன்று அரசில் உள்ளனர். அவர்களும் இப்போது மௌனிகள். பயங்கரவாதத் தடை என்ற போர்வையில் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எப்படி எல்லாம் வதைபடுகின்றனர் என்பது மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுகின்றது. பிள்ளையை சிறையில் விட்டு இறந்துபோன தாய் தந்தைகளும் கணவனை சிறையில் விட்டு இறந்துபோன மனைவிகளுமாக இருக்கிறது ஈழநிலம். இவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படுகிறார்கள்? அதுவும் செய்யாத குற்றங்களுக்காகவும் வெறும் சந்தேகங்களுக்காகவும் அடிப்படை காரணங்கள் ஏதுமின்றி ஓர் கடுமையான இன ஒடுக்குமுறை சட்டத்தின் மூலம் இவர்கள் எதுவரை இப்படி தண்டிக்கப்படுவார்கள்?

கருணாவும் கே.பியும் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். இவர்கள்தான் சிறைச்சாலையிலும் சுடுகாட்டிலும் உள்ளனர். இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இணைந்தார். இவரைப்போன்றவர்கள் பண முதலாளிகளாகவும் சுதந்திரப் பிரசைகளாகவும் இன்றும் மைத்திரிபால – ரணில் நல்லாட்சி (?) அரசியல் வலம் வருகின்றனர். இவர்களுக்கு ராஜபோக வாழ்வு. சுதாகரன்களுக்கு இறுதிச்சடங்கிலும் வெறும் மூன்று மணித்தியாலங்கள்தான். தாய் தந்தையுடன் இணைந்து வாழ ஏங்கும் எங்கள் அப்பாவிக் குழந்தைகள்தான் கொள்ளிக் குடத்துடன் சுடுகாடு செல்லும் வாழ்க்கை. தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் துணை நின்றவர்கள் அவர்கள். சுதாரகன் போன்றவர்கள் தமது உரிக்கைகாக ஒரு ஈக்கில் குச்சை எடுத்துக் கொடுத்திருந்தாலும் பயங்ரவாதிகள்.

ராஜபக்சக்களின் கொடூரங்களையும் விஞ்சுகிறதா ரணில் மைத்திரி கூட்டரசு? ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்கான போராட்ட வராற்றில் மிகவும் அதிகமான உலகில் நிகழ்ந்திராத கொடூரங்களை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்தியிருந்தார். ஆனால் கத்தியும் யுத்தமும் இல்லாமல் ராஜபக்ச நிகழ்த்திய கொடூரங்களை இன்றைய மைத்திரி – ரணில் கூட்டரசு விஞ்சும் நிலமை ஏற்பட்டுள்ளது. மிக நூதனமாக தமிழ் மக்களை இப்படி எல்லாம் வதைப்படுத்தி அழிப்பதில் இந்த அரசு ராஜபக்சவை விஞ்சுகிறது. இலங்கையில் யார் ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அணுகும் வித்தில் மாற்றம் ஏற்படுவதில்லை என்பதையும் தத்தமது அரசியல் நலன்களுக்கான நோக்கிலேயே தமிழர் பிரச்சினைகளை அணுகுகின்றனர் என்பதையும், மைத்திரிபால – ரணில் ஆட்சியும் விதிவிலக்கல்ல என்பதையும் உணர்த்துகிறது ஆனந்தசுகாதரனின் கதை.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

http://globaltamilnews.net/2018/71398/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை என்னவோ செய்கிறது, .......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேர்தல்களிலும் #அரசியல்கைதிகளின் விடுதலை , காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு என்று சொல்லிச் சொல்லித் தானே வாக்கு கேட்கிறீர்கள் ?? காணாமல் போனவர்களை கண்டறிவது தான் கடினம் என்றாலும் யுத்தம் முடிந்து ஒன்பது வருடங்களாகியும், உயிருடன் கண்முன்னே சிறையில் வாடும் அரசியல்கைதிகளை  விடுவிக்க ஏன் விரும்புகிறீர்கள் இல்லை ??

