Sign in to follow this  
நவீனன்

பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு

Recommended Posts

பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் :  ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு

 

 

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார்.

02__4_.jpg

ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் இதனை தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர் என இதன்போது ஜனாதிபதி  தெரிவித்தார்.

03__3_.jpg

ஆகையினால் இந்த வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதற்கான புதிய செயற்திட்டமொன்றினை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இதன்பொருட்டு அரசாங்கமும், நாட்டு மக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

தேசிய ஒற்றுமையை இல்லாது செய்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தனிப்பட்ட நபர்களின் தன்மானத்திற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றை இல்லாதுசெய்து சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

12.jpg

அலுவலர்கள், வர்த்தகர்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்புரிபவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றியதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டின் கீர்த்தியை பாதுகாத்து நாட்டிற்காக நிறைவேற்றும் செயற்பணிகளையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

08__1_.jpg

தமது துறைகளில் பணியாற்றும்போது தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், அவற்றை தீர்த்து வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த வேளையில் தம்மால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமைக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு  நன்றி தெரிவித்தனர்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/31595

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, நவீனன் said:

பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் :  ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு பக்கத்தில் தகவல் அறியும் சட்டம், இன்னொரு பக்கம் தடை. சொறிலங்காவின் வழமையான காடைத்தனம். சிங்கள-பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை மூடி மறைக்கவே இந்த தடை. இதற்கு சர்வதேசம் துணை போகக்கூடாது.

எதிர்காலத்தில் அரச பயங்கரவாதத்தை திரைமறைவில் மேற்கொள்ள இது போன்ற தடைகள் உதவும்!

Share this post


Link to post
Share on other sites
’கண்காணிக்க நிறுவனம் வரும்’
 

சமூக ஊடக வலையமைப்புகளின் பாவனைகளைக் கண்காணிப்பதற்காக, நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து, அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது என, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நேற்று (13) தெரிவித்தார்.

சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் எதிராக, வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலான கருத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

"பேஸ்புக் போன்ற சமூக ஊடக வலையமைப்புகளை, அரசாங்கம் தடை செய்யாது. ஆனால், கடுமையான கண்காணிப்புக் காணப்படும்" என அவர் தெரிவித்தார்.

பாலியல் திரைப்படங்களையும் சிறுவர் பாலியல் திரைப்படங்களையும் பகிர்பவர்களையும், இந்நிறுவனம் கண்காணிக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியின் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்பதாகவே, பேஸ்புக்கில் காணப்பட்ட சில பக்கங்களை நீக்குவதற்கு, அரசாங்கம் முயன்றது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அதற்கான மனித வளங்கள் பேஸ்புக்கிடம் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார். பேஸ்புக்கில், சிங்களத்தில் உரையாடக் கூடிய ஒருவர் இருந்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார். பூகோள ரீதியில், சிங்களம் பேசுவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்குப் பங்களித்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக வலையமைப்புகளை அணுகுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திய அமைச்சர், பங்களாதேஷ், வியட்நாம், ஜேர்மனி, ஹங்கேரி, இஸ்ரேல், ஈரான், சிரியா போன்ற நாடுகள், காலத்துக்குக் காலம், பேஸ்புக்கை முடக்குகின்றன எனவும் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கண்காணிக்க-நிறுவனம்-வரும்/175-212660

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this