Jump to content

யாழில் மூன்று ஆழ்­க­டல் பட­கு­கள் – அடுத்த மாதம் பணி­க்கு!! தலா 10 மில்­லி­ய­னில் அமைக்கப்பட்டவை


Recommended Posts

  • யாழில் மூன்று ஆழ்­க­டல் பட­கு­கள் – அடுத்த மாதம் பணி­க்கு!!
IMG_2029-750x430.jpg

யாழில் மூன்று ஆழ்­க­டல் பட­கு­கள் – அடுத்த மாதம் பணி­க்கு!!

தலா 10 மில்­லி­ய­னில் அமைக்கப்பட்டவை

 

ஆழ் க­ட­லில் ஒரு மாதம் வரை­யில் தங்­கி­நின்று மீன்­பி­டிக்­கக்­கூ­டிய 3 ஆழ்­க­டல் பட­கு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூல­மாக ஒரு தட­வை­யில் சுமார் 20 இலட்­சம் ரூபா வரை­யில் இலா­ப­மீட்ட முடி­யும். அவை ஒரு மாதத்­தில் பயன்­பாட்­டுக்கு விடப்­ப­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­து­றைத் திணைக்­கள உத­விப் பணிப்­பா­ளர் ஜெ.சுதா­க­ரன் தெரி­வித்­தார்.

ஆளி­ய­வளை, உடுத்­துறை, வத்­தி­ரா­யன் ஆகிய இடங்­க­ளி­லுள்ள கடற்­றொ­ழில் சங்­கங்­க­ளுக்கு குறித்த பட­கு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கடந்த வரு­டம் ஜூன் மாதம் அவை கைய­ளிக்­கப்­பட்­டன. சுவிஸ் லேப­றன்ஸ் அசிஸ்­டன் நிறு­வன அனு­ச­ர­ணை­யில் தலா10 மில்­லி­யன் ரூபா­வில் 45அடி நீள­மான பட­கு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் கடற்­றொ­ழில் பரி­சோ­த­கர் ராஜேந்­தி­ரன் தெரி­விக்­கை­யில் ‘கஷ்டப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­களை ஊக்­கு­விக்­கும் முக­மா­க­வும் ஆழ்­க­டல் மீன்­பி­டியை ஊக்­கு­விக்­கும் முகமா­க­வும் குறித்த பட­கு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த பிர­தே­சத்­தில் பெரும்­பான்­மை­யான மக்­க­ளுக்­குத் தொழில் செய்­யும் வசதி இல்­லாத கார­ணத்­தா­லும் அந்­தப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­களை முன்­னேற்­றப்­பா­ தைக்­குக் கொண்டு செல்­ல­வும் அவர்­க­ளின் வாழ்­வெ­ழுச்­சிக்­கும் இந்­தத் திட்­டம் முன்­னெ­ டுக்­கப்­பட்­டது.

இந்­தப் படகு வழங்­கு­வ­தற்கு முன் ஒவ்­வொரு சங்­கங்­க­ளில் இருந்­தும் ஆறு பேரைத் தெரிவு செய்து அவர்­க­ளுக்­கு ஆழ்­க­டல் மீன்­படி பற்றி பயிற்சி வழங்­கப்­பட்­டது. அந்த ஆறு பேரும் மாறி மாறிச்­சென்று தொழி­லில் ஈடு­ப­டு­வார்­கள். ஆழ்­க­டல் மீன்­பி­டி­யா­னது குறைந்­தது 20 நாள் அல்­லது 25 நாள்­கள் கட­லி­லேயே தங்கி மீன்­பி­டிப்­பதே. அதற்­கு­ரிய பொருள்­களை எடுத்­துச் சென்­று­தான் தொழி­லில் ஈடு­பட முடி­யும். இன்­னும் ஒரு மாதத்­தில் குறித்த பட­கு­கள் ஆழ்­க­ட­லில் தொழி­லில் ஈடு­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது என்றும் தெரி­வித்­தார்.

‘மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் குறித்த மூன்று சங்­கங்­க­ளுக்­கும் தலா 15 இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா கட­னாக வழங்­கி­யி­ருந்­தார்.
கடந்­த­வ­ருட கூட்­டு­றவு நிதி மூல­மா­கக் குறித்த கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிதியை வைத்து அவர்­கள் படகுக­ளில் ஆழ்­க­டல் தொழி­லுக்­கான ஏனைய பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்­யவே வழங்­கப்­பட்­டது’ என்று உடுத்­து­றைப் பிர­தேச மீனவ சங்­கத் தலை­வர் தெரி­வித்­தார்.

 
 

‘அந்த பகுதி மக்­க­ளுக்கு இது ஒரு புதிய அனு­ப­வ­மாக காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு அந்தப் பகு­தி­க­ளில் துறை­முக வசதி இல்­லாத கார­ணத்­தால் பட­கு­க­ள் தற்­கா­லி ­க­மாக காரை­ந­க­ரில் தரித்து விடப்­பட்­டுள் ளன. குறித்த பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் பின்­தங்­கிய கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். ஆழ்­க­டல் படகு கிடைத்­தது, அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த மக்­களின் முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குக்­கும்’ என்று வத்­தி­ரா­யன் சங்­கத்­த­லை­வர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/76169.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி சொதப்பாமல் மென்மேலும் தொழில் பெருக வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.