? மைத்திரியை ஆதரிக்கும் போது கேட்டிருக்கலாமே  அரசியல்கைதிகளை விடச் சம்மதம் என்றால் தான் ஆதரிப்போம் என்று.

? 2015 ல் அரசாங்கத்துக்கு ஆதரவாய் ஐநாவில் உள்ளக விசரணைக்காய் பேசும்போதும் , 

? ஒன்றுமே செய்யாத அரசுக்கு மேலதிகமாய் 2017 ல் இருவருட கால அவகாசம் கொடுக்க முதலும் கேட்டிருக்கலாம் தானே அரசியல்கைதிகளை விட்டால் தான் கால அவகாசம் தருவோம் என்று ஏன் கேட்கவில்லை ? ? 

? சிறீதரன் gsp+ கு ஆதரவாய் அரச குழுவுடன் ஐரோப்பா போகும்போது கேட்டிருக்கலாம் தானே ?? 

? பட்ஜெட்டை ஆதரிக்கும்போது கேட்டிருக்கலாம் தானே ??

இப்படி எத்தனை வாய்ப்புகள் வந்தன பேரம்பேசுவதற்கு

எல்லாவற்றையும் கேவலம் ஒரு சில கோடிகளுக்காகவும் வாகன permit காகவும் விற்று விட்டீர்களே ..................................................... . 

உங்களுக்கு செம்படிக்கிறவங்களை சொல்லோணும் முதலில.

முகநூளில் வந்தது .

Link to comment
Share on other sites

யார் இந்த தந்தை? உண்மையான போராளி? பொய்யான குற்றவாளி? உண்மையில் நிரபராதி!

 
 

(tamilnews true story behind political prisoner ltte soldier)

இன்றைய நாளில் அனைத்து செய்தித் தளங்களையும் ஆக்கிரமித்த செய்தியாக அரசியல் கைதியான தந்தையுடன் மகள் சிறை செல்ல முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 

சிறைச்சாலை வாகனத்தில் தந்தையுடன் மகள் ஏறியமை குறித்த செய்தி மனதை நெகிழ வைத்தது.

அந்த செய்தியின் விபரம்: தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

sudagar-1-300x200.jpg

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Video Player
 
00:00
 
00:16

பின்னர் மீண்டும் காவல்துறையினரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

29342361_799928663531697_199131968938442

தந்தை 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தந்தையை பிரிந்த நிலையில், தற்போது தாயையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திகள் தொடர்ந்து செல்கின்றன.

29356212_799928603531703_640559007437684

யார் இந்த தந்தை? உண்மையான போராளி? பொய்யான குற்றவாளி? உண்மையில் நிரபராதி!

2007 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் உள்ள இலங்கை ராணுவத்தின் முக்கிய இலக்கொன்று விடுதலைப் புலிகளால் குறி வைக்கப்படுகின்றது.

புலனாய்வு போராளிகளின் சரியான தகவல்களுடன், கரும்புலிகளின் தாக்குதல் படையணியின் உதவியுடன், அந்த தாக்குதலுக்கான நேரம் குறிக்கப்படுகிறது.

தாக்குதல் நேரம் 9 மணி 20 நிமிடம் தொடக்கம் 10 மணி 20 நிமிடம் வரையாகும்.

குறிப்பிட்ட நேரத்தில் தாக்குதல் மிகக் கச்சிதமாக நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களின் கீழும் சந்தேக நபராக தேடப்பட்ட ஆனந்த சுதாகரன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரன் வயது 27 நிரம்பியவராகவும், இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருந்தார்.

