Sign in to follow this  
நவீனன்

சமூக ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாடு நல்­ல­தல்ல!!

Recommended Posts

சமூக ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாடு நல்­ல­தல்ல!!

 

அம்­பாறை மற்­றும் கண்­டி­யில் இடம்­பெற்ற இன வன்­மு­றை­க­ளைத் தொடர்ந்து சமூக வலைத்­த­ளங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்த கதை­யா­டல்­கள் எழுந்­துள்­ளன. வழக்­கம் போலவே அதி­கார வர்க்­கம் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று கூறு­கின்­றது. முக­நூ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று அமைச்­சர் மகிந்த அம­ர­வீர கடை­சி­யா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கண்டி மாவட்­டம் திக­ன­வில் முஸ்­லிம்­கள் மீதான தாக்­கு­தல் தீவி­ரம் அடைந்­த­தைத் தொடர்ந்து இலங்கை அரசு சமூக ஊட­கங்­க­ளான வட்ஸ்­அப், வைபர், பேஸ்­புக் என்­ப­வற்றை ஏற்­க­னவே முடக்கி வைத்­துள்­ளது. மூன்று நாள்­க­ளுக்கு மட்­டுமே இந்த முடக்­கம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், அது இன்னமும் நீக்­கப்­ப­ட­வில்லை. இன உற­வு­க­ளைப் பாதிக்­கக்­கூ­டிய உள்­ள­டக்­கங்­கள் பல முகப் புத்­த­கத்­தில் இருப்­ப­தால் அவற்றை நீக்­கும் வரை­யில் அதன் மீதான தடையை நீடிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது என்று அரசு விளக்­கம் சொல்­லி­யி­ருக்­கி­றது.

வன்­முறை பர­வு­வ­தற்­கும், வன்­மு­றை­யா­ளர்­கள் ஒருங்­கி­ணை­வ­தற்­கும் சமூக ஊட­கங்­கள் இல­கு­வாக வழி வகுக்­கின்­றன என்­ப­தும், வெறுப்­பூட்­டும் பேச்­சுக்­கள் இந்­தச் சமூக ஊட­கங்­கள் ஊடாக இல­கு­வா­க­வும் விரை­வா­க­வும் பர­வ­ல­டை­கின்­றன என்­ப­துமே இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­கிற குரல்­க­ளுக்­குக் கார­ணம்.

ஆனால், சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட்­டால் மட்­டும் இன­வன்­மு­றை­களை நிறுத்­தி­விட முடி­யுமா என்­ப­தும் மிகப் பெரிய கேள்வி. இத்­த­கைய சமூக ஊட­கங்­களோ, தொழில்­நுட்ப வச­தி­களோ இல்­லாத காலத்­தி­லேயே இதை­வி­டப் பெரும் இனக் கல­வ­ரத்­தைத் திட்­ட­மிட்டு ஒழுங்­க­மைத்து தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றி­னார்­கள் என்­பதை எவரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தால், மட்­டும் எல்­லா­வற்­றை­யும் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­து­விட முடி­யும் என்று எண்­ணு­வது சுத்த மட­மைத்­த­னம்.

இதே சமூக ஊட­கங்­கள்­தான் பொலி­ஸா­ரின் குற்ற விசா­ர­ணைக்­குப் பெரும் துணை­யாக இருக்­கின்­றன என்­ப­தை­யும் நினை­வில்­கொள்ள வேண்­டும். புல­னாய்வு அமைப்­பு­கள் தமி­ழர்­கள் மற்­றும் முஸ்­லிம்­க­ளின் சமூக ஊட­கக் கணக்­கு­கள் மீது வைத்­தி­ருக்­கும் கழு­குக் கண்­களை கொஞ்­சம் சிங்­க­ள­வர்­க­ளின் கணக்­கு­கள் மீதும் திருப்­பி­னாலே இது­போன்ற வன்­மு­றை­க­ளைத் தடுத்­து­விட முடி­யும்.

 

கண்­டி­யில் வன்­முறை பர­வும் என்­பது அங்­கி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கே தெரிந்­தி­ருந்­த­போ­தும், பொலி­ஸா­ருக்­கும் புல­னாய்­வா­ளர்­க­ளுக்­கும் அது தெரி­யா­மல் இருந்­தது என்­பது ஏமாற்­றும் வேலை. புல­னாய்­வா­ளர்­கள் சரி­யா­கச் செயற்­பட்டு சூத்­தி­ர­தா­ரி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால், திகன வன்­மு­றையை முற்­றா­கத் தடுத்­தி­ருக்க முடி­யும். அத­னைச் செய்­யா­மல் விட்­டு­விட்டு சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று அரசு முயற்­சிப்­பது அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரான எல்­லாக் குரல்­க­ளை­யும் நசுக்­கி­வி­டும் முயற்சி. குறிப்­பாக அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­தும் எத்­த­னம்.

சமூக ஊட­கங்­க­ளில் உள்­ள­வர்­கள் அனை­வ­ரும் சரி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர், அவை திறம்­பட இயங்­கு­கின்­றன என்று சொல்­வ­தற்­கில்லை. தனி­ந­பர் அவ­தூ­று­க­ளைப் பரப்­ப­வும், சமூ­கத்­தைத் தவ­றாக வழி­ந­டத்­த­க் கூடி­ய­வர்­க­ளும் அதில் செயற்­ப­டு­கின்­றார்­கள் என்­பதை மறுப்­ப­தற்­கும் இல்லை. அந்­தச் சில தீய சக்­தி­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த சமூக ஊட­கங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இணைய வழிக் குற்­றங்­க­ளுக்­கான தனிப் பிரி­வோடு சேர்த்து சமூக ஊட­கங்­க­ளின் செயற்­பாட்­டா­ளர்­க­ளை­யும் கண்­கா­ணித்து நில­மை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது பற்­றித்­தான் அரசு சிந்­திக்க வேண்­டுமே தவிர, சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது பற்­றி­ய­ல்ல. முகநூலுக்கு தற்போது விதிக்கப்பட் டுள்ள தடையையும் விரைந்து விலக்க வேண்டும் அரசு.

புண் இருக்­கி­றது என்­ப­தற்­கா­கக் கால்­களை, விரல்­களை வெட்டி எறிந்­து­வி­டு­வ­தற்கு ஒப்­பா­னது அது. அரசு அதனை ஒரு­போ­தும் செய்­யக்­கூ­டாது.

http://newuthayan.com/story/75871.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this