நவீனன்

ஜப்பானிலுள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

Recommended Posts

ஜப்பானிலுள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

 

 

 

ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) டோக்கியோ நகரில் இடம்பெற்றது.

01__5_.jpg

பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதியை சந்திக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

02__3_.jpg

இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி, சமயத் தலைவர்களுக்கு இதில் பாரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

03__2_.jpg

http://www.virakesari.lk/article/31594

Share this post


Link to post
Share on other sites

ஜப்பானில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டிநிலைவரம் குறித்து கவலை தெரிவிப்பு

 

 

சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கண்டியில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.

01__4_.jpg

ஜப்பான் டோக்கியோ நகரின் இம்பேரியல் ஹோட்டலில் முஸ்லிம் மத தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

யார் எவ்வித குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோதிலும் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதாகும் என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தரத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

02__2_.jpg

அண்மையில் கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கான விரிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இந்த சந்தர்ப்பத்தில் மிகச் சிறியதொரு குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட அமைதியின்மை தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்தார்.

03__1_.jpg

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், 2015 ஜனவரி 08ஆம் திகதி இன, மத பேதமின்றி சகல இலங்கையர்களும் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பெரும் எதிர்பார்ப்பே காரணமாகும் என தெரிவித்தனர்.

04__2_.jpg

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாறசிங்ஹ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/31593

 

Share this post


Link to post
Share on other sites

யப்பான்நாட்டுப் புத்த துறவி. :)

Bildergebnis für buddhismus in Japan

 

நம்மநாட்டுப் புத்த துறவி. :shocked:

Bildergebnis für பிக்கு

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now