4 ஆம் மாடியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் நிலக்கீழ் இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆனந்த சுதாகரனிடம் அன்றிரவு கொலைவெறியுடன் வந்த பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் “ஒப்புதல் வாக்குமூலத்தில் நீ கையெழுத்திடாவிட்டால், உன்னை கொன்று தூக்கில் போட்டுவிட்டு நீ தற்கொலை செய்ததாக வழக்கை முடித்து விடுவோம்” என்ற இறுதிகட்ட கொடூர சித்திரவதையின் பின்னரே, அவர்களின் அதிகொடூரமான சித்திரவதை தாங்கமுடியாமல் கை, கால் நகங்கள் பிடுங்கபட்ட நிலையில்,  கடும் வலிக்கு மத்தியில் ஆனந்த சுதாகரன் கையெழுத்திட்ட நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் எதுவும் அற்ற பொய்யான ஒப்புதல் வாக்குமூலமே அவரது வாழ்க்கை முடிவிற்கு காரணமாகிவிடுகின்றது.

இவர் செய்ததாக கூறப்பட்ட குற்றங்களுக்கு எதிராக எந்தவிதமான சரியான சாட்சிகளோ, ஆதாரங்களோ நீதிமன்றத்தில் பொலிஸாரால் நிறுத்தப்படவில்லை. அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளின் அசமந்தமே ஒரு அப்பாவியை ஆயுள் தண்டனைக் கைதியாக்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

சுதாகரன் உட்பட மேலும் 2 பேருக்கு ஆயுட்கால தீர்ப்பளித்த நீதிபதி அன்றைய தினம் ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியான யோகராணி ஆனந்த சுதாகரன் (36 வயது) உடல் நலக் குறைவால் கடந்த 15 ஆம் திகதி காலமானார். சாதாரண ஆஸ்துமா நோயாளியான அவர் தனது கணவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பின்னர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிக யோசனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மிக அதிகமாக பாதிப்படைந்தார். அதன்தாக்கமே அவரை மரணம் வரை கொண்டு சென்றது.

மரண சடங்குகள் முடிந்த பின்னர் மூத்த மகன் மயானத்திற்கு கொள்ளி வைப்பதற்காக சென்ற வேளை அரசியல் கைதியான சுதாகரன் மீண்டும் சிறைக்கு திரும்பவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார். அவ்வேளை, யாரும் சற்று எதிர்பார்க்காத விதமாக அவரது 10 வயது நிரம்பிய மகளும் சிறைச்சாலை வாகனத்திற்குள் ஏறிவிட்டார்.

தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. பலரது மனங்களை இந்த சம்பவம் நொருக்கிவிட்டது. வலுக்கட்டாயமாக மகளை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது ஒன்றுமே அறியாத அந்த குழந்தை தன் தந்தையை பார்த்து “அப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பா” என சுதாகரிடம் கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது.

இவருடைய வழக்குக்கான தாய் சுமதி சொத்துக்களை விற்று வாதாடி வந்த நிலையில் தற்போது வசிப்பதற்கு வீடின்றி உள்ளார்.

உங்களுக்கான அழைப்பு

சமூக அமைப்புகளே, சமூக ஆர்வலர்களே, நலன் விரும்பிகளே, அனைத்து தமிழ் பேசும் உறவுகளே

நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சிறுவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்போம்.

“சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின்” ஆயுள் தண்டனையை பொது மன்னிப்பாக மாற்ற கோரி அதிகூடிய கையெழுத்து மகஜர் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்புவோம்.

தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி. தாயையும் இழந்த இந்த சிறுவர்களை அனாதையாக மாற்றாது இந்த சிறுவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன் வேண்டி ஒன்றுபட்ட தமிழர்களாக குரல் கொடுப்போம் வாரீர்கள்.

முடிந்த வரை இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் குறி்ப்பிட்ட விடயம் தொடர்பில் சட்ட உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டாலோ, சட்டத்தரணிகளுக்கான கட்டணம் ஏதேனும் தேவைப்பட்டாலோ தமிழ்நியூஸ் முன்வந்து உதவி செய்ய தயாராக இருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றது.

சில கற்பனையான கதைகளைத்தான் சினிமாகூடச் சொல்லும்… சில நடைபெறா சரித்திரங்களைத்தான் காவியங்களும் சொல்லும்… ஆனால் கற்பனையோ, காவியமோ அல்லாத வரலாறுகளைத்தான் ஈழத்தமிழன் தன் வாழ்க்கையால் வரைகின்றான்… பட்ட துன்பங்கள் போதாதென்றா மீண்டும் மீண்டும் துன்பங்களையும் தொடர்ந்தும் தந்து செல்கின்றாய் இறைவா?? மழலைகளோடு எவ்விதமான கொடுமைகளையெல்லாம் கடந்திருப்பாள் அந்த தாய் தமிழ்மகள்.. போர்க்காலம், முகாம் வாழ்வு, மீள்குடியேற்றம், எதிர்காலம் நீதிமன்றம், இரவுப்பயணம், வக்கீல் வீடு, பணம் பணம் என காலம் இவளை புரட்டி எடுத்திருக்கும் என்பது அனுபவித்தவ்வர்கட்கு வெளிச்சம்.. கண்கெட்ட காலன் ஏன் அவள் உயிரைப்பறித்தான்.

தந்தைக்கு விடுமுறை இழவுவீட்டுக்கு 3 மணிநேரம்…மகன் தாயினை அழைத்து தகனம் செய்ய சுடுகாடு போக. தங்கையோ விடுமுறை முடித்த தந்தையோடு சிறைவாசம் செல்ல தந்தை கரம் பிடித்தாள், படியேறினாள் செய்வதறியாது.. முற்றும். முடிவெடு சமூகமே.

http://tamilnews.com/2018/03/18/tamilnews-true-story-behind-political-prisoner-ltte-soldier/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29342361_799928663531697_199131968938442  29356212_799928603531703_640559007437684

sudagar-1-300x200.jpg

நேற்று  இந்தப் புகைப்படங்களை பார்த்ததில் இருந்து, மனம் அமைதியில்லாமல் தவிக்கின்றது. tw_cry:
இந்தத் தந்தையின் விடுதலைக்காக... தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது செல்வாக்கை பயன்படுத்தி,
அவரை இந்தக்  குழந்தைகளுடன் சேர்த்து வைத்தால்.... பெரிய புண்ணியம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

ஒவ்வொரு தேர்தல்களிலும் #அரசியல்கைதிகளின் விடுதலை , காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு என்று சொல்லிச் சொல்லித் தானே வாக்கு கேட்கிறீர்கள் ?? காணாமல் போனவர்களை கண்டறிவது தான் கடினம் என்றாலும் யுத்தம் முடிந்து ஒன்பது வருடங்களாகியும், உயிருடன் கண்முன்னே சிறையில் வாடும் அரசியல்கைதிகளை  விடுவிக்க ஏன் விரும்புகிறீர்கள் இல்லை ??

? மைத்திரியை ஆதரிக்கும் போது கேட்டிருக்கலாமே  அரசியல்கைதிகளை விடச் சம்மதம் என்றால் தான் ஆதரிப்போம் என்று.

? 2015 ல் அரசாங்கத்துக்கு ஆதரவாய் ஐநாவில் உள்ளக விசரணைக்காய் பேசும்போதும் , 

? ஒன்றுமே செய்யாத அரசுக்கு மேலதிகமாய் 2017 ல் இருவருட கால அவகாசம் கொடுக்க முதலும் கேட்டிருக்கலாம் தானே அரசியல்கைதிகளை விட்டால் தான் கால அவகாசம் தருவோம் என்று ஏன் கேட்கவில்லை ? ? 

? சிறீதரன் gsp+ கு ஆதரவாய் அரச குழுவுடன் ஐரோப்பா போகும்போது கேட்டிருக்கலாம் தானே ?? 

? பட்ஜெட்டை ஆதரிக்கும்போது கேட்டிருக்கலாம் தானே ??

இப்படி எத்தனை வாய்ப்புகள் வந்தன பேரம்பேசுவதற்கு

எல்லாவற்றையும் கேவலம் ஒரு சில கோடிகளுக்காகவும் வாகன permit காகவும் விற்று விட்டீர்களே ..................................................... . 

உங்களுக்கு செம்படிக்கிறவங்களை சொல்லோணும் முதலில.

முகநூளில் வந்தது .

பரிசுகெட்ட தமிழ் அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

பொறியியலாளராகும் ஆனந்த சுதாகரனின் மகனின் கனவு நிறைவேறுமா????

 

பொறியியலாளராகும் ஆனந்த சுதாகரனின் மகனின் கனவு நிறைவேறுமா????

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் நிலைமையை கூறி கருணை கோரவுள்ளனா்.

இந்த நிலையில் ஆனந்த சுதாகரனின் மகன் கனிரதன் மென்பொருள் பொறியியலாளராகும் தனது கனவை நிறைவேற்ற தனது தந்தை தனக்கு வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்ட பின்னா் தானும் தனது தங்கையும் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்து வந்த நிலையில் இன்று தம்மை பேணி பாதுகாத்த தாயும் மரணமடைந்துள்ளாா்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிள்ளைகளும் தாயின்றியும், தந்தையின்றியும் நிா்க்கதியாகி நிற்கின்றனா். எனவே இந்த இரண்டு பிஞ்சு உள்ளங்களும் தமது நிலமை தொடா்பில் எமது செய்திசேவைக்கு தெரிவித்த விடயம் அனைவரின் மனங்களிலும் வேதனையை அளித்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதா கூறுகையில் .........

பொறியியலாளராகும் ஆனந்த சுதாகரனின் மகனின் கனவு நிறைவேறுமா????

நாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறோம்.அப்பாவோட சிறைக்கு செல்ல இருவரும் சென்றோம்.ஆனால் பொலிஸாா் எங்களை விடவில்லை.

எமது அப்பா இல்லாமல் எங்களால் வாழ முடியாது.ஜனாதிபதி அங்கிள் எங்களை எமது அப்பாவுடன் சோ்த்துவையுங்கள் என கூறியது அந்த பிஞ்சு உள்ளம். எதிா்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வருவது தனது கனவு என்றும்.

அதற்கு தமது தந்தை தேவை என்றும் உருக்கமாக கோரிக்கை அந்த குழந்தை கோரிக்கை விடுத்தது.

இதேவேளை ஆனந்த சுதாகரனின் மகன் கனிரதன் கூறுகையில் .......

எதிா்காலத்தில் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளராக வரவேண்டும் என்பது எனது கனவு.தந்தை சிறைக்கு சென்ற காலம் தொடக்கம் தனது தயாா் தங்களை மிகுந்த கஸ்ரத்தின் மத்தியில் வளா்த்தாகவும், இந்நிலையில் அவ்வாறு கஸ்ரத்தின் மத்தியில் வளா்த்த தாயும் இப்பொழுது தம்மை விட்டு நீங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளான்.

எனவே தமது எதிா்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு தமது தந்தையை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அந்த குழந்தைகள் தெரிவித்துள்ளனா்..

இந்த விடயம் தொடா்பில் சரியான முடிவு கிடைக்குமா? குழந்தைகளின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவாரா?

https://news.ibctamil.com/ta/internal-affairs/Will-the-dream-of-Ananda-Sudhakaran-s-son

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் சொல்ல முடியல மனது கனக்கிறது tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை... கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம். கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. 

ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணை மனுக்கள் அனுப்புவதன் மூலம் சீக்கிரப்படுத்த முடியும் என்ற சட்டவல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பும் செயற் திட்டம்  விஸ்வமடுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது இவ் செயற் திட்டத்திற்கு கிளிநொச்சி வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமாலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.